More on this book
Kindle Notes & Highlights
by
அசோகன் கே
Read between
January 23 - February 8, 2021
அவருடைய ஆட்சியிலும் தனிப்பட்ட வாழ்விலும் பலர் அவருக்கு நெருக்கமான இடத்தில் இருந்திருக்கிறார்கள்.
பெரியாருக்கும் ராஜாஜிக்கும் இடையில் இருந்த தீவிர அரசியல் முரண்பாடுகளும், தனிப்பட்ட நட்பும் இவ்வகையில் மிகவும் பரவலாகக் கவனிக்கப்பட்ட முன்னுதாரணம் ஆகும்.
கருணாநிதிக்கும் சோவுக்கும் இடையேயான உறவை இங்கே குறிப்பிடலாம்.
1975 நெருக்கடி நிலைக் காலத்திலும், அதைத் தொடர்ந்த ஜனதா கட்சி ஆட்சிக் காலத்திலும் திமுகவும், சோவும் அரசியலில் ஒரே அணிக்குள் வந்தனர். அதேபோல, 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானதிலும், மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததிலும் சோவுக்கும் ஒரு பங்கு இருந்தது.
கருணாநிதி ராமானுஜர் குறித்த தொலைக்காட்சித் தொடரை எழுதியதை இந்தப் பின்னணியில்தான் நாம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். ராமானுஜர் வாழ்வின் முக்கிய அம்சம், அவர் சாதிச் சமத்துவத்தை வலியுறுத்தியதுதான் என்று கூறும் தொடர் அது.
பிரச்சினை பிராமணர்களை வெறுப்பதோ, அந்நியப்படுத்துவதோ கிடையாது. அவர்களைச் சமத்துவத்தை அங்கீகரிக்கும் கட்டாயத்துக்கு உள்ளாக்குவதே முக்கியம். அரசியல் அதிகாரத்தை மக்கள் பகிர்ந்துகொள்வது மக்களாட்சி. பிராமணர் அல்லாதோர் இயக்கத்தின் மக்களாட்சி அடிப்படைகள் இதில்தான் அடங்கியுள்ளன. திராவிட இயக்கத்தின் வெற்றியும் அதில்தான் அடங்கியுள்ளது!
ராஜன் குறை, சமூக ஆய்வாளர், டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்
அரசியல் அதிகாரத்தை மக்கள் பகிர்ந்துகொள்வது மக்களாட்சி. பிராமணர் அல்லாதோர் இயக்கத்தின் மக்களாட்சி அடிப்படைகள் இதில்தான் அடங்கியுள்ளன. திராவிட இயக்கத்தின் வெற்றியும் அதில்தான் அடங்கியுள்ளது!
பெரியார் எங்காவது கருப்பசாமியையும் சுடலைமாடனையும் உடைத்தாரா? கரைக்கும் பொம்மைப் பிள்ளையாரைத்தான் உடைத்தார். ஏனென்றால், அது வட நாட்டு வரவு. அதற்குப் பின் அதிகார அரசியல் இருக்கிறது. அதிகார ஆன்மிகத்தையே அவர் எதிர்த்தார். அவருடைய பிரதான எதிரி சாதி; கடவுள் அல்ல. உண்மையான ஆன்மிகத்துக்கான வழியை மூவாயிரம் ஆண்டு பழமையான நம்முடைய நாட்டார் வழக்காறு கொண்டிருக்கிறது. உலகமயமாக்கல் சுரண்டல் கலாச்சாரத்துக்கு எதிரான வாழ்வியல் வழிமுறையும் நாட்டார் வழக்காற்றின் வேர்களில்தான் இருக்கிறது. அதை நோக்கிய கவனமும் இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது.
திரும்பிப் பார்க்கும்போது, ‘பராசக்தி’யின் பின்னணியில் நாம் பார்த்த கருணாநிதியைப் பின்னாளில் அரசியல் களம் நீர்க்கடித்துவிட்டது என்று தோன்றுகிறது. ஆனால், கூட்டாட்சித் தத்துவத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டே மாநிலங்களை அதிகாரமே இல்லாததாக்கிவிட்ட நாட்டில் நாம் இருக்கிறோம் என்பதையும் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
சமூக நீதியை அடையும் பாதையாகக் கல்வியை அணுகும் பார்வை திராவிட இயக்கத்தவரின் சிறப்பம்சம் என்று சொல்வேன்.
மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு முறை இருந்தபோது, தேர்வான 90% மாணவர்கள் நகர்ப்புற, உயர் வர்க்க மாணவர்களாக இருந்தார்கள். கோச்சிங் கிளாஸ் பயிற்சியே இதன் பின்னிருந்தது. நுழைவுத் தேர்வை நீக்கியபோது, நிலைமை மாறியது. உயர் கல்வியிலும் வேகமாக மேலே வந்தோம். பிற்பாடுதான் தேங்கிவிட்டோம்.
உயர் கல்வியில் இந்திய அளவில் முன்னணியில் வர வேண்டும் என்ற வேட்கை இருந்தது. அதுவே தனியார் கல்லூரிகள் வருகைக்கும் வழிவகுத்தது. நிச்சயமாக அது உதவியது. ஆனால், முதலீடு நுழையும்போது தவறுகள் நடக்காமல் கண்காணிக்க வேண்டிய அரசியல் வர்க்கமும், அதிகார வர்க்கமுமே... இது ஒரு நல்ல வியாபாரம் என்று கருதிக் கல்வித் துறையில் இறங்கியபோது வீழ்ச்சி தொடங்கியது. ஓர் உதாரணம், தமிழ்நாட்டில் 16 அரசுப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. நமக்கு மேலும் 50 பொறியியல் கல்லூரிகள் வரை தேவையாக இருந்திருக்கலாம். துரதிர்ஷ்டவசமாக 550 தனியார் கல்லூரிகள் இங்கே அனுமதிக்கப்பட்டன. விளைவாக, பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கூடவே,
...more
மிகச் சிறந்த சுதந்திரத்தை எனக்கு அவர் அளித்தார். கல்வியாளர்களுக்குப் பெரிய மதிப்பளிப்பவர். “அனந்த கிருஷ்ணன் என்னைச் சந்திக்க வந்தால், இரண்டு நிமிடங்களுக்கு மேல் அவர் காத்திருக்கும் சூழல் இல்லாதபடி அவருக்கான நேரத்தை ஒதுக்குங்கள்” என்று அவர் சொல்லியிருந்ததை அதிகாரிகள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். நான் அவரைச் சந்திக்கச் சென்றால், எழுந்து நின்று இரு கைகூப்பி வரவேற்பார். என்னை அமரச் சொல்லிவிட்டு பிறகு அவர் அமர்வார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பல துணிச்சலான முடிவுகளை நான் எடுக்க வேண்டியிருந்தது. நிறைய எதிர்ப்புகளையும் தாண்டி சீர்திருத்தங்களுக்குத் துணை நின்றார். தகவல் தொழில்நுட்பத் துறை புரட்சியை
...more
பொது மருத்துவத்தில் தமிழகமே முன்னோடி!
ஆரம்ப சுகாதாரத்தைப் பொறுத்தவரை இந்திய அளவில் தமிழகமே முன்னணியில் இருக்கிறது. 1970-களில் கிட்டத்தட்ட 300 ஆக இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை இன்று 1,400-ஐத் தொட்டுவிட்டது. துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 8,700-க்கும் அதிகம். மற்ற மாநிலங்கள் இவ்வளவு வேகமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தியதில்லை. அதுமட்டுமல்ல, ஹெச்ஐவி, மலேரியா, தொழுநோய் போன்ற கடும் நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் தமிழகம் முழுத் திறனோடு செயல்பட்டுள்ளது. இதைவிட முக்கியமானது, தமிழகத்தில் மட்டும்தான் பொதுநலச் சுகாதாரத் துறை என்ற அமைப்பு இருக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவத் துறை மட்டும்தான்.
...more
சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டை மத்திய அரசே குறைத்துவந்திருக்கும் நிலையில், ஒரு மாநில அரசு தொடர்ந்து அதிகரித்திருப்பது வரவேற்கப்படவேண்டியது அல்லவா?
இந்தியாவிலேயே அதிகமான அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திலேயே இருக்கின்றன. திமுக, அதிமுக இரண்டின் ஆட்சியாளர்களுமே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற இலக்கோடு இதை விரிவுபடுத்தினார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரியோடு இணைந்த மருத்துவமனை இருந்தால், அனைத்துச் சிறப்புப் பிரிவுகளிலும் எந்நேரமும் மருத்துவர்கள் இருப்பார்கள். சிக்கலான, செலவுமிக்க சிகிச்சைகளும் எளிய மக்களுக்குக் கிடைக்க இது உதவியாக இருக்கும். நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான், 2009-ல் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு ரூ. 1 லட்சம் வரை காப்பீடு வழங்கப்பட்டது. இப்போது அது
...more
திராவிடக் கட்சிகளே அதிகமான பாசனத் திட்டங்களை நிறைவேற்றின!
ஆங்கிலேயர் காலத்தில் மேட்டூர் அணை, முல்லைப் பெரியாறு, வெல்லிங்டன், பேச்சிப்பாறை அணைகளைக் கட்டினார்கள். காங்கிரஸ் ஆட்சியில், குறிப்பாக காமராஜர் ஆட்சியில் 15 நீர்ப் பாசனத் திட்டங்கள் - முக்கியமான அணைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏனைய எல்லா நீர்ப் பாசனத் திட்டங்களும் திராவிடக் கட்சிகள் குறிப்பாக திமுக ஆட்சியிலேயே நிறைவேற்றப்பட்டன.
மோர்தானா அணைக்கட்டு, ராஜாதோப்பு அணைக்கட்டு, மிருகந்தா நதி, செண்பகத்தோப்பு, கெலவரப்பள்ளி, தும்பலஹள்ளி, சூளகிரி - சின்னாறு, வாணியாறு, பாம்பாறு, ஆண்டியப்பனூர், வரட்டாறு, மணிமுக்தா நதி, கரியகோயில், ஆனை மடுவு, சின்னாறு, நாகாவதி, தொப்பையாறு, குண்டேரிப்பள்ளம், வறட்டுப்பள்ளம், சித்தமல்லி, பொன்னையாறு, குதிரையாறு, பாலாறு - பொருந்தலாறு, கொடகனாறு, சண்முகாநதி, மருதாநதி, பிளவுக்கல், ஆனைக்குட்டம், சோத்துப்பாறை, இருக்கன்குடி, கருப்பா நதி, குண்டாறு, நம்பியாறு, கோல்வார்பட்டி, பொய்கையாறு என ஏராளமான அணைக்கட்டுகள் கட்டப்பட்டு, நீர்ப் பாசனத் திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன. இவை தவிர, 200-க்கும் மேற்பட்ட
...more
முதல்வராக இருந்த கருணாநிதி, பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் இருவருமே நீர்ப் பாசனத் திட்டங்களில் அதிக அக்கறை கொண்டார்கள். துரைமுருகனைத் தூக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டால்கூடப் பாசனத் திட்டங்கள் பற்றி புள்ளிவிவரங்களுடன் ஒப்பிப்பார். போதிய நீர்வளம் இல்லாத தமிழகத்தில் இவ்வளவு கட்டுமானங்களை உருவாக்கியது சாதனை. தமிழகத்தின் ஆற்று நீர் வளம், நிலத்தடி நீர் வளம், ஒவ்வொரு பகுதியிலும் மழை பெய்யும் அளவு, ஆழ்துளைக் கிணறுகளின் நீர்மட்டம் அனைத்தையும் சேகரித்து, கணினியில் தொகுத்தது ஒரு முக்கியமான பணி. மோசமான செயல்பாடுகள் என்றால், இரு கட்சிகளின் ஆட்சியிலும் பாசனத் திட்டங்களில், தூர்வாரும்
...more
அண்டை மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் உட்பட யாரும் நதிகள் விஷயத்தில் தேசியப் பார்வையுடனோ நீதியுணர்வுடனோ நடந்துகொள்ளவில்லையே! நாம் எப்படி தமிழக ஆட்சியாளர்களை மட்டும் இதில் குறை கூற முடியும்? மத்திய அரசும் வஞ்சித்த நிலையில்தான் உச்ச நீதிமன்றம் சென்று தீர்ப்புகள் வாங்கிவந்தார்கள். அவையும் செயல்படுத்தப்படவில்லையே!
வேளாண்மையில் பெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது தமிழகம்! எம்.எஸ்.சுவாமிநாதன் பேட்டி
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை. வேளாண் உற்பத்தியைப் பெருக்குவதற்காகப் புதிய உயர் ரக நெல் விதைகளை அறிமுகப்படுத்தியவர். சென்னையில் வேளாண் ஆராய்ச்சி மையம் நிறுவி கடந்த 35 ஆண்டுகளாக வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் எம்.எஸ்.சுவாமிநாதன்,
பசுமைப் புரட்சியை 1960-ம் ஆண்டிலேயே செயல்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏடிடி 27 என்ற நெல் விதை அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் மிகத் திறமையானவர்கள். கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மழைப்பொழிவு என்பது மிதமாகவே இருந்துவருகிறது. என்றாலும், அதைக் கொண்டு எவ்வளவு உற்பத்தியை மேற்கொள்ள முடியுமோ அவ்வளவுக்குச் சிறப்பாகச் செய்துவருகிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீர்ப்பாசன வசதிகள் மிகக் குறைவு. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் போன்றவற்றோடு எப்படி நாம் ஒப்பிட முடியும்? அங்கெல்லாம் தண்ணீர் அதிகம். மண்ணின் வளமும் அதிகம். ஆனால், வளங்கள் அடிப்படையில் பின்னே இருந்தாலும், இருக்கிற கட்டமைப்பைக் கொண்டு எப்படிச் சிறப்பாகச் செயல்படுவது என்பதில் நிச்சயம் தமிழ்நாடு முன்னே நிற்கிறது. சிக்கனமான நீர்ப் பாசனத்தைக் கையாள்வதில் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக, சொட்டுநீர்ப் பாசன முறையைக் கையாள்வதைச் சொல்லலாம். விவசாயத்தோடு சேர்ந்து துணைத் தொழில்களைக் கையாளும் நம்மவர்களின் உத்தியைச் சொல்லலாம். குறிப்பாக முட்டை உற்பத்தி, மீன் உற்பத்தி. மழைநீர்
...more
கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போது ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் விவசாயிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை நான் வழங்குவேன். ஒவ்வொரு முறை சட்ட மன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் என் பெயரைக் குறிப்பிட்டு, நான் என்னென்ன பரிந்துரைகளை அளித்தேன்; அவற்றில் எவையெல்லாம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன; அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதையும் அறிவிப்பார். விவசாயிகள்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் அவர். விவசாய வளர்ச்சிக்கான குரல்கள் எங்கிருந்து வந்தாலும் அவர் காது கொடுப்பார். அவர் செம்மொழி மாநாட்டின்போது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து கருப்பொருட்களைக் கொண்டு ஒரு
...more
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீர்ப்பாசன வசதிகள் மிகக் குறைவு. பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் போன்றவற்றோடு எப்படி நாம் ஒப்பிட முடியும்? அங்கெல்லாம் தண்ணீர் அதிகம். மண்ணின் வளமும் அதிகம்.
திராவிடச் சித்தாந்த பலம்தான் எதிர்கால இந்தியாவைத் தூக்கி நிறுத்த வேண்டும்! நாகநாதன் பேட்டி
திமுகவின் சித்தாந்தக் குரல்களில் முக்கியமானவர் நாகநாதன். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அரசியலமைப்புச் சட்டத்திலும் நிபுணத்துவம் உடையவர். பெரியார், அண்ணா, கருணாநிதி என்று திராவிட இயக்கத்தின் மூன்று பெரும் ஆளுமைகளுடனும் உறவில் இருந்தவர். குடும்பப் பின்னணி சார்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளையும் நெருக்கத்தில் பார்த்தவர். கருணாநிதியின் நடைப்பயிற்சி இணையுமான நாகநாதன், திமுக ஆட்சியில் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராகவும் இருந்தவர்.
சின்ன வயதிலேயே காமராஜரையும் பார்த்துவிட்டேன். ஒரு கூட்டத்துக்கு வந்திருந்தார். கூட்டம் முடித்து குளக்கரை ஒதுக்கத்தில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தவர் சிறுவர்கள் எங்களைப் பார்த்ததும் அப்படியே அதைக் கீழே போட்டுவிட்டு ‘சாரி’ என்றார்.
என்னுடைய மாமனார் க.ரா.ஜமதக்னி தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர். மார்க்ஸிய அறிஞர். சம்ஸ்கிருத மொழியையும் கசடறக் கற்றவர். ‘மூலதனம்’ 6 தொகுதிகளையும் மொழிபெயர்த்தவர்.
இந்தியாவில் எல்லாப் பிரச்சினைகளுக்குமான வேருமே இங்கே சாதியிலும் தீர்வுகள் சமூக நீதியிலும் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. திராவிட இயக்கம்தான் அதைப் பேசியது. பின்னாளில் எல்லாத் தத்துவங்களையும் உள்வாங்கிய பிறகு, திராவிட இயக்கத்தின் மீதான மரியாதை மேலும் அதிகமானதே தவிர குறையவில்லை.
தமிழ்நாட்டை வளர்ச்சியின் முன்னுதாரணமாக அமர்த்திய சென் குறிப்பிடும் வரை தேசிய ஊடகங்கள், ஆய்வாளர்கள் என்றெல்லாம் சொல்லிக்கொள்பவர்கள் திராவிடக் கட்சிகளின் சமூக நலத் திட்டங்களை ‘இலவச அரசியல்’ என்றும் ‘வெகுஜன கவர்ச்சி அரசியல்’ என்றும்தானே ஏகடியம் பேசிக்கொண்டிருந்தார்கள்? இப்போது தமிழ்நாட்டைப் பார்த்து தேசியக் கட்சிகள் ஆளும் ஏனைய மாநிலங்களிலும் இதே போன்ற திட்டங்களை முன்னெடுக்கும்போதுதானே ‘சமூக நலத் திட்டம்’ என்று பெயர் மாறுகிறது!
குழந்தைகள் நலத் திட்டம் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி இந்தியாவில் வேறு எங்கேயும் இல்லை.
முதலில் நீதிக் கட்சி அதை ஒரு சின்ன அளவில் கொண்டுவருகிறது. பின்னாளில், காமராஜர் அதை மதிய உணவுத் திட்டமாகக் கொண்டுவருகிறார். எம்ஜிஆர் அதைச் சத்துணவாக்குகிறார். எம்ஜிஆர் பெயரிலேயே இருந்தாலும்கூட அந்தத் திட்டத்தின் பெயரைக்கூட மாற்றாமல் கலைஞர் அதை மேலும் மேம்படுத்துகிறார். சனிக்கிழமையும் சேர்த்து வாரம் ஆறு முட்டை போடுகிறார். அடுத்து ஜெயலலிதா அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு 13 வகையான கலவை சாதம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவருகிறார். எவ்வளவு பெரிய தொடர்ச்சி! தொடக்கத்தில் “இது திட்டம் இல்லை. சாப்பிடுவது எப்படி வளர்ச்சிக் கணக்கில் வரும்?” என்று ஏகடியம் பேசிய திட்டக் குழு, பின்னாளில் சத்துணவுத்
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
தமிழ்நாட்டின் கல்வி, சுகாதாரத் துறை வளர்ச்சியை ஒப்பிட வேண்டும் என்றால், முன்னேறிய நாடுகளுடன்தான் ஒப்பிட வேண்டும்; ஏனைய இந்திய மாநிலங்களுடன் ஒப்பிட முடியாது என்றார் அமர்த்திய சென். மத்திய அரசு கல்விக்கு உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியில் 3.2% செலவிடும்போது, தமிழ்நாடு 10.2% செலவிடுகிறது. மத்திய அரசு பொதுச் சுகாதாரத்துக்கு 1.5% செலவிடும்போது, தமிழ்நாடு 13% செலவிடுகிறது. இந்தத் துறைகளின் வளர்ச்சிதான் பொருளாதார வளர்ச்சிக்கும் வழி அமைத்திருக்கிறது. உலகிலேயே சிறந்த அரசு குழந்தைகள் மருத்துவமனை சென்னை எழும்பூர் மருத்துவமனை. உலகின் மிகச் சிறந்த கால்நடைப் பல்கலைக்கழகங்களில் ஒன்று வேப்பேரி மருத்துவமனை.
...more
இந்தியப் பொருளாதாரம் என்பது குஜராத்தி பொருளாதாரம்தான். நேரு காலத்தில் வந்த அன்சாரி குழு அறிக்கையே தேசிய அளவில் 80% பொருளாதாரம் குஜராத்திகள் கையில் இருப்பதைச் சொன்னது. குஜராத்திலும் மகாராஷ்டிரத்திலும் குஜராத்திகள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டதன் விளைவாக, இந்த இரு மாநிலங்கள் போக மிச்ச 20% பொருளாதாரத்துக்குள்தான் ஏனைய எல்லா மாநிலங்களின் பொருளாதாரமும் உள்ளடக்கம். நவீன இந்தியாவில் தமிழ்ச் சமூகத்தை ஒரு பெரும் வணிகச் சமூகம் என்று சொல்ல முடியாது.
நம்முடைய விவசாயிகளில் 98% பேர் சிறு விவசாயிகள். காரணம், திராவிட இயக்க ஆட்சியில் இங்கே நிலங்கள் பெரிய அளவில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நில உச்ச வரம்புச் சட்டம், நிலமற்றோருக்கான இரண்டு ஏக்கர் நிலமளிப்புத் திட்டம் இரண்டாலும் பெரிய அளவில் சாத்தியமானது இது. இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மட்டும் 70% வரி வருவாயை டெல்லிக்குத் தருகின்றன. டெல்லியிடம் தமிழ்நாடு 100 ரூபாய் கொடுத்துவிட்டு 10 ரூபாய் வாங்குகிறது என்றால், உத்தர பிரதேசம் 10 ரூபாய் கொடுத்துவிட்டு 100 ரூபாய் வாங்குகிறது. பக்தவத்சலம் காலத்திலேயே, நிதிக் குழுவுக்கு 1966-ல் ஒரு அறிக்கை கொடுத்தார். தமிழ்நாட்டை நீங்கள்
...more
அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள் இவை தவிர நம்முடைய அரசியலமைப்பில் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று சொல்வேன். அடிப்படையிலேயே அது மக்கள் கருத்தைக் கேட்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அல்ல; நிபுணர்களின் அரசியலமைப்புச் சட்டம். பெண்களுக்கு ஓட்டில்லாத காலத்தில், பணக்காரர்களுக்கு மட்டும் - வெறும் 3% மக்களுக்கு மட்டும் ஓட்டுரிமை இருந்த காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் விவாதித்து உருவாக்கப்பட்டது அது. அதை உருவாக்கியவர்கள் என்னவோ பெரிய நிபுணர்கள்தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், பெரும்பான்மை மக்களின் கருத்துகளை அது புறந்தள்ளிவிட்டதே! விளைவாகத்தானே மையப்படுத்தப்பட்ட அதிகாரத்தை
...more
ஒரு மாநில அரசு பெரிய துறைமுகம் ஒன்றை நிறுவ வேண்டும் என்று நினைத்தால், இன்றைக்கும் முடியாது. ஏனென்றால், அதற்கான அதிகாரம் மத்தியப் பட்டியலில் இருக்கிறது. ஆனால், அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் துறைமுகங்களை வாரிக் கொடுக்கிறார்களே, எப்படி? எந்த அரசியலமைப்புச் சட்டப்படி இதை நடைமுறைப்படுத்துகிறார்கள்? ராணுவம், நாணயம், வெளியுறவு இந்த மூன்று துறைகள் சம்பந்தமான அதிகாரங்களைத் தவிர, ஏனைய எல்லா அதிகாரங்களையும் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.
நீங்கள் முன்மாதிரியாக முன்னிறுத்தக் கூடிய அரசியலமைப்புச் சட்டம் எதுவாக இருக்கும்? அமெரிக்காவினுடையது. அதன் அளவே கவரக் கூடியது. திருத்தங்கள், இணைப்புகள் எல்லாம் சேர்த்தே 74 பக்கங்கள்தான். மாகாணங்களுக்கு எவ்வளவு உரிமைகள்! ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சட்டம்!
உலகின் மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்டத்தை ரஷ்யா கொண்டிருந்தது. 1991-ல் உடைந்துவிட்டது. அடுத்த மிகப் பெரிய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவினுடையது. பல்லாயிரக்கணக்கான பக்கங்கள்.
படைகளையும் கடுமையான சட்டங்களையும் கொண்டு எவ்வளவு நாள் மக்களை ஆள முடியும்? மக்கள் கேட்பது அதிகாரம். அதைக் கொடுத்தால் ஏன் பிரிவினை கேட்கப்போகிறார்கள்? நீங்கள் அதிகாரத்தை மறுக்கும்போதும், அவர்களைப் பாரபட்சமாக நடத்தும்போதும்தான் அவர்கள் சுதந்திரம் கேட்கிறார்கள். மாநிலங்கள் தங்களைச் சமமாக உணர வேண்டும் என்றால், எல்லோரையும் சமமாக நடத்தும் இடத்தில் இந்த ஒன்றிய அரசு தன்னை அமர்த்திக்கொள்ள வேண்டும்
மாநிலங்களிடம் உள்ள வரிவிதிப்பு அதிகாரத்தையும் ‘பொதுச்சரக்கு மற்றும் சேவை வரி’ (ஜிஎஸ்டி) மூலமாக மறைமுகமாகப் பறித்துவிட்டவர்களை வேறு எப்படிப் பார்ப்பது?
சாதியிலிருந்து விடுபட நினைக்கும் மனம்தான் எல்லா இடங்களிலும் சமத்துவத்தை இங்கே விரும்பும். வெறுமனே காங்கிரஸ், பாஜக அல்லாத இயக்கம் அல்லது மாநிலக் கட்சி என்பதாலேயே அவர்கள் சித்தாந்தம் மாறிவிடுவதில்லையே? உதாரணமாக, இந்தி ஆதிக்க விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சிக்கும் பாஜகவுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? ஆம்ஆத்மி கட்சிக்கு இதுகுறித்தெல்லாம் என்ன பார்வை இருக்கிறது?
பெரியார் இறுகப் பிடிப்பார். அண்ணா விட்டுப் பிடிப்பார். கலைஞர் சில இடங்களில் பெரியார் மாதிரியும் சில இடங்களில் அண்ணா மாதிரியும் இருப்பார். அவர் பெரியார், அண்ணாவின் கலவை.
எதற்கும் அஞ்சாத துணிச்சலும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை அணுகும், அரவணைக்கும் குணமும் கலைஞரிடம் எனக்குப் பிடித்தமானவை.