வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி Quotes
வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
by
Jeyamohan26 ratings, 4.77 average rating, 1 review
வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி Quotes
Showing 1-30 of 39
“மானுடரின் துயர்களில் நிகழும் துயர்கள் எவையாயினும் அவை சிறியவையே. நிகழுமென எண்ணிக்கொள்ளும் துயர்களே பெரியவை. நிகழ்வன நிகழும் அக்கணமே உச்சமடைந்து விடுகின்றன. முழுதும் வெளிப்படுத்திவிடுகின்றன. எனவே நிகழ்ந்த கணம் முதல் அவை குறையத்தொடங்குகின்றன. அவை குறைவதே ஆறுதலை அளிக்கிறது. அவை அழிந்து நாம் விடுதலைபெறும் இடம் அப்பாலென்றாலும் அறியக்கூடுவதாக உள்ளது. ஆயின் நிகழவிருப்பவை என நாம் அஞ்சும் பெருந்துயர்கள் கணம்தோறும் வளர்பவை. மறுகரை அறியாதவை.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“குருக்ஷேத்ரத்தின் பிலங்களில் ஒன்றின் வாய் திறந்து அவன் தேரின் சகடத்தைக் கவ்வி உள்ளிழுத்துக்கொண்டது.
தேர் அசைவிழந்து மேலும் மேலும் அழுந்த கர்ணன் விஜயத்தை தேர்த்தட்டில் விட்டுவிட்டு பாய்ந்து மண்ணில் இறங்கி தேரின் சகடத்தை நோக்கி சென்றான். “ஒருகணம்தான். ஏவுக அஞ்சலிகத்தை!” என்றார் இளைய யாதவர். “அவர் படைக்கலம் இல்லாமலிருக்கிறார்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், இதுவே அவன் புதைவுக்கணம். அவன் இதோ மீண்டுவிடுவான். ஏவுக அம்பை!” என்றார் இளைய யாதவர். “படைக்கலம் இன்றி இருக்கையிலா?” என்றான் அர்ஜுனன். “படைக்கலம் இன்றி மட்டுமே அவனை கொல்ல இயலும் என்று உணர்க… ஏவுக!” என்றார் இளைய யாதவர். “யாதவரே!” என்று அர்ஜுனன் உளமுடைந்து கூவினான். “இது என் ஆணை! கொல் அவனை. இக்கணமே கொல்!” என்றார் இளைய யாதவர்.”

“விண் கணம்தோறும் மாறுவது. மண் மாறிலி. அதில் பருவங்கள் என, நாட்கள் என, கணங்கள் என நிகழ்வது விண்ணே.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“எஞ்சுவது ஒன்றுமில்லை என்றான பின்னர் உயிர் மிஞ்சி இருப்பதில் பொருளில்லை.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“சல்யர் தன் கடிவாளக்கற்றையை ஓங்கி தேர்த்தட்டில் வீசினார். “போதும்! இதற்கு மேல் இப்போரை நான் நடத்தலாகாது. நீ உயிர்கொடுக்கச் செல்கிறாய். உன்னை அதற்கு அழைத்துச்சென்றேன் என்னும் பழியுடன் இக்களத்திலிருந்து நான் மீள மாட்டேன். என் குடிமைந்தர் களம் விழுந்தமைக்கு நானே பொறுப்பென்று நாளை என் கொடிவழியினர் எண்ணலாகாது. இனி உன் தேரை நான் தெளிக்கப் போவதில்லை” என்று சொல்லி தேரிலிருந்து பாய்ந்து இறங்கினார். கர்ணன் “வாழ்த்திச் செல்க, மத்ரரே!” என்றான். சல்யர் நின்று திரும்பி அவனை பார்த்தார். உள்ளிருந்து எழும் ஒரு சொல் அவர் முகத்தை உருகச் செய்தது. உடலெங்கும் அது தவிப்பென வெளிப்பட்டது. ஆயினும் அதை கூறாமல் நடந்து படையின் பின்புறம் நோக்கி சென்றார்.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“எடு உன் நாகவாளியை! இது உன் தந்தையின் ஆணை! உன் குருதித்தந்தையின் ஆணை இது!” என்று நெஞ்சிலறைந்தபடி ஓலமிட்டார் சல்யர்.
“என் அன்னை உங்கள் பெயரை சொல்வது வரை நீங்கள் எனக்கு தந்தையல்ல, மத்ரரே” என்று சல்யரை நேர்நோக்கி கர்ணன் சொன்னான். தளர்ந்து “முற்றாக அழித்துவிட்டாள் உன்னை. ஒரு துளி எஞ்சாமல் உண்டுவிட்டுச் சென்றுவிட்டாள்” என்றார் சல்யர்.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“என் அன்னை உங்கள் பெயரை சொல்வது வரை நீங்கள் எனக்கு தந்தையல்ல, மத்ரரே” என்று சல்யரை நேர்நோக்கி கர்ணன் சொன்னான். தளர்ந்து “முற்றாக அழித்துவிட்டாள் உன்னை. ஒரு துளி எஞ்சாமல் உண்டுவிட்டுச் சென்றுவிட்டாள்” என்றார் சல்யர்.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“மத்ரரே, ஒருமுறைக்குமேல் அதை அவன் மேல் தொடுப்பதில்லை என்று நான் சொல் அளித்திருக்கிறேன்” என்றான். “எவருக்கு? எவருக்கு அந்தச் சொல் அளிக்கப்பட்டது?” என்று கூவியபடி திரும்பினார் சல்யர். உடனே உணர்ந்துகொண்டு “அவ்விழிமகளுக்கா? உன் உயிர் கொண்டு சென்றிருக்கிறாள் அவள். அன்னைவிலங்கின் நிகரற்ற இரக்கமின்மையை அறியாதவனா நீ? முதல் குட்டியைத் தின்று எஞ்சும் குட்டிகளுக்கு அமுதூட்டுவது குருதி உண்ணும் விலங்குகளின் வழக்கம். உன்னை தின்கிறாள் அவள். இத்தருணத்தில் நீ கடந்து போகவேண்டியது அவளை மட்டுமே.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“வேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“இப்புவியில் நூல்கள் உருவாக்கிய அனைத்துப் பொய்களிலும் பெரிய பொய் தாய்மை. பெண்ணை இல்லம்தேக்கிவைக்க, அவள் மேல் குடியைக் கட்டி எழுப்ப மூத்தோர் அதை சமைத்தனர். சொல்லிச் சொல்லி அதில் பெண்ணை தளையிட்டனர். அத்தளையிலிருந்து விடுபடும் சூழ்ச்சித்திறன் கொண்ட பெண் அது மறுஎல்லைக்குத் திரும்பி ஆண்கள் அனைவரையும் சிறையிடும் ஆற்றல்கொண்டது என உணர்கிறாள். அதை தன் படைக்கலமாகக் கொண்டவள் வெல்லமுடியாதவள்”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“எங்கு ஒருவர் தன் வாழ்வின் வழிகளனைத்தும் மூடிவிட்டன என்று உணர்கிறாரோ அப்போது செய்யக்கூடுவது ஒன்றே. தவம் செய்க! தவம் என்பது அதுவரை ஒருவன் கொண்டிருக்கும் அனைத்தையும் முற்றாக துறத்தல். ஒன்றும் எஞ்சாமல் வெட்ட வெளியில் நிற்றல். அதன் பின்னர் உருவாகி வருவனவற்றில் வாழ்தல். அடைந்து சென்றடையும் மெய்மையை அறிவென்பர். துறந்து சென்றடையும் மெய்மை ஞானமெனப்படும். அறிவைக் கடந்த ஒன்று உங்களில் நிகழ்வதாக!”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“வேட்டைவிலங்கும் ஊன்விலங்கும் ஒரே ஊழ்நெறியின் இருபுறங்கள்”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“ஆணவம் உடலில் கொழுப்பென சேர்கிறது. அசைவுகளை குறைக்கிறது. பயணங்களை இல்லாமலாக்குகிறது. அமைந்த இடத்தில் மேலும் ஆழப் பதிக்கிறது. அதுவே மெய்யென்றும் பிறிதொன்றில்லை என்றும் எண்ணச்செய்கிறது. புதுச் செல்வம் அளிக்கும் ஆணவம் நாளை என ஒன்றில்லை என மிதப்படைய வைக்கிறது. நேற்றின் வெற்றிகளை மட்டும் நினைவுகளாக சேர்க்கிறது.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“இறுதி வெறுமை என்பது சாவு. ஆனால் அது வாழ்வில் ஒருமுறைதான் நிகழவேண்டும் என்பதில்லை. அது நிகழ்ந்து மீள்பிறப்பெடுத்தோர் முன்னிலும் ஆற்றல்கொண்டவர்கள் ஆகிறார்கள். தெய்வங்களுக்கு நிகரானவர்களாக நிலைகொள்கிறார்கள். ஆழுலகத்து தெய்வம் அல்லது விண்ணொளிகொண்ட தேவன். நான் கொடுந்தெய்வமென அத்தருணத்தில் பிறந்தெழுந்தேன்”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“ஓநாய் கிடந்து சாகாது, சென்றுகொண்டிருக்கையிலேயே சாகும்”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“எழுந்துவிட்டோம். எண்ணமுடியாத இழப்பையும் அடைந்துவிட்டோம். இனி வெல்வதொன்றே வழி. அதுமட்டுமே இழப்புகளை சற்றேனும் பொருள் கொண்டதாக்கும்”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“சலிப்பென்பது உச்சத்தை நாடும் உளஆழம் கொள்ளும் விழைவே. உச்சங்களுக்காகவே மானுட உள்ளமும் உடலும் படைக்கப்பட்டுள்ளன. உச்சங்களிலேயே மானுடன் கொண்டுள்ள திறன்கள் அனைத்தும் எழுந்து பொருள் சூடுகின்றன. உச்சங்களில் வாழும் வாழ்க்கையை மட்டுமே மானுடர் தாங்களும் வாழ்வென கணக்கிடுகிறார்கள். நூறாண்டு வாழ்பவர்கள்கூட வாழ்ந்ததை ஒருசில நாட்களென்றே கருதிக்கொள்கிறார்கள். போர் உச்சம். ஏனென்றால் அதனருகே இறப்பு நின்றிருக்கிறது. ஊழ்கம் பிறிதொரு உச்சம். அதனருகே முடிவிலி நின்றிருக்கிறது. இறப்பு என்பது முடிவிலியின் இருட்தோற்றம்.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“முகில்நிரைகளின்மேல் அமர்ந்தபடி கந்தர்வர்கள் போரை நோக்கிக்கொண்டிருந்தனர். அந்தப் பூசலோசையை இசையெனக் கேட்டனர். அறிக, உரிய தொலைவு இருந்தால் எந்த ஓசையும் இனியதே!”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“களம் முழுக்க பீமனை இழுத்துச் சுழற்றி அலைக்கழித்த பின்னர் வில்லை உதறி அவனை அப்பால் வீழ்த்தினான் கர்ணன். அம்பால் சுட்டி “இழிபிறப்பே, காட்டுவிலங்கை களத்தில் கொல்வது நெறியல்ல என்பதனால் மட்டுமே உன்னை இன்று கொல்லாமல் விடுகிறேன். இனி எந்த வில்லவன் முன்னும் ஆணவத்துடன் எழாதொழிக உன் வில்! நீ கொண்டிருக்கும் உயிரென்பது இந்தச் சூதனின் கொடையென்று என்றும் உணர்க! சூதனின் எச்சில் தின்று வளர்த்த உடம்பு இதென்று அன்னத்தை கையிலெடுக்கும் ஒவ்வொரு கணமும் இனி நீ அறிக! செல்”! என்றான்.
பீமன் கைகளை விரித்து மண்ணில் முழந்தாள் மடித்து மண்டியிட்டு “கொல்! என்னை கொல்! இழிமகனே, என்னை கொல்!” என்று கூவினான். “உன்னைக் கொன்றால் என்னால் கொல்லப்பட்ட மதிப்பை உனக்களித்தவனாவேன். என் கொடையினூடாக எவரும் சிறுமைப்படலாகாதென்று இதுவரை எண்ணியிருந்தேன். இன்று அறிகிறேன், கொடுப்பவனின் தருக்கை. செல்க, என் கையிலிருந்து உயிர்பெற்று மீண்ட இரவலனாக உன் குடியினரிடம் செல்க!” என்றபடி தன் தேரைத் திருப்பி பின்னால் சென்றான் கர்ணன். திகைப்புடன், கண்களில் வழிந்த நீருடன் உடல் நடுங்கிக்கொண்டிருக்க விரித்த இரு கைகளும் காற்றில் அலைபாய கர்ணனை நோக்கி அமர்ந்திருந்தான் பீமன்.”

“யுதிஷ்டிரன் இனிய நினைவெழுந்ததுபோல் முகம் மலர்ந்து “பேரழகன்! அவன் அழகைப்பற்றி ஒவ்வொரு நாளும் நான் எண்ணுவேன். நம் ஐவரில் அவன் அழகைப்பற்றி எண்ணாத எவரேனும் இருக்கிறோமா? அந்த அழகிலிருந்து நம் ஐவருக்கும் மீட்பில்லை. ஏனெனில் நாம் அனைவரும் இணைந்தது, நாம் அனைவரும் விழைவது அவ்வழகு. இளையோனே, என்றும் நான் கனவு கண்டது நீயும் பீமனும் ஒன்றாக இணைந்த பேருடலை. நகுலனின் தேர்த்திறமும் சகதேவனின் நூல்திறமும் ஒன்றாக சேர்ந்த ஒருவனை. என்னைப்போல், அல்ல நான் விழைவதைப்போல் அறத்தில் அமைந்த ஒரு நெஞ்சை. நாம் ஐவரும் ஒன்றாக இணைந்து உருவானவனல்லவா அவன்?”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“பேரியல்புகொண்டோர் சிறு இழிவடைந்தாலும் அது பெருஞ்சரிவென ஆகிறது.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“விண்ணிலிருந்து சிறிய செந்தீற்றல்களாக இரு விண்மீன்கள் உதிர்வதை கர்ணன் பார்த்தான். “பேரரசர்கள் எங்கோ இறந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான். “ஆம், எழுவர். நான் ஏழு விண்தீற்றல்களை கண்டேன்” என்றான் பாங்கன். “அவர்கள் பிறப்பதை அறிவிக்கும் விண்மீன் ஏதும் உண்டா, சூதரே?” என்றான் கர்ணன். “அவர்கள் பிறக்கும்போது புதிய விண்மீன் ஒன்று எழுகிறது. ஆனால் வானின் பல்லாயிரம் கோடி விண்மீன் பெருக்கில் நம்மால் அதை அடையாளம் காண முடியாது. அரசே, பேரரசர்கள் பேரரசர்களாகவே பிறக்கிறார்கள். ஆனால் தங்கள் பெருஞ்செயல்களினூடாகவே அவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். உதிர்கையிலேயே உலகெங்கும் அறியப்படுகிறார்கள்” என்றான் சூதன்.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“சிற்றுணவு, நெடுந்தேடல், வான் கீழ் தனிமை”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“நான் வணங்கும் தெய்வங்களே என்னை கையொழிந்தாலும் சரி, உளம் சோரப்போவதில்லை. என் தெய்வமே வில்லெடுத்து எனக்கெதிராக வந்து நின்றாலும் சரி, களம் நில்லாதொழியப்போவதில்லை”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“அங்கர் நான்கு பக்கமும் சூழ்ந்த ஆடிகளில் தன்னை நோக்கிக்கொண்டார். மைந்தர்களெனப் பெருகிச்சூழ்ந்தார் என பாடினர் சூதர்.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“இங்கே அத்தனை ஷத்ரியர்களையும் தன் உயரத்தாலும் அழகாலும் பொறாமைகொள்ளச் செய்தான். அவர்களால் சிறுமைசெய்யப்பட்டான். அவர்களிடமிருந்து தப்ப மையச்சாலைகளை ஒழிந்து சிறுபாதைகளினூடாக நடந்தான். புரவிக்கொட்டில்களில் சூதர்களுடனேயே இருந்தான். தேரோட்டவோ நீராடவோ பலர்முன் எழுந்ததே இல்லை. ஆயினும் தொடர்ந்து வந்தது இழிவு. விலகிப்போ புரவிச்சூதனே என அவனை நோக்கி கூவினர் அந்தணர். புரவிச்சாணி நாறுகிறதே இவனால்தானா என இளிவரல் கூறினர் காவலர். எழுந்த பேருடலைக் குறுக்கி விழிகளை நிலம்நோக்கித் தழைத்து அவன் நடப்பதைக் கண்டு நான் விழிநீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை என் மைந்தன் விழிசாய்த்து அமர்ந்திருக்கிறான் எனில் அது அன்று வந்த பழக்கம்.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“விழுந்த விலங்கு அக்கணமே உண்ணப்படும் என்பதே காட்டின் நெறி”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“அவர் சுனைக்கரையில் அமர்ந்து தூண்டிலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தார். அவன் அவர் அருகே சென்று வணங்கிவிட்டு சுனையை கலக்கலாகாது என அகன்று சென்று நீரை அள்ளி அருந்தினான். தூண்டிலை இழுத்து மீனை எடுத்த சம்வகர் மீனுடன் காட்டுக்குள் செல்வதை கண்டான். ஆர்வம் தோன்ற அவரைத் தொடர்ந்து சென்றான். அந்த மீனை அவர் அங்கே சிறிய மரப்பொந்து ஒன்றுக்குள் இறகுகள் உதிர்ந்து இறக்கும் நிலையிலிருந்த கொக்குக்கு கொடுத்தார். அது அந்த மீனை வாங்கி உண்டது.
அவனை நோக்கி திரும்பிய சம்வகர் “அதன் இறுதி விழைவு. அதை கடக்காவிடில் அது மீன் எனப் பிறக்கலாகும்” என்றார்.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
அவனை நோக்கி திரும்பிய சம்வகர் “அதன் இறுதி விழைவு. அதை கடக்காவிடில் அது மீன் எனப் பிறக்கலாகும்” என்றார்.”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“எத்துயரும் அதைக் கடந்து நாம் வளர்கையிலேயே அகலும். வளர்க!”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“உளம் சோர்கையில் இன்சுவை உணவை உண்க! அது ஒரு செய்தியென்றாவதை உணரமுடியும். விண்ணிலும் மண்ணிலும் தேவர்களும் பருப்பொருட்களும் நம் மீது கனிந்திருக்கிறார்கள். ஆகவேதான் இன்சுவை என ஒன்றை படைத்திருக்கிறார்கள். எத்துயரிலும் எவ்வெறுமையிலும் நாக்கு இனிமையை உணரத்தான் செய்கிறது. அது ஒரு சொல்லுறுதி. இங்கிருந்து எவ்வண்ணமும் மீண்டுவிடமுடியும் என்னும் நம்பிக்கை. உண்க!”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
“அழிவில்லாதனவற்றை பாடுக! அழிவுள்ளவற்றை பாடலினூடாக அழிவற்றவை என்றாக்குக! அறியவொண்ணாமையை பாடுக! பாட்டினூடாக அவற்றை அறிபடுபொருளென்றாக்குக! தோழரே, பாடல் வாழ்வின் பொருள்மட்டுமே பிரிந்து நின்றிருப்பது. வேரில் கசந்து தண்டில் இறுகி இலையில் விரிந்து மலரில் ஒளிர்ந்து கனியில் இனிப்பது மட்டுமே திரண்டு நின்றிருப்பதையே பாடல் என்கின்றனர். இங்குள்ள ஒவ்வொன்றும் மறையும், அவை உருமாற்றி பாடலில் சென்றமையும். இங்குள்ள ஒவ்வொன்றும் மீண்டும் இவ்வண்ணமே பாடலில் இருந்து எழும். அவை தங்கள் சுவையாலேயே அறியப்படும். பாடல்களில் வாழ்கின்றன தெய்வங்கள். அறிக, பாடலுக்கு வெளியே தெய்வங்களே இல்லை!”
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி
― வெண்முரசு – 21 – நூல் இருபத்தொன்று – இருட்கனி