விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate it:
62%
Flag icon
எதைச் சார்ந்து பிரபஞ்ச மகாவடிவம் உருவாகியுள்ளதோ அதுவே சத். அதுவே பிரம்மம். அதுவே ஆதிகாரணம்.
62%
Flag icon
“ஆதியான சத் என்பதை சைவம் ஏற்கிறது”
62%
Flag icon
ஆதியான இருப்பு தன்னையே பிரபஞ்ச வடிவமாக ஆக்குகிறது என்ற வாதம் தவறானது. ஆதிவடிவான பதி எல்லையற்றவன். எட்டு குணங்களும் எட்டு இன்மைகளும் உடையவன். இந்நிர்ணயங்களுக்கு அப்பாற்பட்டவன். பதியே பருவுடலாகப் பிரபஞ்சமானான் எனில், பிரபஞ்சத்தில் காம குரோத மோகமெனும் மும்மலங்களும் அவனே என்று ஆகும். அது தவறு.”
62%
Flag icon
“பதியின் பாகம் சக்தி. அது அரூப சக்தியாக உள்ளது. அது ஸ்வரூப சக்தியாக மாறும்கணம் பிரபஞ்ச லீலை தொடங்குகிறது. ஸ்வரூப சக்தியே தூலமாகத் தோன்றி பிரபஞ்ச மாயையை உருவாக்குகிறது. பிரபஞ்சம் சக்தி மயம். சக்தி சிவமயம். ஆகவே சர்வம் சிவமயம். ஆனால் சக்தி சிவமல்ல. அதில் ஒரு துளி மட்டுமே. பிரபஞ்சம் சிவமல்ல. ஆடும் சிவனின் கழலோசையில் எழும் ஒரு நாதம் மட்டுமே இப்பிரபஞ்சம். அந்த நாதம் சிவத்தை அடைய ஒரு வழிகாட்டி மட்டுமே.”
62%
Flag icon
“பசு எனும் மானுட ஆத்மா. பாசம் எனும் கயிற்றால் அது பிரபஞ்சத்துடன் கட்டிப்போடப்பட்டுள்ளது. இச்சை, ஞானம், கருமம் எனும் மூன்று தன்மைகள் உடையது பசு. அவித்யை, கருமம், மாயை என்னும் மும்மலங்கள் அதற்குப் பாசமாக உள்ளன. பசுவின் அவித்யை என்ற அறியாமையில் இருந்து கருமம் பிறக்கிறது. கருமத்தில் இருந்து கருமப் பயன், கரும வினை என்ற இருநிலைகளுக்கு இடையே ஊசலாடும் மாயை பிறக்கிறது. தூய சிவஞானம் பாசமறுத்து, பசுவை விடுதலைசெய்கிறது. சக்தி ஸ்வரூபமாக பிரபஞ்சத்தைப் பார்ப்பதே சிவஞானம். ஸ்வரூப சக்தியிலிருந்து அரூப சக்தியைக் காண்பதும், அரூப சக்தியில் சிவ ஒளியைக் கண்டு கரைவதும்தான் வீடுபேறு.
63%
Flag icon
“அன்னமய கோசத்தின் உள்ளே பிராண, அசுத்த, சுத்த, ஆனந்த, சின்மய கோசங்களைத் தாண்டி உட்சென்றால் தெரியும் சதானந்த கோசமே ஆத்மாவாகும். அது தூய பிரகாசம் கொண்டது. புலன்களின்றியே தன்னை உணர்வது. எந்த வடிவில் பிரம்மம் உள்ளதோ, அந்த வடிவமே அதற்கும். பிரம்மாண்டத்தின் ஆத்மா பிரம்மம். உடலின் பிரம்மமே ஆத்மா. அவை வேறு வேறு அல்ல. ஏழு உலகங்களும் ஏழு கோசங்களும் பிரம்மத்தையும் ஆத்மாவையம் பிரதிபலிக்கின்றன. அவை அசத் என அறிந்தவன் பிரம்மமும் ஆத்மாவுமே சத் என அறிவான். ஆத்ம தரிசனம் பிரம்ம தரிசனமேயாகும். ஆகவேதான் உபநிஷதம் அகம் பிரம்மாஸ்மி என்கிறது. பனித்துளிகள் எல்லாமே சூரியனைப் பிரதிபலிக்கின்றன. ஆத்மா பிரம்மத்தின் ...more
63%
Flag icon
ஒவ்வோர் அணுவிலும் ஏழு வகை பிரபஞ்ச மாயைகள் உள்ளன. சாரமாக எல்லையற்ற பிரகாசமான பிரம்மமும் உள்ளது. உயிர்களில் அதன் பெயர் ஆத்மா.”
63%
Flag icon
“உயிரற்றவையில் ஏன் பிரம்மம் ஆத்மாவாக இல்லை?”
63%
Flag icon
“ஏனெனில் ஆத்மாவின் வெளிப்பாடான ஐம்புலன் அவற்றுக்கு இல்லை. ஆகவே பிரம்மத்தை உணர அவற்றால் முடியாது. ஆயினும் அவையும் பிரம்மமே. பிரம்மமயம் ஜகத். ஐம்புலன்களால் அன்னமய லோகத்தைப் பார்ப்பதில் ஞானம் தொடங்குகிறது. சச்சிதானந்த கோசமாகி, பிரம்மமென ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
63%
Flag icon
“புத்தர் தன் முதல் பிரபஞ்ச தரிசனமாக முன்வைத்தது அநித்தம் ஆகும். எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன.
63%
Flag icon
நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது. அதன்மீது பிம்பங்கள் நிலைத்திருப்பவை போலத் தோன்றுகின்றன. ஓடும் நதியை கணக்கில் கொள்ளாமல் அப்பிம்பங்களைப் பற்றிக் கூறப்படும் அபிப்பிராயங்களெல்லாம் தவறானவையே ஆகும். நாமும் நம்மைச் சுற்றி உள்ள அனைத்தும் பிரபஞ்சங்களும் அவற்றின் ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு கணத்திலும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நாமறியும் எதுவும் எந்நிலையிலும் தங்கள் முழுமை நிலையில் இல்லை என்பதே அதற்குக் காரணம். ஏனெனில், எப்பொருளுக்கும் முழுமைநிலை என்ற ஒன்று இல்லை... இந்த முழுமையின்மையைப் புத்தர் துக்கம் என்ற ஆதாரச் சொல்லால் குறிப்பிட்டார். இவ்விரு அடிப்படைகளின்படி பார்த்தால் மாற்றமிமல்லாத நிறைநிலையாகிய ஆத்மா ...more
63%
Flag icon
“ஜடப் பிரபஞ்சம் இருக்கிறது என்றே வைபாஷிக மதம் கருதுகிறது. அனைத்துமே இருக்கின்றன. நாங்கள் இதை சர்வாஸ்திவாதம் என்கிறோம். ஆனால் அனைத்தும் அவற்றின் மாறிக்கொண்டிருக்கும் நிலையிலேயே காணக்கிடைக்கின்றன. ஆகவே நாம் காணும் ஜடப் பிரபஞ்சம் உண்மையல்ல. இந்த மாற்றத்திற்கு ஒவ்வொன்றிலும் ஒரு நியதியைக் காண்கிறோம். ஒவ்வொரு நியதியும் இன்னொரு நியதியுடன் இணைந்திருப்பதைக் காண்கிறோம். நியதிகள் இணைந்து பெரும் நியதிகள் உருவாவதையும் காண்கிறோம். மீமாம்சகரே, நியதியை நாங்கள் தர்மம் என்கிறோம். பால் தயிராவது அதன் தர்மம். பசு பால் தருவது அதன் தர்மம். தர்மங்களெல்லாம் இணைந்த மகாதர்மமே பௌத்தம் அறிந்த ஆதிப்பெரும்சக்தி. தர்மம் ...more
63%
Flag icon
இருவகை பிரபஞ்சங்கள். ஒன்று நாம் சாதாரணமாக அறியும் புறப்பிரபஞ்சம். இன்னொன்று அதற்கு ஆதாரமான அகப்பிரபஞ்சம். இரண்டும் பரஸ்பரம் சார்ந்தே உள்ளன. குணகர்ம பரியாயங்களும் ஐம்புலன்களும் அடங்கியது வெளிப்பிரபஞ்சம். உருவம், அறிதல், வேதனை, தொகுப்பு, சுத்திகரிப்பு என்ற ஐந்து ஸ்கந்தங்களினால் ஆனது அகப்பிரபஞ்சம். சித்தம், சித்தி என்ற இருநிலைகளில் உள்பிரபஞ்சம் உள்ளது.
64%
Flag icon
இந்தச் சபை வெளிப்பிரபஞ்சத்தின் ஒரு கூறு. இதைச் சார்ந்து நம் அனைவர் மனதிலும் பதிவாகியுள்ள சபையோ அகப்பிரபஞ்சத்தைச் சார்ந்தது.”
64%
Flag icon
உள்ளும் புறமும் பிரபஞ்சங்கள் ஒன்றை ஒன்று பிரதிலித்தபடி இடைவெளியின்றி மாறிக்கொண்டிருக்கின்றன. வெளியே பரமாணுக்களும் அவற்றின் குணபரியாயங்களும் நீர் நிழல் சித்திரம் போல மாறியபடியே உள்ளன. நாம் காணும்போது காணும் தருணத்திற்கும் அவற்றின் இருப்புநிலைக்கும் இடையே ஒரு துளியினும் துளியான கால இடைவெளி உள்ளது. அவ்விடைவெளியில் அவை மாறிவிடுகின்றன. எனவே காணும்போது அவை காணப்படும் நிலையில் இல்லை. ஆகவே பிரபஞ்ச இருப்பு என்பதை நாம் அனுமானிக்க மட்டுமே முடியும்.”
64%
Flag icon
“நாம் மகாதர்மத்தை ஊகித்துணர்கிறோம். ஆகவே மகாபிரபஞ்சமுண்டு என ஊகிக்கலாம். தூலாருந்ததி நியாயமே அதை நிறுவும். ஒன்றின் தருமமே அதன் இருப்பு. அதன் இருப்பே அதன் தருமம்.”
64%
Flag icon
மாறிக்கொண்டேயிருக்கும் அந்த இருபிரபஞ்சங்களிலும் பொதுவானதாக பொருள்தன்மை மட்டும் எப்படிக் காணக் கிடைக்கிறது?”
64%
Flag icon
நமக்கு ஒரு பொருள் என்பது அதன் அனுபவமேயாகும். தீ என்பது ஒளியும் வெம்மையும் இணைந்த ஓர் இருப்பு அல்லவா? பௌத்த மரபுப்படி நாம் நெருப்பை அறிய நான்குவித பிரத்யங்கள் தேவையாகின்றன. முதலில் பார்க்கப்படும் பொருள். நெருப்பு தேவை. இதை ஆலம்பன பிரத்யம் எனலாம். நெருப்பை உணரும் புலன்களான கண்ணும் மெய்யும் அடுத்த தேவை. இது ஆதிபத்ய பிரத்யம். கண்ணுக்கும் மெய்க்கும் உதவக்கூடிய பிற விஷயங்கள், ஒளி முதலியவை சககாரி பிரத்யம் எனப்படுகின்றன. இறுதியாக ஏற்கெனவே நெருப்பை நேரடியாக அறிந்த அனுபவமும் பிறர் கூறக்கேட்டு நம் மனத்தில் உள்ள அனுபவமும் அடங்கிய முன்னறிவும் தேவை. இதை சமாந்தர பூர்வபத்யம் என்கிறோம். இந்நான்கும் ஒரு ...more
64%
Flag icon
அதிதூய உள்பிரபஞ்சத்தில் பிரபஞ்ச காவியமே இல்லை. அதிதூய வெளிப்பிரபஞ்சத்திற்கு எந்த விதமான குணவியல்புகளும் இல்லை. அவை பரஸ்பரம் பிரதிபலிக்க வைக்கப்பட்ட இருகண்ணாடிகள். அவை பரஸ்பரம் வெறுமையைப் பிரதிபலிக்கின்றன. ஆகவே அவையும் வெறுமையில் மறைகின்றன”
64%
Flag icon
“முக்தி என்று பௌத்தம் எதைக் கூறுகிறது?”
64%
Flag icon
“இருபது விதமான சத்காய திருஷ்டியினால் ஆகியுள்ளது பிரபஞ்சப் பெருவெளி. அதாவது அகப்பிரபஞ்சத்தில் புறப்பிரபஞ்சம் இருபது விதமாகப் பிரதிபலிக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக விலக்க, மூன்று பேரிருப்புகளையும் தூய நிலையில் அறிந்து மகாதர்மத்தின் ஒருமையை அறிவதே போதிசத்வ நிலை. அதுவே முக்தி. பருவெளித் தோற்றம் எனும் சத்காய திருஷ்டி நீங்கும்போது வெளி எல்லையற்றது என்ற உணர்வு ஏற்படுகிறது. பின்பு ஞானம் எல்லையற்றது என்ற உணர்வு ஏற்படுகிறது. இந்நிலை தாண்டினால் தர்மம் எல்லையற்றது என்ற பிரக்ஞை ஏற்படுகிறது. இருகண்ணாடிகளும் பரஸ்பரம் பிரதிபலிக்காத நிலையே வெறுமை, சூனியம். அதையே விமுக்தி அல்லது விடுதலை என்கிறோம்.”
64%
Flag icon
மரணமே மனிதனுக்கு முதல் கேள்வியை அளித்தது. அன்னமய உடலெடுத்து அவன் வந்தது எதற்காக எனும் கேள்விதான் அது. மரணத்தின் காரணம் காணவே மானுட ஞானம் எக்காலமும் உத்வேகம் கொண்டு வந்துள்ளது.
64%
Flag icon
பௌத்தம் தர்மத்தை வலியுறுத்துகிறது. ஒவ்வோர் அணுவிற்கும் அதற்கான தர்மம் உள்ளது. அதன்படியே அது மாறிக்கொண்டிருக்கிறது. பரமமான தர்மத்தின் ஒரு கூறுதான் அந்த அணுவின் தர்மம். பரமமான தர்மமே அனைத்திற்கும் காரணம். அதுவே மெய்யானப் பொருள்.”
64%
Flag icon
சுகதுக்க நன்மை தீமைகள் எனும் இருபாற் பிரிவினைகள் உண்மையில் இல்லாதவை. நாம் கொள்ளும் பிரமைகள் அவை. நேற்றைய துக்கம் ஏன் இன்று இன்பம் தருகிறது? எல்லா சுகங்களின் தருணங்களிலும் உள்ளாழத்தில் ஏன் மனம் துயரம் கொள்கிறது? எல்லாப் பிரபஞ்சக் காட்சியும் பொய்யே. மனதின் இருபாற்பட்ட நிலையே பிரபஞ்சத்தின் இருபாற்பட்ட நிலையாகக் காட்சி தருகிறது. இது பிரபஞ்சம் அசத் எனும்போதுதான் நிறுவப்படுகிறது.
64%
Flag icon
“அசத்தான பிரபஞ்சம் ஒரு கனவு. கனவில் எல்லாப் பொருள்களையும் தொட்டு, முகர்ந்து, ருசித்து, கேட்டு, பார்த்தறிய முடியும். ஆனால் கனவிலிருந்து விழிக்கும்போது அனைத்தும் பொய் என்று ஆகிவிடும். பிரம்மத்தின் மெய்மையைத் தரிசிப்பவன் கனவிலிருந்து விடுபடுகிறான். தன்னை ஆத்மாவாகக் காண்பவன் அழிவற்ற பேரிருப்பாகத் தன்னை அறிகிறான். அவனுக்கு மரணபயம் இல்லை. மரணமென்பது அன்னமய கோசத்தின் அழிவன்றி வேறல்ல அவனுக்கு.”
64%
Flag icon
“ஞானிகளே முக்தி என்பது ஏழுவகை உடல்களைப் படிப்படியாக உதறுவதாகும். ஏழுவகை உடல்கள் தனக்கு இருப்பதாக தான் கொண்ட பிரமையை உதற ஆத்மா, தூய நிலைக்குத் திரும்புவதே முக்தி. ஏழு வகை பிரபஞ்சங்களை உதறி பிரம்மம் அவ்வாறு திரும்புவதுதான் மகாஊழி. பிரம்மத்தை நோக்கிய ஆத்மாவின் பயணமே வாழ்வு. பிரம்மமே சத். பிரபஞ்சமெல்லாம் அசத் என்ற மெய் மீண்டும் இங்கு வலியுறுத்தப்படுகிறது. ஓம் தத் சத்.”
65%
Flag icon
“கண்மணிகள் மனமெனும் பட்டத்திலகட்டப்பட்ட நூல்கள். கண்மணிகள் அசையாத நிலையே மனம் அமைதியடையும் நிலை.”
65%
Flag icon
அர்த்தமுள்ள ஒரு சொல் சம்பந்தமற்ற ஒருநூறு சொற்களைக் கொண்டுவந்துவிடுகிறது. சொற்களால் ஆன ஒரு தடாகமா மனம்?
65%
Flag icon
எண்ணங்கள். எண்ணங்கள். எண்ணங்களினாலானது மனம் என்றால் எண்ணங்களை எப்படிப் பார்க்க முடிகிறது? எண்ணங்கள் பரஸ்பரம் உணர்கின்றனவா? ஞானம் என்பது எதனால் அறியப்படுகிறது? ஞானத்தினாலா? ஞானமின்மையில் ஞானம் விழுந்து நிரம்புகிறதா? ஞானமின்மையை அறிவது எது? ஆம், எது இதையெல்லாம் அறிகிறது? சரணம். மூச்சு சீராக ஓடுகிறது. சில கணங்களுக்குள் மூச்சின் தாளத்துடன் எண்ணங்கள் இணைகின்றன. பிறகு அவை தங்களுக்குரிய தாளம் ஒன்றை மேற்கொள்கின்றன. ஒரு சொற்றொடர் மனதில் காரணமின்றியே ஒலிக்கிறது. அது பல்லவி போலப் படுகிறது. அதற்கு என்ன அர்த்தம். நான் அறியாத அர்த்தமா? அப்படியானால் நான் என் மனம் அல்லவா? சரணம். எண்ணங்கள், சொற்கள்... எவ்வளவு ...more
65%
Flag icon
குசப்புல்லில் துளித்துளியாக நீர் மொண்டு கடலை வற்றவைப்பது போன்றது, மனக்கொந்தளிப்பைத் தருக்கத்தால் பின்தொடர்வது; கௌடபாதர் சொன்னது.
65%
Flag icon
“ஞானிகளே, ஸ்வேதாம்பர உபநிஷத் ஒரு கேள்வியுடன் துவங்குகிறது. எங்கிருந்து பிறந்தோம் நாம்? எதை நம்பி வாழ்கிறோம்? எதன்மீது நாம் அமர்ந்திருக்கிறோம். இன்பமோ, துன்பமோ நாம் இங்கு வாழ்வது யாரை நம்பி—
65%
Flag icon
பிரம்மமே அந்த ஒன்று. பிற எல்லாமே கவிஞர்களிட்ட பல பெயர்கள்தாம். இங்கு அதற்கு விஷ்ணு என்று பெயர். அவன் கால்கீழே இங்கு தருமம் செழிக்கிறது. ஓம் அவ்வாறே ஆகுக.”
65%
Flag icon
பிரபஞ்ச ஞானம் அனுமானத்தின் விளைவாகவே இருக்கமுடியும். ஸ்வகோஷ மகாபாதரும் நாகார்ஜுன மகாபாதரும் ததாகதரின் அனுமான அடிப்படைகளை விரிவுசெய்து, பிரபஞ்ச தரிசனத்தை முழுமை செய்தனர். அதுவே சூனிய வாதம். நாகர்ஜுன தேவர் தன் மாத்யமிக சூத்ரத்தில் அக உலகம், புற உலகம் இரண்டுமே இல்லை என்கிறார். எதுவுமே இல்லை என்கிறார்.”
65%
Flag icon
சூனியவாதம் நான்கு நிலைகளை முன்வைக்கிறது. சத், அசத் என்ற இருநிலைகள். சத்துமில்லை, அசத்தமில்லை என்ற இருஎதிர்நிலைகள். இதை நாங்கள் சதுஷ்கோடி தர்சனம் என்கிறோம். இந்த நான்கு நிலைகளிலும் ஒரே சமயம் இருக்கக்கூடிய ஒன்றே உண்மையாக இருக்க முடியும்.
65%
Flag icon
பிரம்மம் என்ற ஒன்று இருக்கும் என்றால் அது இல்லாத நிலையும் இருந்தாக வேண்டும். அங்கு இருப்பது என்ன? நான்கு நிலைகளிலும் இருக்கமுடிவது ஒன்றுதான். அது சூனியம். இருத்தல், இல்லாமல் இருத்தல் என்ற இருநிலைகளே மனித அனுபவத்திற்குள் சிக்குபவை. மனித சிந்தனையே இந்த இருநிலைகளின் முரண்பாடுகளால் ஆன ஒன்று. இருத்தலுமில்லை. இல்லாமல் இருத்ததுமில்லை என்ற சொற்களை மனித அனுபவத்தை மீறிய ஒரு நிலையைச் சுட்ட நாங்கள் பயன்படுத்துகிறோம். அதுவே சூனியம் என்பது. சூனியம் என்பது இல்லாமையல்ல. அதற்கும் அப்பாற்பட்ட அதீத நிலை.
65%
Flag icon
சூனிய நிலையில் இன்பம் இல்லை. ஆகவே துன்பம் இல்லை, இருப்பு இல்லை. ஆகவே இல்லாமையும் இல்லை. அதாவது இருநிலை இல்லை. இதையே தீர்க்க சமுச்சயம் விளக்குகிறது.”
65%
Flag icon
“ஞானியும் ஞானமும் ஞானப் பொருளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஒன்று இல்லையேல் பிறிது இல்லை. இவற்றில் எது ஒன்று உண்மையில் இல்லை என்று நிறுவப்பட்டாலும், பிறவும் இல்லை என்றாகிவிடும். அறியும் பொருள் இல்லை. ஏனெனில், உலகம் ஜடப்பொருள்களின் தொகுப்பு அல்ல. நிகழ்வுகளின் தொகுப்புதான் அது. நிகழ்ச்சிகள் காண்பவனின் அறிவின் விளைவுகள். அந்த அறிவு முன்னிகழ்ச்சிகள் என்ற நினைவுத்தொகுப்பிலிருந்து பிறப்பது. பொருளும் அறிவும் இல்லையேல் அறிபவனும் இல்லை. எனவே இம்மூன்றும் இல்லை.
65%
Flag icon
அதாவது எதுவுமின்மையே இவற்றின் ஆதாரம். சூனியம் தன் நான்கு நிலைகளில் ஒன்றாக, இருத்தல் நிலையைக் காட்டும் சூனிய நாடகமே பருப் பிரபஞ்சம். இருப்பில்லாத ஒன்றுக்குக் காரணமும் இல்லை. காரியகாரண வாதத்திற்கு அடங்காத முழுமையே சூனியம் என்பது.”
66%
Flag icon
பிரகிருதியைப் பார்க்கும் மானுடப் பிரக்ஞையில் உருவாகிறது காலம். நிகழ்வுகளை மனம் தன் இருப்பை வைத்து வகைப்படுத்த ஆரம்பிக்கும்போது காலம் உருவாகிறது. அதைத் தன் மன மயக்கத்தால் அப்பிரக்ஞை பிரகிருதிமீது ஏற்றி, அதன் ஒரு பகுதியாகப் பார்க்க ஆரம்பிக்கிறது.”
66%
Flag icon
“நாம் காணும் காலம் பிரக்ஞையால் துண்டுபடுத்தப்பட்ட காலம். பிரக்ஞை மாறும்போது மாறுபடும் காலம். அளக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட, வகைப்படுத்தப்பட்ட காலம். இதைக் கண்டகாலம் என்பார்கள். நாம் அனைவருமே காலம் என அறிவது கண்டகாலத்தையே ஆகும்.”
66%
Flag icon
“அகண்ட காலமே மனிதப் பிரக்ஞையின் எல்லைகளை மீறியது. ஆயினும் அதுவும் மாயையே. ஏனெனில், அன்னமய பிரபஞ்சத்தின் ஒரு பிரதிபலிப்பே அகண்ட காலம்.
66%
Flag icon
குணம், ரூபம், கர்மம் என்று மூன்று பரிமாணங்கள் கொண்டது அன்னமய பிரபஞ்சம். காலமோ நாலாவது பரிமாணம். அன்னமய லோகம் மித்யை. ஆகவே காலமும் மித்யையே. அன்னமய லோகம் பிராணமய லோகத்தில் கரைந்து ஒடுங்கும் கணம் காலமும் ஒடுங்கிவிடுகிறது.”
66%
Flag icon
“பிரம்மாவின் ஒரு பகலை நாம் ஒரு கல்பம் என்கிறோம். ஆதித்ய புராணம் கல்பம் என்றால் என்ன என்பதை இப்படி விளக்குகிறது. கல் என்றால் பிறப்பு. பனம் என்றால் அழிவு. கல்பனம் என்றால் பிறப்பிறப்பு. அதுவே கல்பம் என்று ஆகியது. ஒரு கல்பம் பிரம்மலோகத்தின் ஒரு யுகம். ஆயிரம் மகாயுகம் சேர்ந்தது ஒரு கல்பம். ஒவ்வொரு மகாயுகமும் நாற்பத்து மூன்று லட்சம் வருடங்களடங்கியது. கிருத யுகம் இரண்டரை மகாயுகம். த்ரேதா யுகம் பத்தில் மூன்று மகாயுகம். துவாபரயுகம் ஐந்தில் ஒரு மகாயுகம். கலியுகம் பத்தில் ஒரு மகாயுகம் என்கிறது ஆதித்ய புராணம்.”
66%
Flag icon
கடலே கூட முடிவின்மையின் ஓர் அலை மட்டுமே.
66%
Flag icon
இப்பாவனைகளே முதல் பாவனையின்மைக்குச் சாட்சியாகும். கடல் இருப்பதற்கு ஆதாரம் அலைகளே என்பது போல. ஆகவே,
67%
Flag icon
“ஆயுர்வேதம் மரணத்தை மிகச் சிக்கலான ஒரு நிகழ்வாகவே வகுக்கிறது. எளிமையாகக் கூறப்போனால் இப்படி விளக்கலாம். பிராணமய கோசத்தின் மையமான பார்த்திவப் பரமாணு, குண்டலினியின் உள்ளே தூங்குகிறது. பிறப்பிற்கு முன்பு, அன்னமய வடிவம் உருவாவதற்கு முன்பு, அது பிராணவடிவில் இருந்தது. பின்பு அது பருவடிவம் கொண்டது. உடனே அதற்கு ஞானவடிவமும் உருவாகி விடுகிறது. பார்த்திவப் பரமாணு வளரவளர, உடலும் ஞானமும் வளர்கின்றன. உயிரின் உடலியல்புகளும் ஞானஇயல்புகளும் பார்த்திவப் பரமாணுவிலிருந்தே உருவாகி வருகின்றன. அந்தப் பரமாணுவின் உள்ளேதான் ஜீவனின் அடிப்படையான யந்திரவடிவம் உள்ளது. அது அங்கு சூட்சுமவடிவில் உள்ளது. விதையின் கருவிற்குள் ...more
67%
Flag icon
கர்ப்பம் என்பது என்ன? பார்த்திவப் பரமாணு தன்னுள் கருத்துவடிவில் இருக்கும் மானுட உடலை பருவடிவமாக ஆக்குவது தானே? அது தேவையான உதிரத்தையும் சதையையும் அன்னை உடலிலிருந்து பெற்றுக்கொள்கிறது. முதலில் மந்திரவடிவமாக இறைவனை வைதிகர்கள் உருவகிக்கிறார்கள். பிறகு மூலவிக்கிரகமாகப் பிரதிஷ்டை செய்கிறார்கள். பிறகு அதைச் சுற்றி கருவறை எழுகிறது. பிறகு பிரகாரங்கள், மண்டபங்கள், விமானங்கள், உபகிருகங்கள், மகாமரியாதங்கள், பாஹ்யாகாரங்களுடன் பெரும் ஆலயம் எழுகிறது. பார்த்திவப் பரமாணுப் பொருள் முதலில் அன்னையின் உதிரத்தையும் பிறகு மண்ணின் அமுதத்தையும் உறிஞ்சி வளர்கிறது. ஒரு தருணத்தில் அது உடல்கொண்டுவந்த நோக்கம் ...more
67%
Flag icon
“மரணம் என்பது பிறப்புச் செயலின் மறுநிகழ்வு என்கிறது ஆயுர்வேதம்”
67%
Flag icon
“முதலில் உடல் தளர்கிறது. ஆலயம் இருளடைகிறது. இடிந்து சரிகிறது. கருவறையின் உள்ளே கடைசி விளக்கு அணையும்போது தேவன் மீண்டும் மந்திரவடிவமாக ஆகிறான். பார்த்திவப் பரமாணு மீண்டும் பிராணவடிவை அடைவதே மரணம் என்பது. குண்டலினியில் குடிகொள்ளும் அப்பிராணபிந்து பிரம்மாந்திரத் துளையினூடே வெளியேறுவதே மரணம்.
67%
Flag icon
பவதத்தரின் பிரம்மதுளை அவருடைய கண்கள். யோகிகள் நெற்றிமையம் திறந்து முக்தியடைகிறார்கள். ஞானிகளுக்குக் கண்கள். சான்றோர் நாசி வழியாகவும் பாமரர் வாய் வழியாகவும் அதமர் பிற...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.