நொய்யல் Quotes

Rate this book
Clear rating
நொய்யல் நொய்யல் by Devibharathi
12 ratings, 4.67 average rating, 3 reviews
நொய்யல் Quotes Showing 1-6 of 6
“சொல்லி அழுவதற்கு யாராவது இல்லாவிட்டால் செத்தும் புண்ணியமில்லை எனத் தோன்றியது அவனுக்கு.”
Devibharathi, நொய்யல்
“உயிரும் உணர்வுமற்ற வெற்றுடம்பு, வாழ்க்கையென்பது இனி இந்த வெற்றுடம்புக்குத்தான். தாகமெடுக்கும்போது தண்ணீரும், பசியெடுக்கும்போது சோறும் கொடுத்து, இந்த இதைக் காப்பாற்றிக் கொண்டுபோய் மண்ணுக்குக் கொடுத்துவிட வேண்டும். காமத்தைத் தணித்துக் கொள்ள ஒரு உடல், பாரு. கொண்ட காமத்துக்குக் கூலியாய்க் குழந்தை. நிறைவேறாத கனவுகளை அதன்மேல் திணித்துவிடலாம், ஏதாவது கற்பிதத்தைப் பற்றிக்கொண்டு அதுவும் கொஞ்ச காலம் பிதற்றித் திரியும்.”
Devibharathi, நொய்யல்
“இனி நாலு பொட்டப்புள்ளைய வெச்சுக்கிட்டு அந்த முண்டப் புள்ளெ என்ன பண்ணுவாளோ காணா.”

“பகவானிருக்கறே.”

"பகவே ஆருக்கிருக்கறே? பணம் பெருத்தவனுக்குத்தே பகவே, நம்பலாட்ட ஏழபாழைக்கு எந்தப் பகவேனிருக்கறே?”
Devibharathi, நொய்யல்
“நான் வெள்ளி கதாபாத்திரத்தைத் தஸ்தாயெவ்ஸ்கியின் மிஸ்கின் போல உருவாக்க விரும்பினேன். நீங்கள் இந்த நாவலைப் படிக்கும் போது அதை உணர முடியும். அதற்காக என் அன்பு தஸ்தாயெவ்ஸ்கிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.”
Devibharathi, நொய்யல்
“தகப்பன்மார்களுக்கென, தாய்மார்களுக்கென, பொறந்தவன்மார்களுக்கென, மாமன்மார்களுக்கென, அப்பாரய்யன்களுக்கென, அப்பிச்சிமார்களுக்கென இழவுவீட்டில் கட்டியழுவதற்கு ஒவ்வொருவருக்கும் நான்கைந்து பாட்டுகளைக் கற்று வைத்திருப்பார்கள் நொய்யல்கரைப் பெண்கள். முறை வைத்து அழுது முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். சொல்லவும் முடியாது, “ஏ? என்ன அவுசரொ? இத்தன வருஷம் பொளச்சு, பெத்துப்பெறப்பு, பங்கும்பங்காளி, மக்கமருமக்க, ஈத்துப்பேத்துன்னு அத்தன பேருக்கு அப்பிடிப் பொளச்சவுங்கள அத்தன அவுசரமா கொண்டுபோயி ஆத்துக்கால்ல வெக்காட்டி யென்னொ?" என இழவு வீடெனப் பார்க்காமல் சண்டைக்கு வந்துவிடுவார்கள்.

பக்குவமாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். “நேரமாவிக்கிச்சாயா, பொழுதெறங்கப் போவுது. காடுகொண்டுபோயிச் சேத்த வேண்டாமா? சனமெல்லா பச்சத்தண்ணி பல்லுல படாமக் கெடக்குது” என யாரையாவது வெளியே கூப்பிட்டுத் தணிந்த குரலில் கேட்டுக்கொள்ள வேண்டும். அப்படியும் ஒரு பாட்டைச் சொல்லி மூக்கைச் சிந்திவிட்டுத்தான் வெளியே வருவார்கள். சிலரது பாட்டுச் சொக்க வைக்கும். இழவு பாட்டுத் தெரியாதவளுக்கு ஊரில் மதிப்பே இருக்காது. தாலி கழுத்தில் ஏறுமுன்பே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டுவிடுவார்கள். “நாஞ்செத்துப் போனா என்ன பாட்டுச் சொல்லி அழுவுவியாயா? எங்க ஒரு பாட்டுப் பாடிக்காட்டு பாக்கலா" என அப்பாரய்யனோ அப்பிச்சியோ கேட்கும்போது கட்டில் குத்துக்காலில் உட்கார்ந்து தயக்கமில்லாமல் பாடத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், “என்ன புள்ள பெத்து என்ன வளத்தியென்ன, ரண்டு பாட்டுச் சொல்லத் தெரீல" எனக் கேலி பேசுவார்கள்.”
Devibharathi, நொய்யல்
“சாவைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. செத்துப்போய்விட்டால் அழுவதற்காவது யாராவது இருக்கிறார்களா என யோசிக்க முயன்றான்.”
Devibharathi, நொய்யல்