Elveda Gülsarı Quotes
Elveda Gülsarı
by
Chingiz Aitmatov1,831 ratings, 4.27 average rating, 156 reviews
Elveda Gülsarı Quotes
Showing 1-15 of 15
“தானாபாய் நினைத்துக் கொண்டது போல அப்படி ஒன்றும் அவன் கிழவனல்ல. ஆனால் மனிதனைக் கிழவனாக்குவது வயதின் சுமை மட்டுமல்லவே. கிழவனாகிவிட்டேன், என் காலம் கடந்துவிட்டது, இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன் என்னும் நினைப்பு அல்லவா இன்னும் அதிகமாகக் கிழவானாக்கிவிடுகிறது.”
― Elveda Gülsarı
― Elveda Gülsarı
“தானாபாய், உன்னிடம் பேச வேண்டும். இப்படி என்னைப் பார். நண்பர்களாகப் பேசிக்கொள்வோம் - கம்யூனிஸ்டுகளாக" என்று தொடங்கிய சோரோ நாக்கைக் கடித்துக்கொண்டு தயங்கினான்.
"நான் உன் நண்பனல்ல, இனி நான் கம்யூனிஸ்டும் அல்ல. நீயும் கூட கம்யூனிஸ்டாக இருந்து நீண்ட காலமாகிறது. கம்யூனிஸ்டைப் போல சும்மா வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறாய்...”
― Elveda Gülsarı
"நான் உன் நண்பனல்ல, இனி நான் கம்யூனிஸ்டும் அல்ல. நீயும் கூட கம்யூனிஸ்டாக இருந்து நீண்ட காலமாகிறது. கம்யூனிஸ்டைப் போல சும்மா வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறாய்...”
― Elveda Gülsarı
“கம்பத்தில் அவனுடைய குதிரைக்குப் பக்கத்தில் குல்சாரி கட்டப்பட்டிருந்தது. பருத்துப் பெரிதாகவும் வலுமிக்கதாகவும் அது நின்று கொண்டிருந்தது. தானாபாய் அருகே வந்ததும் காலை மாற்றி வைத்து நின்றது; அதன் கரிய விழிகளில் அமைதியும் அன்பும் ஒளிர்ந்தன. கவர்க்கோல் கொண்டு தானாபாய்த் தன் தலையில் நையப்புடைத்ததை அடியோடு மறந்து அது அவனை வரவேற்றது. குதிரை அல்லவா அது?
"குல்சாரி, நீ என்னை மன்னித்துவிடு" என்று தானாபாய் அதன் காதுக்குள் கூறினான். "நான் பெரிய இன்னலில் சிக்கித் துன்பப்படுகிறேன், என்னை மன்னித்துவிடு" என்று குதிரையின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு புலம்பினான். அருகாமையில் போய்க் கொண்டிருப்பவர்களுக்கு முன்னால் அழ வெட்கப்பட்டுக் கொண்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.”
― Elveda Gülsarı
"குல்சாரி, நீ என்னை மன்னித்துவிடு" என்று தானாபாய் அதன் காதுக்குள் கூறினான். "நான் பெரிய இன்னலில் சிக்கித் துன்பப்படுகிறேன், என்னை மன்னித்துவிடு" என்று குதிரையின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு புலம்பினான். அருகாமையில் போய்க் கொண்டிருப்பவர்களுக்கு முன்னால் அழ வெட்கப்பட்டுக் கொண்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.”
― Elveda Gülsarı
“நான் வாழ்ந்ததெல்லாம் இதற்குத்தானா?" என்று தொடர்ந்து தன்னைத் தானே கேட்டுக்கொண்டிருந்தான். "மலைகளில் கிடைகளுக்கு, மந்தைகளுக்கு என்ன நேர்ந்தால் இவர்களுக்கு என்ன? இங்கிருப்போர் யாரும் அது பற்றிக் கவலைப்படவில்லை. எவ்வளவு பெரிய முட்டாள் நான்! கூட்டுப் பண்ணைக்காக, அந்த ஆடுகளுக்காக, அவற்றின் குட்டிகளுக்காக என் வாழ்வைப் பாழாக்கிக் கொண்டேன். இப்பொழுது அதெல்லாம் குறித்து இவர்களுக்கு என்ன கவலை? இப்பொழுது நான் பயங்கரக் குற்றவாளி, அவ்வளவுதான்.”
― Elveda Gülsarı
― Elveda Gülsarı
“மூடிய கதவுகளுக்குப் பின்னால் எல்லோரும் கூடிவிட்டதாகத் தெரிந்தது. சில நிமிடங்களுக்கு முன்பு சோரோவும் உள்ளே போய்ச் சேர்ந்தான். அவன் தான் கடைசியாகச் சென்றவன். அவனுடைய பூட்சுகளின் உச்சியில் ஒட்டியிருந்த முடிகளைக் கொண்டு தானாபாய் அவனை அடையாளம் தெரிந்து கொண்டான். குலுங்கா நடையானின் பொன்னிற முடிகள் அவை. "அவசரமாகப் பறந்தோடி வந்திருக்கிறான், குல்சாரிக்கே நுரை தள்ளும்படி நேர்ந்திருக்கிறதே" என்று நினைத்துக் கொண்டான், ஆனால் தலையை நிமிர்த்தாமலே அமர்ந்திருந்தான். குல்சாரியின் வியர்வையும் முடிகளும் ஒட்டியிருந்த அந்த பூட்சுக் கால்கள் தானாபாயின் அருகே நின்று சில கணங்கள் தயங்கிவிட்டுப் பிறகு கதவுக்குப் பின்னால் மறைந்தன.”
― Elveda Gülsarı
― Elveda Gülsarı
“தானாபாய், ஏன் இப்படிப் பேசுகிறாய்?" என்று சோரோ இடைமறித்தான். "நடந்ததை விவரமாக விளக்கிச் சொல்லேன்."
"சரிதான், உனக்கும் நான் விவரமாய் விளக்கிச் சொல்ல வேண்டுமா? சோரோ நீ ஏன் இங்கே வந்தாய்?" என்று தானாபாய் கூச்சல் போட்டான். "நீ ஏன் இங்கே வந்தாய்? பதில் சொல்லு! ஆட்டுக்குட்டிகள் மடிகின்றன என்று சொல்லவா இங்கு வந்தாய்? அது எனக்குத் தெரிந்ததுதானே! கழுத்தளவுக்கு சாணத்தில் அழுந்திக் கிடக்கிறேன் என்று சொல்லவா இங்கு வந்தாய்? அது எனக்குத் தெரிந்ததுதானே! வாழ்வெல்லாம் பண்ணைக்காக உயிரை விட்டு வந்தேனே, நான் ஒரு முட்டாள் என்பதைச் சொல்லவா வந்தாய்? அதுவும் எனக்குத் தெரிந்ததுதான்!..”
― Elveda Gülsarı
"சரிதான், உனக்கும் நான் விவரமாய் விளக்கிச் சொல்ல வேண்டுமா? சோரோ நீ ஏன் இங்கே வந்தாய்?" என்று தானாபாய் கூச்சல் போட்டான். "நீ ஏன் இங்கே வந்தாய்? பதில் சொல்லு! ஆட்டுக்குட்டிகள் மடிகின்றன என்று சொல்லவா இங்கு வந்தாய்? அது எனக்குத் தெரிந்ததுதானே! கழுத்தளவுக்கு சாணத்தில் அழுந்திக் கிடக்கிறேன் என்று சொல்லவா இங்கு வந்தாய்? அது எனக்குத் தெரிந்ததுதானே! வாழ்வெல்லாம் பண்ணைக்காக உயிரை விட்டு வந்தேனே, நான் ஒரு முட்டாள் என்பதைச் சொல்லவா வந்தாய்? அதுவும் எனக்குத் தெரிந்ததுதான்!..”
― Elveda Gülsarı
“இது என்ன அநியாயம்! எங்கே பார்த்தாலும் இப்படி இருக்கிறதே! நடப்பது தெரிகிறதல்லவா?" என்று அவர் சோரோவைப் பார்த்துக் கடிந்துகொண்டார். பிறகு தானாபாய் பக்கம் திரும்பி "தோழரே, இது என்ன?" என்று கேட்டு, செத்துப்போன ஆட்டுக்குட்டிகளின் குவியலைச் சுட்டிக்காட்டினார். "நீ ஒரு கம்யூனிஸ்டாக இருக்க, உன்னுடைய ஆட்டுக்குட்டிகள் இப்படி மடியக் காரணம் என்ன?"
"நான் கம்யூனிஸ்டு என்பது அவற்றுக்குத் தெரிந்திருக்காது" என்று தானாபாய் வெடுக்கென்று பதிலளித்தான்.”
― Elveda Gülsarı
"நான் கம்யூனிஸ்டு என்பது அவற்றுக்குத் தெரிந்திருக்காது" என்று தானாபாய் வெடுக்கென்று பதிலளித்தான்.”
― Elveda Gülsarı
“சில அகம்பாவிகளும் அதன்மீது சவாரி செய்த்துண்டு. சேணத்தில் அமர்ந்திருக்கையில் இவர்களுக்கு அகம்பாவம் தலைக்கு ஏறிவிடும். குலுங்கா நடையான் வேகமாகப் பறந்தோடுகையில் இவர்கள் வெடுக்கென இழுத்து அதைப் பின்னங்காலில் உயர்ந்து நிற்கச் செய்வார்கள், பிறகு சவுக்கை வீசி மறுபடியும் ஓடச் செய்து திரும்பவும் குலுக்கி இழுத்து நிறுத்துவார்கள். குலுங்கா நடையான் மீது தாம் செல்வது எல்லோர் கண்ணிலும் பட வேண்டும் என்பது ஒன்றைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்கள்.”
― Elveda Gülsarı
― Elveda Gülsarı
“தாய் ஆடு ஒன்று தான் ஈன்ற இரட்டைக் குட்டிகளை நிராகரித்துவிட்டது. அவற்றை முட்டித் தள்ளிற்று, பால் குடிக்கத் தன்னை நெருங்க விடாமல் உதைத்து விரட்டிற்று. குட்டிகள் மீண்டும் மீண்டும் தாயிடம் ஓடின, கீழே விழுந்தன, பரிதாபமாகத் கத்தின. உயிரின் தற்காப்பெனும் கொடிய விதி செயல்பட முற்படுகையில் இப்படித்தான் நடைபெறும். தாய் ஆடு இன்னொரு உயிருக்கு ஊட்டமளிக்கும் தெம்பற்றதாகியதும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற உள்ளுணர்ச்சியால் உந்தப்பட்டுத் தனது குட்டிகளுக்குப் பாலூட்ட மறுத்து அவற்றை நிராகரிக்கிறது. தொத்து நோய் போல் இந்த நடத்தை கிடை முழுதும் தொத்திப் பரவுகிறது. ஒரு மறி இதைச் செய்ததும் உடனே ஏனையவையும் அதைப் பின் தொடர்ந்து தம் குட்டிகளை நிராகரிக்கின்றன.”
― Elveda Gülsarı
― Elveda Gülsarı
“தாய் ஆடுகளை இழந்த குட்டிகளை எடுத்து வந்து குட்டிகளை இழந்த மறிகளுடன் இணைத்திட வேண்டியிருந்தது. ஆனால் மறிகள் முட்டித் தள்ளின, தாம் அறியாத அந்நியக் குட்டிகளுக்கு அவை பால் கொடுக்க மறுத்தன. பாலுக்காகக் குட்டிகள் பரிதாபமாக கத்தின. குளிர்ந்த சின்னஞ்சிறு வாய் ஒவ்வொன்றும் சப்புவதற்குக் காம்பைத் தேடித் தவித்தது, தூக்கியவர்களின் கைவிரல்களைக் கவ்விக்கொண்டு சப்பிற்று. விரலை இழுத்துக்கொண்டு குட்டியைக் கீழே போட்டதும் மழைக்கோட்டுகளின் அழுக்குப் பிடித்த முனைகளைச் சப்பிற்று. குட்டிகள் பசியால் கத்திக்கொண்டு ஒன்றொடொன்று இடித்துக்கொண்டு காலுக்குப் பின்னால் ஓடி வந்தன.”
― Elveda Gülsarı
― Elveda Gülsarı
“இன்னும் இரண்டு வாரங்களில் திரும்பவும் அவர்கள் மலைகளுக்கு, புதிய மேய்ச்சல் வெளிகளுக்குக் குடிபெயர்ந்து சென்றாக வேண்டும். கோடை, இலையுதிர் காலம், குளிர் காலம் பூராவும் மலைகளில் இருந்துவிட்டு வசந்தத்தில்தான் திரும்புவார்கள். ஜாகை மாறுதல் பெருங்களேபரம்தான். நம்மிடம் இத்தனை சாமான்கள், இவ்வளவு அடைசல்கள் சேர்ந்தது எப்படியென்று ஆச்சரியமாயிருக்கும். தம்மை ஏழையென நினைப்போர் வீட்டை மாற்றிப் பார்த்தால் தெரியும் என்று கிர்கீஸ் முதுமொழி ஒன்று கூறுவதற்கு இதுதானே காரணம்?”
― Elveda Gülsarı
― Elveda Gülsarı
“பிறகு வெண்பனி பெய்ய ஆரம்பித்தது. அடிக்கடி பெய்தது. நெடுநேரம் உருகாமல் தரை முழுதும் மூடிக் கொண்டுவிட்டது. குதிரைகள் பாதத்தால் கிளறிவிட்டுப் புல் மேய வேண்டியிருந்தது.”
― Elveda Gülsarı
― Elveda Gülsarı
“Ծերանում է մարդը, իսկ հոգին չի ուզում հանձնվել, մեկ-մեկ վեր է թռչում ու ձայն է տալիս, կանչում:”
― Մնաս բարով Գուլսարի
― Մնաս բարով Գուլսարի
“Ի՞նչ կա որ, կյանքի կեսն անցնում է երազանքի մեջ, և գուցե հենց դրա համար էլ քաղցր է կյանքը: Գուցե կյանքը հենց նրա համար է թանկ, որ չի իրականանում այն ամենը, ինչ դու երազում ես:”
― Մնաս բարով Գուլսարի
― Մնաս բարով Գուլսարի
“... լավ կյանքը ինքն իրեն երբեք չի գլորվելու դեպի մեզ, ինչպես շատերն էին կարծում պատերազմից հետո: Նրան պետք է միշտ ու հավիտյան հրել ուսով, քանի կենդանի ես... Բայց վատն այն է, որ նա միշտ էլ իր սուր անկյունն է դեմ անում մեր ուսերին, ուսներս արդեն սպիներով են ծածկված: Է՜, սպիներն ի՜նչ, միայն հոգին գոհ լինի նրանով, ինչ որ դու անում ես, ինչ որ ուրիշներն են անում, և որպեսզի այդ արածներից երջանկություն լինի...”
― Մնաս բարով Գուլսարի
― Մնաս բարով Գուլսարի
