More on this book
Kindle Notes & Highlights
by
அசோகன் கே
Read between
January 23 - February 8, 2021
‘மத்தியில் கூட்டாட்சி;
தான் பதவியேற்றவுடனேயே 1969 மார்ச் 17-ல் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கலைஞர், “மத்திய - மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும்” என்று அறிவித்தார். அப்படி ஆராய உருவாக்கப்பட்ட குழுவே நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ஏ. லட்சுமணசாமி முதலியார், பி.சந்திரா ரெட்டி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குழுவாகும்.
மாநில அரசுகளின் ஆலோசனையைப் பெற்றே ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும்.
நெருக்கடி நிலை அறிவிப்பு தொடர்பாக முடிவெடுக்கும்போது, மாநிலங்களிடை மன்றத்துடன் கலந்தாலோசித்தே முடிவு எடுக்கப்பட வேண்டும்.
மாநிலங்களவையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமான எண்ணிக்கையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென்றால், மூன்றில் இரு பங்கு மாநில சட்ட ம...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை முன்வைத்து இந்திரா காந்தி தலைமையிலான அரசுக்கு அழுத்தம் கொடுத்தார் கலைஞர்.
அதற்குப் பின் 1984-ல் நீதிபதி சர்க்காரியா தலைமையில், மத்திய - மாநில உறவுகளை ஆராய குழு அமைத்தார் இந்திரா காந்தி. தொடர்ந்து மாநில உரிமைகளை முன்னிறுத்தி ஆந்திராவில் என்.டி.ராமாராவ், அஸாமில் மகந்தா ஆகியோர் நடத்திய மாநாட்டில் இந்த ராஜமன்னார் குழு அறிக்கை விவாதப் பொருளாக இருந்தது. காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா நடத்திய மாநாட்டில், “வெளியுறவு, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, நிதி போன்ற துறைகளை மட்டும் மத்திய அரசு வைத்துக்கொண்டு, மற்ற அதிகாரங்களை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அரசும் “ராஜமன்னார் குழுவின் அடிப்படையில் மாநிலங்களுக்கு
...more
டெல்லியில் 1970 ஆகஸ்ட் 27-ல் பத்திரிகையாளர்கள் முன் தமிழக அரசின் கொடி எப்படி இருக்கும் என்று, தான் வடிவமைத்த மாதிரியை முதல்வர் கலைஞர் வெளியிட்டார்.
“சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை முதல்வர்களுக்கு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தத் தொடங்கினார் கலைஞர். பிரதமர் இந்திரா இதை ஏற்றார்.
இந்தியாவின் தலைநகரம் டெல்லி அல்ல; மெட்ராஸ் என்று எழுதின பத்திரிகைகள்! தேவ கௌடா
தேவராஜ் அர்ஸை நேரில் சந்தித்து, ‘தமிழக விவசாயிகள் தவிக்கிறார்கள்; மறுத்துவிடாதீர்கள்’ என்று உருக்கமாகத் தண்ணீர் கேட்டார் கருணாநிதி. நான் அப்போது எதிர்க்கட்சித் தலைவர். ‘எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது’ என்று தேவராஜ் அர்ஸிடம் எச்சரித்துவிட்டு வந்திருந்தேன். முதல்வரைச் சந்தித்ததோடு, யாருமே எதிர்பார்க்காத சூழலில், என்னையும் வந்து சந்தித்தார். ‘நீங்களும் ஒரு விவசாயி. சக விவசாயிகளின் வலியைக் கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்... மனது வையுங்கள்’ என்று என் கையைப் பற்றிக்கொண்டார். இந்த அணுகுமுறை என்னை நெகிழச் செய்துவிட்டது.
எல்லோருடைய தேர்வாகவும் இருந்தவர் வி.பி.சிங். ஆனால் அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். அடுத்ததாக உச்சரிக்கப்பட்ட பெயர் கருணாநிதி. ‘என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்’ என்று சொல்லி உடனே அவர் மறுத்துவிட்டார். அடுத்து மூப்பனார் பெயர் முன்மொழியப்பட்டபோது, பலர் அவருக்குச் சாதகமாக இல்லை.
ஒரு விஷயத்தில் கருணாநிதி உறுதியாக இருந்தார். ‘இந்த முறை தெற்கைச் சேர்ந்த ஒருவரே பிரதமர் ஆக வேண்டும்’ என்பதே அது. இதுதான் அடிப்படை. நான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக கருணாநிதி, மூப்பனார், முரசொலி மாறன் மூன்று பேரும் கடுமையாகப் பணியாற்றினார்கள்.
இது தவிரவும் தமிழகத்தில் அவருடைய பிரதான அரசியல் எதிரியான ஜெயலலிதாவோடு வேறு நெருக்கமான நட்பு கொண்டிருந்தவன் நான்.
அடுத்த ஆறு மாதங்கள் இந்தியாவின் ஜனநாயகத் தீவாக தமிழகம் இருந்தது. விளைவாக, திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் இன்றைய செயல் தலைவர் ஸ்டாலின், முரசொலி மாறன் உட்பட 20,000 திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர். வதைகளை எதிர்கொண்டனர். ஒன்றரையாண்டு தொடர் எதிர்ப்பின் விளைவாக 1977-ல் தேர்தலை அறிவித்தார் இந்திரா.
நெருக்கடிநிலை பிறப்பிக்கப்பட்ட ஜூன் 25, 1975 அன்றிலிருந்தே ஆட்சியே போனாலும் அதனை எதிர்ப்பது என்ற நிலையில்தான் கருணாநிதி இருந்தார். 24 மணி நேரத்திற்குள் கட்சியின் செயற்குழு கூட்டப்பட்டது. விடியற்காலை 4 மணிக்கு கருணாநிதி தயாரித்த கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முதலாக கட்சிரீதியான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிய பெருமிதம் திமுகவுக்கு உண்டு!
தமிழர்களின் சராசரி ஆயுளை உயர்த்தியதில் திராவிடக் கட்சிகளின் சமூக நலத் திட்டத்துக்குப் பங்குண்டு. -பிரேர்ணா சமூக அறிவியலாளர், ப்ரௌன் பல்கலைக்கழகம், அமெரிக்கா
தமிழ்நாடு துணிச்சலான சமூகநலத் திட்டங்களை முன்னெடுத்தது. அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் மதிய உணவு வழங்குவது, பள்ளிகள், சுகாதார மையங்கள், சாலை வசதிகள், பொதுப்போக்குவரத்து, குடிநீர் பகிர்மானம், மின் இணைப்பு வழங்கல் என்று இன்னும் நிறைய திட்டங்களைக் குறிப்பிடலாம். இவற்றில் பலவற்றையும் பெரும்பாலான பொருளியல் அறிஞர்களும் விரும்பவில்லை. ஆனால், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாகத் தமிழகம் இந்தத் திட்டங்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் இன்று சிறப்பான பொதுச் சேவைகள் உள்ளன. அந்த சேவைகளில் பெரும்பாலானவை பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைப்பதுதான் இதில்
...more
வளர்ச்சிப் பாதையைப் பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கிடையில் பொதுவான ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
டேவிட் ஷுல்மன் இஸ்ரேலிய அறிஞர், சங்க இலக்கியத்தை ஹீப்ரு மொழியில் மொழிபெயர்த்தவர், ‘தமிழ்-எ பயோகிராஃபி’ நூலாசிரியர்
துணை தேசிய உணர்வு
மதறாஸ் மாகாணம் தன்னுடைய மொத்த செலவில் கல்விக்காக 1900 - 1940 காலகட்டத்தில் 5.4% செலவிட்டது. 1940-களில் இது 16% அளவுக்கு உயர்ந்தது.
பிற மொழி கலவாமல் தமிழில் பேசும், எழுதும் தனித்தமிழ்ப் போக்கு உச்சம் நோக்கி நகர்ந்தது. சம்ஸ்கிருதப் பெயர்களைத் தவிர்த்து தூய தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டினர். நீதி தவறியதை அறிந்ததும் உயிரைத் துறந்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பெயரை ஏராளமானோர் சூட்டிக்கொண்டது இதில் கவனிக்கத்தக்கது.
தேசிய அளவில் தொழில்துறைக்கு முன்னுரிமை தந்த காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை தந்தது.
பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளின் எண்ணிக்கை பெருகின.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை உயர்த்தப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து
1995-லேயே தமிழ்நாட்டில் நிகழ்ந்த பிரசவங்களில் 84% பயிற்சி பெற்ற மருத்துவத் தாதியர் உதவியுடன் நிகழ்ந்ததோடு இதைத் தொடர்புபடுத்தலாம். அப்போது தேசிய சராசரி 42%.
ஓராண்டில் தன்னுடைய பகுதியில் சிசு மரணம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் மருத்துவ செவிலியருக்கு ஒரு சவரன் தங்கம் தமிழகத்தில் பரிசாகத் தரப்படுகிறது.
கிராமங்களில் வீடுகளில் மருத்துவப் பயிற்சி இல்லாதவர்கள் பிரசவம் பார்ப்பதைத் தடுக்க, வீட்டுக்கே சென்று பிரசவம் பார்க்கும் செவிலியருக்கு ஒவ்வொரு பிரசவத்துக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சிக்கலான மகப்பேறுகளை அரசு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்தாலும் இப்படியான ஊக்கத்தொகை உண்டு. இவ்வளவும் சேர்ந்துதான் தமிழர்களின் சராசரி ஆயுள் காலத்தை இன்று 66 வயதாக உயர்த்தி இருக்கின்றன.
காஷ்மீர் மாநிலத்தில் தேசியக் கொடியுடன், மாநிலக் கொடியும் உண்டு. முன்பு காஷ்மீருக்கு அதிபர், பிரதமர் பதவிகள் இருந்தன. இப்போதுதான் முதல்வர், ஆளுநர் பதவி என்றாகிவிட்டது.
1950-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் காஷ்மீருக்கு வழங்கிய அதிகாரங்களைப் போன்ற அதிகாரங்களையே எல்லா மாநிலங்களுக்கும் கேட்கிறது தமிழகம். அதைத்தான் மாநில சுயாட்சி என்று திமுக குறிப்பிடுகிறது.
தமிழ்நாட்டில் சமூக நீதி இயக்கம் வலுவாகக் காலூன்றியதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, அதன் பலன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வசதி படைத்தவர்களுக்கு மட்டும் பலன் தந்ததோடு நிற்கவில்லை என்பதேயாகும்.
வட இந்தியாவிலும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளைப் பேசும் அரசியல் 1960-களில் தொடங்கியது. 1967-ல் அவர்களில் பலர் முதல்வர் பதவிக்கும் வந்தனர். ஆனால், இது சமூக நீதியை நோக்கிய வெற்றிகரமான பயணமாக அமையவில்லை. விரைவிலேயே அந்த அலை வடிந்தது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. இந்தக் குரல்களைக் கட்டுப்படுத்தியது. 1990-களில் மண்டல் கமிஷன் பரிந்துரை அமலாக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்த பிறகே சமூக நீதியை நோக்கிய அடுத்த பயணத்தில் வட இந்தியா காலடியை வைத்தது. அதேபோல, அரசியல் தளத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை நோக்கி அதிகாரம் சென்றாலும், பிற்படுத்தப்பட்டவர்களில் செல்வாக்கு மிக்க –
...more
சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் திமுக, அதிமுக இடையில் ஆரோக்கியமான போட்டி எப்போதும் நிலவியது. இதனால்தான் சமூக நலத் திட்ட அமலாக்கத்திலும் வளர்ச்சியிலும் இந்திய அளவில் தமிழ்நாடு முன்னே நிற்கிறது. இந்திய ஜனநாயகத்துக்கு திராவிட இயக்கத்தின் நிரந்தரமான பங்களிப்பு என்றால் அது, ‘இந்தி-இந்து-இந்துஸ்தான்’ என்ற தேசியவாதத்தை ஏற்க மறுத்து அது உறுதியாக நிற்பதுதான். கருணாநிதியின் ஆட்சியில் மாநில அரசு ஒருபோதும் மத்திய அரசுக்குக் கீழான அரசாகச் செயல்பட்டதில்லை.
சுதந்திர தினத்தன்று முதல்வர்களுக்கு தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தவரும் அவரே.
இன்றைக்கு திமுகவிடம் ஏனைய கட்சிகளிடமிருந்து வேறுபட்ட தன்மையையும் பழைய தீவிரத்தையும் பார்க்க முடியவில்லை. ஒட்டுமொத்த போக்கில் – குடும்ப அரசியல் உட்பட – திமுக செல்வது ஏற்கவே முடியாதது.
யோகேந்திர யாதவ், சமூகவியல் அறிஞர், ஆம்ஆத்மி கட்சியை நிறுவியர்களில் ஒருவர் மக்கள்தொகையில் மிகச் சிறிய எண்ணிக்கையைக் கொண்ட, சாதிய அடுக்குகளில் கீழே இருக்கும் ஒரு சமூகத்திலிருந்து வந்து, இவ்வளவு உயர்ந்த இடத்தைக் கருணாநிதி தக்கவைத்திருப்பது சமூகப் புரட்சியே தவிர வேறல்ல. அந்தப் புரட்சிக்கு அவரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்!
அரசியல்ரீதியான மறுசீரமைப்பைப் பொறுத்தவரை 1993-ல் ஐரோப்பா செய்ததை, 1947-லேயே செய்துவிட்டது இந்தியா. பல்வேறு இனம், மொழி, கலாச்சாரம், அபிலாஷைகள் கொண்ட தேசிய இனங்களை ஒருங்கிணைத்து, மாநிலங்களின் ஒன்றியமாக சுதந்திர இந்தியா உருவாகிப் பல ஆண்டுகள் கழித்துதான், ஒன்றுபட்ட சந்தையை உருவாக்க ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் உருவானது. ஐரோப்பிய ஒன்றியம் உருவாகிக் கால் நூற்றாண்டுக்குப் பிறகு அதில் ஏற்பட்டிருக்கும் விரிசல்கள், அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையே நிலவும் ஏற்றத்தாழ்வை நமக்குக் காட்டுகின்றன.
1966-ல் பஞ்சாப் மூன்றாகப் பிரிக்கப்பட்டது - ஹரியாணா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப்.
1938-லேயே இந்தித் திணிப்புக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த தமிழகம் 1949-ல் திமுகவின் உருவாக்கத்துக்குப் பின் டெல்லி முன்னெடுக்கும் ஒற்றைக் கலாச்சாரத்துக்கு எதிராக எப்போதுமே கடும் சவாலாக நின்றது.
ஒரு மாநிலத்தின் ஒப்புதலைப் பெறாமலேயே அந்த மாநிலத்தின் எல்லைகளைத் திருத்தியமைக்க மத்திய அரசுக்கு எல்லையற்ற அதிகாரத்தை வழங்கும் சட்டப் பிரிவே மூன்றாவது பிரிவு.
மராத்தாக்கள் பிராந்திய அடையாளத்தையும் பேசினார்கள். ஆனால், மராத்தாக்கள் உழைப்பாளர்களுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தார்கள்.மகாராஷ்டிரத்தில் பணிபுரிந்த வட இந்தியர்கள், தென்னிந்தியர்களை அடித்து விரட்ட வேண்டும் என்று பேசினார்கள். விளைவாக, வலதுசாரிகள் என்ற முத்திரையைப் பெற்றார்கள். இவ்வளவுக்கு மத்தியில் அரசியல்ரீதியாகத் தங்களை வலுப்படுத்திக்கொள்ள காங்கிரஸ் / பாஜகவையே அவர்கள் நம்பியிருந்தார்கள்.
அவர்களுடைய மொழிப் பற்றையும் இன உணர்வையும் கூர் மழுங்காமல் வைத்துக்கொள்ள சினிமா என்ற ஊடகமும் வெகுவாகப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.
மும்பையில் இந்தி சினிமா செழித்து வளர, மராத்தி திரைப்படங்கள் அந்தஸ்து குறைந்த, வட்டாரக் கலாச்சாரமாக சுருங்கியது.
பெரியாரியர்கள் சுவரரெழுத்தைக்கூட ஒரு வலிய ஆயுதமாக்கினர். மயிலாடுதுறை ‘சுவரெழுத்துச் சுப்பையா’ ஒரு உதாரணம். கரித்துண்டு அல்லது கொஞ்சம் தார். இதுதான் இவர் ஆயுதம். ‘சக்தியுள்ள சாமியின் கோயிலுக்கு சாவியும், பூட்டும் ஏன்?’ இவ்வளவுதான்.
நாட்டிலேயே முதன்முதலில் தேர்தல் அறிக்கையை சித்திர விளக்கக் கதை தொகுப்பாக வெளியிட்ட பெருமை திமுகவுக்கு உண்டு. ‘முரச சொலி’ அதைச் செய்தது. எளியயோருக்குத் தன் கொள்கைகளை கொண்டுசேர்க்கும் வகையில், திமுக வெளியிட்ட ‘எது கொள்கையில்லாக் கட்சி?’ சித்திர விளக்கக் கதை தொகுப்பு மிகப் பிரபலமான ஒன்று.
முதலாவது 1916-ல் தொடங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம். அது நடத்திய ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகையின் பெயரால், அதை நீதிக் கட்சி என்று சொல்கிறோம். இரண்டாவது, 1925-ல் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம். மூன்றாவதாக, 1944-ல் நீதிக் கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து பெயர் மாற்றமடைந்த திராவிடர் கழகம். நான்காவது, அண்ணாவுக்கும் பெரியாருக்கும் ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாக தோன்றிய திமுக.
பத்திரிகைகள் ஆரம்பத்திலிருந்தே பிராமணர்கள் கைகளில் இருக்கின்றன.