பெரியார் இன்றும் என்றும் Quotes
பெரியார் இன்றும் என்றும்
by
Periyar43 ratings, 4.49 average rating, 2 reviews
பெரியார் இன்றும் என்றும் Quotes
Showing 1-30 of 57
“மக்களின் அறிவுக்கு தடை விதிக்கும் எதையும் அழி”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“தோழர்களே ! நாம் எதிர்க்கும் நான்கு சாதி முறையைக் கடவுளின் பேரால் வலியுறுத்தத்தான் கீதையும், கிருஷ்ண பஜனையும் என்பது நினைவிருக்கட்டும்.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“எல்லாம் - உங்கள் மதக் கடவுள்களெல்லாம் - உங்கள் கடவுள் கட்டளையெல்லாம் 'பொறு, பொறு அவசரப்படாதே; உனது வாழ்வில் உள்ள எல்லா இழிவுகளையும் பொறுமையோடு பொறுத்துக் கொண்டிருந்தால் - நீ செத்தபிறகு மேல் லோகத்தில் கடவுள் உன்னுடைய பொறுமைக்காக நல்ல சன்மானம் கொடுப்பார். அடுத்த ஜென்மத்தில் நல்ல பிறவி பெறுவாய். 'பொறுத்தார் பூமியாள்வார்' என்றுதான் உபதேசிக்கும். இந்த உபதேசத்தை ஆயிரக்கணக்கான வருஷங்களாகக் கேட்டு கேட்டு, அதன்படி பொறுமையாய் இருந்து வந்ததின் பலன்தான் இன்றும் இன்னமும் நீங்கள் பொறுமையாகவே இருந்து, இழிவடைந்து, கஷ்டப்பட்டுச் சீக்கிரம் செத்து, கடவுளிடம் சன்மானம் பெறவேண்டியவர்களாக இருக்கிறீர்கள்.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“ஒரு மனிதன் - முதலாவதாகத் தனது நெற்றியைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் படியான அறிவில்லாத ஒரு மனிதன் - எப்படிச் சமதர்மத்திற்கேற்ற அறிவுடையவனாகக் கருதப்பட முடியும்? அறிவின்மை என்பதைக் காட்டுவதுதானே நெற்றிக்குறி?”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“கஷ்டப்பட்டுச் சாப்பிடுவதற்கென்றே மனிதன் பிறந்தான் என்று சொல்லுவதானால் மனித சமூகம் இல்லாமல் போவதே மேலான காரியமாகும். மக்கள் கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டும் என்று சொல்லி கஷ்டப்பட மார்க்கம் தேடுவதைவிட, மக்கள் இல்லாமலே போவதற்குச் செய்யப்படும் காரியம் மிகவும் நல்லதாகும்.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“நானும் இப்போராட்டம் நடந்தே தீரும் - அதன் மூலமாவது பெரிய குற்றமென்று சொல்கிறார்களே (தேசிய கொடியை எரிப்பது) அதற்காகவாவது சில வருடங்கள் சிறைவாசம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று ஆவலோடு இருந்தேன். என் உடல் நிலையைப்பற்றி கூட கவனிக்காது உடல் நிலையில் பலவிதமான குறைகள் இருந்தும் டாக்டரிடம் காட்டிச் சரிசெய்து கொள்ளாமல் இருந்துவிட்டேன். ஏன்? சொந்த செலவில் ஏன் காசை வீணாக்கவேண்டும்; சிறைக்குச் சென்றவுடன் அரசாங்கச் செலவில் பார்த்துக்கொள்ளலாம் என்றெல்லாம் ஆசையுடன் இருந்தேன். ஆனால், தற்சமயம் அவ்வித வாய்ப்புக்கு இடமின்றிப் போய்விட்டது”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“வெந்ததைத் தின்று, வாயில் வந்தததைப் பேசிவிட்டு, வீணே முதுமைக்கும் நோய்க்கும் ஆளாகி நமக்கு இஷ்டமில்லாமல் சாவதை விட - இப்படிப்பட்ட ஏதாவது ஒரு காரியத்திற்காகவாவது அல்லது இம்மாதிரியான ஒரு சிறிய நன்மை உடைய காரியத்துக்காகவாவது வாழ்ந்து மறைவது அறிவுடைய காரியம்.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“இன்றைக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் ஸ்டிரைக், ரகளை என்று காலித்தனத்திற்கு முற்பட்டுவிட்டது வேதனை அளிக்கின்றது. நமது நாட்டுக் கல்வி முறையானது மாற்றி அமைக்கப்படாக வேண்டும். இன்றைய காலித்தனத்திற்குக் காரணமே கல்வியின் அஜீரணம்தான்.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“மேலை நாடுகளில் 'சுதந்திர நாள்' 'சுதந்திர ஆண்டுவிழா'க் கொண்டாடுவது போல், நம் நாட்டில் சுதந்திர நாள், ஆண்டுவிழாக் கொண்டாடுவது - புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொண்டதைப் போலாகும்.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“சில முஸ்லிம் தலைவர்கள் மதத்தைப் பற்றியே அதிக கவலையுடையவர்களாக இருக்கிறார்கள். மதம் மக்களின் தனிப்பட்ட உரிமையாக இருக்கவேண்டுமே தவிர, மதத்திற்காக மக்கள் வாழவேண்டுமென்று நினைப்பது அறிவீனம்.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“தேவதாசி என்று மதிப்பாக குச்சிக்காரி கூறிக்கொள்வது போலல்லவா இருக்கிறது இந்த சுயராஜ்ய ஆட்சியின் தன்மை.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“இப்படிப்பட்ட பாராளுமன்றத்தினால் நாம் ஒன்றும் சாதித்துக்கொள்ள முடியாது. எல்லா வசதிகளும் அவன் கையில். எல்லாச் சாமான்களும் அவனிடம் கேட்டு வாங்க வேண்டும். வடநாட்டானின் அரசாங்கத்தின் தயவில்லாமல் நாம் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற நிலையில் வைத்துக்கொண்டு, நம்மை அடிமைப்படுத்தி வைக்கிறான். நம்நாடு மற்ற நாடுகளைப் போல முன்னேற வேண்டுமானால் நம்நாடு பிரிந்தே ஆகவேண்டும்.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“உலகக் கல்வி வேறு; பகுத்தறிவு வேறு; பட்டம் வேறு. பெரிய டாக்டராய் இருப்பான் - ஆனால் அவனும், மூத்திரமும் சாணியும் சாப்பிட்டால் ஒருவன் மோட்சத்துக்கு போகலாம் என்று நினைப்பான்.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“கடவுள்பக்தி, மதபக்தி ஆகியவைகள் போலவே , இந்த தேசபக்தியும் மனிதனின் அறிவு வளர்ச்சியை நாசமாக்கிவிடுகின்றது.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“அறிவு வேறு; மதம் வேறு என்று பிரித்துவிட வேண்டும். அறிவை உண்டாக்கி விட்டு, பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தை கொள்ளும்படி செய்ய வேண்டும். அப்படிக்கில்லாமல், மதத்தை புகுத்தி அதன் மூலம் அறிவை வளரவிடாமல் செய்துவிட்டால் சுதந்திர ஞானம் எப்படி ஏற்படும்.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“பார்ப்பானைக் கூப்பிட்டுத் திதி கொடுக்கிற தமிழன்; எப்படித் தன்னைச் சூத்திரன் அல்லன் என்று சொல்லிக்கொள்ள முடியும்?”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“நாங்கள் பாமர மக்களால் வெறுக்கப்படுவதினாலேயே எங்கள் தொண்டின் மேன்மையை உணருகிறோம். பாமரமக்கள் மதித்து பக்தி செலுத்திப் புகழும்படியாக நடந்துகொண்டவர்களுடைய எப்படிப்பட்ட தொண்டும், அபிப்ராயமும் அவர்களது வாழ்நாளுக்குப் பின் பயன்பட்டதாக எங்களுக்கு ஆதாரமே கிடைக்கவில்லை. அப்படிப்பட்டவர்களால் மனித சமூகம் திருத்தப்பாடு அடைந்ததாக எவ்வித ருசுவும் இதுவரை கிடைத்ததில்லை.
நாமறிய ஒரு காலத்தில் திலகர் புகழப்பட்டார்; பெசண்ட் அம்மையார் புகழப்பட்டார்; காந்தியும் புகழப்படுகிறார். சரித்திரத்தில் எத்தனையோ ஆச்சாரியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ பேர் புகழப் பட்டதாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் 'தெய்வீகம்' கற்ப்பிக்கப்பட்டார்கள்; பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களாளெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயனாவது மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ஏற்படும் என்கின்ற குறியாவது காணப்படுகின்றதா? இவர்கள் எல்லாம் புராணங்களுக்குப் புதிய உரை எழுதுகிற உரையாசிரியர்கள் போல் தோன்றி, பாமரர்களுடைய பக்திக்கும் பூசைக்கும் பாராட்டுதலுக்கும் ஆளாகி, முட்டாள்தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய்ப் புகழ் பெற்று வருகிறோமே என்கின்ற உணர்ச்சியுடனும்தானே செத்தார்கள் - சாகின்றார்கள் - சாகப்போகின்றார்கள் என்று சொல்லவேண்டி இருக்கிறதே தவிர, கண்கண்ட பயன் என்ன என்று பாருங்கள் !
இன்று உண்மையில் மனித சமூகத்திற்கு ஏதாவது புதிய மாறுதல், உணர்ச்சி அல்லது புரட்சிகரமான சுதந்திரம், விடுதலை, சமத்துவம், சுயமரியாதை என்பதான உணர்ச்சி தோன்றி இருக்குமானால் - அவை அனைத்தும் ஒரு காலத்திலோ, நேற்றோ, இன்றோ - கல்லடிபட்டு, கொல்லப்பட்டு, காயடிக்கபட்டு, தொல்லைப்பட்டு உயிர் துறந்த, உயிர் வாழ்கின்ற - வெறுக்கப்பட்ட மக்களாலேதான் என்பது ஆராய்ந்து பார்க்கின்ற எவருக்கும் சுலபத்தில் புலப்படும்.
அப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் மக்களின் தன்மை உயர வேண்டுமென்று கருதித் தொண்டாற்றியவர்களே ஒழிய, மக்கள் தங்களைப் போற்றிப் புகழ்ந்து பூசிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அல்லர்.”

“மகாபாரதத்தில் வருகிற திரவுபதி என்கின்ற பெண்ணை மணந்த அர்ச்சுனன் அவளைப் படாதபாடு படுத்துகிறான். அவளைத் தனக்கு மனைவியாக அமைத்துக் கொண்டது மட்டுமின்றித் தன்னுடன் பிறந்த மற்ற நான்கு பேர்களுக்கும் மனைவியாக இருக்கவேண்டும் என்று அவளை - 'கோவாப்ரேடிவ் லிமிடெட் கம்பெனி சொஸைட்டி'யைப் போல் - அனுபவிக்கின்றனர்.
இதற்குத் திரவுபதி மறுத்துக் கூறவே இல்லை. அவளும் அப்படியே கணவன் சொன்னபடியே மொத்தம் அய்ந்து பேர்களுக்கும் 'டைம் டேபிள்' குறித்துக்கொண்டு, அதன்படி அய்ந்து பேர்களையும் அனுபவித்து வருகிறாள். அப்படிக் கணவன் சொல்லைக் கேட்டதால் அவள் பதிவிரதை நம்பர் 2...என்று ஆக்கப்பட்டாள்.”

“முன்னோர் கூறியது என்றோ, முன்னோர் செய்தது என்றோ எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள் ! நெருப்பென்மதே என்னவென்று தெரியாத காலத்தில் சக்கிமுக்கிக் கற்களால் நெருப்பை உண்டாக்கியவன் - 'அந்த காலத்துக் கடவுள்'தான்; 'அந்த காலத்து எடிசன்'தான். அதைவிட மேலான வத்திப்பெட்டி வந்த பிறகு எவனாவது சக்கிமுக்கிக் கல்லைத் தேடிக் கொண்டு திரிவானா நெருப்புண்டாக்க ? அப்படித் திரிந்தால் அவனைப் பைத்தியக்காரன் என்றல்லவோ உலகம் மதிக்கும் ! அக்காலத்திய புத்தி எவ்வளவு, இக்காலத்திய புத்தி எவ்வளவு - இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா? அக்காலத்தில் எது பெருமையாய் பேசப்பட்டதோ அதையே இக்காலத்திலும் பெருமையாகப் பேசமுடியுமா?”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“ஒரு குழவிக் கல்லுக்கு 1000 மனைவிகள் இருக்கலாம்; இருந்தாலும் அதை தெய்வம் என்று தொழுவார்கள். நமது முதன் மந்திரியார் அன்றாடம் போற்றிப் புகழ்ந்துவரும் இராமபிரானின் தந்தை தசரதருக்கோ, ஒன்றல்ல - ஆயிரமல்ல - 60 ஆயிரம் மனைவிமார்கள் ! இருந்தாலும், இராமாயணம் ஒரு பக்தி நூலாகக் கருதப்படும். கீதையை உபதேசித்த கிருஷ்ணனுக்கோ 10 ஆயிரம் மனைவியர்; ஓர் இலட்சம் வைப்பாட்டிகள். கிருஷ்ணனுடைய நடத்தை இவ்வளவு மோசமாக இருந்தாலும் இதற்காக கீதை படிப்பவர்கள் யாரும் வெட்கப்பட மாட்டார்கள். ஏன்? அவர்களெல்லாம் மகான்கள்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நம்மவர் தொழும் கடவுள்களில் 100-ல் 90க்கு - இரண்டு மனைவிகளுக்குக் குறையாமலிருக்கும். இரண்டு மனைவிகள் போதாமல் தாசி வீட்டிற்கு வேறு அழைத்துச் செல்லப்படும்; இருந்தாலும் கடவுள்கள் பூஜிக்கப்பட வேண்டியவைகள். இப்படிப்பட்ட கடவுளைத் தொழும் அன்பர்கள் எப்படி ஒழுக்கமாக இருப்பார்கள்? இத்தகைய ஒழுக்கக்கேடான கடவுளைத் தொழுகிறோமே என்கின்ற நினைப்பாவது எப்போதேனும் தோன்றுகிறதா உங்களுக்கு? மதமும், கடவுளும் ஒழுக்கத்தைக் கெடுக்க உண்டாக்கபட்டனவா, அல்லவா? இதைக்கூட உணராது மிருக வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்களே! இது நலமா?”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“ஆழ்ந்து யோசித்தால், காதல் என்பதின் சத்தற்ற தன்மை, பொருளற்ற தன்மை, உண்மையற்ற தன்மை, நித்தியமற்ற தன்மை, அதைப் பிராமதப்படுத்துவதின் அசட்டுத்தனம் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக்கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் 'சரஸ்வதியைக்' கொண்டே மலம் துடைத்தும் - அவர்களில் 100-க்கு 100 ஆண்களும் 100-க்கு 60 பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்ற ஒரு தெய்வம் இருக்குமானால் பூசை செய்பவர்களைத் தற்குறிகளாகவும், தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்பதை தயவுசெய்து யோசித்துப் பாருங்கள்.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“சங்கராச்சாரியைக் கைது செய்ததற்காக டில்லி அரசாங்கத்தினைப் பாராட்டுகிறேன். எனது தோழர்கள் நாடு முழுவதும் சர்க்கரை, மிட்டாய், பப்பர்மின்ட் முதலியவைகளை மக்களுக்கு வழங்க வேண்டுகிறேன்.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“எனக்குத் தெரிந்த உண்மை அனுபவத்தைச் சொல்லுகிறேன். சேலத்தில் சைக்கிள் திருடி தண்டனையடைந்த ஒரு பார்ப்பான் வடநாடு சென்று, 'சங்கராச்சாரி சுவாமிகள்' ஆகிவிட்டான் !”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“நம்மை மகாராஜனாகவும், ஷேமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம் - யோக்கியமுடையதும் உண்மையுடையதுமானால் தன்னையே ஆசீர்வாதம் செய்துகொண்டு செல்வவானாய், சீமானாய் இருக்கும்படி செய்துகொள்ளலாமல்லவா? நம்மிடம் பிச்சைக்கு வருவானேன்?”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“கோயிலில் போய் பூப் போட்டுக் கேட்கிறோமே - சிறிதாவது சிந்திக்க வேண்டாமா? நீ போய் தங்கையையும் அண்ணனையும் பூப் போட்டுக் கேட்டால் - இது வேண்டாம் என்று அந்தச் சாமி கூறுமா? ஒரு கழுதை பிறந்த நேரத்தை சாதகம் குறித்துக் கேட்டால், "இது கழுதையின் சாதகம்; வேண்டாம்" என்று கூறுமா? அம்மாள் - மகள் இருவருடைய பெயரையும் எழுதி அவர்களுடைய மகனுக்குக் கட்டலாமா என்று கேட்டால் அந்தச் சாமி என்ன செய்யும்? 'இருவருமே இலாயக்கில்லை' என்று கூறுமா? இரண்டில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொடுத்துவிடும் !
மற்றும் குருவி, கழுகுகளிடம் சோதிடம் பார்ப்பது என்பதெல்லாம் மிகவும் மடத்தனமான காரியமாகும். சாதகம், பொருத்தம், நல்ல நேரம் என்று பார்த்து நம்முடைய வசதியைக் கெடுத்துக்கொள்கிறோம். நல்ல நேரம், இராகு காலம், எமகண்டம் என்று பார்க்கிறார்களே - இவர்களுக்குக் கோர்ட்டில் ஒரு கேஸ் விசாரணை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கு நல்ல கொளுத்த, இராகு காலம் என்று சொல்லப்படும் நேரத்தில் அவன் 'இராமசாமி ! இராசாமி !' என்று கூப்பிட்டால், இவன், 'இப்போது இராகு காலம்; நான் வரமாட்டேன்' என்று கூறுவானா? துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு குடு குடு என்று - எங்கே சீக்கிரம் போகாவிட்டால் வழக்கைத் தள்ளிவிடப் போகிறானோ என்று ஓடிப்போய், 'வந்தேன் !' என்றுதானே கூறுவான்? அப்போது எங்கே போயிற்று இராகு காலம் ?
எமகண்டத்திலே இரயிலும் பஸ்ஸும் புறப்படுகிறது. 'கொஞ்சம் இரு; இப்போது இராகுகாலம்' என்று கூறினால் அது நிற்குமா ? அதில்தானே ஏறிச்செல்கிறான் ? இதையெல்லம் நன்றாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.”

“யாவரும் வெறுக்கும் மலம் முதற்கொண்டு ஒவ்வொரு வஸ்துக்கும் அதனதன் பிறந்த நேரத்தின் பயனாய் பலாபலன் இருந்து வந்தால்தான், சாதகம் என்பதாக ஒன்று இருக்க முடியுமேயொழிய, மனிதனுக்கு மாத்திரம்தான் சாதகம் சொல்ல முடியும் என்றால் அதை யார் ஒப்புக்கொள்வார்கள்?”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறுபெயர் சொல்லவேண்டுமானால் 'பேராசை' என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.
படித்து 'பாஸ்' செய்யவேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என்றால்; பணம் வேண்டியவன் பிரார்த்தனையில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால்; மோட்சத்துக்குப் போகவேண்டும் என்கின்றவன் பிரார்த்தனையில் மோட்சத்துக்குப் போகவேண்டும் என்றால் இவைகளெல்லாம் பேராசை என்று சொல்லுவதோடு, வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும் மோசடியும் ஆகும் என்று சொல்லுவதுதான் மிகப் பொருத்தமாகும்.
பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை.
விதை நட்டுத் தண்ணீர் பாய்ச்சாமல் அறுப்பு அறுக்க அரிவாள் எடுத்துக் கொண்டு போகிறவனுக்கும், யோக்கியமான காரியங்களைச் செய்யாமல் கடவுள் கருணையை எதிர்ப்பார்பவனுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.”

“நமது நாட்டுலுள்ள எல்லாக் கெட்ட காரியங்களுக்கும் 'நமது நாட்டுக் கடவுள்'களே வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். அதாவது சூது, வாது, வஞ்சகம், பொய், புரட்டு, திருட்டு, விபச்சாரம், குடி, கூத்தி, கொலை, ஜீவ இம்சை முதலிய எந்தக் கெட்ட தொழிலை எடுத்துக்கொண்டாலும் - சில கடவுள்களிடத்தில் இவை யாவும் மொத்தமாகவும், சில சில கடவுள்களிடத்தில் தனித்தனியாகவும், சில்லரையாகவும் ஏற்படுத்தப்பட்டிருப்பதை பார்த்து வருகிறோம்.”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்
“பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளை என்பது போல், நாம் கட்டின கோயிலைக்கொண்டு வயிறு வளர்க்க ஏற்பட்டவர்கள் இப்போது நம்மை வெளியில் தள்ளிக் கதவைச் சாத்துவதென்றால் நமது மானங்கெட்ட தன்மைக்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?”
― பெரியார் இன்றும் என்றும்
― பெரியார் இன்றும் என்றும்