“நீ போரில் கொல்லப்பட்டுச் செத்தால் உனக்குச் சொர்க்கம் கிடைக்கும்' என்றான் அவனே. 'சொர்க்கத்துக்கு ஆசைப்படுவதும் தப்பு' என்று சொன்னதும் அவனேதான். 'காமம் கோபம் இரண்டும் கெட்டவை' என்றதும் அவனே; கோபத்துக்கு அடிமையாகி 'அம்பை விடு' என்றும் அவனே சொன்னான். 'உடம்பு முக்கிமல்ல' என்றான் அவன்; 'கௌரவர்களின் உடம்பைக் கொல்' என்றதும் அவன்; 'ஆத்மாவுக்குப் பழியில்லை' என்று சொன்னான். 'நீ போர் செய்யாமல் விட்டால் உன் குலத்துக்குப் பழி ஏற்படும்' என்று சொன்னதும் அவனே. ஒரே வாயில் இவற்றை எல்லாம் விழுங்குவது ரொம்ப கஷ்டம் இல்லையா, குழந்தை? அவை சாமர்த்தியமான பேச்சுக்கள். அதில் நம்பிக்கை ஏற்படுவதில்லை எனக்கு.'
"கிருஷ்ண பரமாத்மா அதைச் சொன்னது உண்டா, இல்லையா?"
"கிருஷ்ணன், ராமன் இவர்களெல்லாம் கொஞ்ச நாளைக்கு முன்னால் பிறந்த மக்கள் என்கிறேன் நான். நம்மவர்கள் யாருமே 'இது என் புத்தியில் தோன்றியது. எனக்கு இப்படித் தோன்றுகிறது' என்று சொன்னவர்களே அல்ல. தங்களுக்கு தோன்றியதையெல்லாம் கடவுளின் வாயில் திணித்து அதை அவனிடமிருந்தே உலகின் மீது உமிழச் செய்வார்கள்..."
"...உனக்கு உதாரணம் ஒன்று சொல்கிறேன். நான் பெண்ணாக இருப்பதால் எனக்கு அது தெரிகிறது. கீதையில் ஒரு பேச்சு வருகிறது. பெண்கள் கெட்டவர்கள்களானால் குலங்கள் கலந்துவிடும் என்று சொல்கிறான் ஒருவன்! பெண்ணையும் ஆணையும் படைத்த கடவுளுக்கு குலங்கள் கலக்க வேண்டுமானால் பெண் மாத்திரம் கெட்டால் போதாது, ஆணும் தவறு செய்ய வேண்டும் என்று தெரியாதா, என்ன? அவன் வாயில் அந்தப் பேச்சை வைத்த புத்திசாலிக்கு ஆண் நிரபராதி என்று தோன்றியிருக்க வேண்டும். நான் சொல்கிறேன் — ஒருவர் அல்ல, பத்துப்பேர் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் கண்ணன் வாயில் திணித்துவிட்டார்கள்; கடவுளே சொன்னது என்றால் நாம் அதற்கு எதிராக ஏதாவது முணுமுணுப்போமா!”
―
ಮೂಕಜ್ಜಿಯ ಕನಸುಗಳು [Mookajjiya Kanasugalu]
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
ಮೂಕಜ್ಜಿಯ ಕನಸುಗಳು [Mookajjiya Kanasugalu]
by
Kota Shivarama Karanth2,554 ratings, average rating, 247 reviews
Browse By Tag
- love (101803)
- life (79826)
- inspirational (76240)
- humor (44489)
- philosophy (31163)
- inspirational-quotes (29030)
- god (26983)
- truth (24831)
- wisdom (24773)
- romance (24464)
- poetry (23424)
- life-lessons (22743)
- quotes (21221)
- death (20624)
- happiness (19112)
- hope (18649)
- faith (18514)
- travel (17856)
- inspiration (17488)
- spirituality (15806)
- relationships (15740)
- life-quotes (15662)
- motivational (15470)
- love-quotes (15436)
- religion (15436)
- writing (14983)
- success (14226)
- motivation (13374)
- time (12906)
- motivational-quotes (12664)
