Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following S.L. Bhyrappa.

S.L. Bhyrappa S.L. Bhyrappa > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 31-36 of 36
“சென்னிகராயருடைய வாய் நிரம்ப புகையிலைச்சாறு இருந்ததால் அவர் வலியப் பேச்சை ஆரம்பிக்க முடியவில்லை.”
S.L. Bhyrappa, ಗೃಹಭಂಗ [Grihabhanga]
“முழு உலகமே வெந்துபோவது போலான வெப்பத்தில் ராஜா காத்தியாயினி இருவரும் புழுக்கத்தில் துவண்டு கொண்டிருந்தார்கள். இப்போது மழை வர வேண்டும். இல்லை என்றால் இந்த உளைச்சல் நிற்காது. காத்தியாயினி ஊமை போல உட்கார்ந்திருந்தாள். ராஜா சன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். மேகம் நிலையில்லாமல் அலைந்து கொண்டிருந்தது, அப்படியே மேகத்தின் அடர்த்தி அதிகரித்து ஒரு முறை மின்னியது போல இருந்தது. தனக்கே உரிய மின்னல் மாயத்தில் பூமியின் அழகான வடிவமும் தண்ணீரின் தாகமும் மேகத்திற்குப் புரிந்திருக்க வேண்டும். மேகம் முழுமையாக பூமி மீது விழுந்தது போல இருந்தது. தண்ணீரின் அபரிமிதமான ஆற்றலால் முடிவில் மேகம் தன் செயல் திறனுடன் பூமியைத்தழுவியதும், இறுக்கம் தளர்ந்தது. மழை இடி, பேரொலிகளின் ஆர்ப்பரிப்புகள் இல்லாமல், மின்னல் அட்டகாசம் இல்லாமல், மேகத்தின் முடிவைச் சுமந்துகொண்டு போகும் சூறாவளிக் காற்றின் தாக்கம் இல்லாமல் மழை தானாகவே பொழிய ஆரம்பித்தது.

மழை நிற்கும் நேரம் மதியமாகி இருந்தது. ராஜா, காத்தியாயினி மதிய உணவு அருந்தும் போது வெப்பம் தணிந்து, மனதை இதமாகச் செய்யும் குளிர்ச்சி பரவி இருந்தது. தொலைவில் வீசத் தொடங்கிய காற்று மழையில் நனைந்த மண்ணின் மணத்தை ஏந்தி வந்தது. உணவருந்தும் போது அவர்கள் இருவருக்கும் பேச்சுத் தேவை இல்லாத இதமான சூழ்நிலை இருந்தது. பூமியின் பசுமைக்குப் பொலிவு கூடியது. அவர்கள் சாப்பிட்டு முடித்தார்கள்.

அதற்குள் மீண்டும் மேகங்கள் ஒன்றுசேர்ந்தன. ஆனால் இப்போது கூடும் மேகம் புதிதல்ல. முதலில் விழுந்து மீதமிருப்பதே புதிதாகத் திண்மமானது. இப்போது முன்பு இருந்தது போல தாங்க முடியாத வெப்பமல்ல. மழையும் அமைதியாகப் பொழியத் தொடங்கியது. 'சோ' என்று விடாமல் வெறி வேகமில்லாமல் அமைதியாகப் பொழிந்துகொண்டிருந்த மழையை பூமியும் அமைதியாக வரவேற்றது. வானில் கருந்திரைகள் இருக்கவில்லை. மழையைப் பருகித் தணிந்திருந்த பூமியின் முகம் புன்னகைத்தது. மீண்டும் வெயில் தெரிந்தது. மேகம் மறைந்திருந்தது.”
S.L. Bhyrappa, Vamshavriksha
“என்னோட அப்பாதானே அது?" என்று விசுவன் கேட்டான். சென்னிகராயருக்கு மகனுடைய அடையாளம் தெரிந்துவிட்டது. பேச வேண்டுமென்று அவருடைய வாய் துடித்தது. ஆனால் அப்பொழுதுதான் சாறு ஊறிக் கொண்டிருந்த புகையிலையைத் துப்பி விட்டால், வேறு புகையிலை அவரிடம் சிறிது துண்டு கூட இருக்கவில்லை. என்ன செய்வது என்று அவர் தீர்மானிப்பதற்குள் அவர்கள் முப்பது நாப்பது தப்படிகள் சென்றுவிட்டனர்.”
S.L. Bhyrappa, ಗೃಹಭಂಗ [Grihabhanga]
“பண்டிதர் செல்லாக் காசைக் கழுவி கோவில் உண்டியலில் போடுபவர் என்று எல்லோருக்கும் தெரியும்.”
S.L. Bhyrappa, Vamshavriksha
“சென்னிகராயரால் வாயில் உள்ள சாற்றைத் துப்பமுடியவில்லை. ஆகையால் அவரால் பேச முடியவில்லை.”
S.L. Bhyrappa, ಗೃಹಭಂಗ [Grihabhanga]
“உங்கள் நிலைமையில் நான் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பேன் என்பது பொருந்தாத செயலாகும். நீங்கள் ஒரு நாள் வரலாறு வகுப்பில் சொல்லி இருந்தீர்களாம், என் மகன் வீட்டிற்கு வந்து அன்றே சொல்லி இருந்தான்: 'நான் உன்னைப்போல பேரரசனாக இருந்திருந்தால் ரத்தக்களரி நடக்க
விட்டிருக்க மாட்டேன் என்று ஒரு பிச்சைக்காரன் பேரரசரிடம் சொன்னானாம். நானும் உன்னைப்போல பிச்சைக்காரனாக இருந்தால் போர் சிந்தனையே என் மனதில் வந்திருக்காது என்று அவன் மறுபதிலளித்தானாம்.”
S.L. Bhyrappa, Vamshavriksha

« previous 1 2 next »
All Quotes | Add A Quote
ಆವರಣ [Aavarana] ಆವರಣ [Aavarana]
4,376 ratings
ಯಾನ [Yaana] ಯಾನ [Yaana]
912 ratings