விஷ்ணுபுரம் [Vishnupuram]
Rate it:
67%
Flag icon
பார்த்திவம் குண்டலினியை விட்டு எழும் கணம் ஞானமும் கர்வமும் சிதறுகின்றன. மனோமண்டலம் சிதறி அலைகிறது. காற்றில் சருகுகள் போல, எண்ணங்கள் பறந்து சுழல்கின்றன. மரணம் நெருங்க நெருங்க சகல பிரமைகளும் உதிர்கின்றன. சகல மாயைகளும் விலகுகின்றன. ஞானியும் பேதையும் பாவியும் புனிதனும் அப்போது ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள். குழந்தை நிலை அது. எந்தப் பைத்தியமும் பைத்தியமாக மரணமடைவதில்லை. எந்த நோயாளியும் நோய்நிலையில் சாவதில்லை. மரணம் இரண்டாவது பிறப்பு.
67%
Flag icon
“மரணம் நிகழ்வதெப்படி என்பதை ஆயுர்வேதம் விளக்குகிறது. ஜீவன் சூட்சுமவடிவமாக இதயத்தில் இருந்து பிரம்மதுளைக்கு வந்து சற்று தயங்கி, அன்னமய கோசத்தில் துடிக்கிறது. பிறகு விடைபெற்று காற்றில் எழுகிறது. சில கணங்கள் பிராணமய உலகில் தங்குகிறது. அங்கிருந்து ஸுவர்லோகத்திற்குப் பயணமாகிறது. அன்னமய கோசத்தில் பிராணன் கடைசியாகத் தங்கிநிற்கும் கணங்களில் எட்டுவிதமான லட்சணங்கள் ஏற்படுகின்றன. ஐந்துவகை சுவாசங்கள் பிரிகின்றன. மூன்றுவகை நாடிகள் மாறிமாறித் துடிக்கின்றன. பின்பு அனைத்தும் அடங்கிவிடுகின்றன.
67%
Flag icon
“பௌத்த மெய்ப்பொருள் பிரபஞ்சக் காட்சியை விளக்க முனையும்போது, பிரத்யட்ச உலகத்தை ஆய்வுசெய்து, அதன் அடிப்படைத் தன்மைகளாக சில பிரமாணங்களை முன்வைக்கிறது. பிரதீத சமுத்பாதம் முதல் பிரமாணம். எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது. ஒன்று அழிந்து இன்னொன்று, அது அழிந்து இன்னொன்று. முடிவற்ற மாற்றத்தின் அகண்ட பிரவாகமே இப்பிரபஞ்சம். அதையே யோகாசாரம் தனது ஆதாரமாகக் கொள்கிறது”
67%
Flag icon
“எதுவுமே நிலையாக இல்லை. காரணம் எதுவுமே நிறைநிலையில் இல்லை. ஆகவே எதற்கும் சாரம் இல்லை. நாம் பார்ப்பது பொருள்களையல்ல. அவற்றின் குணகரும சமான விசேஷ பரியாய இயல்புகளை மட்டுமேயாகும். எனவே நாம் பார்க்கிறோம் என்பதும் உணர்கிறோம் என்பதும் பொருளின் இருப்புக்குச் சான்றாக ஆவதில்லை.”
67%
Flag icon
“இரண்டு வஸ்துக்களோ, இருப்புகளோ ஒன்றை ஒன்று முற்றிலும் சார்ந்துள்ளன என்றால் அவற்றில் ஒன்று பொருண்மையற்றது அல்லது இல்லாதது என்று நிறுவினால் போதும்; இன்னொன்றும் இல்லாததேயாகும். எதுவுமே நிறைநிலையில் இல்லை என்கிறார் புத்தர். ஒரு பொருள் என்று நாம் கூறுவது அது நிறைநிலையில் நிற்கும் தருணத்தையே. சூரிய ஒளியை நாம் பொருள் என்பதில்லை. அது நிறைநிலையில் நில்லாததை நாம் ஊன விழிகளினால் காண்பதனால்தான் அதை அப்படிக் கூறுகிறோம். ஆனால் சூரிய ஒளிக்கும் பிற பொருள் தோற்றங்களுக்கும் உண்மையில் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை என்பதே பிரதீத சமுத்பாதம் மூலம் நிறுவப்படும் உண்மை. மூன்று பிரமாணங்களும்; நிலையின்மை, நிறைவின்மை, ...more
68%
Flag icon
மனம். இங்குள்ள அனைத்து மனங்களும் இணைந்த ஒட்டுமொத்த மனமே பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. அதையே ஆலயவிஞ்ஞானம் என்று வசுபந்து நிலைநாட்டுகிறார். ஆலயவிஞ்ஞானம் அலைகடல். அதன் ஒளிநிழலே பிரபஞ்ச நிகழ்வு.” அஜிதன் கூறினான்.
68%
Flag icon
ஆலயவிஞ்ஞானம் ஒரு நதி. மனிதப் புலன்கள் அதில் மிதக்கும் ஒரு மீன் போல. நதிக்கரைச் சுவர் ஒன்றில் நீரின் அலை பிரதிபலிக்கிறது. அந்தச் சுவர்தான் நமது மனோவிஞ்ஞானம். நதிமீன் நதியை அறியாது. ஏனெனில் அது நதிக்குள் உள்ளது. அது நதியன்றி வேறின்றி இருக்கிறது. சுவரின் பிம்பச்சலனம்கண்டு அது அங்கு ஒருநதி ஓடுவதாக பிழையாக எண்ணுகிறது. இதுவே பிரபஞ்ச மாயை. ஆலயவிஞ்ஞானமும் அதன் ஒரு பகுதியான மனோவிஞ்ஞானமும் அதன் உபகருவிகளான ஐம்புலன்களும் தவிர நமது காட்சிப் பிரபஞ்சத்தில் வேறு எதுவும் இல்லை.”
68%
Flag icon
“மனோவிஞ்ஞானம் மகத்தான ஆலயவிஞ்ஞானத்தில் ஒரு துளியாகும். ஆலயவிஞ்ஞானம் கடல். துளிகளைப் பார்த்தால் கடல் இல்லை, கடலைப் பார்த்தால் துளி இல்லை. ஆலயவிஞ்ஞானம் கோடானுகோடி மனோவிஞ்ஞானங்கள் வழியாகத் தன் சலனத்தை நிகழ்த்துகிறது எனலாம். அல்லது கோடானுகோடி மனோவிஞ்ஞானங்களின் தொகுப்பே ஆலயவிஞ்ஞானம்.”
68%
Flag icon
“யோகாசாரத்தின் ஆலயவிஞ்ஞானத்திற்கும் சாங்கிய மரபின் புருஷத்துவத்திற்கும் என்ன வித்தியாசம்?”
68%
Flag icon
“புருஷ தத்துவம் என்பது தூலமான, ஏகமான தன்னிலையாகிய ஒரு பேரிருப்பைப் பற்றிப் பேசும் ஒரு சிந்தனைமுறை. அந்த ஏகஇருப்பின் உட்கூறுகளே மானுட சேதனைகள் என்கிறது அது. சாங்கியம் பௌதிகப் பிரபஞ்சமெனும் பன்மைக்கு ஆதாரமாக மூலப்பிரகிருதி என்ற ஒருமையைக் கற்பனைசெய்தது. அதன் எதிர்வினையாகவே அது மானுட மனங்கள் என்ற பன்மையின் ஆதாரமாக புருஷன் என்ற ஒருமையையும் கற்பனைசெய்தது. ஆலயவிஞ்ஞானம் என்பது ஓர் இருப்பல்ல. அது ஓர் ஒழுங்கமைவு. அதன் நியதியையே பௌத்தம் மகாதர்மம் என்கிறது.”
68%
Flag icon
“யோகாசாரம் புத்தரின் மூன்று உருவங்களை வகுக்கிறது. நிர்மாண காயம் என்ற உலகியல் தோற்றமே நீங்கள் குறிப்பிடும் புத்தவடிவம். சாமானிய தளத்தில் புழங்கும் மனம் இங்கு வாழ்ந்து ஞானத்தை உபதேசித்து மறைந்த ததாகதரை நினைவுகூறும் பொருட்டு அதை வணங்குவது நியாயமேயாகும். ஹீனயானிகள் அதைத் தியானத்தின் வெளிவடிவமாக வணங்குகிறார்கள். சம்போக காயம் என்ற பேரின்ப மனோமய உடலை வைபாஷிகர்கள் வணங்குகிறார்கள். புத்தர் பற்றிய கதைகளாகவும் நினைவுகளாகவும் எஞ்சுவது இந்த உடலே. முதல் உடல் மண்ணில் அழிந்தது. இரண்டாவது உடலைக் காலம் அழிக்கும். பின்பு எஞ்சுவது என்றும் இருக்கும் அவருடைய தர்மகாயம். அதைப் பேரண்டத் தோற்றம் என்றே நாங்கள் ...more
68%
Flag icon
“தண்ணீரே உள்ளது. தான் அதில் ஓர் உறுப்பே என மீன் அறியுமெனில், அதன் இருப்புத்துயர் மறைகிறது. தர்மமே ஒரே இருப்பு, அனைத்தும் அதன் தோற்றங்களே என்று அறிந்தவன் தானும் தர்மகாயம் அடைகிறான். அதுவே புத்தநிலை. அதை நாங்கள் மஞ்சுஸ்ரீ என்று கூறுகிறோம். புத்தருக்கு முன்னும் பின்னும் அனேக மஞ்சுஸ்ரீக்கள் உள்ளனர்; என்றும் இருப்பார்கள்.”
68%
Flag icon
தர்மவடிவை உணர்ந்தபிறகும், சவிகல்ப நிலையில் தங்கும் ஞானிகளை நாங்கள் பிரத்யேக புத்தர் என்கிறோம். மகாநிர்வாணத்தின் விளிம்பில் நிற்பவர்கள் அவர்கள். இவர்களை நாங்கள் அசேக்கோ என்கிறோம். அதற்குக் குறைந்த நிலை, சேக்கோ. அதற்கும் கீழே அர்ஹதர்கள்.
68%
Flag icon
பயனற்ற ஞானவழி ஏதும் இல்லை. எனவே எந்த ஒரு தரிசனமும் அழிவதில்லை. எனவே எந்த ஞானத்தையாவது ஒருவன் வெறுத்தானென்றால், இழித்துரைத்தானென்றால், அவனுடைய அகத்தில் ஒளி குடியேற முடியாது. இங்கு நடந்த அத்தனை சுபக்க பரபக்கப் பிரிவினைகளும் ஒரு கையின் விரல்கள் பரஸ்பரம் வருடி அறிவது போன்றதாகும்.
69%
Flag icon
பௌத்தம் பிரத்யட்சம், அனுமானம் இரண்டை மட்டுமே பிரமாணமாகக் கொள்கிறது அன்றாட அறிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றை அறிவதற்கான ஆதாரமே பிரமாணமாகும். திக்நாத மகாபாதரின் பிரமாண சமுச்சயம் இதை விரிவாக இவ்வாறு விளக்குகிறது. நேரிடையாகப் பெறும் அறிவான பிரத்யட்ச ஞானம் நான்குவகை. புலன் ஞானம், மனோ ஞானம், தன்னுணர்வு ஞானம், யோக ஞானம். அனுமானப் பிரமாணமோ தன்னல அனுமானம், பொதுநல அனுமானம் என்று இரண்டு வகை. பௌத்தம் ஒருபோதும் மூலநூல்களை ஏற்பதில்லை.
69%
Flag icon
வேதம் என்ன கூறுகிறது? நம்பச் சொல்லவில்லை; தேடச் சொல்கிறது. ஆராயச் சொல்கிறது. விவாதிக்கச் சொல்கிறது. அவற்றை யாகவிதிகளாக மாற்றவிரும்பும் வைதீகர்களே சுருதிவாதத்தை உண்டுபண்ணினார்கள். வேதம் ஞானமெனில் அந்த ஞானம் விவாதத்துக்குரியதேயாகும். ஞானமல்லவெனில் அதனால் பயில்பவர்களுக்குப் பயன் ஏதும் இல்லை. கற்பவன் கடந்து செல்லமுடியாத நூல் ஏதும் இல்லை.”
69%
Flag icon
“இருப்பது எல்லாமே பிறந்திருக்க வேண்டும். நிகழ்வது எல்லாமே தொடங்கியிருக்க வேண்டும். எல்லாமே முடியவும் வேண்டும்.”
69%
Flag icon
“எல்லாத் தத்துவங்களும் மானுட ஞானத்தின் விளிம்பில் நின்றபடி, அப்பால் கால்பதிக்கத் தவிக்கின்றன
69%
Flag icon
அறிய முடியாதவற்றை அறிந்தவற்றின் சாயலில் உருவகித்துக் கொள்வது மிக எளிய ஒரு வழி. அதையே பெரும்பாலான சிந்தனைமுறைகள் செய்கின்றன.
69%
Flag icon
ஞானத்தைக் கரைத்தழிக்கும் பெருவெளிமுன் கற்பனைகளின் கவசமின்றி அது நிற்கிறது. பிரத்யட்சத்திலிருந்து அனுமானத்திற்கும், அங்கிருந்து அறியமுடியாமைக்கும் ஒரு கோடு நீண்டு செல்வதை அது காண்கிறது. அந்தக் கோடு மகாநியதியின் கோடு. அதையே யோகாசாரம் தனது தத்துவமென முன்வைக்கிறது.”
69%
Flag icon
அறிந்தவற்றிலிருந்து அறிய முடியாதவற்றுக்குச் செல்லவே முயல்கிறோம். அறியாதவற்றிலிருந்து அறிய முடியாதவற்றுக்குப் போவது எங்ஙனம்?”
69%
Flag icon
“அழிவற்ற ஆதிகாரணம் என்ற கருத்து எங்கிருந்து வருகிறது?”
69%
Flag icon
“அழிவற்ற ஆத்மா என்ற கருத்தின் விரிவாக்கமே அது. ஆத்மா அழிவற்றது என்று கூற எந்த ஆதாரமும் இல்லை. ஆத்மாவின் அழிவை ஏற்றுக்கொண்டால் மனிதவாழ்வு மரணத்துடன் முடிந்துவிடக் கூடியதாகி விடும். அப்போது மனிதன் இந்தப் பூமியில் சேர்த்துவைத்துள்ள அனைத்தும் பயனற்றதாகி விடும். கல்வியும் செல்வமும் கீர்த்தியும் அர்த்தமற்ற மாயையாகிவிடும். அவற்றை இழக்க மனமில்லாத லௌகீகவாதிகள் அவை முடிவின்றி தங்களைத் தொடர்ந்து வருமென்று எண்ண விரும்பினார்கள். எனவே உடல் அழிந்தாலும், அழியாது வாழும் மானுட சாரம் ஒன்றைக் கற்பனைசெய்தார்கள். அந்தச் சாரத்தை பிரபஞ்சத்தை நிர்ணயிக்கும் முழுமுதல் சாராம்சத்தின் துளியாக உருவகம் செய்தார்கள். உலக ...more
69%
Flag icon
“அப்படியானால் இறக்கும் உடலிலிருந்து உயிர் ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
69%
Flag icon
“சைவ ஞானியே, விறகில் நெருப்பு எரிகிறது. விறகில்லையேல் நெருப்பு இல்லை. விறகு எரிந்து முடிந்துவிட்டால் நெருப்பு முற்றிலும் அணைந்துவிடுகிறது. எவராவது, விறகில் எரிந்த நெருப்பு விலகிச் சென்றுவிட...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
69%
Flag icon
விறகையும் நெருப்பையும் நமது அன்றாடப் பார்வையிலேயே இருதனித்த இருப்பாகப் பார்க்கிறோம். விறகு கணம்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது. நெருப்பும் கணம்தோறும் மாறிக்கொண்டிருக்கிறது. நாம் பார்ப்பது எரிதலையேதான். எரிதலின் தர்மமே எரிதல் என்பது. காண்பதெல்லாம் தர்மமே. மகாதர்மமன்றி எதுவும் எங்கும் இல்லை. பார்ப்பதும் பார்க்கப்படுவதும் அதுவே.
71%
Flag icon
பாஷையின் பிறப்பு பற்றி சந்தஸ் சாஸ்திர ஞானிகள் விரிவாக ஆய்வுசெய்துள்ளார்கள்
71%
Flag icon
ஆகாயத்தின் இயல்பு ஒலி. ஆகாயம் பிற நான்கு பூதங்களிலும் சூட்சுமமாகக் கலந்துள்ளது. விளைவாக பல்வேறு ஒலிகள் எழுகின்றன. நீர் சொட்டும் ஒலி, அருவி ஒலி, அலையோசை, மண் சரியும் ஓசை, பூகம்ப ஒலி, தீ எரியும் ஒலி, வாயு பீரிடும் ஒலி என்று பல கோடி ஒலிகள் ஜடப்பிரபஞ்சத்தில் எழுகின்றன. ஒவ்வொரு சப்தமும் ஒரு பொருளின் குணமாக ஆகிறது. சிலவற்றின் ஒலியை நாம் கேட்கிறோம். அப்பொருளுக்கு அவ்வொலியைத் தருகிறோம். அது அப்பொருளின் பெயராயிற்று. இதுவே ஆதிமொழி.
71%
Flag icon
பெயர். வேத கர்மங்களுக்குரிய மொழி வைதிகம். தியானத்தற்குரிய தூய மொழி த்வனி. இம்மூன்றிலிருந்து ஏழு வேறு பிரிவுகள், சம்ரதீகம், சாக்ஷிகி, சம்வர்த்திகம், பரா, பஸ்யந்தி, மத்யமம், வைகரி என ஏழு. முதல் மூன்றும் த்வனியில் அடங்கியவை. முக்திநிலையை நெருங்கும் மனதிலும் உயர்ந்த தியான நிலையிலும் மட்டும் கூடுபவை. மனிதப் பிரக்ஞை ஏழு நிலைகளில் உள்ளது. சூனியாதீதம், சூன்யம், நிர்வாணம், துரியம், சுஷûப்தி, ஸ்வப்னம், ஜாகரம் எனும் ஏழு நிலைகள். தூய சங்கீத வடிவில் தேவருலகில் உள்ள வார்த்தை, தியானம் முதிர்ந்த ஞானியின் சூனிய நிலை மனதில் சம்ரதீகமாக இறங்கி வருகிறது. மெல்லப் படியிறங்கி, கடைசியில் விழிப்புநிலை மனமான ஜாகரத்தில் ...more
71%
Flag icon
“வார்த்தையின் பிறப்பும் மானுடன் பிறப்பும் ஒன்றுதான். உண்மையில் அருவம் உருவமாக மாறும் ஏழு படிகள்தாம் இவை. வைகரிமொழி ஜாகரத்துடனும் அன்னமய உலகுடனும் தொடர்புள்ளது. அதுவே மனிதனின் இயல்பான நிலை. மத்யமமொழி பிராணமய கோசத்துடனும் ஸ்வப்ன நிலையுடனும் தொடர்புடையது. பஸ்யந்திமொழி சுஷûப்தி எனும் ஆழ்மனதின் மொழி, மனோமய கோசத்தின் உலகைச் சார்ந்தது. பராமொழி சுத்த மனோமய கோசத்தில் துரியநிலையில் செயல்படுகிறது. சம்வர்த்திகம் நிர்வாண நிலையை அடைந்த ஞானியின் மனதில் உள்ள மொழி. அவர் சூனியமய கோசத்தில் வாழ்கிறார். சாக்ஷிகி ஆனந்தமய உலகில் பரநிர்வாண நிலையில் உள்ள ஜீவன் முக்தனின் அந்தரங்க பாஷை. சம்ப்ரதீகம் தேவருலகில் உள்ளது. ...more
71%
Flag icon
ஆதிநாரத ஸ்மிருதி சூத்திரனுக்கும் யக்ஞோபவீத உரிமையையும், வேதபாராயண உரிமையையும் வழங்கியுள்ளது. ஒருவன் இன்னொரு வர்ணத்துக்குத் தன்னை மாற்றிக்கொள்ளக் கூட அது உரிமை அளிக்கிறது.”
72%
Flag icon
“மகாதர்மம் முடிவற்றது. அதிலிருந்து ஆலயவிஞ்ஞானம் எழுந்தது. ஆலயவிஞ்ஞானத்திலிருந்து மனோவிஞ்ஞானமும், அதிலிருந்து புலன்களும் உருவாயின. புலன்கள் குணகருமவிசேஷசமானசமவாயத் தன்மைகளை உருவாக்கின. அத்தன்மைகள் பொருள் எனும் நிகழ்விற்குக் காரணமாயின. மனோவிஞ்ஞானத்தில் குவியும் அனுபவங்களிலிருந்து காலமெனும் தோற்றம் உருவாயிற்று. நமது விவாதங்கள் அனைத்தும் மனோவிஞ்ஞானத்தில் நிகழும் சலனங்கள் மட்டுமேயாகும். மனோவிஞ்ஞானத்தை உள்ளடக்கிய ஆலயவிஞ்ஞானம் ஓர் அதீத நிலையில் அது கொள்ளும் அனுமானம். மகத்தான ஆதிதருமமோ அனைத்து செயல்பாடுகளிலிருந்தும் நாம் அடையும் இறுதி அனுமானம் மட்டுமே.”
72%
Flag icon
அறியமுடியாதென்பதை அறிவதே ஆகப் பெரிய மானுட ஞானம்.”
73%
Flag icon
வண்டு ஒருகணத்தில் தன்னை இயக்கும் வட்டப்பாதையை உணர்ந்தது. வட்டமென்பது ஒரு நியதி என்று அறிந்தது. தன் மையமின்மையை உணர்ந்தது; அதுவே ஆதிபௌத்த மெய்ஞானம். அந்த வட்டத்தை அனைத்தையும் இயக்கும் மகாநியதியாகக் கண்டது; அதுவே காலமும் வெளியும் சுழலக் காரணம்; அதில் தானும் ஒரு புள்ளி என்று அறிந்தது. அதுவே வைபாஷிக மெய்ஞானம். தூரமென்பதும் காலமென்பதும் வட்டமென்பதும் மையமென்பதும் பிரமையே என்று உணர்ந்தது; அதுவே மாத்யமிக சூனியவாதம். வட்டப்பிரமையையும் வண்டு எனும் பிரமையையும், மையப்பிரமையையும் உருவாக்கும் ஞானாதீதத்தின் இருப்பை ஊகித்தது; அதுவே யோகாசாரம்.
75%
Flag icon
இது ஏன் அது அல்ல? அது ஏன் இவை அல்ல? இவை ஏன் அவை அல்ல? இதன் பெயர் ஏன் அதில் ஒட்டுவதில்லை? பெயரின் எல்லைகள் என்ன? அவ்வெல்லைகளை ஆக்கும் நிர்ணயங்கள் என்ன? அந்நிர்ணயங்களை வகுக்கம் மையம் என்ன? அம்மையம் ஊன்றிநிற்கும் தருணம் என்ன? அத்தருணம் பொருந்திய காலம் என்ன? காலம் என்பது என்ன?
75%
Flag icon
காலத்தில் கட்டப்பட்டவைதாமா இவை? காலம் இவற்றால் கட்டப்பட்டதா? காலத்தில் இவை மிதக்கின்றனவா? காலத்தை இவை சுமக்கின்றனவா? காலமே அறிதலா? அறிதலின்மையே அகாலமா? அறிதலினூடாக காலமாவது அகாலமா? அறியாமையினூடாக காலம் அகாலமாகுமா? அறிந்தவை, அறிபவை, அறியப்படப்போகிறவை என்று காலம் மூன்று எனில் அறியப்படாதவையும் அறியமுடியாதவையும் எந்தக் காலம்? அறிதல் ஒடுங்க காலம் ஒடுங்குமா?
75%
Flag icon
அறிதல் என்பது,என்ன? அறிவது எதை? அறியப்படுவதே அறிவாகிறதா? அறியப்படாமைக்கும் அறிவுக்கும் என்ன உறவு? அறிதலுக்கும் அப்பால் உள்ளது அறியாமையா? அறியப்படாத அறிவா? அறிவுக்குள் அறியாமை ஒடுங்குகிறதா? அறியாமைக்குள் அறிவு வளர்கிற...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
75%
Flag icon
அந்தப் புள்ளி அறிவுக்கும் அறியாமைக்கும் நடுவே ஏன் நகர்ந்துகொண்டிருக்கிறது? அறியாமை ஏன் முடிவின்றி அறிவுக்குள் பெய்கிறது அதனூடாக? என் அறிவு என்னும்போது எதை நான் என்கிறேன்? என் புலன்களுக்கும் மொழிக்கும் அப்பால் எனக்கென எஞ்சுவது என்ன? ஏன் இடைவிடாது என்னை நினைக்கிறேன்? ஏன் அனைத்தையும் என்னுள் இழுக்கிறேன்? ஏன் அனைத்தின்மீதும் என்னை நிரப்புகிறேன்? ஏன் சலிக்காமல் என்னை நிகழ்த்திக்...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
75%
Flag icon
என்னை நான் எப்படி அறிகிறேன்? என்னை அறியும் அதை எப்படி நான் அறிகிறேன்? எதனுடன் என்னை முடிவின்றி ஒப்பிடுகிறேன்? என்னை எது முடிவின்றி வகுக்கிறது? நான் அறியாதபோது அது என்னை அறிகிறதா? என்னை அறியாதபோது நான் அதை அறியமுடியுமா? நான் அதுவாக ஆனால் அது எங்கு போகும்? அதுவாக நான் ஆனபிறகு நான் என்ன ஆவேன்? என்னுடையவ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
76%
Flag icon
‘காண்பதும், நூல்களிலிருந்து புரிந்துகொள்ளப்படுவதும் ஆன விஷயங்களில் விருப்பமற்றுப்போகும் வசீகரம் என்ற மேன்மையான போதமே வைராக்யம் என்பது’ பதஞ்சலி யோகசூத்திரம்.
76%
Flag icon
செய்யவேண்டியது ஒன்றுதான், எண்ணங்களை அப்படியே விட்டுவிடுவது. அவற்றைப் பின்தொடரும் பிரக்ஞையையும் விட்டுவிடுவது. முழு முற்றான சுதந்திரம் அவற்றுக்குக் கிடைக்கும்போது இயல்பான சலனம் அவற்றுக்குச் சாத்தியமாகிறது. அப்போது அவை தங்கள் முழுமையை அடைகின்றன. அந்நிலையில் அந்தத் தருணம் நிகழக்கூடும்.
76%
Flag icon
காலம் என்பது என்ன? ஒரு நீட்சியா? வட்டமா? பிரம்மாண்டமான சக்கரம் ஒன்று சுழல்கிறது. அதன் ஒவ்வொரு புள்ளியும் முடிவற்ற பயணத்தில் உள்ளது. மையப்புள்ளி தவிர. அது காலச்சக்கரம். சக்திசக்கரம். அனாதியான பிரபஞ்சச் சக்கரம். அந்த மையம், அங்கு அனாதியான காலம் உள்ளது. ஆனந்தமான காலம் உள்ளது. ஆகவே, அது அகாலம்.
79%
Flag icon
மானுடர்களுக்கு முதுமை என்பது இருட்டு. ஒவ்வொரு விளக்காக அணைகின்றன. கடைசி விளக்கும் அணையப் போகும்போது அவன் அஞ்சுகிறான். அறியாத எதையோ இருளுக்குள் தேடி மன்றாடுகிறான். வெளிச்சம் வெளிச்சம் என்று கூவியபடி இருட்டின் ஆழத்திற்குள் விழுகிறான். பரிதாபத்திற்குரிய ஜீவன், சபிக்கப்பட்ட ஜீவன்.”
85%
Flag icon
ஒரு கவிஞன் தன் உச்சநிலையில் நின்று எழுதி முடிப்பது பெரும் காவியமாகாது. அதை அவன் வாழ்நாள் முழுக்க எழுதவேண்டும். கனவு நிரம்பிய இளம்பருவத்திலும், லௌகீக மனம் முற்றிய நடுவயதிலும், ஞானம் கனிந்த முதிய வயதிலும் எழுத வேண்டும்.”
86%
Flag icon
பற்றும் செயல்வேகமும் இருக்கும் நிலையில் ரஜோ குணம் உள்ளது. அதுவே கர்மத்தின் அடிப்படை. அதில் பற்று மறைந்து, செயல் வேகம் மட்டும் மிஞ்சுகையில் சத்வ குணம் உருவாகிறது. இது ஞானத்தின் அடிப்படை. செயல் வேகமும் மறைந்து விடும்போது சூனிய நிலை உருவாகிறது. இது தமோ குணம் மிகுந்த நிலை. இதுவே முக்திக்கு அடிப்படை.
88%
Flag icon
ஞானம் சூட்சும வடிவமானது. விளக்கங்களின்றி எளிய மனத்திற்கு அது எட்டாது. ஆகையால் மனு வேதங்களைத் தர்மத்தின் அடிப்படையிலும், பிரஹஸ்பதி பொருளின் அடிப்படையிலும், நந்தி காமத்தின் அடிப்படையிலும், பாதராயணர் மோட்சத்தின் அடிப்படையிலும், ஜைமினி சொர்க்கத்தின் அடிப்படையிலும், தன்வந்திரி சிகிச்சையின் அடிப்படையிலும் விளக்கினார். இவற்றில் ஜைமினியின் விளக்கமே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை. பிரம்மத்தை ஷட்வேதாங்க அடிப்படையில் அறியவேண்டும் என்று முன்னோர் வகுத்தனர். அந்த ஆறு வேதாங்கங்கள் என்ன? சிக்ஷா, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தஸ், ஜோதிஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் உண்டு அதற்குள்ள வேதம். ...more
88%
Flag icon
“சோதிடம் பிரம்மாண்டத்தின் சூட்சுமத்தை ஒவ்வொரு பரமாணுவிலும் காண்கிறது. பிரம்மாண்டத்தை இயக்கும் கிரகங்களே பரமாணுவையும் இயக்குகின்றன” என்றார்.
88%
Flag icon
“சோதிடம் மூன்று வகை. ஃபலிதம், கணிதம், பிரவர்த்திதம். ஆதிமகாநூல் சூர்யமகரிஷியின் பிரஹதாங்கப் ப்ரதீபம். ஓர் இலட்சம் சுலோகங்கள் அதற்கு.”
88%
Flag icon
“ஞானம் தேடும் பயணத்தின் படிகள் அனைவருக்கும் ஒன்றுபோலத்தான். முதலில் இளமையின் குதூகலங்கள். பிறகு வாழ்வின் அடிப்படைகளைத் தரிசித்தல். மரம்கொத்தி போல ஓயாது கொத்திப்பிளக்கும் கேள்விகள். இது முதல்நிலை.”
88%
Flag icon
“அடுத்தது கல்வி. எந்தப் பிரிவாக இருப்பினும் தத்துவக் கல்வி முதலில் தன்னம்பிக்கையையும் சுயதிருப்தியையும் தருகிறது. எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிவிட முடியும் என்று படுகிறது. ஆகவே, எல்லாவற்றிற்கும் பதில் இருக்கும் என்று நம்புகிறோம். தருக்கம் என்பது ஓர் அறிதல்முறை என்று எண்ணும் நிலைஅது.”