தெற்கிலிருந்து ஒரு சூரியன் | Therkil Irundhu Oru Suriyan: திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்! (Tamil Edition)
Rate it:
19%
Flag icon
‘பிரார்த்திக்கிறேன், இறைவனை இறைஞ்சுகிறேன்’ என்றெல்லாம் பணிவாகவும் இறை நம்பிக்கை உடையவராகவும்தான் பெரியாரின் எழுத்துகள் ஆரம்பிக்கின்றன.
19%
Flag icon
பாரதிதாசன், ஜீவானந்தம், குத்தூசி குருசாமி என்று ‘குடிஅரசு’ ஒரு புது எழுத்தாள மரபை உருவாக்குகிறது.
19%
Flag icon
கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை முதலில் தமிழில் வெளியானது ‘குடிஅரசு’ பத்திரிகையில்தானே!
19%
Flag icon
‘முரசொலி’ மட்டும் எப்படி நீடித்தது என்றால், மூன்று விஷயங்கள், 1. கலைஞர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை இதில் போட்டுக்கொண்டே இருந்தார். 2. அவருடைய அபாரமான எழுத்துத் திறனும் நிர்வாகத் திறனும்.
20%
Flag icon
ஒவ்வொரு ஊரிலும் மன்றங்கள், படிப்பகங்கள் திறக்கப்பட்டன.
20%
Flag icon
சாரங்கபாணி என்கிற என் பெயரையும் வீரமணி என்று மாற்றியவர் அவரே.
20%
Flag icon
அவர் மீது பாம்பையும் செருப்பையும் வீசினார்கள்.
21%
Flag icon
1920-களிலேயே வகுப்புவாரி இடஒதுக்கீட்டை நீதிக் கட்சியினர் பெரிய அளவில் இங்கே நடைமுறைப்படுத்திட முயன்றார்கள்.
21%
Flag icon
இங்கிலாந்துக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 1921- லேயே இங்கு பெண்களுக்கு வாக்குரிமையைக் கொண்டுவந்துவிட்டது நீதிக் கட்சி ஆட்சி.
21%
Flag icon
மோடி பிரதமராக இருக்கலாம். அவருக்கும் மேலே உட்கார்ந்திருப்பவர் மோகன் பாகவத்.
21%
Flag icon
பிராமணர்கள் மீது இதுவரை ஒரு வன்முறை நடந்தது கிடையாது இங்கே!
21%
Flag icon
‘திராவிடர்களால் பார்ப்பனர்களுக்கு இந்த நிலைமை வந்திருந்தால், நான் பார்ப்பனர்களுக்காகப் போராடியிருப்பேன்!’ என்று சொன்னவர் பெரியார்.
21%
Flag icon
பொதுவாழ்க்கையில் 29 பதவிகளில் இருந்தவர், ஒரே கடிதத்தில் அத்தனையையும் வீசி எறிந்துவிட்டு வந்தார்.
21%
Flag icon
கம்யூனிஸ்ட்கள் பெரியாரை விமர்சித்தார்கள், “பிரகாசம் பிராமணர்; ராஜாஜி பிராமணர் இல்லையா?” என்று! “கம்யூனிஸ்ட்களை சுட்டுக்கொன்றவர் பிரகாசம். ராஜாஜி அப்படிப்பட்டவர் கிடையாது. மேலும், ஆந்திர பிராமணரா, தமிழ்நாட்டுப் பிராமணரா என்று கேட்டால், நான் தமிழ்நாட்டுப் பிராமணரையே தேர்ந்தெடுப்பேன்” என்று பதில் சொன்னார் பெரியார். அவருடைய தனிப்பட்ட வாழ்வில் மிக முக்கியமான முடிவை எடுக்கையில் ராஜாஜியுடன்தானே கலந்தாலோசித்தார்! ராஜாஜியின் யோசனையை அவர் ஏற்கவில்லை என்பது வேறு விஷயம்.
22%
Flag icon
திராவிட இயக்கத்தின் முன்னோடிகள் பலர் தங்கள் சொந்தப் பணத்தை, சொத்தைப் பொது வாழ்க்கைக்காக இழந்தவர்கள். பெரியார் ஒட்டுமொத்த சொத்தையுமே பொதுச் சொத்தாக்கியவர். தமிழ்நாட்டின் முதல்வர்களிலேயே மிக எளிமையானவர் அண்ணாதான்.
22%
Flag icon
சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் முதன்முதலில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர் டிடிகே.
22%
Flag icon
ஊழல் குற்றச்சாட்டுகள் பிராந்தியக் கட்சிகளையும் கீழ்நிலைச் சமூகங்களையுமே ஏன் வட்டமிடுகின்றன என்பதற்குப் பின்னுள்ள அரசியலை நீங்கள் யோசிக்க வேண்டும்.
22%
Flag icon
“பதவி எங்களுக்குத் துண்டு போன்றது; அது போனால் கவலை இல்லை. ஆனால் கொள்கை எங்களுக்கு வேட்டி போன்றது” என்றார் அண்ணா.
22%
Flag icon
இந்த ஓராண்டில் மூன்று முக்கியமான காரியங்களைச் செய்திருக்கிறேன். ஒன்று, சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம். இரண்டு, தாய்த் திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம். மூன்று, தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்ற இருமொழிக் கொள்கை அறிவிப்பு.
22%
Flag icon
ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். முடியுமா என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும்.
22%
Flag icon
பிராமணர் அல்லாதார் இயக்கமான திராவிட இயக்கம் தோன்றியதற்கு முக்கியக் காரணம், காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திய பிராமண வழக்கறிஞர்கள்தான்.
22%
Flag icon
கடப்பை மாவட்டத்தில் வருவாய்த் துறையில் உயர் பதவி வகித்த டி.கிருஷ்ணாராவ் (ஹுஸுர் செரஸ்தார் - மாவட்ட ஆட்சியர் பதவிக்கு நிகரானது) என்பவரின் உறவினர்கள் 116 பேர் அந்தத் துறையில் இருந்தனர்.
23%
Flag icon
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவுசெய்யப்பட்ட 650 பட்டதாரிகளில் பிராமணர்கள் 452 பேர், பிராமணர் அல்லாத இந்துக்கள் 12 பேர், பிற இனத்தவர் 74 பேர்!
23%
Flag icon
சென்னையில் அன்றைய மவுன்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில், ‘பஞ்சமர்களும், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக் கூடாது’ என்று விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர். ரயில்வே உணவு விடுதிகளில் பிராமணாள், இதராள் என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டு இருந்தது.
23%
Flag icon
இருப்புப் பாதைகள் போடப்பட்டு, ரயில் பயணம் தொடங்கிய காலத்தில், நான்கு வகைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை நான்கு வருணத்தாரும் தனித்தனியாகப் பயன்படுத்தும்படியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்து மத வேதியக் கூட்டம் ரயில்வே நிர்வாகத்தைக் கேட்கும் அளவுக்குப் பேதங்கள் மோசமாக இருந்தன.
23%
Flag icon
1901-ல் எடுக்கப்பட்ட சென்னை மாகாணத்து மக்கள்தொகைக் கணக்கில் ‘பிராமணர்கள் 3.4%, சூத்திரர்கள் 94.3%’ என்று பிராமணர் அல்லாதாரை அரசாங்கமே சூத்திரர்கள் என்று குறிப்பிடும் இழிநிலைதான் அன்று இருந்தது.
23%
Flag icon
நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை ‘சூத்திரன்’ என்ற இழி பட்டத்தைப் பதிவேடுகளிலிருந்து ஒழித்தது.
23%
Flag icon
டாக்டர் சி.நடேசன், பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் 1916-ல் உருவாக்கிய திராவிட சங்க விடுதியை (Dravidian Association Hostel) ஓர் உதாரணமாகச் சொல்லலாம். மாணவர் விடுதிகளில்கூடப் பாகுபாடுகள் நிறைந்திருந்த காலத்தில் மாற்றாகத் தொடங்கப்பட்ட மாணவர் விடுதி இது. பிற்காலத்தில் இந்திய நிதியமைச்சராக ஆகவிருந்த ஆர்.கே.சண்முகம், பாரிஸ்டர் ரங்கராமானுஜம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்களாக விளங்கிய டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் மற்றும் சடகோப முதலியார், பிற்காலத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்த சுப்பிரமணிய நாடார் போன்றவர்களெல்லாம் இந்த விடுதியில் தங்கிப் ...more
23%
Flag icon
திராவிட இயக்கம் கொண்டுவந்த மாற்றங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. சுதந்திரத்துக்கு முன்பு சென்னை மாகாணத்தில் 1920-1937 காலகட்டத்தில் ஆட்சியிலிருந்து நீதிக் கட்சி ஆட்சி கொண்டுவந்த மாற்றங்கள். 2. ஆட்சியிலிருந்து இறங்கிய நீதிக் கட்சியின் தலைவராக 1938-ல் பெரியார் பொறுப்பேற்று, பிறகு 1944-ல் திராவிடர் கழகமாக அதை உருமாற்றிய பின்னர், தேர்தல் அரசியலிலிருந்து விலகி, பொதுத் தளத்திலிருந்து அது மேற்கொண்டுவரும் மாற்றங்கள். 3. 1967 முதலாகத் தமிழகத்தில் ஆட்சியில் இருந்துவரும் திமுக, அதிமுக இரு திராவிடக் கட்சிகள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த மாற்றங்கள்.
23%
Flag icon
இரு திராவிடக் கட்சிகளின் ஐம்பதாண்டு ஆட்சிக் காலம் மட்டுமின்றி காமராஜரின் ஆட்சிக் காலகட்டத்தையும்கூடச் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
23%
Flag icon
நீதிக் கட்சி கொண்டுவந்த முக்கியமான 10 அரசாணைகள், சட்டங்கள் நாட்டிலேயே முன்னோடியாகப் பெண்களுக்கு வாக்குரிமை (10.05.1921). பஞ்சமர் என்ற சொல் நீக்கி ஆதிதிராவிடர் என்றழைக்கும் அரசாணை (25.3.1922). கல்லூரிகளில் எல்லாத் தரப்பு மாணவர்களையும் சேர்க்க குழுக்கள் அமைக்கும் அரசாணை (20.5.1922). கல்வி மறுக்கப்பட்ட பிராமணரல்லாத குழந்தைகளைத் தொடக்கப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை (21.6.1923). புதிய பல்கலைக்கழகம் காண சட்டம் இயற்றப்பட்டது. பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக இது காரணமாயிற்று. தாழ்த்தப்பட்ட மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்ப்பதற்கான நடவடிக்கை (24.9.1924). குறிப்பிட்ட ...more
24%
Flag icon
பனகல் அரசர் என்ன செய்தார்? ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சம்ஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் எனும் நடைமுறையை நீக்கினார்.
24%
Flag icon
சென்னை மாநிலக் கல்லூரி சம்ஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாதச் சம்பளம் ரூ.300, தமிழ்ப் பேராசிரியர் கா.நமசிவாயனாருக்கு மாதச் சம்பளம் ரூ.81 என்றிருந்தது.
24%
Flag icon
சென்னைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் படிப்பதற்குத்தான் வழி இருந்ததே தவிர, தமிழ் படிக்கக் கதவு அடைக்கப்பட்டது.
24%
Flag icon
பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான், 1921-ல் பள்ளிகளில் இலவச நண்பகல் உணவு அளித்தார்.
24%
Flag icon
தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சம்ஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி, தமிழும் சொல்லிக்கொடுக்கப்பட ஆவன செய்தார் நீதிக் கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர்செல்வம். பிராமண மாணவர்கள் மட்டும் பயன் கண்ட ராஜா மடம், ஒரத்தநாடு விடுதிகள் மற்றவருக்கும் திறந்துவிடப்பட்டன. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 10-ம் வகுப்புத் தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதேபோல, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் அரைச் சம்பளம் கட்டினால் போதும் என்று அறிவிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமையை நிலைநாட்ட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட ...more
24%
Flag icon
பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காவிட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்துசெய்யப்படும் என்று ஆணையிட்டு, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஊரிலிருந்து பள்ளிகளை நோக்கிச் செல்ல வழிவகுத்தவர் நீதிக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன். தாழ்த்தப்பட்டவர்களைப் பள்ளிகளில் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர் முன்னோடிகளில் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரன்.
24%
Flag icon
தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதித் தனி அலுவலர்கள் நியமனம். தனி அலுவலர் என்பது ‘லேபர் கமிஷனர்’ என்று மாற்றம். இம்மக்களுக்கு 7 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என்னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டது. குறவர்கள் சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக 2,776 கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. வலையர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியோருக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் தொ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
24%
Flag icon
1. சடங்குகள், தாலி மறுத்து நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்களுக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம். 2. சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம். 3. தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை; தமிழ், ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழி என்ற இருமொழிக் கொள்கை முடிவு. 4. அரசு அலுவலகங்களில் எந்த மதம் தொடர்பான கடவுள் படங்களும் உருவங்களும் இருக்கக் கூடாது என்ற ஆணை.
24%
Flag icon
கருணாநிதி பொறுப்பேற்றார். கல்வி, வேலைவாய்ப்பில் அதுவரை 31% ஆக இருந்த இடஒதுக்கீடு 49% ஆக உயர்த்தப்பட்டது.
24%
Flag icon
கிராம அலுவலர்கள் பதவிகள் பெரும்பாலும் பிராமணர்கள் கையில் இருந்ததை மாற்றி, அரசு அலுவலர்களாக மாநிலத் தேர்வு ஆணையத்தின் மூலம் தேர்வுசெய்யும் நடவடிக்கையைக் கொண்டுவந்தார் எம்ஜிஆர்.
24%
Flag icon
சாதி ஒழிப்புப் பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டத்தைக் கொண்டுவந்தார் கருணாநிதி. சுடுகாட்டில் - இடுகாட்டில் பணியாற்றியோரை, ‘வெட்டியான்’ என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்களை அரசுப் பணிச் சட்டகத்துக்குள் கொண்டுவந்தார். எல்லாச் சமூகத்தினரும் இணைந்து வாழும் சமத்துவபுரங்களைக் கொண்டுவந்தார். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்குப் பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டம் வரை கட்டணம் ரத்துசெய்யப்பட்டது.
24%
Flag icon
நீதிக் கட்சித் தலைவர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத் திட்டம் - காமராஜர் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டு, எம்ஜிஆர் காலத்தில் மேம்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டமானது. மதிய உணவோடு வாரம் முழுவதும் முட்டைகள் அளிக்கும் திட்டத்தைக் கருணாநிதி கொண்டுவந்தார்.
24%
Flag icon
பி.வி. ராஜமன்னார் குழு. நாட்டிலேயே இப்படி ஒரு குழுவை ஒரு மாநில அரசு அமைத்தது இதுவே முதல் முறை.
24%
Flag icon
நில உச்ச வரம்பை 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் வரையறைக்குக் கொண்டுவந்தார் கருணாநிதி. பெரும் நிலச் சீர்திருத்த நடவடிக்கை இது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டது. விவசாயிகளின் உற்பத்தி விளைபொருட்கள் விற்பனைக்கு உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன.
25%
Flag icon
இந்தியாவிலேயே ஒரு புரட்சியாக, குடிசைகளிலும் நடைபாதைகளிலும் வாழ்ந்த மக்களுக்குக் குடிசை மாற்று வாரியம் கொண்டுவந்து குடியிருப்புகள் கட்டப்பட்டன. கை ரிக்‌ஷாக்களை ஒழித்தார் கருணாநிதி.
25%
Flag icon
ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம். ஈ.வெ.ரா.மணியம்மையார் விதவைத் தாய்மார்களின் மகள் திருமண நிதி உதவித் திட்டம். அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஆதரவற்ற பெண்களுக்குத் தங்கம் வழங்கும் திட்டம்.
25%
Flag icon
அரசுப் பணிகளில் பெண்கள் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில் 30% இடஒதுக்கீட்டை அவர்களுக்குக் கொண்டுவந்தார் கருணாநிதி. அதேபோல, அரசியலில் பெண்கள் பங்கேற்பை அதிகரிக்கவும் உள்ளாட்சியில் 33% இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார் கருணாநிதி. பின்னாளில் இதை 50% ஆக உயர்த்தினார் ஜெயலலிதா. அரவானிகள் என்று அதுவரை குறிப்பிடப்பட்டவர்கள் மூன்றாவது பாலினத்தவராக அறிவிக்கப்பட்டதோடு திருநங்கைகள் என்று அழைக்கப்பட்டு, அவர்கள் நலனுக்காகத் தனி வாரியம் உருவாக்கப்பட்டது. தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டவர்களுக்குப் பணி நியமனங்களில் 20% அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் பெறப்பட்டது. செம்மொழித் தமிழ் ...more
25%
Flag icon
பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான், 1921-ல் பள்ளிகளில் இலவச நண்பகல் உணவு அளித்தார்.
25%
Flag icon
திராவிடக் கட்சிகள் கொண்டுவந்த சட்டங்களை ஐந்து பிரிவுகளில் பகுத்து நாம் ஆராயலாம்: சமூக நீதி, பெண் உரிமை, தொழிலாளர் உரிமை, விவசாயிகள் நலன், இதர சட்டங்கள்!