விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate it:
57%
Flag icon
ஸ்திதப் பிரதிக்ஞன்
58%
Flag icon
சூனியம் எதனாலும் கவரப்படுவதில்லை. எதனாலும் மறைக்கப்படுவதில்லை. எல்லாமே எப்போதும் சூனியத்தை நோக்கிக் கவரப்படுகின்றன. மண்மீது ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு சிந்தனையும், தங்களை அறியாமேலயே சூனியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.”
58%
Flag icon
ஸ்வரானுவாத சாஸ்திரத்தில்
59%
Flag icon
எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு, எல்லா தொடுஉணர்வுகளையும் நீக்கிவிட்டு, எல்லா மணங்களையும் மறைத்துவிட்டு, எந்த ஒலியுமில்லாத இடத்தில் தனித்திருப்பின் நாம் இல்லாமலாகி விடுவோமா? இல்லை. நாம் இருந்துகொண்டிருக்கிறோம். நமது எண்ணங்கள் நதிப்பிரவாகமென சென்றபடி உள்ளன. அதன் பெயர் திருஷ்ணை. திருஷ்ணை தியானத்தின்போது தங்கிவிடுவதைக் காண்கிறோம். ஆழ்ந்த தியானத்தில் அதன் பரப்பில் அலைகள் ஓய்கின்றன. அடித்தளமென ஆழ்மனதை அங்கு காண்கிறோம். அதைத் தொடப் போனால் அது ஒரு தோற்றமே என்றும் அந்தத் தளம் ஒரு வானவெளி என்றும் அறிகிறோம். அந்த வானவெளியை நோக்கிப் பறந்தால் வானமென்பது இன்மை என்றறிகிறோம். இன்மையை உணரும்தோறும் அதன் ...more
59%
Flag icon
“ஞானிகளே காரணமின்றிக் காரியம் இல்லை. வெண்ணெய் காரியமெனில் மோர் அதன் காரணம். மோருக்குக் காரணம் பால். பாலுக்குக் காரணம் பசு. நாம் காணும் உலகம் ஒரு காரியம். அதன் காரணம் என்ன? இப்பிரபஞ்ச இயக்கத்தின் மூலம் என்ன? பிரபஞ்சமென்பது நம் உடலும்கூட என்பார்கள்.
59%
Flag icon
அன்னமய உடல் பிராணமய உடலின் காரியமாகும். பிராணமய உடலோ, அசுத்த மனோமய உடலின் காரியம். அதற்குக் காரணம் சுத்த மனோமய உடல். அதற்குக் காரணம் ஆனந்த வடிவாய சோதி. அதற்குக் காரணம் சூனியம். சூனியத்திற்குக் காரணம் விஷ்ணுவாகிய சச்சிதானந்த மகாமையம். இதுவே பிரபஞ்சத்திற்கும் பொருந்தும்
59%
Flag icon
“புலன்கள் இல்லாதபோதும் உணர்வது எது? அதன் பெயரே ஆத்மா. அது சுயம் பிரகாசமானது. அப்பிரகாசம் எங்கிருந்து வருகிறது? அது பரம்பொருளான மகாமையத்தின் பிரதிபலிப்பேயாகும்
59%
Flag icon
அது அனாதியான காரணம். காரணன் என்று அவனை அழைத்தார் மகரிஷி. அவன் குறைவுபடாத, நிறைவுபடாத பரிபூரணன். பூரணன் என்றார் மகரிஷி. அவன் ஒளியும் இருளும் அல்லாதவன். அவனை ஜோதிமயன் என்றார். அப்படி லட்சம் பெயர்களைக் கூறிய பிறகு, இப்பெயர்களால் தொடப்படமுடியாதவன் அநாமன் என்றார். மனித மனதால் எந்நிலையிலும் வரைறுக்கப்பட முடியாதவன், அநிர்வசநீயன் என்றழைத்தார்.
59%
Flag icon
ஆத்மா விஷ்ணு ரூபம். அவையனைத்தும் பூரணங்கள். ஆகவே குரு கூறினார். பூரணம் அது. பூரணம் இது. பூரணத்திலிருந்து பூரணம் பிறக்கிறது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பு பூரணமே எஞ்சி நிற்கிறது.
59%
Flag icon
சத்காரியவாதம்
59%
Flag icon
பால் தயிரின் காரணம். பாலே தயிராகிறது. பாலின்றி தயிரில்லை. தயிர் ஆனபின் பால் இல்லை. ஆகவே, காரணமும் காரியமும் ஒன்றின் இருமுகங்களே ஆகும். எதுவுமில்லாமல் ஏதும் புதிதாகத் தோன்றுவதில்லை. பூரணமாக அழிவதும் இல்லை. நாம் அறியும் பிரபஞ்சம் தெளிவாகப் புலன்களுக்குச் சிக்குவது. இதை வியக்தம் என்கிறோம். இதன் காரணம் தெளிவற்றது. அதை நாங்கள் அவியக்தம் என்கிறோம்.”
59%
Flag icon
பிரபஞ்சம் நம் கண்முன் உள்ளது. எனவே இதற்கு நாம் காரணம் தேடுகிறோம். இதற்கு, காரணம்கொண்டது; சத்காரணாத் என்று பெயர் சூட்டுகிறோம். இதன் தன்மை இதன் காரணத்தின் தன்மையேயாகும். பாலின் குணமே தயிரின் குணம் அல்லவா? தண்ணீரோ வாயுவோ தயிராகாதல்லவா? காரியம் காரணத்தின் இயல்புகளையே தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதை நாங்கள் உபதான காரணம் என்கிறோம். எனவே பிரபஞ்சத்தின் காரணமாக, இதன் தன்மைகளை எல்லாம் தீர்மானித்தபடி இருந்த காரணம் எது? அந்தக் காரணத்தின் காரணம் எது? இவ்வாறு அவியக்தத்தின் அவியக்தமாக உள்ளுறைந்தபடியே போகும் அந்த ரகசியம் என்ன? மறைநிலையான அதுவே பிரபஞ்சத்தின் மூலகாரணமாக இருக்க இயலும். அதே போல இந்தப் பிரபஞ்சம் ...more
59%
Flag icon
“ஆதிகாரணம் அவியக்தம் ஆக உள்ளது. வியக்தத்தை அறிய புலன்களின் அறிதலாகிய வியவகார ஞானம் உதவும். அவியக்தத்தை அறிய அனுமானமே வழியாகும். நமது அனுமானத்திற்கு ஆதாரமாக உள்ளது இந்தப் பிரபஞ்சமேயாகும். கையிலுள்ளது மோர். அதன் காரணமாக உள்ள பாலை மோரை வைத்தே ஊகிக்க வேண்டும். இது சத். ஆகவே ஆதிகாரணமும் சத்தேதான். இது மாறிக் கொண்டிருப்பது. எனவே, அதுவும் மாறும் தன்மை உடையது. அதை நாங்கள் ஆதிப்பிரகிருதி என்கிறோம்.
59%
Flag icon
மூல இயற்கைக்குக் காரணம் என்ன?”
59%
Flag icon
“அது காரணமற்றது. அது வேர். வேருக்கு வேர் தேவையில்லை. நாமறியும் வியக்தப் பிரபஞ்சம் ஒரே சமயம் காரணமும் காரியமும் ஆகஇருக்கும் இரட்டை நிலையில் உள்ளது. இங்குள்ள ஒவ்வொரு பொருளும் ஒரே சமயம் வேறு ஒன்றிலிருந்து...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
59%
Flag icon
“உங்கள் முதல் இயற்கை சேதனம...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
59%
Flag icon
“முதல் கணத்தில் அது அசைவற்ற முழுமை உடையது. எனவே அசேதனம். அதன் உயிர்கொண்ட சேதன வடிவமே நாம் காணும் இப்பிரபஞ்சம். இதை நாம் இடைவி...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
59%
Flag icon
“அசேதனமான மூல இயற்கை ஏன் சேதன வடிவம் கொண்ட பிரபஞ்சமாக மாறவ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
59%
Flag icon
“பிரபஞ்ச இயக்கம் மூன்று குணங்களின் இயல்புகளைக் காட்டுகிறது. சத்வ, ரஜோ, தமோ குணங்கள். இவை ஆதிப்பிரகிருதியிலும் இருந்தே ஆகவேண்டும். காரணம் உபதானகாரணாத் வாதம்தான். இந்த இயக்கமுள்ள இயற்கையில் இக்குணங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து பிணைந்து கோடி உருவங்களையும் செயல்களையும் உருவாக்கியபடி உள்ளன. அப்படியானால் இயக்கமற்ற ஆதிஇயற்கையில் இவை பரஸ்பரம் பூர்த்திசெய்தபடி, சமநிலையில் இருந்திருக்க வேண்டும். அந்தச் சமநிலையே அதை மகாமௌனத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். அனாதி காலத்தில் அது அசைவற்ற பெரும் இருப்பாக உறைந்திருக்க வேண்டும். என்றோ, ஏதோ ஒரு கணத்தில், ஒரு முதல் தொடக்கம் நிகழ்ந்திருக்கலாம். அதன்மூலம் முக்குணங்களின் ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
59%
Flag icon
அந்த முதல் தொடக்கம் நிகழ்ந்த கணம் எப்படிச் சாத்தியமாயிற்று? வெறுமையிலிருந்து எதுவும் உருவாகாது என்பதல்லவா உங்கள் தத்துவம்? எங்கிருந்து அந்த முதல் தீண்டல் வந்தது? முக்குணங்களின் சமன் எப்படிக் குலைய நேர்ந்தது? அதற்குக் காரணம் யார்?”
59%
Flag icon
“புருஷன்”
59%
Flag icon
“மூல இயற்கையைப் போலவே அவனும் முடிவற்றவன், குணமற்றவன். ஆனால் காரியமாக மாறாது, எப்போதும் காரணமாகவே எஞ்சுபவன். இயற்கையின்முன் அவன் வெறும் காட்சியாளன் மட்டுமே. எதிலும் பங்கேற்பதில்லை. அவன் பார்வையே மூலஇயற்கையை சலனப்பிரபஞ்சமாக ஆக்குகிறது. அவனுடைய முடிவற்ற பார்வைமுன் அது மாறி மாறிச் சுழல்கிறது.”
59%
Flag icon
“ஆதிஇயற்கையை ஐம்புலன் சந்திக்காவிட்டால் அதற்கு எப்படிப் பஞ்சபூதத் தன்மை வந்திருக்கும்? புலன்கள் இல்லாவிடிலும் நீர் இருக்கும் என்றீர். அதன் நீர்த்தன்மையை எப்படித் தீர்மானிப்பது? நீர்த்தன்மையில்லாத ஒன்று எப்படி நீராகும்? நீர்த்தன்மை என்பது மனோமய கோசத்தின் நீர் உருவகமன்றி வேறென்ன கூறும்?”
59%
Flag icon
“இங்கு வைசேஷிகம் தன் கருத்தை முன்வைக்க விரும்புகிறது”
59%
Flag icon
“கணாத ரிஷியின் மகாதரிசனம் இக்கேள்விகளுக்குப் பதில் கூறுகிறது. பிரசஸ்தபாதர் தனது பதார்த்த தர்மசங்கிரகத்திலே விரிவாக விளக்கம் தருகிறார்.
59%
Flag icon
பிரபஞ்சம் பதார்த்தங்களால் ஆனது. அவை திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேஷம், சமவாயம் எனப்படும். இப்பொருண்மைக் குணங்களே பூலோகத்தின் இயல்பைத் தீர்மானிக்கின்றன. இவற்றின் அடிப்படையானது திரவியம் என்ற பொருள்குணம். நிலம், நீர், வானம், காற்று, நெருப்பு, காலம், திசை, ஆத்மா, மனம் எனும் ஒன்பது திரவியங்களின் கூட்டையே நாம் பொருள்வய உலகமாக அறிகிறோம். உருவம், சுவை, மணம், தொடுகை, பரிமாணம், பருண்மை, சுகம், துக்கம், ஆசை, வெறுப்பு, முயற்சி, எதிர்மை முதலிய பதினேழு வகைக் குணங்களையே நாம் அனுபவித்தறிகிறோம். எழுதல், விழுதல், சுருங்குதல், விரிதல், நகர்தல் என்னும் ஐவகைக் கருமங்களில் பொருள்கள் ஈடுபடுவதன் மூலமே ...more
59%
Flag icon
“நீரின் நீர்த்தன்மை அதன் விசேஷத் தன்மை ஆகும். நீரையும் மண்ணையும் தொட முடியும். ஆகவே தொடுகை நீரின் சாமான்ய தன்மை. இருவிசேஷத் தன்மைகள் இரண்டற கலந்த நிலையே பொருள்களின் சமவாயத்தன்மை ஆகும். உதாரணம் நீரின் கரைக்கும் தன்மையும், உப்பின் கரையும் தன்மையும் இணைந்து உப்புநீர் உருவாகிறது என்பது. ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
59%
Flag icon
வைசேஷிகம் இவ்வடிப்படைகளை முன்வைத்து ஆராய்கிறது. நீரின் நீர்த்தன்மை என்பது அதை ருசிபார்க்கும் ஆத்மாவினால் உண்டுபண்ணப்படும் ஒரு பொய்த்தோற்றமல்ல. நீர் நீர்த்துளிகளால் ஆனது. ஆகச்சிறிய துளியை நாங்கள் அணு என்கிறோம். அதன் தனித்தன்மையே நீர்த்தன்மை என்பது. அது ஒரு திரவியம். பூமியின் அத்தனை பருப்பொருள்களும் அவற்றின் பரமாணுக்களினால் ஆனவையோகும். அணுக்களின் தன்மையே அவற்றின் தன்மை. பொருள்களை அவற்றின் பொதுத்தன்மை தற்காலிகமாக இணைக்கிறது. இணைவுத்தன்மை நிரந்தரமாக இணைக்கிறது. இணைவு, பிரிவு இவற்றின் மூலம் பிரபஞ்சம் உற்பத்தியாகிறது. உங்கள் கேள்விக்கு வைசேஷிக மரபின் பதில் இதுதான். ஒரு திரவியத்தை இன்னொரு திரவியம் ...more
59%
Flag icon
“தன்னைச் சத்தாக எண்ணுவதே அஞ்ஞானம் என்பது. தன் அகத்தை நோக்கி அவன் கண்கள் திரும்பட்டும். யோகம் மூலம் அவன் பிராணவடிவைக் காணலாம். மனனம் மூலம் கருத்துவடிவை அடையலாம். தியானம் மூலம் மனோவடிவை அறியலாம். மோனம் மூலம் சூனியவடிவை அடையலாம். முக்தி மூலம் சச்சிதானந்தரூபம் ஆகலாம். இதுவே இங்குள்ள மெய்மை வழி. இதை விடுத்து அன்னமய உலகின் விசித்திரங்களில் ஆழ்பவன் குழந்தை போல. உலகம் தீராத விளையாட்டுக் களஞ்சியம் அவனுக்கு”
60%
Flag icon
ஒன்றேயான அந்த சத் வடிவம் என்ன? எப்படி இருந்தது? எப்படி உள்ளது? எப்படி இருக்கும்? அது அங்கில்லை. அது இங்கும் இல்லை. அது எங்கும் இல்லை. அது எங்குமுள்ளது. அது மேல்கீழற்றது. உள்வெளி அற்றது. அது வடிவமற்றது. அனைத்து வடிவங்களுமானது. அது குணங்களற்றது. அனைத்து குணங்களுமானது. அது கர்மங்களற்றது. அத்தனை கர்மங்களுமானது. அது அத்தனை சொற்களுக்கும் அப்பாற்பட்டது. சான்றோர்களே, அதை நாம் நெருப்பென்போம்; அது நெருப்பு. நீரென்போம்; அது நீர். அது என்போம்; அது அது. இது என்போம்; அது இது. இங்கு நாம் அதை விஷ்ணு என்கிறோம்; அது விஷ்ணு.”
60%
Flag icon
உத்யோதகரனின் நியாய வர்த்திகம், வாஸஸ்பதி மித்ரனின் நியாயவர்த்தி தால்பரியடீகா, ஸ்ரீகண்டரின் நியாயாலங்காரம், ஜயந்தரின் நியாய மஞ்சரி.”
60%
Flag icon
ஞானமென்பதே முடிவற்ற பாடபேதங்களின் வரிசைதான். ஒவ்வொரு ஞான மார்க்கமும் அதை உள்ளூர அறிந்துமிருக்கிறது. ஆகவேதான் மேலும் மேலும் திருத்தமாகக் கூறவும் அழுத்திக் காட்டவும் தொடர்ந்து முயல்கிறார்கள். இதற்கு முடிவு என்பது இருக்க வாய்ப்பு இல்லை.”
60%
Flag icon
பிரதிக்ஞை, ஹேது, திருஷ்டாந்தம், உபநயம், நிகமனம் என்று ஐந்து படிகள் நியாய தருக்கத்திற்கு உண்டு என்கிறது அது. அந்தப் படிகளை தன் விவாதம்மூலம் ஏறிச் சென்றுதான் ஒருவன் இங்கு ஒரு கருத்தை நிலைநாட்ட முடியும். கவிதை ஒருபோதும் அதில் முதற்படியைக் கூட ஏறாது.”
61%
Flag icon
வேசாலியில் நடந்த மகாசம்மேளனத்தில் பௌத்த மெய்ஞானம் இரண்டாகப் பிரிந்து மெய்ப்பொருளை முழுமையாகவும், தெளிவாகவும் புரிந்துகொண்டவர்கள் தங்களை மகாசாங்கிகர் என்றனர். மாற்றமின்மை என்ற கருத்தில் உறுதியாக நின்று, மெய்ஞானப் பயணத்தை சடங்குகளாக மாற்ற முயன்றவர்கள் தங்களை ஸ்தவிரவாதிகள் என்றனர்.
61%
Flag icon
ததாகதர் அனைத்தும் அறிந்தவர். ஆனால் அன்றைய சீடர்களுக்கு அவர் சிலவற்றையே சொன்னார். கேட்கப்படாதது சொல்லப்படவில்லை. சொல்லப்படாதவற்றை இப்போது எங்கள் வினாக்கள் மூலம் முதன்மைப்படுத்துகிறோம். ததாகதர் சொன்னவற்றில் இருந்து சொல்லாதவற்றை உருவாக்க முயல்கிறோம். ஞானத்தின் பாதையே இதுதானே?
61%
Flag icon
ததாகதர் போதிசத்துவ நிலைக்கு மனிதனை உயர்த்தும் வழிமுறையாக பத்து பிரக்ஞா பாரமிதைகளை வகுத்தார். தானம், சீலம், ஆசையின்மை, ஞானம், வீரியம், பொறுமை, வாய்மை, கட்டுப்பாடு, அன்பு, துறவு என்பவற்றில் நெறிப்படுத்தப்பட்ட மனம் வீடுபேறடையும் என்பார். அதற்கான மார்க்கமாக அவர் தந்த அஷ்டாங்க மார்க்கம் உள்ளது. நற்காட்சி, நல்லெண்ணம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்முயற்சி, நற்பழக்கங்கள், நற்தியானம்.
61%
Flag icon
முதன்முதலாக ததாகதர் சம்மாதிட்டி என்கிறார். நற்காட்சி. பிரபஞ்சத்தை நன்கு பார் என்கிறார். மனம் அலைபாயும்போது பார்ப்பது பார்வையல்ல. நோயுற்றிருக்கும்போது பார்ப்பது பார்வையல்ல. ஆசையுடன் பார்ப்பதும் வியப்புடன் பார்ப்பதும் அச்சத்துடன் பார்ப்பதும் பார்வையல்ல. பார்வை என்று ததாகதர் கூறுவது தூய பார்வை. தூய உடலின்றி தூய பார்வையே சாத்தியமல்ல. தூய உடலே அனைத்திற்கும் தொடக்கம்.
61%
Flag icon
சிந்தனை சிதறும் தன்மை கொண்டிருக்குமெனில், அதை ஒருபோதும் குவிக்க முடியாது. குவியும் தன்மையை இயல்பாக அது அடையும்போது சிறதடிக்கவும் முடியாது. தியானம் என்பது இருபது விதமான சத்காய திருஷ்டிகளை நீக்கி மனம் முழுமையடைவது. பேதமை, செய்கை, உணர்ச்சி, அருவுருவம், வாசல் முதலிய சத்காய திருஷ்டிகள் அனைத்துமே நம் சிந்தனையை நம் இருப்பின் ஆதாரமாகக் காண்பதிலிருந்து உருவெடுப்பவை. அதை விலக்கி, வெறும் மனதை அடைந்து தூயஇருப்பு ஆவது எப்போது? காமசுகல்லானுயோகம் போகத்தை வலியுறுத்துவது. அத்தகிலமதானுயோகமோ மனதை மட்டும் அடிப்படையாகக் கொண்டது, உடலை மறுதலிப்பது. ததாகதர் இரண்டையும் இணைத்து மத்திம மார்க்கம் கண்டவர்.
62%
Flag icon
“அறிதல் என்பதற்கு முடிவேயில்லை. புலன்வழி அறியப்படும் பிரபஞ்சம் எல்லையற்றது.”
62%
Flag icon
“பிரபஞ்சம் எவராலும், எப்போதும் உற்பத்தி செய்யப்பட்டதல்ல. அனைத்துமே உள்ளன என்பது எங்கள் தரிசனம். இதை நாங்கள் சர்வாஸ்தி வாதம் என்கிறோம். “அனைத்துமே உள்ளன— ஆனால்” என்று சூத்திரமாகக் கூறுவோம். பிரபஞ்சம் அஜீவங்களும் ஜீவங்களும் அடங்கிய பேரிருப்பு. பொருட்தொகுதி மற்றும் இடம், காலம், சலனம், சலனமின்மை என்று ஐந்து வகை அஜீவங்கள் உள்ளன. ஜீவன், ஆத்மா என்பவை ஜீவங்கள். இவை ஒன்றோடொன்று பின்னியும் பிணைந்தும் உருவானதே இந்தப் பிரபஞ்சம் என்று ஜைன தரிசன மரபு ஊகிக்கிறது.”
62%
Flag icon
பிரபஞ்சத்தின் பொருட் தொகுதியிலிருந்தே அனைத்தும் உண்டாயின என்கிறீர்களா?”
62%
Flag icon
“ஆமாம். பிராணன், இந்திரியங்கள், ஆத்மா, உயிர் எனும் அனைத்துமே பொருளின் பரிணாமம் பெற்ற வடிவங்களேயாகும்.”
62%
Flag icon
“அப்பொருளின் அடிப்ப...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
62%
Flag icon
பிருத்வி, ஜலம், வாயு, அக்னி எனும் நான்கு பூதங்களினாலான அத்தனை பொருள்களும் அவற்றுக்குரிய அணுக்களால் ஆனவையே. பரமாணுக்கள் பரஸ்பரம் சேர்ந்தபடி உள்ளன. பிரிந்தபடியும் உள்ளன. அவை சேர்ந்து உருவாகும் ஸ்கந்தங்கள் மேலும் சில ஸ்கந்தங்களுடன் கூடி முயங்கி,...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
62%
Flag icon
“ஸ்யாத்வாதம் ஏழு நிலையில் தர்க்கத்தைக் கொண்டுசெல்கிறது
62%
Flag icon
உண்டு, இல்லை, உண்டு அல்லது இல்லை. சொல்ல முடியாது, உள்ளதும் சொல்ல முடியாததுமான நிலை, இல்லை சொல்லவும் முடியாது என்ற நிலை, உள்ளது அல்லது இல்லை ஆனால் சொல்ல முடியாது என்று ஏழு நிலைகள். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளியும், அண்டம் முதல் அணுவரை இந்த நிலைக்கு ஆட்பட்டுத்தான் ஆராயப்பட வேண்டும்.”
62%
Flag icon
ஓர் உயிரின் அல்லது பொருளின் தனித்தன்மை என்பது இன்னொரு பொருளின் மீது அது ஏற்படுத்தும் விளைவேயாகும். இதை நாங்கள் அனேகாந்த வாதம் என்கிறோம். அணுக்களுக்கும் ஆத்மாக்களும் தனிக்குணங்கள் உண்டு. ஆனால் அவை தங்கள் குணங்களுடன் மாற்றமின்றி பிணைக்கப்பட்டவை அல்ல.”
62%
Flag icon
ஒவ்வொரு பொருளும் ஒரே சமயம் நிரந்தரத் தன்மையும் மாற்றத்திற்குள்ளாகும் தன்மையும் கொண்டுள்ளது.”
62%
Flag icon
சுயமையப் பார்வையே அகங்காரம். அதிலிருந்து புத்தி மயக்கம். புத்தி மயக்கத்தில் இருந்து அறியாமை. அறியாமையிலிருந்து பாவம். பாவத்திலிருந்து துக்கம். துக்கத்திலிருந்து மீள எங்கள் அருகர்கள் தூய தரிசனம், தூய ஞானம், தூய வாழ்வு என்று மூன்று அடிப்படைகளை வகுத்தளித்தனர். அகங்காரத்தைக் கொன்றாலொழிய தூய பார்வை இல்லை. அகங்காரத்தைக் கொல்ல புலன்களை முழுமையாக நம்பி ஏற்பதை நிறுத்தவேண்டும். புலன்கள் நாம் பூமியில் வாழ்வதற்காக நமக்குத் தரப்பட்டவை. மெய்ஞான மார்க்கத்திற்கு அவை வழிகாட்டாது. தடைகளுமாகும். ஐந்து மகாவிரதங்கள் மூலம் ஆத்மாவையே புலன் ஆக்கலாம். அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், அபரிகிரகம், பிரம்மசரியம் என்பவை ...more
62%
Flag icon
“பிரபஞ்சம் என்றும் இருப்பது. அதற்குக் காரணம் இல்லை. எதற்கும் அது காரியமும் அல்ல.”