சதுரங்கக் குதிரைகள் Quotes

Rate this book
Clear rating
சதுரங்கக் குதிரைகள் சதுரங்கக் குதிரைகள் by Giriraj Kishore
4 ratings, 4.50 average rating, 1 review
சதுரங்கக் குதிரைகள் Quotes Showing 1-3 of 3
“அந்நாட்களில் ரயில்நிலையங்களில் ஹிந்து தண்ணீர், முஸ்லீம் தண்ணீர் என்று இருவகையாகத் தண்ணீர் கிடைக்கும். ஹிந்துத் தண்ணீர் குடிப்பதிலும் ஹிந்துக்களுக்கு ஆட்சேபணை இருந்து வந்தது. ஹிந்துக்களிலும் பலவகைகள் உண்டல்லவா?. எந்த ஹிந்து தீண்டினானோ, எப்போது தீண்டினானோ என்பது சந்தேகம். பாலைத் திரிக்க மோர் வேண்டும், ஆனால் ஹிந்துக்களைத் திரிக்க தண்ணீரே போதும்.”
Giriraj Kishore, சதுரங்கக் குதிரைகள்
“சின்னவர் இரவில் நெடுநேரம் கழித்தே வீடு திரும்புவார். சின்னவரின் இயல்பில் விளைந்த மாற்றம் பெரியவரின் கவலைக்கு காரணமாயிற்று. அந்நாட்களில் விடுதலை இயக்கம் தீவிரமாக இருந்தது. அந்நாட்களில் இரவில் தாமதமாக வீடு திரும்பும் இளைஞர்களும், நடுத்தர வயதினரும், ஒன்று வேசி வீட்டில் கிடப்பவர்களாக இருப்பார்கள் அல்லது காங்கிரஸ் காரியாலயத்தில் காலங்கழிப்பவர்களாக இருப்பார்கள். இரண்டு இடங்களுமே வீட்டினரை கலக்கத்தில் ஆழ்த்துபவைதான்.”
Giriraj Kishore, சதுரங்கக் குதிரைகள்
“ஆயிரத்து எண்ணூற்று ஐம்பத்தெழாம் வருட சிப்பாய் கலகத்தின் போது, அந்த தோப்பில்தான் தேச பக்தர்களை தூக்கிலிட்டும், துப்பாக்கியால் சுட்டும், கழுவில் ஏற்றியும் கொன்றுவிட்டார்கள். பல மரங்களில் குண்டுபட்ட அடையாளங்கள் இன்னும் இருப்பதாகச் சொல்வார்கள். இருந்தனவோ என்னவோ, ஜனங்கள் கீழே நின்று "இதோ தெரிகிறது பார் குண்டடிப்பட்ட இடம், இதோ தெரிகிறது பார்" என்று காட்டுவார்கள். சிலர் "ஆமாம், அதோ தெரிகிறதே!"என்பார்கள். சிலர் "எங்கே... தெரியவில்லையே" என்பார்கள். காட்ட வந்தவன் கடைசியில் "உனக்கு தெரியாது, நீ அவநம்பிக்கைக்காரன் ஆயிற்றே, எப்படித்தெரியும்?" என்று சொல்லிவிடுவான். தேசபக்தர்கள் கொற்றைக்காய்களாக அந்த மரங்களில் தொங்கினார்களாம்.

ஆளடித்தான் தோப்பு பேய்கள் உலாவும் இடமாக கருதப்பட்டது. அகால இரவில் அந்தப்பக்கம் போனால் செத்தவர்களில் ஆவி மரங்களில் தொங்கிய வண்ணம் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும், 'பாரத மாதா கீ ஜெய்' என்று கத்திக்கொண்டு இருக்கும் என்று ஜனங்கள் பேசிக்கொள்வார்கள். யாராவது வருவதைக் கண்டால் மாயமாக மறைந்துவிடுமாம், சில சமயங்களில் நாட்டை நினைத்து அழுமாம்.”
Giriraj Kishore, சதுரங்கக் குதிரைகள்