Pudhumaipithan sirukadhaigal Quotes
Pudhumaipithan sirukadhaigal
by
Pudhumaipitthan325 ratings, 4.17 average rating, 25 reviews
Pudhumaipithan sirukadhaigal Quotes
Showing 1-5 of 5
“எங்கையோ வடக்கே இருந்து சமணன் என்றும், புத்தன் என்றும் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அந்த முட்டாள் பயல்கள், 'கொல்லப்படாது! பாவம் கீவம்' என்று சொல்லி, ஆட்களைத் தங்கள் கட்சிக்குத் திருப்பிவிட்டார்கள். அந்தக் காலத்திலேயிருந்துதான் நம்ம பரமசிவன் முதற்கொண்டு எல்லாத் தேவாளும் சைவராகிவிட்டார்கள். காலம் அவாளை அப்படி ஆட்டி வைத்தது. முன்னே திரிபுரத்தை எரித்தாரே, இந்தச் சிவன், இப்போ அவராலே அந்தக் குருவிக் கூட்டைக் கூட எரிக்க முடியாது!”
― புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Short Stories: முழுமையான தொகுப்பு
― புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Short Stories: முழுமையான தொகுப்பு
“இருள் இருந்தால்தானே ஒளி? ஒளி வராமல் போய்விடுமா? அதுவரை காத்திருக்க வேண்டியதுதான். எத்தனை காலமோ? ஒளி வரும்பொழுது நாம் இருக்க வேண்டும் என்ற அவசியமுண்டா? எனது சிருஷ்டிகள் இருந்தால் போதும்!”
― புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Short Stories: முழுமையான தொகுப்பு
― புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Short Stories: முழுமையான தொகுப்பு
“செய்வது சரிதான், நன்றாயிருக்கிறது என்று சொல்லவாவது வேண்டாமா? நேர்மையான புகழ் இலக்கிய கர்த்தாவுக்கு ஊக்கமளிக்கும் உணவு. இதைக் கொடுக்கக் கூடச் சக்தியற்ற கோழையான ஒரு சமூகத்திற்கு என்ன எழுதிக் கொட்ட வேண்டியிருக்கிறது!”
― புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Short Stories: முழுமையான தொகுப்பு
― புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Short Stories: முழுமையான தொகுப்பு
“நன்றாக முடுக்கிவிடப்பட்ட பழுது படாத யந்திரம்.”
― A Complete compilation of Puthumaippithan’s Short Stories: புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு
― A Complete compilation of Puthumaippithan’s Short Stories: புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு