More on this book
Kindle Notes & Highlights
by
அசோகன் கே
Read between
January 23 - February 8, 2021
நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் எல்லாம் எவ்வளவு உறுதியாக நின்றார்!
பல முறை அவரிடம் கருத்து வேறுபட்டிருக்கிறேன். சண்டை போட்டிருக்கேன். “கட்சிக்குள் என்னோடு சண்டை போடுபவர்கள் இருவர். ஒருவர் மாறன், இன்னொருவர் நாகநாதன்” என்றே சொல்லியிருக்கிறார். காலையில் கடுமையான விவாதம் நடந்திருக்கும். இரவு தொலைபேசியில் அழைப்பார். “நாகநாதன், என்ன கோச்சுக்கிட்டியா? உன் கருத்தை நீ சொன்னய்யா, சரியாக்கூட இருக்கலாம். என் கருத்தை நான் சொன்னேன். பேசுவோம். நாளைக்குக் காலையில வாக்கிங் வராம இருந்திடாத!” என்பார். அவர் அதிகாரத்தின் எவ்வளவு உயரத்தில் இருக்கும்போதும் இந்தத் தன்மையை இழந்ததில்லை. நெருக்கடி நிலையின்போது திமுகவுக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற சூழல் இருந்தது. கலைஞர், நாவலர், நான்
...more
நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கி.ஆ.பெ.விசுவநாதம்
திருச்சிக்கு வந்திருந்தபோது சத்திரத்தில் ஒரு கிழிந்த பாயில், மேல் சட்டையைத் தலைக்குச் சுருட்டி வைத்துக்கொண்டு அண்ணா படுத்துத் தூங்கிக்கொண்டிருந்ததை.
நீதிக் கட்சிகளின் முன்னோடிகள் ஆகட்டும்... பெரியார் ஆகட்டும் தன்னுடைய சொத்துகளை அழித்துப் பொதுச் சமூகத்தை வளர்த்தவர்கள்.
பெரியார் பொது ஒழுக்கத்தை ரொம்பவும் மதிப்பார். கூட்டத்தில் கடவுள் வாழ்த்து என்று சொன்னதும் எழுந்து நின்றுவிடுவார். அப்புறம் அதே கூட்டத்தில் “கடவுள் இல்லை” என்றும் பேசுவார். “பொது ஒழுக்கம் சமூகத்தால் கட்டப்பட்டது; அதைச் சிதைப்பது நம் வேலை இல்லை!” என்பார். எனக்கு அதில் பெரிய நம்பிக்கை உண்டு. ஏனென்றால், அதுதான் உங்களுக்கு ஒரு தார்மிகத் தகுதியையும் பலத்தையும் தருகிறது.
நீங்கள் டெல்லியில் நடக்கும் ஊழலின் சிறு முனையைக்கூட மாநிலங்களில் பார்க்க முடியாது. ராணுவ பேரங்களில் எவ்வளவு புரளும் என்பதை டெல்லியில் இருந்தால் புரிந்துகொள்ள முடியும். இந்தியாவில் பொதுவெளிக்கு வரும் ஊழல்களில் பெரும்பாலானவை ஏன் கீழ்நிலைச் சமூகங்களையும் மாநிலக் கட்சிகளையும் மட்டுமே குறிவைக்கின்றன? தேசியக் கட்சிகளைச் சேர்ந்த ஆதிக்கச் சாதிக்காரர்கள் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக் கிறார்கள்?
இந்தியப் பொருளாதாரம் என்பது குஜராத்தி பொருளாதாரம்தான். நேரு காலத்தில் வந்த அன்சாரி குழு அறிக்கையே தேசிய அளவில் 80% பொருளாதாரம் குஜராத்திகள் கையில் இருப்பதைச் சொன்னது!
காலையில் கடுமையான விவாதம் நடந்திருக்கும். இரவு தொலைபேசியில் அழைப்பார். “நாகநாதன், என்ன கோச்சுக்கிட்டியா? உன் கருத்தை நீ சொன்னய்யா, சரியாக்கூட இருக்கலாம். என் கருத்தை நான் சொன்னேன். பேசுவோம். நாளைக்கு காலையில வாக்கிங் வராம இருந்திடாத!” என்பார் கலைஞர்.
முன்னதாகப் பிறந்த இருவரும் பெண் பிள்ளைகள் - பெரியநாயகம், சண்முகசுந்தரம் (இவர்களில் சண்முகசுந்தரத்தின் புதல்வர்களே முரசொலி மாறனும், செல்வமும். பெரியநாயகத்தின் மகன் இயக்குநர் அமிர்தம்).
தந்தை முத்துவேலரோ ஏரால் உழுததுபோலவே சொல்லாலும் உழுத கவிஞர்; வித்வான்; பண்டிதரைவிட அழகாய்க் கதை சொல்லக் கூடியவர். தந்தையிடமிருந்துதான் நிறையக் கற்றார் கருணாநிதி.
பத்மாவதி முத்துவைப் பெற்றுவிட்டு 1948-ல் மறைந்துவிட, செப் 15, 1948-ல் தயாளுவைத் திருமணம் செய்துகொண்டார் கருணாநிதி.
பெரியாரிடத்தில் ‘குடி அரசு’ துணையாசிரியராய் ஓராண்டு பயின்று முடிந்த நேரத்தில் ‘ராஜகுமாரி’ படத்துக்கு எழுத அழைப்பு வந்தது. படத்தின் நாயகன் எம்ஜிஆர்.
கருணாநிதி - எம்ஜிஆர் இணையில் வெளியான ‘ராஜகுமாரி’, ‘மந்திரிகுமாரி’, ‘மருதநாட்டு இளவரசி’ படங்கள் பெரும் வெற்றி பெற்றன.
“அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள், அறிவு கெட்டவனே!” என்ற பகுத்தறிவுப் பிரச்சாரம், தெய்வ நம்பிக்கை கொண்டவர்களையும் வசீகரித்தது. இசைத்தட்டுக்கள் ஒலித்த இடங்களில் ‘பராசக்தி’யின் வசன ஒலித்தட்டுக்கள் ஒலிக்கத் தொடங்கின. கருணாநிதியையும் ‘பராசக்தி’யையும் எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் காங்கிரஸார்.
திராவிட இயக்கம் தன்னுடைய வருங்காலத்துக்கு ஊறு விளைவிக்குமோ என்று அஞ்சி 1944-45-ல் அண்ணாவின், ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ நாடகத்திலிருந்து எம்ஜிஆர் விலகிக்கொண்டதும், அதன் பிறகு அந்த நாடகத்தில் நடித்த கணேசன், பின்னர் சிவாஜி கணேசனாக உருவெடுத்ததும் வரலாறு. அதே எம்ஜிஆர் தன்னைத் திராவிட இயக்கத்தோடும் கருணாநிதியோடும் இறுக இணைத்துக்கொண்ட வித்தையும் நடந்தது. இருவரும் இணைந்து உருவாக்கிய ‘மலைக்கள்ளன்’ (1954) அவர்களின் கூட்டுறவைப் பறைசாற்றியது. ‘உலகத்தில் எல்லாவற்றுக்குமே இலக்கணம் உள்ளது. பிறப்பைப் பொறுத்து அல்ல; சிறப்பைப் பொறுத்து’ எனும் வசனம் புகழ்பெற்றது. அவ்வாண்டு ஒரு நாடக நிகழ்ச்சியில் ‘புரட்சி
...more
1959-ல் சென்னை மாநகராட்சி திமுக வசமானது. அண்ணாவிடம் பிடிவாதமாய் 100-ல் 90 இடங்களில் கழக வேட்பாளர்களை நிறுத்தி 45 இடங்களில் வென்று பரிசாய், அவர் கையாலேயே ‘கணையாழி’ பெற்றுக்கொண்டார் கருணாநிதி.
1960-ல் உட்கட்சிப் பூசல்கள் இடையே அண்ணாவே பொதுச்செயலாளர் ஆனார். ஈ.வெ.கி.சம்பத் அவைத் தலைவர். கருணாநிதி பொருளாளர். சம்பத்தின் குடும்பப் பின்னணி இல்லாமலும், நாவலரின் உயர் கல்வி இல்லாமலும் தனது ஆற்றலால், உழைப்பால் பத்தே ஆண்டுகளில் கட்சியின் மூன்றாவது இடத்துக்கு வந்திருந்தார் கருணாநிதி. அடுத்த ஆண்டு சம்பத் கட்சியிலிருந்து வெளியேறினார். கட்சியில் திரைத் துறையினரின் ஆதிக்கம் அதிகரித்துவருவதையும் வெளியேற்றத்துக்கு அவர் ஒரு காரணமாய்ச் சொன்னார்.
1962-ல் 50 சட்ட மன்ற இடங்களை திமுக பிடிக்க, ‘திராவிட நாடு’ முழக்கம் மேலும் அதிகரித்தது. அடுத்த ஆண்டு பிரிவினை பேசும் கட்சிகளுக்குத் தடை போடும் அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது நேரு அரசு. கட்சி முடக்கப்படுவதைத் தடுக்க அண்ணா ‘திராவிட நாடு’ கோரிக்கையைக் கைவிட்டார். ஆனால், அதற்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன என்றார். தமிழகத்தின் நலன்களுக்காக இப்போது மாநில சுயாட்சி முழக்கத்தை அவர் கையில் எடுத்தார்.
1963-லிருந்து இந்தி எதிர்ப்புப் போர், கழகத்தைப் பம்பரமாய்ச் சுழல வைத்தது. 1965 ஜனவரி 26-ஐத் துக்க நாளாகக் கொண்டாட முடிவெடுத்தது திமுக. மாணவர்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, 1965 பிப்ரவரி 16 அன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார் கருணாநிதி.
வேட்பாளர்களை அறிவிக்கும்போது சைதாப்பேட்டை என்று நிறுத்தி “11 லட்சம்” என்றார் அண்ணா. பெரும் ஆரவாரம்! பரங்கிமலை தொகுதிக்கு எம்ஜிஆர் நிறுத்தப்பட்டிருந்தார். அந்தத் தேர்தலில் திமுக வென்று முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல்வரானார். 1967-ல் நாவலருக்கு அடுத்து அண்ணா அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராய்ப் பொறுப்பேற்ற கருணாநிதி, பேருந்துகளை அரசுடைமையாக்கும் திட்டத்தைக் கொண்டுவந்ததும் வீராணம் திட்டத்துக்கு வித்திட்டதும் முக்கியமான செயல்பாடுகளாகப் பேசப்பட்டன.
ல் அண்ணா மறைவுக்குப் பிறகு, “அண்ணாவுக்குப் பிறகு யார்?” என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதியே முன்னால் நின்றார். எம்ஜிஆரின் உதவியும் சேர்ந்துகொள்ள 45 வயதிலேயே முதல்வரானார்.
பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை மட்டுமே கிட்டத்தட்ட 7,000. இந்தக் காலகட்டத்திலேயே எம்ஜிஆர் உட்பட எல்லோராலும் அவர் ‘கலைஞர்’ என்று அழைக்கப்படவுமானார். திராவிட இயக்கத்தின் செல்வாக்கு மிக்க பிரச்சாரகராக இருந்த நடிகர் எம்.ஆர்.ராதா பல ஆண்டுகளுக்கு முன் அவருக்குக் கொடுத்த பட்டம் அது. கருணாநிதி முதல்வரானதும், “கருணாநிதியா? அவர் மத்திய அரசோடு ஒத்துழைப்பாரா? தகராறு செய்யக் கூடியவர் என்று கேள்விப்பட்டேனே!” என்பதுதான் பிரதமர் இந்திரா காந்தியின் எதிர்வினையாக இருந்தது. அடுத்த சில மாதங்களில் கருணாநிதி, “உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்றார்.
...more
சட்டநாதன் ஆணையம் அமைத்த திமுக அரசு, அதன் பரிந்துரையின்பேரில் பிற்படுத்தப்பட்டோருக்கான 25% இடஒதுக்கீட்டை 31% ஆக மாற்றியமைத்ததுடன், தாழ்த்தப்பட்டோருக்கு 16%-லிருந்து 18%-ஆகவும் மாற்றியமைத்தது. பிறப்பைக் கருத்தில் கொள்ளாமல் தகுதியுடைய அனைவரும் அர்ச்சகராகலாம் என்று 1970 டிசம்பர் 2-ல் சட்டம் இயற்றப்பட்டது.
1970 பிப்ரவரி 22-ல் திருச்சியில் ஐம்பெரும் முழக்கங்களை வடித்துத் தந்தார்: 1. அண்ணா வழியில் அயராது உழைப்போம். 2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம். 3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம். 4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம். 5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி!
மனோன்மணீயம் பெ.சுந்தரனார் எழுதிய ‘நீராரும் கடலுடுத்த’ என்று தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தானது. 1970 மார்ச் 21-ல் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் சேலம் இரும்பு ஆலைக்கான அறிவிப்புக்குத் தீவிரமாக வலியுறுத்தி, ஏப்ரல் 17 அன்று இந்திரா காந்தியால் அதை நாடாளுமன்றத்தில் அறிவிக்கவும் செய்தார் கருணாநிதி. உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் இந்திராவுக்கு இருந்த ஆர்வம் கருணாநிதியின் உரிமைக் குரலுக்கு உதவுவதில் இல்லை. அதிகாரக் குவிப்பில் ஆர்வம் மிக்கவரான அவருடைய அமைச்சரவையிலும் பலர், மாநிலங்களின் உரிமைகளை உரக்கப் பேசிய கருணாநிதியை ரசிக்கவில்லை.
மாறனின் ‘எங்கள் தங்கம்’ (1970) படத்தில் எம்ஜிஆர் சம்பளம் வாங்கவில்லை. ஜெயலலிதாவையும் வாங்க வேண்டாம் என்று சொன்னார் எம்ஜிஆர். இந்த அளவுக்கு இருவர் இடையிலும் ஒரு நெருக்கம் இருந்தாலும் பரஸ்பரம் முரண்பாடுகளும் இருந்தன.
1971 தேர்தலில் கருணாநிதி தலைமையில், எம்ஜிஆரின் பிரச்சாரத்தில் காமராஜர்-ராஜாஜி கூட்டணியை வீழ்த்தி 184 இடங்களைப் பிடித்துப் பெரும் சாதனையை நிகழ்த்தியது திமுக! பேருந்துகள் நாட்டுடைமை, குடிசை மாற்று வாரியம், இலவசக் கண் சிகிச்சை முகாம்கள், இரவலர் மறுவாழ்வுத் திட்டம், கை ரிக்ஷா ஒழிப்பு, சிப்காட், புஞ்சை நிலங்களுக்கு நிலவரி எடுத்தது என்று ஏராளமான திட்டங்களைத் தந்தது கருணாநிதி அரசு. ஆனால் ஊழல், அதிகார மமதை என்றும் பேச்சுகள் எழுந்திருந்தன. ஊழல் குற்றம்சாட்டப்பட்ட மூன்று அமைச்சர்களை நீக்கியிருந்தார் கருணாநிதி. ஆனாலும் மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமணியமும் மோகன் குமாரமங்கலமும் திமுக ஆட்சியைத் தொடர்ந்து
...more
இந்தப் பொதுக்குழுவில் எம்ஜிஆர் பங்கேற்கவில்லை.
அக்டோபர் 8-ல், திருக்கழுக்குன்றத்திலும் பின்னர் சென்னையிலும் பேசிய எம்ஜிஆர், கழகம் கறைபடிந்துவிட்டதாகவும், கழக ஆட்சியிலும் கட்சியிலும் பொறுப்பில் உள்ளவர்கள் கணக்குக் காட்ட வேண்டும் என்றும் கேட்டார்.
1972 அக்டோபர் 18-ல் அதிமுகவைத் தொடங்கினார் எம்ஜிஆர். “கருணாநிதி பதவி விலக வேண்டும்” என்று ஒவ்வொரு கூட்டத்திலும் பேசினார். டெல்லி வரை சென்று ஊழல் புகார்களைக் கொடுத்தார். 1973-ல் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சாதனை புரிந்தார். மறுபுறம் முதல்வர் கருணாநிதி ராஜராஜசோழனுக்குச் சிலை, பூம்புகார் கலைக்கூடம், கட்டபொம்மனுக்குக் கோட்டை, பொதுவாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழலைத் தடுப்பதற்கான மசோதா, மாநில சுயாட்சித் தீர்மானம், கச்சத்தீவுத் தீர்மானம் என்று அயராமல் இயங்கிக்கொண்டிருந்தார்.
1976 பிப்ரவரி 3 அன்று ‘அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்’ என்று அவர் சூசகமாய் வெளியிட்ட பட்டியலில், மிசா சட்டத்தில் மாவட்டவாரியாகக் கைதுசெய்யப்பட்ட திமுகவினரின் பெயர்கள் இடம்பெற்றது
கட்சியில் இருந்தே கருணாநிதியை விலகச் சொன்னவர்களும் உண்டு. “கப்பலின் தலைவன் மூழ்கும் கப்பலை விட்டுச் செல்வதில்லை” எனச் சொல்லிவிட்டார் கருணாநிதி. 1977 மார்ச் 21-ல் நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது. ஆனால், கருணாநிதிக்கும் திமுகவுக்கும் மேலும் சோதனைகள் காத்திருந்தன. 1977 ஜூன் சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தது.
அரசின் ஊழலைச் சுட்டிக்காட்டுவதிலும், ஈழத் தமிழர்களுக்குப் பெரும் ஆதரவளிப்பதிலும் சட்ட மன்றத்தில் அவரது குரல் ஓங்கி ஒலித்தது!
1989 தொடக்கத்தில் மூன்றாவது முறையாக முதல்வரான கருணாநிதி பெண்களுக்குச் சொத்துரிமை, அரசுப் பணிகளில் 30% இடஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி ஒதுக்கீடு என்று செயலாற்றினார்.
1996-2001-ல் மீண்டும் தமிழகத்தில் திமுகவை ஆட்சிக்குக் கொண்டுவந்தார் கருணாநிதி. பெண்களுக்கு உள்ளாட்சியில் 33% இடஒதுக்கீடு, தொழில் முனைவோருக்கு ஒற்றைச்சாளர முறை, டைடல் பூங்கா, அருந்ததியினருக்கு 3% தனி ஒதுக்கீடு, நெம்மேலி கடல்நீர் திட்டம், மெட்ரோ ரயில், ஒகேனக்கல், பரமக்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், ஹூண்டாய், போர்டு மற்றும் இதர வெளிநாட்டு முதலீடுகள், உழவர் சந்தை, சமத்துவபுரம், ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீடு, திருவள்ளுவருக்கு 133 அடி சிலை என்று திமுக ஆட்சியில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. பொற்கால ஆட்சி என்று இந்த 5 ஆண்டுகளைக்
...more
1987 ஆகஸ்ட் 8-ல் டெல்லியில் திமுக உட்பட ஏழு கட்சிகள் இணைந்து ‘தேசிய முன்னணி’ எனும் கூட்டணியை அமைத்தன. 1988 செப்டம்பர் 17 அன்று சென்னையில்தான் தேசிய முன்னணி தொடக்க விழா நடந்தது. 1989 தேர்தலில் அக்கூட்டணி வென்று, வி.பி.சிங் பிரதமரானார். கூட்டணி அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. காவிரி நடுவர் மன்றம் உருவானது. மண்டல் கமிஷன் போன்றவற்றில் திமுகவின் பங்கு முக்கியமானது. இதிலிருந்து 2014 வரை மத்திய அரசின் கூட்டணி யுகத்தில் பெரும் பங்காற்றினார் கருணாநிதி. காங்கிரஸ், பாஜக இல்லாத கூட்டணி, பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி என்று அவர் அடுத்தடுத்து நகர்த்திய கூட்டணிக் காய்களில் திமுகவும் அதனால் தமிழ்நாடும்
...more
வாஜ்பாய் காலத்தில் பாஜகவுடன் அவர் வைத்த கூட்டணி திமுகவின் மதச்சார்பின்மைப் பயணத்தில் ஒரு களங்கம் ஆனது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் 2-ஜி அலைக்கற்றை ஏல முறைகேடு, குடும்ப அரசியல் குற்றச்சாட்டுகளுக்குக் கட்சி பெரும் விலையைக் கொடுக்க நேர்ந்தது. அதேபோல, 2008-09 இலங்கை இறுதிப் போர் காலகட்டத்தில் திமுக ஈழத் தமிழர்களுக்காக எவ்வளவு காரியங்களை முன்னெடுத்தபோதிலும் போதுமான அளவு துணை நிற்கவில்லை என்ற கடும் விமர்சனத்துக்குள்ளானார் கருணாநிதி.
2016 சட்ட மன்றத் தேர்தலில் மீண்டும் கட்சியைத் தூக்கி நிறுத்தினார் கருணாநிதி. ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றாலும், இதுவரை எந்த எதிர்க்கட்சியும் பெற்றிடாத வகையில் 89 இடங்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக உட்கார்ந்தது திமுக.
75 திரைப்படங்கள், நாடகங்கள், குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பியப் பூங்கா, இரண்டு லட்சம் பக்கத்துக்கும் அதிகமான எழுத்துகள், ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்கள், பலமுறை சிறைவாசம், போராட்டங்கள் என்று அவர் அளவுக்கு அரசியல் அனுபவம் கொண்ட தலைவர்கள் மிக மிகக் குறைவு.
எங்களோட படிப்பு விஷயங்களையெல்லாம்கூட மாறன் மாமாதான் கவனிச்சார். ஆனா, ஒரு பெரிய பிரியம் எங்க மேல அவருக்கு உண்டுங்கிறதை மட்டும் எப்படியோ உணர்த்திட்டார். மத்த
எங்க எல்லோரையும் பார்த்து, பெயர் சொல்லித் தனித்தனியா ‘போய்ட்டு வர்றேன்’னு சொல்வார்.
அவர் எங்களை அடிச்சதே இல்லை. ஒரே ஒரு முறை அடி வாங்கின நெனைப்பு இருக்கு...
வீட்டுல யாருக்கும் உடம்புக்கு முடியலைன்னா அவர் எங்கே இருந்தாலும் வீட்டுக்கு போன் வந்துக்கிட்டே இருக்கும்.
மாறன் மாமா என்னையும் செல்வியையும் சர்ச் பார்க் கான்வென்ட்டுல சேர்க்க அழைச்சுக்கிட்டுப் போயிருந்தார். அப்போ அங்கே கோ-எஜுகேஷன் சிஸ்டம் இருந்துச்சு. “ஸ்டாலின்கிற பெயரை மாத்தினாதான் சேர்த்துக்க முடியும்”னு சொல்லிட்டாங்க. தலைவருக்கு மாமா போன் பண்ணினார். “ஸ்டாலின்கிற பெயரை மாத்தணும்னு சொன்னா, அந்தப் பள்ளிக்கூடமே நமக்கு வேணாம்”னு சொல்லி, வேற ஸ்கூல்ல சேர்க்கச் சொல்லிட்டார்.
1957 தேர்தல்ல திமுக சார்புல ஜெயிச்ச 15 பேரையும் தோற்கடிக்க காங்கிரஸுல தீவிரமான வேலை பார்த்திருந்தாங்க. அந்த 15 பேருல தலைவர் மட்டும்தான் மீறி ஜெயிச்சார்.
அதுக்குள்ள உடம்பு முடியாம அமெரிக்கா போற சூழல் ஆயிடுச்சு.
‘நான் பெரியப்பா சொல்றேன்.
மாறன் மாமா அண்ணா காலத்துல அரசியலுக்கு வந்தவர். அண்ணாவோட தொகுதியில அண்ணாவால் நிறுத்தப்பட்டவர்.