Makers of Modern India Quotes
Makers of Modern India
by
Ramachandra Guha1,600 ratings, 3.95 average rating, 91 reviews
Makers of Modern India Quotes
Showing 1-22 of 22
“என்னைக் கொல்வதன் மூலம் ஒரு தீயவனை ஒழித்துவிட்டதாக நினைப்பாரென்றால் அவர் உண்மையான காந்தியை அல்ல அவருக்குத் தீயவனாகத் தோன்றிய காந்தியைத்தான் கொன்றிருப்பார். என்னைக்”
― Naveena Indiavin Sirpigal
― Naveena Indiavin Sirpigal
“மனித உழைப்பை இடம்பெயர்க்கும் இயந்திரங்களுக்கு அங்கு இடம் கிடையாது. அது அதிகாரத்தை ஒரு சிலரின் கைகளில் குவித்துவிடும். நாகரிக மனித சமூகத்தில் உழைப்புக்கென்று ஒரு விசேஷ இடம் உண்டு. மனிதர்களுக்கு உதவும் ஒவ்வொரு இயந்திரங்களுக்கும் இடம் உண்டு. ஆனால், அப்படியான இயந்திரம் என்னவாக இருக்க முடியும் என்று உட்கார்ந்து யோசித்துத்தான் பார்க்கவேண்டும். இப்போது”
― Naveena Indiavin Sirpigal
― Naveena Indiavin Sirpigal
“நவீன இந்தியா உலகுக்கு வேறொரு விஷயத்தையும் கற்றுத் தந்திருக்கிறது. அதுதான் பன் மொழி அங்கீகாரம். இந்தியாவில் பல மொழிகள் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சமூக நடைமுறையிலும் அது அமல்படுத்தப்படுகிறது. ஒரு நாட்டை அடையாளம் கண்டுகொள்ள ஒரு மொழியே போதும் என்று முன்பு கருதப்பட்டது. 1950களில் டி.டபிள்யூ ப்ரோகன் (D.W.Brogan) என்பவர் சொன்னது இதுதான்:
"ஒரு மொழிக்கு அதற்குரிய ஸ்தானத்தைக் கொடுத்ததன் மூலமாகவே இன்று தேசிய உணர்வு புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது. இது ஏதோ எதேச்சையாக நடந்த விஷயமல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டில் போலந்து, பொஹிமியா, ஃபின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் மக்களுடைய தேசிய உணர்வுக்கு அவர்களுடைய மொழிகள் புத்துணர்வு பெற்றதுதான் காரணமாக இருந்தது. அதேசமயம் மொழியால் ஒன்றுபடாத நாடுகளில் அரசியல் பிரச்னைகள் தலைதூக்கின. ஏனெனில், ஒரே ஒரு மொழியை மட்டும் பேசும் நாடுகளில் நிர்வாகம் எளிதாக இருந்தது. இதனைத் தொடர்ந்து உருவாகும் மதரீதியான ஒற்றுமை அரசியல் ஆதாயங்கள் பலவற்றைப் பெற்றுத் தரவல்லது..”
ஐரோப்பாவின் வரலாற்றிலிருந்து இரண்டு தெற்காசியத் தலைவர்கள் ஒரே மாதிரியான பாடத்தைப் படித்தனர். அவர்கள் பாகிஸ்தானின் முஹம்மத் அலி ஜின்னாவும், ஸ்ரீலங்காவின் எஸ்.டபிள்யூ ஆர், டி.பண்டாரநாயகேவும் ஆவார்கள். அவர்களிருவரும் தத்தம் நாடுகளில் ஒரு மொழியை மட்டுமே மக்கள் மேல் திணிக்க முயன்றனர். இதற்கு மாறாக, சுதந்தர இந்தியாவின் தலைவர்கள் வெவ்வேறு மொழிகளையும் லிபிகளையும் உபயோகிக்கவும், தத்தம் பிரதேச மொழிகளில் கல்வி கற்கவும் மக்களை அனுமதித்தனர். கிழக்கு பாகிஸ்தானில் வசித்த வந்த வங்காளிகள் மீது உருது மொழியைத் திணிக்க பாகிஸ்தான் அரசு எடுத்த முயற்சிகளின் விளைவாகவே 1971ல் கிழக்கு பாகிஸ்தான் வங்காள தேசம் என்ற ஒரு சுதந்தர இறையாண்மையுள்ள நாடாக உருவெடுத்தது. ஸ்ரீலங்காவில் தமிழ் மொழியைப் புறக்கணித்து, சிங்கள மொழியைத் திணிக்க எடுத்த முயற்சிகள் முப்பதாண்டுகளுக்கு நீடித்த உள்நாட்டுப் போரில் முடிவடைந்தது. அதில் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர். மாறாக இந்தியாவில் பல்வேறு மொழிகளை ஊக்குவித்ததன் பலனாக நாட்டின் ஒற்றுமை வலுவடைந்திருக்கிறது.”
― Makers of Modern India

“உலகிலேயே முதன்முறையாக இந்தியா மட்டுமே அஹிம்சை முறையில் கத்தியின்றி, ரத்தமின்றி சுதந்தரம் பெற்றது. ஆசிய, ஆஃப்ரிக்கக் கண்டங்களில் இந்தியாவில்தான் ஜனநாயகம் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தனது கரன்சி நோட்டுகளில் பதினேழு மொழிகள் பதினேழு லிபிகளில் அச்சடிக்கப்பட்டுள்ள ஒரே நாடு இந்தியாதான்.”
― Makers of Modern India
― Makers of Modern India
“பெண்கள், முஸ்லிம்கள், ஹரிஜனங்கள் ஆகியவர்களுடைய பிரச்னைகளில் மிகுந்த கவனம் செலுத்திய காந்திஜியின் விடுதலைப் போராட்டம் இந்திய மக்கள் தொகையில் எட்டு சதவிகிதமிருந்த ஆதிவாசிகளை மறந்தேவிட்டது. மற்ற அரசியல் சிந்தனையாளர்களும் செயல்வீரர்களும்கூட அவர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. இதைப்பற்றிக் கேட்டபோது டாக்டர் அம்பேத்கர் சொன்ன பதில் இதுதான்: "நான் கஷ்டத்தில் வாடும் அனைத்து மக்களுடைய தலைவன் என்று ஒரு நாளும் சொல்லிக்கொண்டதில்லை. ஹரிஜனங்களுடைய பிரச்னைகளில் கவனம் செலுத்தவே எனக்கு நேரம் பத்தவில்லை”. இது சரியாக இருக்கலாம். இருப்பினும் பழங்குடிகள் என்ற கணிசமான அளவில் இருந்த நலிந்த பிரிவு ஒன்றின் குரல் மைய நீரோட்டத்தில் ஒலிக்காமலே இருந்தது. வெரியர் எல்வின் அந்தக் குறையைத் தீர்க்க முயன்றார்.”
― Makers of Modern India
― Makers of Modern India
“இந்தியா திரும்பி வந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் மனைவி பிரபாவதியுடன் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். இதற்குள் பிரபாவதி காந்திஜியின் உற்ற சிஷ்யையாக மாறிவிட்டிருந்தார்; அது மட்டுமல்ல, காந்திஜியின் அறிவுரைப்படி அவர் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரிய விரதத்தை அனுஷ்டிக்கவும் தீர்மானித்து விட்டிருந்தார். இது நாராயணின் குடும்பத்தில் சில பிரச்னைகளை ஏற்படுத்தியது.”
― Makers of Modern India
― Makers of Modern India
“1930களில் ஜெர்மனியின் நாஜிக் கட்சியின் கொள்கைகள் ஆர்.எஸ்.எஸ்ஸைப் பெரிதும் கவர்ந்தன. அவற்றுக்கும் கோல்வால்கரின் கொள்கைகளுக்கும் நிறையவே ஒற்றுமைகள் இருந்தன. உதாரணமாகத் தாய் நாட்டை நேசிப்பது, அந்நியர் மீதான வெறுப்பு (ஜெர்மனியில் யூதர்கள், இந்தியாவில் முஸ்லிம்கள்). பிற்காலங்களில் நாஜிகளைப் பற்றி அதிகம் பேசவில்லையென்றாலும் 1950களிலும் 1960களிலும் கோல்வால்கர் செய்த பிரசங்கங்களிலெல்லாம் இந்துக்கள் மட்டுமே தாய் நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் என்ற கருத்துகளே இடம்பெற்றன. இந்துக்கள் உண்மையிலேயே தாய்நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால், பண்டைய காலங்களில் அவர்களுக்கிருந்த பெயரும் புகழும் மீண்டும் அவர்களை வந்தடையுமென்றும் ஆர்.எஸ்.எஸ். வாக்குறுதியளித்தது.
கோல்வால்கருக்கு முன்பும் இந்துத்வ வலதுசாரிக் கொள்கையை முன்வைத்த வேறு பலருமிருந்தனர். உதாரணமாக வி.டி.ஸாவர்க்கர், மதன்மோகன் மாளவியா. அவர்களுடைய கருத்துகள் நுட்பமானவையாக, செழுமையானவையாக இருந்தன. ஆனால், அவற்றின் தாக்கமும்செல்வாக்கும் வெகுகுறைவாகவே இருந்தன. முப்பது வருடங்களாக ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமைப் பதவியிலிருந்த கோல்வால்கரின் தாக்கம் தற்கால இந்தியா மீதும் அதன் அரசியலிலும் பெரிய அளவிலிருந்தது. வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே காலம் கழித்த அவருக்குப் பழைய காலத்திய ரிஷிகளைப்போல ஒரு பெரும் சிஷ்ய பரம்பரையே இருந்தது. இவர்கள் பிற்காலத்தில் மாநில முதலமைச்சர்கள் ஆனார்கள். ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று மத்திய அரசில் பெரிய பதவிகளை அலங்கரித்தனர். 1998 முதல் 2004வரை இந்தியப் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயியும், மத்திய அரசில் உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமாக இருந்த லால் கிருஷ்ண அத்வானியும் தமது சொந்த நிலையிலும் கொள்கையளவிலும் கோல்வால்கரின் சீடர்களாக இருந்தவர்கள்தான்.”

“கோல்வால்கரின் அபிப்பிராயத்தில் இந்து ராஷ்டிரத்தை ஸ்தாபிப்பதில் மூன்று தடைக் கற்களைக் கடக்க வேண்டியிருந்தது. முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்ட்டுகள். இவை மூன்றுமே வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தவை. கம்யூனிஸ்டுகளோ நாத்திகர்களாகவும் இருந்தனர். இம்மூன்று பேர்களையும் கோல்வால்கர் இந்து புராணங்களில் வரும் ராட்சஸர்களாகத்தான் பாவித்தார். இந்துக்கள் இந்த ராட்சஸர்களைக் கொன்று இந்தியாவின் பழம் பெருமையையும், புனிதத்தையும் மீண்டும் நிலைநாட்டுவார்கள்; இந்தச் செயலைச் செய்து முடிக்கத்தான் ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்டது என்று கோல்வால்கர் பிரசாரம் செய்தார்.
1948 ஜனவரியில் காந்திஜி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கோல்வால்கர் கைதானார். ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. காந்திஜியைக் கொலை செய்த நாதுராம் கோட்ஸே ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராக இருந்தார் என்பதும் கோல்வால்கர் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தீவிரமாகப் பிரசாரம் செய்தார் என்பதும்தான் இந்தக் கைதுக்குக் காரணங்கள். பின்னர் கோல்வால்கர் விடுதலை செய்யப்பட்டார். வன்முறையைக் கையாள மாட்டோம், இந்திய அரசியல் சட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ள ஜனநாயகக் கொள்கைகளுக்கேற்ப நடந்துகொள்வோம் என ஆர்.எஸ்.எஸ். வாக்குறுதியளித்த பிறகு அதன் மீதுள்ள தடை 1949 ஜூலையில் நீக்கப்பட்டது.”

“இப்படி அதிகம் அறியப்படாத புத்தகங்களில் ஒன்றுதான் நேருவின் ‘முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதங்கள்” (Letters to Chief Ministers). சுதந்தரத்துக்குப் பிறகு மாநில முதமைச்சர்களுக்கு பதினைந்து நாட்களுக்கொரு முறை கடிதம் எழுதும் வழக்கத்தை நேரு தொடங்கினார். இது அக்டோபர் 1947 முதல் டிசம்பர் 1963வரை தொடர்ந்தது. 1980களில் இவை ஐந்து தொகுதிகளடங்கிய புத்தக வடிவில் வெளிவந்தன. (ஒவ்வொன்றும் ஐந்நூறு பக்கங்களுக்கு மேல்). இவை இப்போது சந்தையில் கிடைப்பதில்லை. தில்லி தவிர வேறிடங்களில் நூலகங்களிலும் கிடைப்பதில்லை. நானே இவற்றை ஒவ்வொன்றாகப் பழைய புத்தகக் கடைகளிலிருந்துதான் வாங்கினேன்!
இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பலருக்கும் தெரியாதென்பது வெட்கக்கேடான விஷயம். அவை ஏராளமான விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றன. உதாரணமாக: பொருளாதார முன்னேற்றம், மொழி-மத அரசியல், நிர்வாக தர்மம், பனிப்போர், இலக்கியவாதிகளின் மரணம், ஆகியவை. இவை அனைத்தையும் பற்றி நேரு ஆழமாகச் சிந்தித்து, முதலமைச்சர்களுக்குத் தேவையான அறிவுரைகளுடன் எழுதியுள்ளார். இந்தியாவிலும் உலக அளவிலும் அந்தப் பதினைந்து ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றை நேரு அலசுகிறார். அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தார். இது தற்கால அரசியல்பற்றிய ஒரு சிறந்த வரலாற்றுப் புத்தகமாகும். அதில் விவாதிக்கப்பட்டுள்ள விஷயங்கள் இந்தியாவின் இன்றைய நிலைமைக்குக்கூடப் பொருந்துவனவாக உள்ளன.”

“அசெம்பிளியில் அவ்வப்போது எழுந்த கருத்து வேறுபாடுகளையும் உறுப்பினர்களின் கட்டுப்பாட்டுக்கடங்காத நடத்தையையும் மீறி இந்திய அரசியல் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்திய அம்பேத்கர் சட்ட அமைச்சர் என்ற நிலையில் வேறொரு அரும் சேவையையும் புரிந்தார். இந்துப் பெண்களுக்குத் தங்களுடைய கணவர்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை, தேவையானால் அவர்களை விவாகரத்து செய்யும் உரிமை, பூர்வீகச் சொத்தில் பங்கு கேட்கும் உரிமை ஆகியவற்றுக்கு வழிசெய்யும் ஒரு புதிய சட்டத்தை உருவாக்கினார். இந்த சீர்திருத்தங்கள் 1951ம் ஆண்டில் டாக்டர் அம்பேத்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்தான் அமலுக்கு வந்தனவென்றாலும் இந்தச் சட்ட மசோதாவைத் தயாரிப்பதில் அவர்தான் பெரும் பங்காற்றினார்.”
― Makers of Modern India
― Makers of Modern India
“In 1949 a group of Ramaswami’s followers broke away to form the Dravida Munnetra Kazhagam (DMK). In 1967 the DMK became the first professedly regional party to come to power in a major provincial election in India. The Congress, once dominant in Tamil Nadu, has never since regained power in that state. Without the ideological and organizational ground work laid down by Ramaswami, it is hard to see how this could have happened. To be sure, he may have himself seen this as somewhat less than ideal—for he wanted a separate country for the Tamils, not merely greater autonomy within the existing nation-state of India.
Ramaswami’s message is nicely captured in a statue of his in Tiruchirapalli which carries this inscription: ‘God does not exist at all. The inventor of God is a fool. The propagator of God is a scoundrel. The worshipper of God is a barbarian’.”

“In about 1920 E.V. Ramaswami became active in the Congress Party. He energetically adopted the Gandhian credo, promoting homespun cloth, temple entry for the Untouchables and the like. In 1925 he left the Congress because he found that its leadership was overwhelmingly Brahmin and, with only the rare exception, was insensitive to the claims of the lower castes. A catalytic incident related to a Congress-run hostel whose management insisted, despite Ramaswami’s protests, on serving food separately to Brahmin and non-Brahmin students.”
― Makers of Modern India
― Makers of Modern India
“ஈ.வெ.ரா.வின் கருத்துகள் திருச்சியிலுள்ள அவருடைய சிலையில் மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன.
‘கடவுள் இல்லை... கடவுளைக் கண்டுபிடித்தவன் முட்டாள்; கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன்; கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி.”
― Makers of Modern India
‘கடவுள் இல்லை... கடவுளைக் கண்டுபிடித்தவன் முட்டாள்; கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன்; கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி.”
― Makers of Modern India
“1893-ல் பழம்பெரும் இந்து மதக் கொள்கைகளை மக்களிடையே பரப்பும் பொருட்டு திலகர் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தார். அதுவரை வீடுகளிலும் கோவில்களிலும் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த விநாயகச் சதுர்த்தி விழாவை கிராமங்களிலும் நகரங்களிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொண்டாடும் ஒரு மாபெரும் விழாவாக மாற்றினார். இதன் முக்கிய அம்சம் இளைஞர்கள் விநாயகர் விக்ரஹத்தைத் தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்வதுதான்.”
― Makers of Modern India
― Makers of Modern India
“சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் கொடுக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தைப் பற்றி திலகருக்கும் அகார்க்கருக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. அகார்க்கர் (கோகலேயும்) இந்துப் பெண்மணிகளுக்கு தற்காலக் கல்வி தேவை என வாதிட்டார். ஆனால் திலகரோ பெண்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆகவே அவர்கள் தம் கணவன், குழந்தைகள் ஆகியோரின் நலனைப் பேணுபவர்களாக மட்டும் இருந்தால் போதும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். 1880களில் திலகர் பசுவதைத் தடை இயக்கத்தில் பங்கெடுத்தார். முஸ்லிம்கள் பசு மாமிசம் உண்பது இந்துக்களின் மனத்தைப் புண்படுத்துவதால் அந்த வழக்கத்தைத் தடை செய்ய வேண்டுமென்று இந்த இயக்கம் சொன்னது.”
― Makers of Modern India
― Makers of Modern India
“இவருடைய இயற்பெயர் ராம்மோகன் ராய் என்பதுதான். மொகலாய மன்னர்கள் இவருக்கு அளித்த பட்டம் 'ராஜா'. இந்த மக்களாட்சி காலகட்டத்தில் அந்த ராஜா பட்டத்தை நாம் நீக்கிவிடலாம். இதனால்தான் அந்தப் பட்டத்தை நான் இந்தப் புத்தகத்தில் பயன்படுத்தவில்லை.”
― Makers of Modern India
― Makers of Modern India
“1948-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பச்சிளம்குழந்தையாக இருந்த இந்திய அரசுக்கெதிராக ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்கியது. அதை ஒடுக்க அரசுக்கு மூன்றாண்டுகள் பிடித்தது. கடைசியில் இந்தப் புரட்சியாளர்கள் தலைமறைவுப் போராட்டத்தைக் கைவிட்டு இந்திய அரசியல் சாசனத்துக்குட்பட்டுப் போராட முன்வந்தனர். இந்த மனமாற்றத்தில் ரஷ்யாவுக்கும் அதன் அதிபர் ஜோஸஃப் ஸ்டாலினுக்கும் கொஞ்சம் பங்குண்டு. முன்னாள் பிரிட்டிஷ் காலனிகளுடன் நட்புறவை வைத்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்ததுதான் இதற்குக் காரணம்.”
― Makers of Modern India
― Makers of Modern India
“This wider history notwithstanding, I believe India still constitutes a special case. Its distinctiveness is threefold. First, the tradition of the thinker-activist persisted far longer in India than elsewhere. While the men who founded the United States in the late eighteenth century had fascinating ideas about democracy and nationhood, thereafter American politicians have merely governed and ruled, or sometimes misgoverned and misruled.1 Their ideas, such as these are, have come from professional ideologues or intellectuals. On the other hand, from the first decades of the nineteenth century until the last decades of the twentieth century, the most influential political thinkers in India were, as often as not, its most influential political actors. Long before India was conceived of as a nation, in the extended run-up to Indian independence, and in the first few decades of freedom, the most interesting reflections on society and politics were offered by men (and women) who were in the thick of political action. Second, the relevance of individual thinkers too has lasted longer in India. For instance, Lenin’s ideas were influential for about seventy years, that is to say, from the time the Soviet state was founded to the time it disappeared. Mao’s heyday was even shorter—roughly three decades, from the victory of the Chinese Revolution in 1949 to the repudiation by Deng Xiaoping of his mentor’s ideas in the late 1970s. Turning to politicians in Western Europe, Churchill’s impassioned defence of the British Empire would find no takers after the 1950s. De Gaulle was famous for his invocation of the ‘grandeur de la France’, but those sentiments have now been (fortunately?) diluted and domesticated by the consolidation of the European Union. On the other hand, as this book will demonstrate, Indian thinkers of the nineteenth and early twentieth centuries still speak in many ways to the concerns of the present. A third difference has to do with the greater diversity of thinkers within the Indian political tradition. Even Gandhi and Nehru never held the kind of canonical status within their country as Mao or Lenin did in theirs. At any given moment, there were as many Indians who were opposed to their ideas as were guided by them. Moreover, the range of issues debated and acted upon by politicians and social reformers appears to have been far greater in India than in other countries. This depth and diversity of thought was, as I argue below, in good part a product of the depth and diversity of the society itself.”
― Makers of Modern India
― Makers of Modern India
“சாதி அடிப்படையிலான அணுகுமுறையைக் கை விட்டுவிட்டு சாதி மற்றும் மதச்சார்பில்லாமல் பொருளாதார அடிப்படையில் மட்டுமே மக்களுக்கு வசதிகளையும் உதவிகளையும் அளித்து அவர்களுடைய நிலைமையை உயர்த்தவேண்டுமா, வேண்டாமா என்பதுதான். பொருளாதார அடிப்படையில் இதைச் செய்யத் தீர்மானித்தால் சாதியின் பெயரால் ஏமாற்றுவது முடிவுக்குவரும். இந்த வசதிகள் மற்றவர்களுக்கும் கொடுக்கப்படும். இப்படிச் செய்வதன் மூலம் மக்களுக்குத் தரப்படும் வசதிகள் அவர்களிடையே வேறுபாடுகளை உருவாக்குகின்றன என்றும், அது ஒரு புதிய சாதியையே உருவாக்குகிறது என்றும், ஏற்கெனவே இருந்த பிற்பட்ட சாதிகளுக்கு ஒரு பலனும் கிடைப்பதில்லை என்றுமுள்ள குற்றச்சாட்டுகளை நாம் தவிர்க்கலாம். இந்தப்”
― Naveena Indiavin Sirpigal
― Naveena Indiavin Sirpigal
“தனிமனிதரின் செயல்திறன்தான் நாட்டின் செல்வத்தையும் உற்பத்தியையும் நிர்ணயிக்கிறது. அரசு நிர்வாகமும் அரசின் முதலீடும் செலவை அதிகரிக்கும்; விரயம் அதிகமாகும். இதற்கு மாற்றாகத் தனியார் நிர்வாகத்தில் செலவு குறையும்; அதிகாரங்கள் கீழ்மட்டத்திலுள்ளவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கும். அரசு நடத்தும் தொழில்களில் யாரும், எதற்கும் பொறுப்பேற்கமாட்டார்கள். நிர்வாகம் பல தட்டுகளில் சிதறிப் போகும். இதுவரை”
― Naveena Indiavin Sirpigal
― Naveena Indiavin Sirpigal
“ஜனநாயக சமூகத்தில் ஆள்பவர்களுக்கும் குடிமக்களுக்கும் சுயமாகச் சிந்திக்கும் திறன்வேண்டும். விமர்சனங்கள், அதற்கான விடைகள், மேலும் விமர்சனங்கள் இவைதான் ஜனநாயகத்துக்கு உயிரூட்டுகின்றன. லஞ்சமயம், சூழ்ச்சி, சதி ஆகிய சமூக வியாதிகளை அவை நாட்டை விட்டே விரட்டி ஓட்டிவிடும். எட்மண்ட்”
― Naveena Indiavin Sirpigal
― Naveena Indiavin Sirpigal
“கம்யூனிஸத்தின் முதல் எதிரியே உண்மைதான். சீன”
― Naveena Indiavin Sirpigal
― Naveena Indiavin Sirpigal