Vamshavriksha Quotes
Vamshavriksha
by
S.L. Bhyrappa1,002 ratings, 4.52 average rating, 103 reviews
Vamshavriksha Quotes
Showing 1-11 of 11
“நம்மை நாம் சிறப்பான உணர்வுகளுடன் அறத்திற்கு அர்ப்பணித்துவிட்டால், அறமே நம்மைக் கைப்பிடித்து வழிநடத்தும்.”
― Vamshavriksha
― Vamshavriksha
“எல்லாம் நம் விருப்பம் போல நடந்தால் அதை வாழ்க்கை என்று எதற்கு அழைப்பார்கள்?”
― Vamshavriksha
― Vamshavriksha
“வயிற்றில் யாரோ இரக்கமில்லாமல் கத்தியைக் குத்தி நூறு திருகு திருகுவது போல இருந்தது.”
― Vamshavriksha
― Vamshavriksha
“ஊட்டமான உணவையும் உண்டு, மனதையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். அதில் வெல்வேன் என்ற நம்பிக்கையும் வந்திருக்கிறது. இன்றிலிருந்து சாப்பாட்டில் நெய்யும் பரிமாறு, குடிக்கப் பாலும் கொடு.”
― Vamshavriksha
― Vamshavriksha
“அந்தக் காட்சியை நினைத்துப் பார்க்க முடியவில்லை. கண் நிரம்பி கேவி அழத் தொடங்கினார். ஆனால் சத்தம் மாடிக்குக் கேட்கக்கூடாது என்று சேலை முந்தானையை உருண்டை பிடித்து வாயில் அடைத்துக் கொண்டார்.”
― Vamshavriksha
― Vamshavriksha
“ஒரு முறை ஒளியைக் கண்ட ஆன்மா மீண்டும் இருளை அனுபவிப்பது கொடுமையான அனுபவம்.”
― Vamshavriksha
― Vamshavriksha
“என்றும் புதுமையான, என்றும் வலிமையான இயற்கையைச் செயற்கைச் செயல்கள் கட்டிப்போடுவது அநீதி அல்லவா தேவகுரு? என் அடிப்படைக் குணமே இயங்கிக் கொண்டிருப்பது, மனதுக்கு நிறைவு தரும் வனச்செழிப்பு, கண்ணைக் கவரும் அழகான காட்சிகள், உயிரினங்களுக்கு உணவளிக்கும் என் விசாலப் பரப்பு இவற்றுக்கு எந்த நீதியும் கைம்பெண் என்ற பழியைச் சுமத்த முடியாது.'
இதுவரை காத்தியாயினி அந்த வார்த்தைகளின் பொருளை அன்று மட்டுமே புரிந்திருந்தாள். முன் நின்று அதன் உணர்வையும் அனுபவித்தாள். அவள் தேகம் முழுதும் அந்த உணர்வின் அனுபவத்தில் சிலிர்த்தது.”

“முழு உலகமே வெந்துபோவது போலான வெப்பத்தில் ராஜா காத்தியாயினி இருவரும் புழுக்கத்தில் துவண்டு கொண்டிருந்தார்கள். இப்போது மழை வர வேண்டும். இல்லை என்றால் இந்த உளைச்சல் நிற்காது. காத்தியாயினி ஊமை போல உட்கார்ந்திருந்தாள். ராஜா சன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். மேகம் நிலையில்லாமல் அலைந்து கொண்டிருந்தது, அப்படியே மேகத்தின் அடர்த்தி அதிகரித்து ஒரு முறை மின்னியது போல இருந்தது. தனக்கே உரிய மின்னல் மாயத்தில் பூமியின் அழகான வடிவமும் தண்ணீரின் தாகமும் மேகத்திற்குப் புரிந்திருக்க வேண்டும். மேகம் முழுமையாக பூமி மீது விழுந்தது போல இருந்தது. தண்ணீரின் அபரிமிதமான ஆற்றலால் முடிவில் மேகம் தன் செயல் திறனுடன் பூமியைத்தழுவியதும், இறுக்கம் தளர்ந்தது. மழை இடி, பேரொலிகளின் ஆர்ப்பரிப்புகள் இல்லாமல், மின்னல் அட்டகாசம் இல்லாமல், மேகத்தின் முடிவைச் சுமந்துகொண்டு போகும் சூறாவளிக் காற்றின் தாக்கம் இல்லாமல் மழை தானாகவே பொழிய ஆரம்பித்தது.
மழை நிற்கும் நேரம் மதியமாகி இருந்தது. ராஜா, காத்தியாயினி மதிய உணவு அருந்தும் போது வெப்பம் தணிந்து, மனதை இதமாகச் செய்யும் குளிர்ச்சி பரவி இருந்தது. தொலைவில் வீசத் தொடங்கிய காற்று மழையில் நனைந்த மண்ணின் மணத்தை ஏந்தி வந்தது. உணவருந்தும் போது அவர்கள் இருவருக்கும் பேச்சுத் தேவை இல்லாத இதமான சூழ்நிலை இருந்தது. பூமியின் பசுமைக்குப் பொலிவு கூடியது. அவர்கள் சாப்பிட்டு முடித்தார்கள்.
அதற்குள் மீண்டும் மேகங்கள் ஒன்றுசேர்ந்தன. ஆனால் இப்போது கூடும் மேகம் புதிதல்ல. முதலில் விழுந்து மீதமிருப்பதே புதிதாகத் திண்மமானது. இப்போது முன்பு இருந்தது போல தாங்க முடியாத வெப்பமல்ல. மழையும் அமைதியாகப் பொழியத் தொடங்கியது. 'சோ' என்று விடாமல் வெறி வேகமில்லாமல் அமைதியாகப் பொழிந்துகொண்டிருந்த மழையை பூமியும் அமைதியாக வரவேற்றது. வானில் கருந்திரைகள் இருக்கவில்லை. மழையைப் பருகித் தணிந்திருந்த பூமியின் முகம் புன்னகைத்தது. மீண்டும் வெயில் தெரிந்தது. மேகம் மறைந்திருந்தது.”

“ராயர் மௌனமாக உட்கார்ந்திருந்தார். அமைதி அந்த இடத்தைச் சூழ்ந்திருந்தது. தாம் பேசிய பேச்சால் ராயருக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்பது பண்டிதருக்குப் புரிந்தது. "உங்கள் நிலைமையில் நான் இருந்தால் இப்படியே செய்வேன் என்பது எப்படிப் பொருந்தாதோ, அதுபோலவே அதன் எதிர்மறையும் பொருந்தாது. அவை எல்லாம் அவரவர் வாழ்க்கையின் பார்வையைப் பொறுத்தது. ஏதோ பாதையில் போவதால் வாழ்க்கையில் இரட்டை நிலை ஏற்படும். நடந்த பாதையிலிருந்து திரும்பி வர நினைத்தால் வேறொரு வகையில் இரட்டை நிலை ஏற்படலாம். இப்போது நீங்கள் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் குறைவானதல்ல. இன்னும் அதை நீங்கள் முழுமையடையச் செய்ய வேண்டும். நீங்கள் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட தேவையை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் முதல் மனைவியை எதற்கு விலக்கி வைத்தீர்கள்?”
― Vamshavriksha
― Vamshavriksha
“உங்கள் நிலைமையில் நான் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பேன் என்பது பொருந்தாத செயலாகும். நீங்கள் ஒரு நாள் வரலாறு வகுப்பில் சொல்லி இருந்தீர்களாம், என் மகன் வீட்டிற்கு வந்து அன்றே சொல்லி இருந்தான்: 'நான் உன்னைப்போல பேரரசனாக இருந்திருந்தால் ரத்தக்களரி நடக்க
விட்டிருக்க மாட்டேன் என்று ஒரு பிச்சைக்காரன் பேரரசரிடம் சொன்னானாம். நானும் உன்னைப்போல பிச்சைக்காரனாக இருந்தால் போர் சிந்தனையே என் மனதில் வந்திருக்காது என்று அவன் மறுபதிலளித்தானாம்.”

“பண்டிதர் செல்லாக் காசைக் கழுவி கோவில் உண்டியலில் போடுபவர் என்று எல்லோருக்கும் தெரியும்.”
― Vamshavriksha
― Vamshavriksha