More on this book
Community
Kindle Notes & Highlights
“மகாபுராணப்படி ராஜவிமானம் மூன்று பகுதிகளைக் கொண்டது. கீழே மண்ணில் இருந்து எழுந்து, நம் கைகளுக்கு எட்டும் பகுதியை பிரித்விஹாரம் என்கிறார்கள். சூக்கும வடிவமாக வானில் இணைந்திருப்பது ஆகாயத்தாலான மஹாஹாரம். இரண்டையும் இணைப்பது ஒளியாலான தேஜோஹாரம். ஆகாய வடிவான மகாவிமானம் ஒலியால் மட்டுமே நம்முடன் தொடர்பு கொள்ளமுடியும் என்று ஐதீகங்கள் கூறுகின்றன.
இடையில் ஒட்டியாணம். அதிலிருந்து தொடை வரை நீண்டு தொங்கும் பொன்தூக்குகள். தொடையில் குறங்கு செறி. மடியில் விரிசிகை. காலில் நூபுரம். அதற்கு மேல் நூபுரச் சிறகுகள், பத்து கால்விரல்களிலும் பொன்மெட்டிகளும் பீலிகளும் கைகளில் நெளிவளை, நூல்வளை, தொடிவளை, மலர்வளை, சூடகம் என்று அடுக்கினாள். முழங்கை வரை நெருங்கிய அவற்றின் இருபக்கமும் கனத்த காப்புகளை மாட்டி அவற்றை இறுக்கினாள். பவளம் பதித்த தோள்வளைகள். விரல்கள் அனைத்திலும் செந்நிற வைரங்கள் பதித்த மோதிரங்கள். மணிக்கட்டின் மீது பாணிபுஷ்பங்கள். காது மடல்களில் நீலநிற வைடூரியத்துடன் ஒளிர்ந்த மகரத்தோடு. மேல்காதில் நீர்நிற வைரங்கள் பதிக்கப்பட்ட காதுமலர். மடல்
...more
ஆபாசமான அந்நிய விரல்கள் போல பொன்னிழைகள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை வருடின.
தூலமின்றி நான் உண்டா? என் எண்ணங்கள் கூட தூலத்தின் அலைகள்தானா? தூலத்தின் மீது எண்ணங்கள் எப்படி விசை கொள்கின்றன? தூலத்தை மீறிச் செல்ல ஏன் தூலம் தவிக்கிறது? போகத்திற்குப் பிறகு களைத்துப் பின்னகரும் ஆண்மிருகத்தில்தான் எவ்வளவு அமைதி. அதற்குள் ஆறாத பசி ஏதும் இல்லையா? எனக்கு மட்டும் என்ன இது? என்னை விட்டு விடு. நான் மிருகமாக இருக்கிறேன். கல்லாக மரமாக இருக்கிறேன். போதும்.
தனிமையே மனிதர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. மாற்று இல்லாத, சமரசம் இல்லாத தனிமை. இந்தத் தனிமையை இம்மிகூட மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. இதிலிருந்து தப்பத்தான் கவிதை, காமம், உறவுகள், சமூகம், தத்துவங்கள் எல்லாமே. ஆம். ஒரே உண்மைதான். பிரபஞ்ச விரிவில் ஒவ்வோர் உயிர்த்துளி மீதும் கவிந்திருக்கும் மகத்தான தனிமை. அதற்குப் பரிகாரமே இல்லை. அதிலிருந்து தப்ப வழியே இல்லை. தப்ப வழியே இல்லை. ஆம் தப்ப வழியே இல்லை.
ஒருவனுக்கு சொந்தமாக சொற்களே இல்லையென்றால்... பிறருடைய சொற்கள் வழியாகவே அவன் தன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றால்... நான் முட்டாள். பாவி. நான் பாவி...”
அன்றாட அநீதி என்பது அநீதியல்ல. ஒருமுறைமை அவ்வளவுதான்.
நான் பாவி, அதுதான் மனம் போடும் மிக ஆபாசமான வேஷம். பூமி மீது ஒவ்வோர் உயிருக்கும் உண்மையாக வாழ்வது என்ற மகத்தான கடமை உள்ளது. அதிலிருந்து தப்பவே இங்கு வேடத்தைப் போட்டுப் பசப்புகிறான் மனிதன். அவனுக்கு இலக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் துவங்க வேண்டிய இடம் தெரிந்திருக்கும். ஒவ்வொரு கணமும் அந்தப் பிரக்ஞை அவனைப் பின்தொடர்ந்தபடிதான் இருக்கும்.”
சூழ்நிலைக்கு ஏற்பவே மனம் தருக்கங்களை உண்டுபண்ணுகிறது. உண்மை ஒருபோதும் தருக்கத்தில் சிக்காது. சிக்குமெனில் சதுரங்க விளையாட்டு வழியாகவே பரம ஞானம் அடைய முடியும்.”
அக்காரத் துண்டில் எறும்புக் கூட்டம் மொய்த்திருப்பது போல அந்தக் கல்மண்டபம் முழுக்க மனித உடல்கள் தெரிந்தன.
உள்ளே இருப்பது எது? இருபத்து ஒன்று நரம்புகள் கொண்ட பேரியாழா? அல்ல. அது எண்ணிலடங்காத நரம்புகளுடன் திசைகளை அடைத்துப் பரவியிருக்கும் மாபெரும் யாழ். ஒரு முனையில் தந்திகள் லயம் கெட்டு அபசுருதி எழுப்புகையிலும் மறுமுனையில் நாத மோனம் கூடியிருக்கும் அற்புத யாழ் அது. பெரும் கடலில் இருந்து சிப்பிமூடியால் நீர் மொள்வதுபோல இந்தச் சிறு யாழில் அதன் நாதத்தை மொண்டெடுக்க முயல்கிறேன். அனந்தரூபனை சிறு மூர்த்தியில் ஆவாகனம் செய்வது போல அந்த யாழை இந்த யாழால் மீட்டுகிறேன்.
எது அழிவற்றதோ, எது ஆக்கமும் அற்றதோ, எது இருப்பதோ, எது இல்லாததோ, எது துவக்கமோ, எது முடிவற்றதோ, எது எதுவுமற்றதோ அது இங்கு ஆராயப்படுவதாக. அதன் அருகணையும் பாதைகள் மீதெல்லாம் ஞானத்தின் ஒளி படர்வதாக! ஓம் அவ்வாறே ஆகுக.”
நான் அறிய வேண்டிய ஞானம் மூவகைப்படும். தத்துவம், ஹிதம், புருஷார்த்தம். எம்பெருமானே தத்துவம் என்பது யாது என்கிறார்கள் சீடர்கள். ஞானி பதிலிறுக்கிறார். சித்து அசித்து ஈஸ்வரன் என மூவகைப்பட்டது தத்துவம். உயிர்த் தொகுதியே சித்து. உடலும் இயற்கையும் அசித்து. அவற்றில் உள்ளடங்கியுள்ள எம்பெருமான் விஷ்ணுவே ஈஸ்வரன்...”
“ஹிதம் என்பது மூவகைப்பட்ட தத்துவத்தை அடையும் மார்க்கம். பக்தி பிரபத்தி என்று அது இருவகைப்படும்...” கோபிலர்
கர்மம் மூவகை. முன்னை வினை, எஞ்சும் வினை, நிகழும் வினை, பிராத்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்று முன்னோர் கூற்று. தர்ம கர்மங்கள் அற்ற நிலையே வீடுபேறு.
பொய் என்பது மெய்யின் ஆடிப் பிம்பம். மெய் போலவே அகன்றது. எல்லையற்றது, மகத்தானது. ஆனால் அதனுள் புக முயன்றால் தடையாக மாறி முகத்தில் அறையும்.
தாந்த்ரிய சாஸ்திரப்படி பாரதம் மூன்று பிரிவு. விஷ்ணுகிராந்தம், ரதகிராந்தம், அஸ்வகிராந்தம் என்று அறிந்திருப்பீர்கள். விந்திய மலையை உள்ளடக்கிய இப்பகுதியே விஷ்ணு கிராந்தம். ஸித்தீஸ்வரம், காளீதந்திரம் தொடங்கி நூற்று எட்டு தாந்த்ரிக முறைகள் இங்கு உள்ளன. அதில் ஐம்பத்து ஆறாவது பிரிவு மகாகாலம். அதன் இருஉட்பிரிவுகள் ஸ்ரீபாத மார்க்கமும் அக்னி மார்க்கமும். அக்னி மார்க்கிகள் ஸ்ரீவழிபாட்டாளர்கள். பாஞ்சராத்ர ஆகமவாதிகள். அவர்களது கடைசி குரு மகாபைலரின் மரணத்திற்குப் பிறகு அக்னிதத்தனை ஏற்று, விஷ்ணுபுரத்துக் கோயிலை ஒத்துக்கொண்டார்கள். அவர்களுக்காகவே
“எங்கள் மகாகுருக்களின் மனங்கள் மறைவதே இல்லை. மறைவதற்கு முன் அவர்கள் தங்கள் மனங்களை இன்னோர் உடலுக்கு மாற்றி விடுகிறார்கள். இதை நாங்கள் மகாசம்வேதம் என்கிறோம். மரணம் எங்களுக்கு முடிவல்ல. ஒரு கழிவகற்றல் மட்டுமே. அதற்கு மகாவிசர்ஜம் என்று பெயர். உடல்கள் வழியாக எங்கள் குருக்கள் காலத்தைக் கடந்து செல்கிறார்கள்.”
ஒளி எனது வைரி. ஒளி என்னை வதைக்கும். நான் கிருமி. மண்ணுக்குள் இருளில் வாழ விதிக்கப்பட்டவன்.
வெறுப்பென்பதே ஒன்று இல்லாமலாவதற்கான தீவிரமான ஆசைதானே?
“இருதினங்களுக்கு முன்பு காலையில் திடீரென்று ஓர் எண்ணம் ஏற்பட்டது. ஒரு காகம் வானை நோக்கி ஏன் என்று கேட்டது போலிருந்தது. பூமி மீது ஒவ்வோர் உயிரும் தன் உயிரை முழுக்கக் குவித்து பெருவெளி நோக்கி ஒரே கேள்வியைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறது என்று பட்டது. சில கணங்களில் தாவரங்களும் கட்டடங்களும் மனிதர்களும் எல்லாம் ஏன் என்ற அந்த ஒற்றைச் சொல்லாகவே இருப்பதாகத் தோன்றியது எனக்கு.
“அகங்காரமிருந்தால் வாழ்க்கையின் அடிகள் ரொம்ப வலிக்கும்.”
“மக்கள் எப்போதும் சாதாரணமானவர்களைத்தான் தலைவர்களாக ஏற்கிறார்கள். பிறகு அவர்களை அசாதாரணமானவர்களாக எண்ணி வணங்குவார்கள்.”
பூமி மீது நெருப்பைப் போல அழகிய வேறொன்று இல்லை. அதைப் போல பயங்கரமும் வேறு இல்லை. ஒவ்வொரு கணமும் அதன் வடிவம் மாறுகிறது. நிறம் மாறுகிறது. எப்படி கைகளால் வானை எட்டிப் பிடிக்க முயல்கிறது! ஆனால் அகல்விளக்கில் ஏற்றி வைத்தால் அமைதியாக இருக்கிறது. எடுத்து நகையில் பதிக்கலாம் போல.
அறியாமையிலிருந்துதான் ஆனந்தம்
ஆனந்தம் என்பது துயரம் போலவே ஒரு சமன்குலைவு. அது அறிவிலிருந்து வர முடியாது.
மனதின் உள்ளே வாசல்களற்ற அறைக்குள் ஆத்மா இருட்டில் துழாவுகிறது. அதன் தனிமையை எதுவும் கலைப்பதில்லை. மாற்று இல்லாத தனிமை. அது மட்டும்தான் உண்மை. அதைத் தவிர வேறு எல்லாம் பொய்.
தார்க்கிகர்கள்.”
“படிப்பினால் என்ன பயன்? அது இன்னொருவனின் தருக்கம். உங்கள் தருக்கம் நீங்கள் கொள்ளும் மனப்பயிற்சி மூலமே கிடைக்கும்.”
நிர்குண ரூபமான மனிதனுக்குத் தருக்கம் இல்லை. அவன்முன் பிரபஞ்சம் மகத்தான ஒருமையாகக் காட்சியளிக்கிறது. தருக்கத்தின் முதல் கதிர் பட்டதும் உலகம் பிரிவுபட ஆரம்பிக்கிறது. தருக்கம் என்பதே ஞானம். தருக்கம் வளரும்தோறும் உலகம் பிளவுபட்டு, பிளவுகள் பின்னிச் சிக்கலாகி, தோற்றம் தருகிறது. உடைப்பதும் பிரிப்பதும் பெயரிடுவதும் தொகுப்பதும்தான் தருக்கத்தின் போக்கு. ஆனால் பெருவெளியில் திசை இல்லை. எந்தப் பயணமும் போதிய தூரம் சென்றால் ஒரே புள்ளியையே சென்றடைகிறது. தருக்கத்தின் உச்சியில் மனம் அதருக்க நிலையை அடைகிறது. மகத்தான முழுமையுடன் பிரபஞ்சம் மீண்டும் காட்சி தருகிறது.
வீரன் என்பவன் வெறுமையில் காலூன்றி நிற்பவன். வாதங்கள் தாங்கள் கட்டி எழுப்பியதை ஒருகணத்தில் சாஸ்வதமாக எண்ணிக் கொள்கின்றன. அவற்றின் நிழலில் தங்கிவிடுகின்றன. காலம் தருக்கவடிவம் கொண்டுவரும் அப்போது. உடைத்து வீசும். வெறுமை நோக்கி அனைத்தையும் இழுத்துச் சென்றபடியே இருக்கும் பிரவாகமே காலமென்பது.”
கருணை உள்ளவர்கள் மோசமான ஆட்சியாளர்கள். அவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். அகங்காரிகளே மிகச் சிறந்த ஆட்சியாளர்கள். கருணையுள்ள அரசு என்ற ஒன்று இல்லை போலும்.”
அனுபவித்தலின்றி அறிதல் இல்லை. அனுபவித்தலின் போது ஏற்படும் அறிதல் அவ்வனுபவத்துக்குக் கட்டுப்பட்டது! மானுட அனுபவமோ, மனிதனின் புலன்களுக்கும் இச்சைகளுக்கும் கட்டுப்பட்டது. ஜட சலனத்தின் ஒரே ஒரு சாத்தியம் மட்டும்தான் அது.
“காலத்தின் கீழ்ச்சரிவில் எத்தனையோ பிரபஞ்சங்கள் மறைந்தன. காலத்தின் மடியில் எத்தனையோ பிரபஞ்சங்கள் சிறுகால்களை உதைத்தபடி முலைகுடித்து விளையாடுகின்றன. காலத்தின் மேற்கில் ஓங்காரமே நிரம்பியுள்ளது...
எல்லாப் பாதையிலும் துன்பமும் இன்பமும் உள்ளது குழந்தை. அழகின் தரிசனமோ, மனநெகிழ்வின் முதிர்வோ, நீ ஓர் அறிதலின் கணத்தில் அனுபவிக்கும் பரவசத்திற்கு இணையானதுதான். உனது துயரம் மானுட குலமெங்கும் பரவி, காலம்தோறும் தொடர்ந்து வருவது. நான் பாவி என்று கண்ணீர்விடாத ஞானதாகி எங்குள்ளான்?”
அழுக்கு, பசி, இச்சை, போதை, வெறி, உழைப்பு இதெல்லாம்தான் மனிதர்கள். உழைப்பும் அடிமைத்தனமும் அதிகாரமும் மட்டும்தான் நிதர்சனம். இலட்சியக் கனவுகளை உண்டுபண்ணி மனிதன் தன் வாழ்வின் அவலங்களுக்குத் திரை போடுகிறான்.
அவனை எதிர்பார்த்திருக்கும் வாஸகஸஜ்ஜிதையாக ஏங்கிக் கண்ணீர் உகுத்தாள். அவனால் கைவிடப்பட்ட விரஹோத்கண்டிகையாக விரிந்த தலைமயிரும் வீங்கிய கண்களுமாக மேடைமீது சரிந்தாள். அவனால் புறக்கணிக்கபப்ட்ட கண்டிகையாக மரணத்தை எதிர்நோக்கி நடந்தாள். அவனால் ஏமாற்றப்பட்ட விப்ரல்லப்தையாகக் கொதித்தெழுந்து சிவந்த கண்களும் சீறும் மூச்சுமாக ஓங்கி நின்றாள். யுகங்களாக அவனைக் காத்திருக்கும் ப்ரோஷிதபதிகையாக அலையடிக்கும் நீலக்கடல் விளிம்பில் மூக்குத்தி சுடர நின்றாள். பின்பு அவன் தந்த குறியிடம் தேடி அபிசாரிகையாக வந்தாள். அடர்ந்த மலர்வனத்தில் கிளைகளை விலக்கியபடி ஆவலும் தவிப்புமாக அலைந்தாள். அவனைக் கண்டு மலர்ந்தாள். அவனைப்
...more
“அஜிதர் காலத்தை ஒரு வளைகோடாக உருவகித்தார். அதை பிறகு வந்த தர்மஞானிகள் ஒரு சக்கரமாகக் கற்பிதம் செய்தார்கள். ஆகவே காலத்தை வரைசீலையாகக் கொண்ட பிற அனைத்தும் சக்கரவடிவ இயக்கம் கொண்டவையே. காலசக்கரத்தை மகாதர்மத்தின் தூலவடிவமாக வழிபடுகிறவர்கள் தங்களை சக்ராயன பௌத்தர்கள் என்கிறார்கள்.”
“துக்கத்திற்குப் பின்னால் எப்போதும் அகங்காரம் உள்ளது.”
சேஷநிருத்யம்
“நெருப்பின் தந்திகளில் காற்று மீட்டும் பண்.”
மூடன்தான் அறிதலின் கணத்தை அஞ்சுவான். அறிதல் என்பது ஒரு கணமே. படிப்படியான அறிதல் எல்லாம் அறிவிலிருந்து விலகிச்செல்லுதல் மட்டுமே. அறிந்தபின் எல்லாமே வேறு. அறிந்தபின் ஏதும் இல்லை. அதை அறியும்முன் எவரும் ஊகிக்க முடியாது.
எழுக! இன்று புதிதாய்ப் பிறந்தெழுக! நெருப்பாக எழுக! காற்றாக எழுக! வானாக எழுக! இல்லாமையிலிருந்து இருப்புக்கு வருக! இருளிலிருந்த ஒளிக்கு வருக! மரணத்திலிருந்து அதீதத்திற்கு எழுக! ஓம்! ஓம்! ஓம்!
அர்க்கரச்மி
“சகல பிரம்மாண்டங்களையும் என்னுள் நானே ஏந்துகிறேன்.”
“சப்த உலகங்களும் மனித உடலில் உள்ளன. காணும் ஜட உலகமே அன்னமய கோசம். காணாத புவர்லோகமே பிராணமய கோசம். ஸுவர்லோகம் அசத்தமனோமய கோசத்தாலானது. ஜனர்லோகம் சுத்தமனோமய கோசத்தின் விஸ்வரூபத் தோற்றமேயாகும். தபோலோகம் ஆனந்தமய கோசமேயாகும். பிரம்மலோகம் சின்மய கோசத்தினாலானது. உள்ளுறையும் சதானந்தமய கோசமே வைகுண்டலோகம். ஏழு பிரம்மாண்டங்களும் மனித உடலில் ஏழு நிலைகளுக்குச் சமம். ஒவ்வோர் அணுவும் மனித உடலின் அதே வடிவில்தான் உள்ளன. மனித உடல் பிரபஞ்சமேதான். அதன் ஒவ்வொரு பரமாணுவும் பிரபஞ்சமே. எனவே மனிதனே பிரபஞ்சங்களை உள்ளடக்கிய பிரபஞ்சம்.”
ஞானமே இருத்தலாகிறது. கண்டடைதலே அடைதல். மற்ற எதுவுமே அடைதல் அல்ல.”
ஏழு வகை உடலும் ஏழு பிரம்மாண்டங்கள். ஏழுலகம் அடங்கிய பேருலகம் ஞானியின் உடல்தான். ஞானமே வடிவாகிய குருவே பிரம்மாண்ட ரூபன்.”
நிரந்தரமற்ற எதுவும் பொய்யே. நிரந்தரத்தைக் கண்டு நடுங்குபவன் அடையாளத்தை நாடுகிறான். காலத்தின் இடுக்கில் புகுந்துகொண்டு முடிவின்மையை நிராகரிக்கிறான். அவன் எந்தப் பொந்தில் நுழைந்தாலும் காலம் துரத்தி வரும். காதைப் பிடித்துத் தூக்கி கண்களைப் பார்த்துச் சிரிக்கும். அப்போது அவன் உடைந்துபோய் அழுகிறான். நல்ல வேளை, அதிகம் அழச் சந்தர்ப்பம் இருப்பதில்லை.”
“வெற்றிடத்தின் ஒரு தருணம்தான் வேகம். வேகத்தின் ஒரு தோற்றம்தான் எடை. எடைக்கும் வானத்திற்குமான ஒரு சமரசமே அளவு.”