“உங்களுக்கும் புரியாதுங்க. கெடுக்கறதுன்னா என்னங்க அது. கட்டுன புருஷன் மேல இன்னும் ஆசை வெச்சிருக்க சாதாரண அடிமைங்க அது. புரியாது. என்ன பண்ண? ஒலகம் முழுசும் பொண்ணு அடிமைதான. எப்பமும் சமுதாயம் அது எந்தச் சமுதாயமும் பெண்ணெ இனிமேகூட அடிமையாத்தான் வெச்சிருக்கும்,வெச்சிருக்கு. அது ஒடம்பு தாங்கல்லெ. அது பசிக்கிது, எரியுதுன்னு யாருக்கும் புரியல. திமிரெடுத்து ஊர் மேல போனாம்பாங்க. உமாமஹேஸ்வரியெ தனிய்யா உட்டுட்டு பத்து வருஷமா வயித்துக்கு சோறு போட்டு, பட்டு கட்டி, நகை பூட்டி, வூட்டுக்குள்ள மூடி வெச்சிருந்தானே கரமுண்டான். அப்ப ஞாபகம் இல்லியா உமா ஒரு மனுஷின்னு. ஏங்க? தைரியமா தப்பு பண்றோம்ன்னு சொல்வீங்களே? தப்புன்னு பண்றதுக்கு யாருங்க காரணம்? மோட்டார் பைக்க ஒண்ணு இருக்குன்னு, எடுத்துகிட்டு ஊர் சுத்த வேண்டியது. அது வூடு தங்காம சுத்துறில்ல, பொண்டாட்டியவும் இளுத்துகிட்டுச் சுத்தேன். நீ என்ன ஆண்டியா?”
―
தஞ்சை ப்ரகாஷ்,
கரமுண்டார் வூடு | KARAMUNDAAR VOODU: நாவல் | NOVEL