Kanni Quotes
Kanni
by
ஜெ. பிரான்சிஸ் கிருபா49 ratings, 4.22 average rating, 11 reviews
Kanni Quotes
Showing 1-30 of 84
“நீ பிறந்த நாளை எடுத்து
திருத்தமாக உடுத்திக்கொண்டு
பின்தொடரும் என் நிழலை
திரும்பித் திரும்பிப் பார்த்து
திசை யூகித்து வருகிறேன்”
― Kanni
திருத்தமாக உடுத்திக்கொண்டு
பின்தொடரும் என் நிழலை
திரும்பித் திரும்பிப் பார்த்து
திசை யூகித்து வருகிறேன்”
― Kanni
“உடைமரங்களுடே நெளிந்து சென்ற ஒற்றையடிப் பாதை முடிந்து வெளி விஸ்தீரணமடைந்த போது திடீரென்று கடல் எதிரே விரிந்து கிடந்தது. மிக அமைதியாக, சிறு முணுமுணுப்பும் செய்யாமல். சில நிமிடங்கள் அந்த இடத்திலேயே பிரமித்து வியப்பில் சிலையாகி நின்றுவிட்டான். ஒடுக்கமான கரை இரு பக்கமும் நீண்டு சென்று வளைந்தது. வகுப்பறையில் கலகலப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள் வாத்தியார் வந்ததும் அடங்கிப் போகுமே அப்படி கடல் அடங்கிப் போய் செயற்கை அமைதியைச் சேர்த்துக்கொண்டது போலிருந்தது. நீலமும் பச்சையும் கலந்த அதன் நிறம் மிக அழகாகக் கண்களைக் கவர்ந்தது. அதே நேரம் பெரும் அச்சத்தையும் அவசர சந்தேகங்களையும் உண்டாக்கியது. கரையில் ஆள் நடமாட்டமே இல்லை. கடலில் ஒரு அலை கூடத் தென்படவில்லை.
தேரித்துறை கடல் அலைகளால் ஆனது. சதா இரைச்சலிட்டுக் கொண்டே இருக்கும். திரள் திரளாய் நுரை புரளும் அதைப் பார்க்க பயம் தோன்றுவதில்லை. ஆனால் கல்லுளிமங்கனாகக் கிடக்கும் இந்தக் கடல் அவன் முகத்தை வியர்க்கக்கூட வைத்தது. சீக்கிரமே அங்கிருந்து வந்த வழியே திரும்பிவிட்டான். சில எட்டுகள் நடந்த பிறகு நின்று தலையைத் திருப்பிக் கடலைப் பார்த்தான். அது முன்பு போலவே 'உம்' மென்றிருந்தது. தூரதொலைவில் கூட அலைகளுக்கான அறிகுறிகளைக் காணோம். பள்ளியில் பரிட்சைக்கு லீவு விட்டதுபோல கடலில் அலைகளுக்கும் லீவு விட்டிருப்பார்களோ என்று நினைத்துக்கொண்டான். அப்பாவிடம் விசாரித்தபோது 'அது பெண் கடல்' என்றார்.”

“உதட்டில் சுடர்ந்த
உன் உயிரின் இளவெயிலை
உனக்குத் தெரியாமல்
உறிஞ்சி சூரியனானேன்.
தெரிந்ததும் திடுக்கிட்டாய்.
வானத்தை நோக்கி நீ
கோபத்தில் எறிந்த கற்கள்
மேகத்தைத் தாண்டியதும்
விண்மீன்களாயின.
உன்னைப் பார்த்து நிலா
என்றுணர்ந்து மின்னிச் சிரித்து
என்னைக் காண
கிழக்கில் தேடுகின்றன.
அமுதவெளியைப் பருகித் திளைத்து
அம்மாவென உனை அழைக்கின்றன.
தேயாத நிலவாய் நிலைக்குமா
என் அழிவற்ற கனவு?”
― Kanni
உன் உயிரின் இளவெயிலை
உனக்குத் தெரியாமல்
உறிஞ்சி சூரியனானேன்.
தெரிந்ததும் திடுக்கிட்டாய்.
வானத்தை நோக்கி நீ
கோபத்தில் எறிந்த கற்கள்
மேகத்தைத் தாண்டியதும்
விண்மீன்களாயின.
உன்னைப் பார்த்து நிலா
என்றுணர்ந்து மின்னிச் சிரித்து
என்னைக் காண
கிழக்கில் தேடுகின்றன.
அமுதவெளியைப் பருகித் திளைத்து
அம்மாவென உனை அழைக்கின்றன.
தேயாத நிலவாய் நிலைக்குமா
என் அழிவற்ற கனவு?”
― Kanni
“நீ என்னைக் காதலிக்க வேண்டாம். முத்தம் தர வேண்டாம். காதலிக்கிறேன்னு கூட சொல்ல வேண்டாம். காதலிக்கலைனு சொல்லாம இருந்தா போதும். நான் காதலிப்பேன் மூச்சு முட்ட முட்ட...”
― Kanni
― Kanni
“எட்டுக் கொலைகளை ஒரே நேரத்தில் செய்துவிட்டுத் தன் நெற்றிப்பொட்டை அலட்சியமாகச் சரி செய்யும் கொலைகாரியைப் போல் பயங்கரம் தோன்ற நடந்து வந்தாள்.”
― Kanni
― Kanni
“உன்னை உன்னிடம் கேட்பேன்.
ஏழு முறையல்ல எழுபது முறையல்ல
எல்லா முறையிலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்.
மண்டியிடுவேன் மன்றாடுவேன்
துளி நீரும் பருகாமல்
மறுகியுலர்வேன்.
மரிக்கும் கணத்திலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்.
கடவுளிடம் கூட அல்ல.”
― Kanni
ஏழு முறையல்ல எழுபது முறையல்ல
எல்லா முறையிலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்.
மண்டியிடுவேன் மன்றாடுவேன்
துளி நீரும் பருகாமல்
மறுகியுலர்வேன்.
மரிக்கும் கணத்திலும்
உன்னை உன்னிடம் கேட்பேன்.
கடவுளிடம் கூட அல்ல.”
― Kanni
“உண்மையில் மன்னிப்பு என்றால் என்ன?"
"ஒருவருக்கு இழைத்த தவறை ஒருவர் திருத்திக்கொள்ள பாதிக்கப்பட்டவர் தரும் ஒரு சந்தர்ப்பமும் ஒத்துழைப்பும்.”

"ஒருவருக்கு இழைத்த தவறை ஒருவர் திருத்திக்கொள் பாதிக்கப்பட்டவர் தரும் ஒரு சந்தர்ப்பமும் ஒத்துழைப்பும்.”

“உடைகளைத் தேர்ந்தெடுத்து உடுத்திக்கொண்டு ஆலயத்துக்கு வருவதுபோல் சாராவிடம் அணிந்துகொள்ள இதயங்களும் பல டிசைன்களில் இருந்தன. இன்று அணிந்திருந்தது இரும்பிலான, இஞ்சி தின்ற குரங்கு டிசைன்.”
― Kanni
― Kanni
“தெரிந்தோ தெரியாமலோ உன் காலடி மண்ணெடுத்து ஒரு பூமி செய்துவிட்டேன். உன் ஈரக் கூந்தலை கடலாகச் செய்யும் முன்னே கடந்து போய்விட்டாய். உயரத்திலிருந்து சூரியனாய் வருத்துகிறது ஒற்றைப் பார்வை. வெப்பத்தில் வறள்கிறது எனது சின்னஞ்சிறிய பூமி. நீருற்று தேடிக் கிணறுகள் தோண்டினால் பீறிட்டடிக்கிறது ரத்தம். கண்ணே, இரண்டொரு தீர்த்தமணிகளைத் தானமிடு.”
― Kanni
― Kanni
“பட்டப் பகலுடுத்திப் பவள ஒளி தெறிக்க நிலத்தில் நடந்து செல்லும் முதல் நிலவு நீயென்றால் இல்லை இல்லையெனப் பதறி நீ மறுக்கலாம். என்றாலும் சின்னச் சின்ன நடையிட்டு அள்ளித் தின்னும் ருசியோடு மண்ணைச் சமைக்க உன்னால் மட்டும்தான் முடிகிறது.”
― Kanni
― Kanni
“கல்லெறியும் தூரத்தில் இருந்த குளத்துக் கரையை அடைந்த போதுதான் தெரிந்தது அது ஒரு ரயில் சாலை என்று. அதன்மீது ஏறி நின்று தலையை வட்டமடித்துப் பார்த்தான். ரயில் சாலை அதன் போக்கில் இரண்டு பக்கமும் நீண்டு போய் தொலைவில் ஓடுங்கியது. ரயில் சாலையில் மிக நீளமான ஏணியொன்று கிடத்திப் போடப்பட்டிருந்தது. அந்த ஏணியில் ஏறிச் செல்வதென்று முடிவெடுத்து கவனமாக ஏறிச் சென்றான். அது ஒன்றும் பெரிய சிரமமாக இல்லை. தரையில் சமனமாக நடப்பது போல்தானிருந்தது. படிக்கட்டுகள் ஏற்படுத்தும் களைப்பை அவை உண்டாக்கவில்லை.
குனிந்து கைநிறைய ஜல்லிகளை அள்ளினான். ஒவ்வொன்றாய் இலக்கின்றி உயரே வீசியெறிந்தான். ஜிவ்வென்ற ஓசையெழும்பியது. இரண்டு கற்கள் மீதமிருந்த நிலையில் எதிரே தூரத்தில் ரயில் சாலையில் சதுரமாக ஏதோ தென்பட்டது. கருகிய செங்கல் போலத் தோற்றமளித்தது. புகை புறப்பட்டு உயரே செல்வதை கவனிக்க முடிந்தது. ரயில்தான் வந்து கொண்டிருந்தது. ரயில் இச்சந்தர்ப்பத்தில் மிக அநாகரிகமாக நடந்துகொள்வதாக அவனுக்கு மனத்தாங்களும், கோபமும் மூண்டது. ஒரு மனிதன் அதிலும் பல விசித்திர சக்திகள் நிறைந்த வீரன் இந்த ஏணியில் ஏறி வந்துகொண்டிருக்க ரயிலுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் அதே ஏணியில் இறங்கி வரும்? அதன் பணிவற்ற செயலால் இன்னும் சில நிமிடங்களில் யார் யாருக்கு வழிவிடுவது என்ற மானப் பிரச்சனை தேவையின்றித் தோன்றப் போகிறதே! சும்மா விடுவதாக இல்லை இந்த ரயிலை. அது தன் வாழ்க்கைப் பயணத்தில் முதல்முறையாக சரியான, அதே நேரத்தில் என்றென்றைக்கும் மறக்க முடியாத பாடத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறது. அது பயணிகள் ரயிலா சரக்கு ரயிலா என்பதை தூரத்திலிருந்து அறிந்துகொள்ள முடியவில்லை. அது பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. நியாயத் தீர்ப்பு பொதுவானது. பாரபட்சமற்றது. ஒருவேளை இந்த ரயிலுக்கு நல்ல காலமிருந்தால் அதன் மூளை வேலை செய்யலாம். பாதையிலிருந்து இறங்கி ஏணியைவிட்டு விலகி அவனைக் கடந்துபோய் சாமர்த்தியமாக மீண்டும் இந்த மேட்டுப் பாதையை அடையலாம். தவறினால் அதற்கு ஐயோ... கேடுதான்.
பறவைக் கூட்டம் நிகழப்போகும் விபரீதத்தை உணர்ந்து வினோதமான குரல்களில் அலறியது. நாராசமான கூக்குரலில் எச்சரிக்கை பகிரங்கமாக வெளிப்பட்டது. ஐயோ... ஒரு பரிகாசக் கூட்டத்தை வெயிலை விரித்து தரையோடு தரையாக உருகியோடச் செய்த இந்த மனிதனிடம் இந்த எளிய ரயில் வசம்கெட்டுச் சிக்கிச் சின்னாபின்னமாகிச் சீரழியப் போகிறதே என்று அவை பரிதாபப்பட்டன.
அவன் ரயிலை எதிர்கொண்டு வேகமாக நடந்தான். ரயில் முரட்டுக் குருடனைப்போல சிறிதும் யோசிக்காமல் அதே கதியில் வந்து கொண்டிருந்தது. அதன் சிக்குபுக்கு சப்தம் தெளிவாகக் கேட்கும் தொலைவுக்குள் நுழைந்தது. முதுகெலும்பையுடைத்து தலையை நசுக்கி பாதையோரத்தில் அடித்துக் கொன்று போடப்பட்ட ஒரு பாம்பின் சித்திரம் அவனுக்குள் தோன்றி மறைந்தது. ஆனாலும் சிறிதளவும் அவன் மனத்தில் கருணை சுரக்கவில்லை. விதிபோல் நடக்கிறது. வேறு வழியில்லை. இருப்பது ஒரு வழி. இருவருக்குமாக ஒரே ஒரு வழி. தெளிவற்ற குரலில் ரயில் பணிவாக ஊளையிட்டது அவன் காதுகளில் விழுந்தது. கேட்டும் கேட்காததுபோல் தலையைக் கவிழ்ந்தவண்ணம் உறுதியோடு நடந்தான். ஊளைச் சத்தம் இன்னும் உரத்தொலித்தது. இப்போது அதன் குரல் அழுவதற்குத் தயாராக உடைந்திருந்ததை அவன் கவனித்தான். இருப்பினும் பிடிவாதமாக நிமிர்ந்து பார்க்காமலிருந்தான். நிமிர்ந்து முகத்துக்கு முகம் பார்த்தால் எதிர்பாராமல் இரக்கமுண்டாகி விடலாம். அது நல்லதல்ல. குற்றத்தை, தவறை ஊக்குவிக்கும் செயலில் சென்று அது முடியலாம். அது தவிர்க்கப்பட வேண்டும். இன்று விட்டுவிட்டால் இன்னொரு நாளும் இதே தப்பிதத்தை அது செய்யலாம். எனவே இந்தப் பிரச்சனை இன்றே தீர்வுக்கு வந்தாக வேண்டும். இந்தப் பிரச்சனை ஊளை ஒலமாக மாறி மிக நெருங்கி விட்டிருந்தது. பீதியில் ரயில் கதறியழுதது. 'என்னை மன்னியுங்கள் என்னை மன்னியுங்கள். உங்கள் வழியில் தெரியாமல் வந்துவிட்டேன். என்னைப் பொறுத்து என்னைக் காப்பாற்றுங்கள்' என கையெடுத்துக் கும்பிட்டு அது கெஞ்சுவதை மனக்கண்ணில் கண்டான். வைராக்கியத்தை இளகவிடவில்லை. இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள சில அடி தூரங்களே இடையிலிருந்தபோது ரயில் மிகப் பெரிய அலறலோடு கண்களை இறுக மூடிக்கொண்டது. நிலத்தில் நடுக்கம் பரவியது. அச்சமயத்தில் பின்னேயிருந்து இரண்டு கைகள் அவன் இடைப்பகுதியில் நுழைந்து 'கிச்சலம்' காட்டிற்று. அவன் கூச்சத்தில் நெளிந்து துடித்து காற்றில் எகிறித் தெறித்து பாதையோரம் விழுந்தான். ரயிலுக்கு எத்தப் பங்கமுமில்லாமல் பாதை கிடைத்தது. முழுமூச்சோடு உச்சபட்ச வேகத்தில் அது தப்பி ஓடியது. கடந்து செல்லும் அதன் பெட்டிகளை வெறித்தான். ஆபத்து முற்றிலும் விலகியிராததையுணர்ந்த அவை கடும் குளிருக்குள் சிக்கிய பூஞ்சையுடல் போலப் பயந்து கிடுகிடுத்தன.”

“ஒரு கிண்ணத்தில் ஏறி நின்று எண்ணெய் ஊற்றித் திரியாகத் தன்னையே பற்ற வைத்துக்கொள்ளத் தூண்டிய குளிரில் வெகுகாலம் தனியே வானீரில் ஊற வைத்த சொற்களின் தோலை உரித்து மெல்ல மெல்ல மென்று ஒரு வார்த்தையும் பேசாமல் விழுங்கிப் பசியாறி கொஞ்சம் வெயிலருந்த பதுங்கியிருந்த நிலவறையிலிருந்து வெளியேறும் அவன் ஒரு ஈர மலரைப்போல அழகாயிருக்க வேண்டுமென்று ஏன் எதிர்பார்க் கிறீர்கள்? உடலின் தசையெல்லாம் குழைந்திறுகிய சேறாகி முதுகெல்லாம் புல் முளைத்த மனிதனின் பின்னே வெள்ளாடுகளை அதட்டி ஏன் ஏவுகிறீர்கள்? இருள் பின்னிய விழிகளைத் துருப்பிடித்த செவிகளுக்கும் முடமான மூளையைப் பிறழும் இருதயத்துக்கும் புலன் மாற்றி பொழுதுக்கும் அலுத்துப் போனவன் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள முற்படும்போது முன்னேற்றம் பின்னேற்றம் பற்றி எதற்காக வழிமறித்து மூதலிக்கிறீர்கள்? எல்லா வழிகளும் கூடிப் பிரியும் இடமே வாழ்க்கை என்றான பின் வெறுமையின் குடுவையில் திரண்ட நீர்க்குமிழியாகி உடைந்து மறையும் தருணம் வரை அவன் மிதந்து போனால் நடந்து திரிபவர்களுக்கு என்ன நஷ்டம்?”
― Kanni
― Kanni
“அவரசமாக ஒருவன் குரலில் நாடகத் தன்மையுடன் கேட்டான். "சாமி கோவிச்சுக்கிட்டோ? எங்க கிளம்பிடுச்சி?"
"வானத்துக்கு."
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
"நடந்தா, பறந்தா சாமி?"
"பொறந்து."
"வானம் இங்கயிருந்து எவ்வளவு தூரம் சாமி"
"கொச்சக் கயிறு போட்டா எட்டு முழம் போதும். பாசானம் அடிச்சா பத்து பன்னெண்டு ரூபா ஆவும்.”

“வீட்டுக்குள்ளயே ஒரு உலகமிருக்கு. அதுக்குள்ள வாழப் பழகிக்கிட்டா பாதகமில்லை. உலகத்தையே ஒரு வீடாக்க பிரயாசைப்பட்டா அலைக்கழிவுதான்.”
― Kanni
― Kanni
“வீட்டுல கோவுச்சுட்டு வெளியே வந்துல என்ன கத்துக்கிட்டீங்க?"
"வீட்டுக்குள்ளயே ஒரு உலகமிருக்கு. அதுக்குள்ள வாழப் பழகிக்கிட்டா பாதகமில்லை. உலகத்தையே ஒரு வீடாக்க பிரயாசைப்பட்டா அலைக்கழிவுதான்.”

“சூடு தெள்ளிய மாலை வெயிலில் தேரி மேட்டின் மணல் வரிகளில் கால்கள் புதைய நடந்தார்கள். அடிவாரத்துப் பாதையில் நின்று பார்க்கும் போது தேரி மேட்டின் உச்சியில் ஏகாந்தமாய் நின்ற பெரிய கற்சிலுவை இரண்டு கைகளையும் திறந்து ஆகாயத்தை நோக்கி அகல விரித்து ஏங்கிப் பார்ப்பது போலிருந்தது. அது பற்றி அப்போது தோன்றிய வரிகளைச் சொன்னான்.
மஞ்சள் மலைமுடியில் முளைத்து
உடல் சிலிர்த்து நிற்கும் சிலுவையே
இக்கணத்தில் நீயுணர்வது
மீட்பரின் இறப்பையா?
உயிர்ப்பையா?
கேட்டுவிட்டு பிடித்துப் போய் எப்படிப் பாராட்டுவதென்று சிறிது திணறி "நானும்தான் பாத்தேன். பாத்தும் என்ன புண்ணியம்?'' என்றாள் வியப்புடன்.”

உடல் சிலிர்த்து நிற்கும் சிலுலையே இக்கணத்தில் நீயுணர்வது

“மரியபுஷ்பத்தின் மகனை சில்வியா பாடாய்ப் படுத்தினாள். 'தம்பி பாப்பா... தம்பி பாப்பா' என்று கொஞ்சித் தீர்த்தாள். தன்னை விட சின்ன உயிர் ஒன்றிருப்பதில் அவளுக்கு என்ன சந்தோஷமோ தெரியவில்லை.”
― Kanni
― Kanni
“நீ பிறந்த நாளை எடுத்து
திருத்தமாக உடுத்திக்கொண்டு பின்தொடரும் என் நிழலை
திரும்பித் திரும்பிப் பார்த்து
திசை யூகித்து வருகிறேன்.”

“கைதேர்ந்த மீனவனின் தந்திர வலைக்குள் சிக்கி வெளியேறும் விதியற்று கடலின் பெரும் கவலைகளை மேஜை மீதிருந்து மென்குரலில் காற்றோடு புலம்பியிருந்த வெண்சங்கை தூவானம் தெறித்திருக்கும் ஜன்னலருகே இடம் மாற்றி வைத்தேன். நெரிந்திருந்த குரல்வளைக்குள் மடங்கிக் கிடக்கும் சொற்கள் நிமிர்ந்து கிசுகிசுப்பான குரலில் கதையாடத் தொடங்கியது அது.”
― Kanni
― Kanni
“மழையறுத்த மண்நொடியில் இறங்கி ஏறியபோது முன்சக்கரம் பிணங்கிக் கொள்ள சைக்கிள் இடப்பக்கமாய்ச் சரிந்தது.
கையைத் தட்டி விட்டுக்கொண்டு எழுந்தாள்.
"விடுக்கா. நீ உக்காரு" என்று பாண்டி சைக்கிளை ஏற்றெடுத்தான். ஏறி அமர்ந்து ஓட்டினான்.
"என்னால் தாவி ஏற முடியாதுடா"
"முன்னால வாரயா?"
சைக்கிள் நகர்ந்தது. பாய் இறக்கிய வள்ளத்தைப்போல மெதுவான சீரான கதியில் மிதந்தது.
"இன்னைக்குத்தான்டா முன்னாடி உக்காந்து பாக்குறேன்."
மணியை 'டிரிங்' என அடித்தாள். பண்ணைப்புதூருக்கு மேய்ச்சலுக்குப் போகும் மருதகுளச் செம்மறி மந்தை நாணத்தில் தலைகவிழ்ந்து நடந்தது. ரெஜினா டீச்சர் தோட்டத்து கற்றாழை வேலியோரம் இரை பொறுக்கிய கதுவாலிகளைக் கண்டதும் மீண்டும் மணியோசை. அவை கலைந்து கால்களால் ஓடிப் பின் பறவைகளாயின.”

“ரெண்டு அண்ணன்களும் கடைத்தேறி விட்டனர். பாட்டியும் பாண்டியும்தான் வேலையற்றிருந்தார்கள். வீட்டில் அவன் நிலமை அவ்வளவு மோசமடையவில்லை என்ற போதிலும் விரக்திக்கு சற்றே அழுத்தமேற்றி நிலாச்சோறு ஊட்டிய வீட்டை தண்டச்சோறும் ஊட்டச் செய்கிறது வாழ்க்கை என்று நினைத்தான்.”
― Kanni
― Kanni
“எல்லோரும் சேர்ந்திருந்து பேசிக்கொண்டிருக்கும்போது விஷயத் தட்டுப்பாடு ஏற்பட்ட போதெல்லாம் பாண்டியின் கல்யாணப் பேச்சு எடுக்கப்பட்டது.”
― Kanni
― Kanni