வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை Quotes
வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
by
Jeyamohan22 ratings, 4.45 average rating, 1 review
வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை Quotes
Showing 1-30 of 30
“கதைகள் நமக்குத் தேவை. கதைகள் இல்லையேல் தொன்மையும் அறமும் நிலைகொள்வதில்லை. ஆனால் கதைகளை நாம் போர்வையென வைத்திருக்கவேண்டும். என் தந்தை அடிக்கடி அதை சொல்வார். குளிருக்கு எடுத்துப் போர்த்தியபின் மடித்து பெட்டிக்குள் வைத்துவிடவேண்டும். உச்சிக்கோடைவெயிலில் போர்த்திக்கொண்டு அலைந்தால் பித்தன் என்றே சொல்வார்கள்.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை

“கிளம்புவது நன்று. எதன்பொருட்டென்றாலும். மீண்டு வந்தாலும் நன்று, வராவிடிலும் நன்று. ஆனால் கிளம்புகையில் தெளிவிருக்கவேண்டும். எங்கு செல்வதென்று, எதன்பொருட்டு என்று. தெளிவில்லாமல் கிளம்புபவனை அலைக்கழித்து அழிப்பவை எட்டுத் திசைகளும் என நூல்கள் சொல்கின்றன.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“நடுக்கடலிலும் நாய் நக்கியே குடிக்கமுடியும் என்பார்கள்…”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“கேளுங்கள் மானுடரே, நான்கு விழுப்பொருட்கள் என்பது பொய். மானுடனுக்கு விழுப்பொருள் ஒன்றே. அது இன்பம். உண்ணுங்கள், குடியுங்கள், உற்றாருடன் மகிழ்ந்திருங்கள். அதுவே இன்பம். காதலில் ஆடுங்கள், கலைகளில் திளையுங்கள், கணந்தோறும் கற்றுக்கொள்ளுங்கள், அதுவே பேரின்பம். அவ்வின்பத்தை பிறருக்குத் துன்பமில்லாமல் அடைவதற்குரிய நெறிகள் மட்டுமே அறம். அவ்வின்பத்தை அடைவதற்குரியது மட்டுமே பொருள். வந்த வாழ்வில் விழைந்ததை அடைந்து நிறைவுகொள்ளலே வீடுபேறு. ஆகவே இன்புறுங்கள். குற்றவுணர்வின்றி இன்பத்தில் திளையுங்கள்.
மகிழ்ந்திருங்கள். மானுடன் மகிழ்வதையே இங்குள்ள அனைத்தும் விரும்புகின்றன என்று உணருங்கள். இல்லையேல் நீரில் தண்மையும், காற்றில் நறுமணமும், கனிகளில் இனிமையும், அன்னத்தில் சுவையும் அமைந்திருக்காது. விண்ணிலிருந்து ஒளி மண்மேல் பொழிந்திருக்காது. வண்ணங்களும் வடிவங்களுமென இப்புடவி பெருகி நம்மை சூழ்ந்திருக்காது. அறத்தின்பொருட்டு இன்பத்தை இழந்தோர் அறத்தையும் இழந்தவரே. பொருளின் பொருட்டு இன்பத்தை இழந்தோர் பொருளை வீணடித்தோரே. வீடுபேற்றின் பொருட்டு இன்பத்தை இழந்தோர் வெறுமையை விலைகொடுத்து பெற்றுக்கொண்டவரே. அறிக, ஐயமின்றி அறிக, அறிந்து தெளிக, எச்சமின்றி தெளிக, எண்ணித் தலைசூடுக, இன்பம் ஒன்றே விழுப்பொருள்! மானுடருக்கு இப்புவியில் அளிக்கப்பட்டுள்ள ஆணை இனிதிருத்தல் மட்டுமே!”

“எண்ணுக மூடரே, எழுந்து நின்று இதோ உரைக்கிறேன். மலையேறி நின்று தொலைவு கண்டவனின் சொல் இது. விடுபட்டபின் திரும்பி சிறையை நோக்கி சொல்லப்படுவது இது. நான்கு மெய்ப்பொருட்களும் பொய். இன்பம் ஒன்றே மெய். இன்பம் அன்றி ஈட்டுவன பிறிதில்லை.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“நான்கு சொற்கள், நான்கு திசைகளென உங்களைச் சூழ்ந்துள்ளன. அறம், பொருள், இன்பம், வீடு. எங்கு திரும்பினாலும் அதில் முட்டிக்கொள்கிறீர்கள். அவை உங்களுக்குக் காவலென உணர்கிறீர்கள், எல்லை என அறிவதில்லை.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“எதிரிகள் அகல்கிறார்கள். ஏனென்றால் நான் எதிர்ப்பை துறந்துவிட்டேன்.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“மதுக்குவளையை தீயில் கழுவவேண்டும். இல்லையேல் மதுநாடி மலைத்தெய்வங்கள் வந்துவிடும்.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“அவன் மலையிலிருந்து வரும் செய்திகளை அறிந்துகொள்ளும் கலையறிந்த பாணன் என்றார்கள். கங்கையில் ஒழுகிவரும் கற்களை எடுத்து அவற்றில் எழுதியிருப்பனவற்றைப் படித்து மலையின் எண்ணமென்ன என்று அறியும் கலை ஒன்று அம்மக்களிடையே உண்டு. அவ்வாண்டு பனி எவ்வளவு, பெருவெள்ளம் உண்டா, மழை எத்திசையில் என நூறுநூறு செய்திகளை அக்கற்களில் இருந்து அவர்கள் படித்தறிகிறார்கள். அவ்வாண்டுக்கான வேளாண்மையை, மேய்ச்சல்பெயர்வுகளை, இல்லங்களை அமைக்கும் கோணங்களை அதைக்கொண்டு முடிவுசெய்கிறார்கள். சில தருணங்களில் ஊர்கள் அனைத்துமே ஒழிந்து முற்றாக இடம்பெயரும்படிகூட ஆணைகள் வந்துள்ளன என்று அறிந்தேன்.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“யுயுத்ஸு “என்னால் மறக்க முடியவில்லை, மூத்தவரே. மறக்கவே முடியவில்லை. நான் கௌரவர்களின் இளையோன். நான் துரியோதனனின் சிறுவன்… அவ்வுணர்வுகளை என்னால் கடக்க இயலவில்லை” என்றான். பீமன் அவனை சற்றே விலக்கி அவன் கண்களை நோக்கி “ஆம், நானும் கௌரவரில் ஒருவனே. நான் முதற்கௌரவனின் மறுபாதி” என்றான்.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“மீண்டும் மீண்டும் அறிவிப்பு முரசு முழங்கியது. “குருகுலத்துத் தோன்றல்! ஹஸ்தியின் கொடிவழியன்! பாண்டவ இளையோன்! பெருங்காற்றின் மைந்தன்! வெற்றிகொள் வீரன்! பெருந்தோள் மாமல்லன்! வடபுலம் வென்று திரும்பும் பீமசேனன் நகரணைகிறார்! வெற்றி! வெற்றி! வெற்றி!” அவன் குமட்டலுடன் வாயில் எழுந்த வறுஞ்சுவை எச்சிலை சற்று நேரம் வைத்திருந்து உமிழ முடியாமல் விழுங்கினான். நஞ்சை விழுங்குவதுபோல் உடல் உலுக்கிக்கொண்டது. வெற்றி என்னும் சொல்லை எவ்வண்ணம் இவர்களால் சொல்ல இயல்கிறது? அதற்கு ஏதேனும் பொருள் உள்ளதென்று எண்ணுகிறார்களா? வெற்றி! எதன் மீதான வெற்றி? எதை அடைந்ததனால் அடையும் வெற்றி? ஆயிரம் மடங்கு அளித்து சிறு அணுவொன்றை பெறுவதனால் இத்தனை தருக்க முடியுமா என்ன?”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“நான் துரியோதனனின் இளையோன். நான் துரியோதனனை அன்றி எவரையும் என் உடலிலும் உள்ளத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாதவன். நெறி என்றும் அறம் என்றும் எண்ணி இப்பக்கம் வந்தேன். இங்கு திகழ்வதும் அதுவே என்று உணர்ந்தேன். அச்சொற்கள் எவ்வகையிலும் பொருளற்றவை என்று கண்டு தெளிந்தேன். இங்கு நின்றிருக்கும் நான் முற்றிலும் சொற்களால் தோற்கடிக்கப்பட்டவன்.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“மூதன்னையாக ஆகும்போது மைந்தரை மைந்தரின் தரப்பில் மட்டுமே நின்று பார்ப்பவர்களாக மாறிவிடுகிறார்கள் பெண்கள் என்று நூல்கள் சொல்கின்றன.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“ஊழை நேரில் கண்டவனின் விழிகள் பதைப்பு கொண்டுவிடுகின்றன. அதன்பின் அவன் எப்போதுமே தன்னைப்பற்றிய முழு நம்பிக்கையை அடைவதில்லை. அறியாமையே ஆயினும் ஊழை உணராதவன் தன்னம்பிக்கை கொண்டிருக்கிறான். ஆகவே வெற்றி நோக்கி செல்கிறான்.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“கோழையின் அறிவும் நல்லியல்பும் பொருளற்றவை என்கின்றன நூல்கள்”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“இரவின் நிறம்கொண்டவளே, உன்னில் மின்னும் முடிவிலாக்கோடி விண்மீன்களெல்லாம் கதிரவன்கள் அல்லவா? நீ அவற்றைச் சூடிய முடிவிலியா என்ன? அன்னையே, நீ கரந்துள்ள மெய்மைகள் என்ன?”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“வெள்ளி பூசப்பட்ட பெரிய ஆடிகளை நகரின் ஆலயங்களின் சுற்றுவட்டங்களிலும் அங்காடிகளின் அருகிலும் தெருச்சந்திப்புகளிலும் நிறுவும்படி அவர் ஆணையிட்டார். அவற்றின் முன் மக்கள் கூடி தங்களை பார்த்துக்கொண்டனர். அதன்முன் பார்ப்பதற்கென்றே நல்லாடை அணிந்து அணிபூண்டு கிளம்பி வந்தனர். பின்னர் அவ்வழி செல்லும்போதெல்லாம் இயல்பாகப் பார்த்தனர். பின்னர் பார்ப்பதறியாமலேயே பார்க்கலாயினர்.
ஆண்கள் ஒவ்வொரு முறையும் அதை அணுகுகையில் தங்களைப் பார்த்து மீசையை முறுக்கி தலைப்பாகையை சரி செய்துகொண்டனர். எவரேனும் பார்க்கிறார்களா என்று சூழ நோக்கியபின் மீண்டும் நோக்கி பிரியாவிடை என அதை விட்டு அகன்றனர். பெண்டிர் பிறிதொரு பெண் வந்து அவளை உந்தி அகற்றுவது வரை ஆடி முன் கட்டுண்டிருந்தனர். தங்களைத் தாங்கள் முழுக்கவே பார்க்கவில்லை என்றே அவர்கள் அனைவரும் ஒவ்வொரு முறையும் உணர்ந்தனர். எவரும் இலாது சற்று பொழுது அவ்வாடிகள் ஓய்ந்திருக்குமெனில் புறாக்களும் காகங்களும் வந்து தங்களை பார்த்தன. எதிரியென எண்ணி பறந்து பறந்து கொத்தின. காதல் இணையென எண்ணி கொஞ்சி மொழிபேசி கொக்குரசிக்கொண்டன. புரவிகள் அவற்றில் தங்களைப் பார்த்து கனைத்து பிடரி சிலிர்த்தன. ஒருமுறை அரசநாகம் ஒன்று அதன்முன் படமெழுந்து நின்றாடுவதை அவன் கண்டான்.”

“மைந்தன் தேறிக்கொண்டிருக்கிறான். இன்னும் சில நாட்களில் அவன் அந்தச் சிப்பியிலிருந்து வெளிவருவான். துரியோதனனின் மகள் அவனுக்கு அன்னையென கனிந்து சூழ்ந்திருக்கிறாள்” என்றார்.
“அவள் இயல்பு அது” என்று யுயுத்ஸு முகம் மலர்ந்து சொன்னான். “ஆம், அவளிடம் நான் பிறிதொன்று எண்ணவே இல்லை. இங்கிருந்து கான்வாழ்வுக்குச் சென்றபோதுகூட என் மைந்தரை நம்பி விட்டுச்செல்ல துரியோதனன் அன்றி பிறர் உண்டு என்னும் எண்ணமே என்னிடம் எழவில்லை. அவனால் வளர்க்கப்பட்ட என் மைந்தரைப்பற்றி நான் எப்போதும் கவலைகொண்டதில்லை” என்றார் யுதிஷ்டிரன்.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“அவள் இயல்பு அது” என்று யுயுத்ஸு முகம் மலர்ந்து சொன்னான். “ஆம், அவளிடம் நான் பிறிதொன்று எண்ணவே இல்லை. இங்கிருந்து கான்வாழ்வுக்குச் சென்றபோதுகூட என் மைந்தரை நம்பி விட்டுச்செல்ல துரியோதனன் அன்றி பிறர் உண்டு என்னும் எண்ணமே என்னிடம் எழவில்லை. அவனால் வளர்க்கப்பட்ட என் மைந்தரைப்பற்றி நான் எப்போதும் கவலைகொண்டதில்லை” என்றார் யுதிஷ்டிரன்.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“சாரிகர் “அரசி…” என்று தயங்கியபடி அழைத்தார். “அங்கே மறைந்த பேரரசர் துரியோதனனின் மகள் லக்ஷ்மணை ஆட்சி செய்கிறார் என்றீர்கள். அவர் தன் தந்தையரைக் கொன்று அஸ்தினபுரியை வென்று ஆளும் யுதிஷ்டிரன் மீதும் இளைய யாதவர் மீதும் கடுஞ்சினம் கொண்டிருப்பதாகவும் சொன்னீர்கள்” என்றார். “இக்குழவி பாண்டவர்களின் எஞ்சும் துளி. இது அழிந்தால் பாண்டவர்களின் கொடிவழி அறுந்து போய்விடும்.” சத்யபாமை “நீர் எண்ணுவதென்ன என்று தெரிகிறது. இக்குழவிக்கு கிருஷ்ணையால் தீங்குவரக்கூடும் என்றா?” என்றாள். “அவர் நேரடியாக தீங்கிழைக்க வேண்டியதில்லை. இப்போது உரியவை அனைத்தையும் செய்யாமலிருந்தால், செய்வனவற்றை சற்றே பிந்தினால், நேரடியாக ஈடுபடாமல் தவிர்த்துவிட்டால்கூட இம்மைந்தன் வாழமாட்டான்” என்றார் சாரிகர்.
பெருமூச்சுடன் “உங்கள் ஐயமும் அச்சமும் புரிந்துகொள்ளற்குரியதே” என்று சத்யபாமை சொன்னாள். “அவளுடைய வஞ்சம் இயல்பானது, ஏனென்றால் அவள் துரியோதனனின் மகள்.” அவள் முகம் ஒளிகொண்டது. புன்னகை இன்றி ஒரு முகத்தில் ஒளியெழுவதை அப்போதுதான் சாரிகர் கண்டார். “ஆனால் இப்புவியில் எந்தக் குழந்தையையும் ஈன்ற அன்னையிடம் என நம்பி ஒப்படைப்பதென்றால் அது கிருஷ்ணையிடமே. முற்றெதிரியின் குழந்தையே ஆயினும். ஏனென்றால் அவள் துரியோதனனின் மகள்” என்றாள் சத்யபாமை. அவர் மெய்ப்புகொண்டு அறியாமல் கைகூப்பினார்.”

“மானுட உள்ளத்தின் இயல்புநிலை என்பது ஓய்வும் செயலின்மையும்தான். பெரும்பாலான விலங்குகள் பசியோ அச்சமோ இல்லாதபோது அமைதியாக செயலற்று அமைந்திருக்கின்றன. வேட்டையில் தப்புதலில் இருக்கும் இன்பம் என்பது சற்றுநேரத்திற்கு மட்டுமே. உடலின் எல்லை மிகக் குறுகியது. அதைவிட குறுகியது உள்ளத்தின் எல்லை.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“மானுட உள்ளம் எப்போதுமே பரபரப்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது. அன்றாடத்தின் மாற்றமின்மையையும் சலிப்பையும் போக்கும் எதுவும் உவகையையே அளிக்கிறது. அது தீங்கானதாக இருப்பினும், கொடியதாயினும். ஆனால் உள்ளத்திற்கு ஒரு கொள்ளளவு உள்ளது. அது நிறைந்ததும் பரபரப்பே சலிப்பூட்டுகிறது. பின்வாங்கி செயலின்மையில் சுருண்டுகொள்ள விழைகிறது அகம்.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“ஆணை எண்ணும் பெண் சிறுமையையும் துயரையும் அன்றி எதையும் பெறப்போவதில்லை. அது காதலாயினும் கணவனாயினும் மைந்தனாயினும் தமையனாயினும் தந்தையாயினும் வேறுபாடில்லை.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“அரசு என்பது காவல் என்றும், அறம் என்றும், நிகர்நிலைப்படுத்தல் என்றும் சொல்லப்படுமென்றாலும் வணிகர்களின் நோக்கில் அது பொருள்கொள்ளும் அமைப்பே. பொருள்கொள்ளும் எந்த அமைப்பும் கொள்ளையிடும் உளநிலையே கொண்டிருக்கிறது. அரசு என்பது ஏற்கப்பட்ட திருட்டு. கொடுப்பவரும் ஒப்புகையில் அரசு நிலைகொள்கிறது. எந்த அரசும் கொள்ளையாக மாறும் வாய்ப்புள்ளதுதான். அரசு தன்னை தான் கட்டிவைத்திருக்கும் நெறிகளை சற்று அவிழ்க்கத்தொடங்கினாலும் நேரடிக்கொள்ளையாக ஆகிவிடும்.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“நாகம் வளரமுடியும், தன் தோலை உரித்து அகற்றமுடியும். ஆமையால் இயலாது. உதறமுடியாத எதுவும் பெருஞ்சுமையே.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“ஆமையின் ஓடுபோல. ஆமை தன்னால் உதறமுடியாத இல்லத்தைச் சுமந்து அலைவது. விடமுடியாவிடில் அது வீடே அல்ல சிறை. சிறைக்குள்ளேயே பிறப்பது, வாழ்நாளெல்லாம் தன்னுடன் சிறையை கொண்டுசெல்வது.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“சம்வகை தன்னருகே வந்த ஒற்றனிடம் “அந்த நாடோடி யார்?” என்றாள். அவன் “நோக்குகிறேன்” என்றான். “அவன் இந்நகர் நீங்குவதுவரை நலமாக இருக்கவேண்டும்” என்றாள். “ஆம், நகர் எல்லையை கடந்ததும் நிறைவேற்றிவிடுகிறேன்” என்றான். சம்வகை பெருமுச்சுடன் “எது வகுக்கப்பட்டுள்ளதோ அது நிகழும். நம்மால் தடுக்க முடியாது. ஆனால் ஒரு மீறல் ஒருபோதும் தண்டிக்கப்படாமல் போகக்கூடாது” என்றாள்.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“யுதிஷ்டிரரே! நன்று! நீங்கள் ஆள்வதற்குரிய நகர்தான் இது!” என்றான். யுதிஷ்டிரன் திகைத்து நின்றார். “நல்ல நகரம்… இன்று இதன் குடிகள் முழுக்க நாடோடிகள். நானும் நாடோடியே. பதினான்காண்டுகாலம் காட்டிலுழன்ற நாடோடியால் ஆளப்படுவது உவகை அளிக்கிறது!” என்றான். “நான் நாடோடி… என்னை இங்கே இழுத்து வந்தார்கள். அரசரை வாழ்த்த இங்கே நகரில் மக்கள் எவருமில்லை என்றார்கள். நாடோடியை நாடோடியன்றி எவர் வாழ்த்துவார் என்று நானும் வந்துவிட்டேன்”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“கனவுகளை மிக ஆழத்தில் நுரை என வளரவிட்டு, அதில் ஓர் உலகை அமைத்து, அங்கு சென்று இளைப்பாறக் கற்றிருக்கிறார்கள் மனிதர்கள்.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“கிளையசையாது எழுந்து பறக்கும் ஒரு பறவைபோல் அவன் அனைத்தையும் விட்டு நீங்கினான்.”
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
― வெண்முரசு – 24 – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை
“ஆதன் அத்துறவியிடம் பேசிக்கொண்டிருப்பான். அவர் பெரும்பாலான வினாக்களுக்கு வெடித்துச் சிரிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆயினும் அவரிடம் பேசவே அவனுக்கு பிடித்திருந்தது. ஊரில் அவன் கண்ட அனைவரும் ஒற்றைமுகமும் ஒற்றைவிழிகளும் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசும் சொற்களும் ஒன்றே. இளமையில் அவன் அத்துறவியிடம் “அவர்கள் அனைவரும் ஏன் ஒன்றுபோல் இருக்கிறார்கள்?” என்று கேட்டான். அவர் கண்களில் நகைப்புடன் தாடியை உருவியபடி “வேறுபட்டிருந்தால் தனித்திருக்கவேண்டுமே?” என்றார். அவன் அதை உடனே புரிந்துகொண்டான். அவனுக்கு புரிகிறது என்று அவருக்கும் தெரிந்தது. “நீர் தன்னை கலக்கிக்கொண்டே இருக்கிறது” என்று அவர் மீண்டும் சொன்னார். “நெருப்பு தன்னில் எதுவும் கலக்க விடுவதில்லை.”