More on this book
Kindle Notes & Highlights
by
அசோகன் கே
Read between
January 23 - February 8, 2021
1955 இந்துத் திருமணச் சட்டப்படி, ‘மணப் பெண்ணிற்கு மணமகன் தாலி கட்டியிருக்க வேண்டும் மற்றும் சமயச் சடங்குகளை நடத்தியிருக்க வேண்டும்’. அதுவே சட்டப்படியான திருமணம். ஆனால், தொடர்ந்து, “திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தம். அதில் சமயச் சடங்குகளைப் புகுத்துவது தவறு” என்று பொது மேடைகளில் பிரச்சாரம் நடத்திவந்த இயக்கம் திராவிட இயக்கம். திமுக 1968-ல் இந்து திருமணச் சட்டத்தில் புரட்சிகரமான ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன் விளைவாக, ‘தாலி கட்டாத திருமணங்களும், சமயச் சடங்குகள் இல்லாத திருமணங்களும் சட்டப்படி செல்லும்’ என்றானது. சீர்திருத்தத் திருமணங்களுக்கும், சுயமரியாதைத் திருமணங்களுக்கும் சட்ட அங்கீகாரம்
...more
1971-ல் இந்து அறநிலையத் துறைச் சட்டம் திருத்தப்பட்டு, ‘எந்தச் சாதிப் பிரிவினராக இருப்பினும் அவர்கள் திருக்கோயில்களின் வழிபாட்டு முறைகளை முறையாக கற்றுத் தேர்ந்திருப்பின், அவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்குத் தடையில்லை’ என்னும் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக உச்ச நீதிமன்றம் அர்ச்சகர் நியமனத்தில் பரம்பரை உரிமையை ஆகமம் என்ற பெயரில் நிலைநாட்டி, 2015-ல் இச்சட்டத் திருத்தத்தை ரத்துசெய்துவிட்டது.
இவற்றையெல்லாம் களைவதற்காக 1978-ல் தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் (அரிஜன நலத் திட்டங்களுக்காக) சட்டம் நிறைவேற்றப்பட்டது.
நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்குப் புதிய குடியிருப்புகளை அமைத்துத் தருவதற்கான வாரியம் அமைக்கும் சட்டம் 1971-ல் நிறைவேற்றப்பட்டது. அதுதான் தமிழ்நாடு குடிசைப் பகுதிகள் (முன்னேற்றம் & அகற்றும்) சட்டம்.
1989-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் இந்துக் கூட்டுக் குடும்பச் சொத்து என்றாலும், அதில் மகள்களுக்கும் மகன்களுக்குச் சமமான உரிமை கொண்டுவரப்பட்டது. இதற்குப் பின் 15 வருடங்களுக்குப் பிறகே 2005-ல் இந்து வாரிசுரிமைச் சட்டத்தைத் திருத்தி, பாலின வேறுபாடுகளைக் களைந்தது மத்திய அரசு. மற்ற மாநிலங்களில் உள்ளாட்சிக்கான தேர்தல்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் 2016-ம் வருடம் உள்ளாட்சிகளுக்கான இடங்களில் 50% இடங்கள் ஒதுக்கப்பட்ட சட்டத் திருத்தம் கொண்டுவந்ததன் மூலம், இப்பிரச்சினையில் இந்தியாவிற்கே
...more
தொழிலாளர்கள் தியாகத்தை நினைவுகூரும் மே தினத்தைக் கொண்டாடும் வகையில், அன்றைக்குக் கட்டாய விடுமுறை அளிக்கும் சட்டத் திருத்தம் 1969-ல் நிறைவேற்றப்பட்டது. இன்றும் இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் ஊதியத்துடன் கூடிய மே தின விடுமுறை இல்லை. முன்னதாக, தொழிலாளர்கள் தங்களது நிர்வாகத்தால் வேலைநீக்கம் செய்யப்படும்போது, அவர்கள் அப்பிரச்சினையைத் தொழிலாளர் நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு அரசாங்கத்தின் அனுமதி தேவைப்பட்டது. அரசோ பல பணி நீக்க வழக்குகளைத் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்ப அனுமதி மறுக்கும். 1982-ல் ஆவின் தொழிலாளர்கள் 1,800 பேர் ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அந்த வழக்கையும்கூட
...more
1981-ல் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு (தற்காலி வேலை நீக்க வாழ்க்கைப்படி அளிக்கும்) சட்டம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. ‘தற்காலிகப் பணிநீக்கப்பட்ட தொழிலாளிக்கு முதல் 90 நாட்களுக்குள் 50% ஊதியம், 180 நாட்களுக்குள் 75% ஊதியம், 180 நாட்களுக்கு மிகைப்பட்டால் 100% ஊதியம் கொடுக்க வேண்டும்’ என்று இச்சட்டம் சொன்னது.
1981-ல் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளருக்கு நிரந்தரப் பணி அளிக்கும்) சட்டம், ‘ஒரு தொழில் நிறுவனத்தில் 480 நாட்கள் தொடர்ச்சியாகப் பணியாற்றும் ஒரு தொழிலாளி, தானாகவே நிரந்தரமாக்கப்படுவார்’ என்று சொன்னது. இத்தகைய சட்டம் இன்று வேறெந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை.
காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவளித்ததில் பெரும் தொழிலதிபர்களும், பண்ணையார்களும் கணிசமான பங்கு வகித்தனர். நிலச் சீர்திருத்தம் குறித்துப் பேசிவந்தாலும், அதற்காக காங்கிரஸ் அரசு எதையும் செய்யவில்லை. கடுமையான போராட்டங்களின் விளைவாக 1961-ல் தமிழ்நாடு நிலச் சீர்திருத்த (உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம்’ கொண்டுவரப்பட்டது. ஒரு தனி நபருக்கான நில உச்ச வரம்பாக 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் நிலம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பயன் இல்லை. 1970-ல் திமுக அரசு மிகுந்த துணிச்சலோடு உச்ச வரம்பிற்கான அளவை 15 ஸ்டாண்டர்டு ஏக்கராகக் குறைத்தது. இதன் மூலம் கணிசமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, விவசாயத் தொழிலாளர்களுக்கும், சிறு
...more
2002-ல் அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பதை அடிப்படை உரிமையாக்கி, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால், 1994-லேயே தமிழ்நாடு கட்டாய (ஆரம்பக் கல்வி) சட்டம், 1994-ல் கொண்டுவரப்பட்டது.
மத்திய அரசால் 2005-ல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் தகவல் அறியும் சட்டம் 1997-ல் கொண்டுவரப்பட்டது. சில ஓட்டைகள் இருந்தாலும் தகவல் அறிவதற்கான உரிமையைப் பிரகடனப்படுத்திய முதல் சட்டம் என்று இதைக் கூறலாம்.
உணவு என்பது நில உடைமையாளர்களிடமிருந்து பெறுவது என்றிருந்த நிலை மாற்றப்பட்டு இன்று அது அரசின் கடமை என்றானது.
நவீன இந்தியாவின் பொருளாதாரம் என்பது குஜராத்திகளின் பொருளாதாரம்.
தமிழ்நாட்டு வணிகச் சமூகங்கள் என்று எடுத்துக்கொண்டால் குறிப்பிடத்தக்க வரலாற்று நீட்சியைக் கொண்ட ஒரே வணிகச் சமூகமாக நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகம் இருந்தது. அவர்களது பிரதான வணிகம் முத்து, பிற்காலத்தில் வட்டித்தொழில் என்றானது. காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு மட்டும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட வட்டி நிறுவனங்கள் நடந்த காலம் உண்டு. இரண்டாம் உலகப்போரின்போது பர்மா, மலேசியாவில் செல்வத்தையும் பல லட்சம் ஏக்கர் நிலங்களையும் இழந்த பின் அவர்களும் முடங்கினார்கள்.
தமிழகத்தில் பிராமணர்களிடமே சொல்லிக்கொள்ளும்படியான தொழில் முதலீடுகள் பெரிய அளவில் எல்லாத் துறைகளிலும் இருந்தன. டிவிஎஸ், சிம்சன், மெட்ராஸ் சிமென்ட்ஸ், சேஷசாயி என்று இந்தப் பட்டியல் மிகப் பெரியது.
தமிழகத்தில் தொழில் துறையைக் கையில் வைத்திருந்தவர்களோ திமுகவைச் சங்கடமாகப் பார்த்தவர்கள். இந்த நெருக்கடிகளினூடாகவே தொழில் துறையை வளர்த்தெடுத்தது திமுக.
தொழில் வளர்ச்சிக்கும் முதலீடுகளுக்கும் ஏற்ற வன்முறையற்ற அமைதியான சூழலை வளர்த்தெடுத்தது.
காமராஜர் பார்வையும் கருணாநிதி பார்வையும் என்றுகூடத் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை ஒப்பிடலாம். தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக, எந்தெந்தப் பகுதிகளில் எந்தெந்தத் தொழில்கள் நடைபெறுகின்றனவோ அவற்றை ஊக்குவிக்கும் வகையில் காமராஜர் தொழிற்பேட்டைகளை உருவாக்கினார். ஓர் உதாரணம்-திண்டுக்கல்லில் பூட்டு தயாரிக்கிற தொழிற்பேட்டை. கருணாநிதி தொழில் சூழல் இல்லாத இடங்களிலும் தொழிற்பேட்டைகளை உருவாக்கினார். தமிழக வரலாற்றில் 1971 – 1976 காலகட்டம் முக்கியமானது. தமிழகத்தின் ஒவ்வொரு 50-வது கிலோ மீட்டரிலும் ஒரு தொழிற்பேட்டை இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு திமுக அரசு செயல்பட்ட காலகட்டம் அது.
சேலம் உருக்காலை அதன் தொடக்கம்.
மத்திய அரசின் ஆதிக்கத்தைத் தொழில் துறையில் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அவர் யோசனையில் உதித்ததே மாநில – மத்திய – தனியார் கூட்டு முதலீட்டுத் திட்டம். அப்படி உருவானவைதான் தூத்துக்குடி ஸ்பிக், மதுரை தமிழ்நாடு கெமிக்கல்ஸ், காரைக்குடி டிசிஎல், மெட்ராஸ் பெர்ட்டிலைசர்ஸ் எல்லாம்.
1996-2001 திமுக ஆட்சிக் காலகட்டமும் மிக முக்கியமானது. தகவல் தொழில்நுட்பத் துறை ஒரு புரட்சியை உண்டாக்கும் என்பதைக் கணித்து நாட்டிலேயே முதல் முறையாக 1997-ல் அத்துறைக்கான கொள்கையை அறிவித்தார் கருணாநிதி. இதற்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரே வாஜ்பாய் காலத்தில் தேசிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை வெளியானது.
அந்த நாளைய அரசாங்கக் கணக்கெடுப்பு தரும் விதவைகள் எண்ணிக்கையில் ஒரு வயதுக் குழந்தைகளும் அடக்கம்.
தாலியிலிருந்து பெண்ணுக்கு விடுதலை கேட்டபோது, சங்க இலக்கியத்தில் தாலி இல்லை என்று சுட்டிக்காட்டிய இயக்கம் இது. தமிழரின்
இந்தியாவிலேயே பெண் காவலர்கள் முதலில் நியமிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. மகளிர் காவல் நிலையங்களை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு பெண்ணை பேருந்து ஓட்டுநராக நியமித்த மாநிலம் தமிழ்நாடு. அரசுப் பணி வாய்ப்புகளில் பெண்களுக்கென 30% ஒதுக்கீடு - இன்றளவும்கூட இந்தியாவில் வேறெங்கும் அரசு வேலைகளில் பெண்களுக்குத் தனி ஒதுக்கீடு இல்லை – கொடுத்தது தமிழ்நாடு. தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணிகள் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டன.
பக்கத்துத் தெரு பாத்திமா வயதுக்கு வந்த பிறகும் பள்ளிக்குப் போவதாக ஊருக்குள் பேச்சு அடிபட்டது. ‘பத்தாவது படித்தால் அரசு திருமண உதவித்தொகை தரும்’ என்ற அறிவிப்பு அதன் பின் உந்துசக்தியாக இருந்தது.
‘ஆண் சாதி பெண் சாதி ஆக இரு சாதி. வீண் சாதி மற்றதெல்லாம்’ என்று சித்தர்கள் பாடிய காலத்திலிருந்து
சாதி ஒழிப்புப் பாதையில் கலைஞர் இன்னும் வேகமாகப் பயணித்தார். அவருடைய முதலாவது ஆட்சிக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். எம்ஜிஆரின் அதிமுக உருவாக்கத்துக்குப் பிறகு இந்தப் பயணத்தில் வேகம் குறைகிறது.
எம்ஜிஆர் நடந்துகொள்ளவில்லை. கட்சி நிர்வாகிகள் தேர்வு, வேட்பாளர் தேர்வுகளில் சாதியின் ஆதிக்கம் திராவிடக் கட்சிகளில் தலை தூக்க அவரே வழிவகுத்தார். எம்ஜிஆருக்குப் பிறகு, ஜெயலலிதா காலகட்டத்தில் அதிமுக மேலும் நீர்த்துப்போனது.
அம்பேத்கரின் பெயரில் சட்டக் கல்லூரி அமைத்தார். அதுவும் எப்போது? மகாராஷ்டிரத்தில் அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கக் கூடாது என்று சிவசேனையினர் போராடியதோடு மட்டுமில்லாமல், அம்பேத்கரின் பெயரில் அமைந்த நூலகத்தை எரித்தும் சாம்பலாக்கினார்கள். வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினார்கள். தலித் மாணவர்கள் வீதியிலே உயிரோடு கொளுத்தப்பட்டார்கள்.
ஆதிக்கமும் ஒடுக்குமுறையும் எதற்காக நிகழ்த்தப்படுகின்றன என்றால், சுரண்டலுக்காக நிகழ்த்தப்படுகின்றன. மானுடத்தின் மீது இந்த மூன்றும் எப்போதும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
சாதியின் பாதுகாப்பு அரணாக இருக்கும் இந்து மதம் இன்று இவ்வளவு வலுவாக இருப்பதற்கு இந்திய தேசியமும் ஒரு காரணம்.
இங்கு பழங்குடி மக்களின் எண்ணிக்கை 1%-க்குள். சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் 25%-30%. வட கிழக்கை எடுத்துக்கொண்டால், 90% வரைக்கும்.
கல்வி. ‘பழங்குடியினரெல்லாம் ஜஸ்ட் பாஸ் பண்ணா போதும்; மருத்துவக் கல்லூரியில் எளிதாக இடம் கிடைத்துவிடும்’ என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்டதுண்டு. இன்று ‘ஓசி’ எனப்படும் பொதுப்பிரிவில் தேறிவருகிறார்கள் எங்கள் பிள்ளைகள்.
கருணாநிதி கொண்டுவந்த இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம். ‘டிவி இருக்கு; மின்சாரம் இல்லை; கேபிள் இல்லை’ என்றபோது அரசாங்கம் மிச்ச சொச்சம் மின்சாரம் இல்லாத இடங்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டுவந்தது. கேபிள் மூலமாக தகவல் தொடர்பு வந்தது. எல்லாவற்றுக்கும் மேல் எங்கள் மக்களில் பெரும்பாலானோர் அப்போதுதான், ‘உலகம் எப்படி இருக்கிறது, நாம் எப்படி இருக்கிறோம்’ என்று பார்த்தார்கள். உலகத்தை எங்களோடு இணைத்த திட்டம் அது!
முஸ்லிம்கள் அரசியலில் இருந்தால் காங்கிரஸில் இருக்க வேண்டும் – அப்போதுதான் அவர்கள் தேசிய முஸ்லிம்கள்; இல்லாவிடில் சந்தேகத்துக்குரியவர்கள் என்ற சூழல் உருவாக்கப்பட்டது.
இதை பெரியாருடன் இயக்கத்தில் இருந்து, பின்னாளில் பிரிந்து வந்து அரசியல் இயக்கமாக திமுகவை ஆரம்பித்த அண்ணா சுட்டிக்காட்டி அரசியலாக்கிய பின்னர்தான், கடையநல்லூர் மஜீதுக்கு 1962-ல் அமைச்சர் பதவி வழங்கியது காங்கிரஸ்.
திராவிட இயக்கத்துக்குத் தோள் தந்த பிராமணர்கள்!
வ.ரா. 1889-1951
குல ஆசாரங்களைக் கைவிட்டார். பூணூலை அறுத்தெறிந்தார். குடுமியைத் துறந்தார். சாகும் வரை சடங்குகளுக்கும் மூடப்பழக்கவழக்கங்களுக்கும் எதிராகச் செயல்பட்டுவந்தார். பெரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தவர் திராவிட இயக்கக் கொள்கைகளைத் தூக்கிச் சுமந்து பரப்பினார்.
ஏ.எஸ்.கே. 1907- 1978
ஆவியூர் சீனிவாச கிருஷ்ணமாச்சாரி எனும் தன் பெயரை ஏ.எஸ்.கே. என்று மாற்றிக்கொண்டவர். இவருடைய ‘பகுத்தறிவின் சிகரம் பெரியார்’ நூல் இந்திய தத்துவ ஞான மரபில் பெரியாரின் இடம் எப்படி மறுதலிக்க முடியாது என்பதை விளக்கக் கூடியது. ஏ.எஸ்.கே.வின் குடும்பத்தினரும் முற்போக்காளர்கள். அண்ணன்கள் துரைசாமி சாதி கடந்த மணமும், பார்த்தசாரதி மதம் கடந்த மணமும் செய்துகொண்டனர். ஏ.எஸ்.கே. மணம் செய்துகொள்ளவில்லை!
ந.சுப்பிரமணியன் 1915-2013
பெரியார், கி.வீரமணி மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்த சுப்பிரமணியன், தான் இறந்த பின்பு தனது உடலுக்கு அருகில் அவரும் வீரமணியும் இணைந்திருக்கும் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று தன் குடும்பத்தினரிடம் கூறியவர். அவருடைய குடும்பத்தினரும் அவ்வாறே செய்தனர்.
வி.பி.ராமன் 1932 - 1991
சின்னகுத்தூசி 1934-2011
பெரியாரியரான குத்தூசியின் எழுத்துகளால் கவரப்பட்டு தன் பெயரை சின்னகுத்தூசி என்று மாற்றிக்கொண்டவர்.
தமிழகப் பிராமணர்கள் புலம்பெயர்கிறோம் என்றால், அது நூறாண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது. பிரிட்டிஷார் காலத்திலேயே நாடு முழுக்கச் சென்றார்கள். வேலைவாய்ப்புக்காக பம்பாய், கல்கத்தா, டெல்லி என்று சென்றார்கள். பிற்பாடு அமெரிக்கா அந்த இடத்தைப் பிரதானமாகப் பிடித்துக்கொண்டது.
நவீன சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்ட பிராமணரல்லாதோர் இயக்கம் அல்லது திராவிட இயக்கம் என்பது, அதிகாரப் பகிர்வையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்துவதாக அமைந்ததே அன்றி, சமூகத்தில் வேற்றுமையை வளர்ப்பதாகவோ, முரண்களை வன்செயல்களாகக் கூர்மைப்படுத்துவதாகவோ இருக்கவில்லை. ஒதுங்குவது, ஒதுக்குவது போன்றவற்றைப் பிராமணர்கள் செய்தாலும், பிறர் அப்படி தமிழ்நாட்டில் பிராமணர்களை நடத்தியதில்லை. இன்னும் சொல்லப்போனால், பிராமணர்கள் பலருடனும் முரணும், அதேசமயம் உரையாடலும், உறவும் கொண்டதாகத்தான் திராவிட இயக்கமே விளங்கியது. இந்த இடத்தில் ஜெயலலிதாவையும்
...more
திராவிட இயக்கத்தின் ஆட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தை ஏதோ நாஜி ஜெர்மனியின் யூதர்களைப் போல வர்ணிக்கும் பிராமணர் குரல்களை நான் உள்ளூரிலேயே கேட்டிருக்கிறேன்.
‘பராசக்தி’ படத்தைப் பிராமணர்கள் கடுமையாக எதிர்த்தார்களே தவிர, ‘பராசக்தி’ படத்தில் பிராமணப் பாத்திரங்களோ, அவர்கள் குறித்த விமர்சனமோ எதுவும் இருக்கவில்லை. அந்தப் படத்தை எதிர்த்ததைப் போலவே கருணாநிதியையும் அவர்கள் எதிர்த்தார்கள். அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரை ஏற்றுக்கொள்ளும் பிராமணர்கள்கூட பலர் கருணாநிதியை ஏதேதோ காரணங்களைத் தேடி நிராகரிப்பதை நான் கவனித்திருக்கிறேன். “அண்ணாவுக்குப் பிறகு, நாவலர்தான் முதலமைச்சர் ஆகியிருக்க வேண்டும்; கருணாநிதி குறுக்கே புகுந்துவிட்டார்” என்று ஒரு சித்திரத்தைப் பிராமணர்கள் தொடர்ந்து நம்பியும், பேசியும், பரப்பியும்வந்தார்கள். மிக மேலோட்டமான மனப்பதிவுகளின் விளைவு இது.