இந்தியாவில் சாதிகள் : Indiyaavil Saathikal (Political Book 2) (Tamil Edition)
Rate it:
76%
Flag icon
மக்கள் தங்களுக்கு உதவியான நடவடிக்கை எதிலும் ஈடுபட முடியாமல் உணர்வும் செயலும் இழக்கச் செய்து முடமாக்கி வைக்கும் முறை அது.
76%
Flag icon
இந்திய வரலாற்றிலேயே சுதந்திரமும் பெருமையும் புகழும் மிகுந்து விளங்கிய ஒரே காலம் மௌரியப் பேரரசின் காலம்தான். மற்ற எல்லாக் காலங்களிலும் நாடு தோல்வியிலும் இருளிலும் தவித்தது. மௌரியர் காலத்தில்தான் சதுர்வர்ணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. நாட்டு மக்களில் பெரும்தொகையினரான சூத்திரர்கள் உரிமை பெற்று நாட்டின் ஆட்சியாளர்கள் ஆனார்கள். சதுர்வர்ணம் தழைத்திருந்த காலம்தான் நாட்டில் தோல்வியும் இருளும் சூழ்ந்து நாட்டு மக்களின் பெரும்பகுதியினர் அவல வாழ்க்கையில் தள்ளப்பட்டனர்.
77%
Flag icon
பிராமணர், ஷத்திரியர் இருவரில் யார் முதலில் வணக்கம் கூறுவது, இருவரும் ஒரே தெருவில் சந்திக்கும்போது யார் முதலில் வழிவிடுவது என்பது போன்ற அற்பவிஷயங்களிலும் அவர்கள் சச்சர விட்டிருக்கிறார்கள்.
77%
Flag icon
கிருஷ்ண அவதாரமே ஷத்திரியர்களை வேரறுக்கும் புனித நோக்கத்துக்காகவே எடுக்கப்பட்டது என்று பாகவதம் கூறுகிறது.
79%
Flag icon
இந்து அல்லாதவர்களுக்குச் சாதி ஒரு வழக்கம் மட்டுமே. அது ஒரு புனிதமான அமைப்பு அல்ல. அதைத் தொடங்கியவர்கள் அவர்கள் அல்ல. அவர்களுக்கு அது பழைய வழக்கத்தின் தொடர்ச்சியே. அவர்கள் சாதியை ஒரு மதக் கோட்பாடாகக் கருதுவதில்லை.
80%
Flag icon
உயிருடன் இருப்பதாலேயே உயிர் வாழத் தகுதி இருக்கிறது என்ற நேர்மையற்ற வாதத்திற்கு அவரது வார்த்தைகள் ஆதாரமாகக் கொள்ளப்படும் என்று நான் அஞ்சுகிறேன்.
80%
Flag icon
உயிர் வாழ்வதில் பல விதங்கள் உள்ளன. அவை எல்லாமே ஒரே மாதிரி கௌரவமானவை அல்ல. தனி மனிதருக்கும் சரி, ஒரு சமூகத்துக்கும் சரி, வெறும் வாழ்வுக்கும் மதிப்புடன் வாழ்வதற்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது. போரில் வென்று புகழ் சிறக்க வாழ்வதும் வாழ்வுதான். தோற்றுச் சரணடைந்து கைதியாக வாழ்வதும் வாழ்வுதான். இந்துக்கள் அழிந்து போகாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை மட்டும் வைத்து ஒரு இந்து பெருமை பாராட்டுவது பயனற்றது. வாழ்ந்து
81%
Flag icon
வடஇந்திய, மத்திய இந்திய பிராமணர்கள் தக்காணத்திலும் தென்னிந்தியாவிலும் உள்ள பிராமணர்களைவிட சமூக அந்தஸ்தில் மிகவும் கீழான நிலையில் இருக்கிறார்கள். வடஇந்திய, மத்திய இந்திய பிராமணர்கள் சமையற்காரர்களாகவும், தண்ணீர் எடுப்போராகவும் மட்டுமே இருக்கிறார்கள். தக்காண, தென்னிந்திய பிராமணர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றிருக்கிறார்கள். வட இந்தியாவில் உள்ள வைசியர்களும் காயஸ்தர்களும் அறிவு வளர்ச்சியிலும் சமூகஅந்தஸ்திலும் தக்காண, தென்னிந்திய பிராமணர்களுக்குச் சமமாக இருக்கிறார்கள்.
81%
Flag icon
உணவு விஷயத்தில் தக்காண, தென்னிந்திய பிராமணர்கள் சைவ உணவுக்காரர்களாகவும், கஷ்மீரிலும் வங்காளத்திலும் உள்ள பிராமணர்கள் அசைவ உணவுக்காரர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில் தக்காண, தென்னிந்திய பிராமணர்களுக்கும், பிராமணரல்லாத குஜராத்திகள், மார்வாரிகள், பனியாக்கள், ஜெயின்கள் ஆகியோருக்கும் இடையே ஒற்றுமை இருக்கிறது.
81%
Flag icon
கிளைச்சாதிகளை இணைப்பதில், தென்னாட்டு பிராமணர்களை வடநாட்டு பிராமணர்களுடன் இணைப்பது...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
81%
Flag icon
கிளைச் சாதிகளை ஒழிப்பதுடன் இது நின்றுவிடக் கூடும். இதனால் சாதிகள் முன்னைவிட அதிக வலுப்பெற்று, மேலும் அதிகத் தொல்லை தரக்கூடும்.
82%
Flag icon
சாதி ஒழிப்புக்கு உண்மையான வழி, கலப்புமணம்தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
82%
Flag icon
சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்க்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்.
82%
Flag icon
சமபந்தி போஜனமும் கலப்புமணமும் சாதாரண நடைமுறைகளாகும்போதுதான் சாதியின் சக்தி அழியும் என்று நீங்கள் கருதுவது சரியானதே. நோயின் மூலத்தை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள்.
82%
Flag icon
சாதி என்பது இந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கற்சுவரோ, கம்பி வேலியோ அல்ல. சாதி என்பது ஒரு எண்ணம், ஒரு மனநிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பௌதிகத் தடையை அழிக்கும் செயல் அல்ல; மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தும் செயல். சாதி ஒரு தீமையாயிருக்கலாம். மனிதனுக்கு மனிதன், மனிதத் தன்மையற்ற முறையில் நடந்து கொள்வதற்கு அது காரணமாயிருக்கலாம். ஆயினும் இந்துக்கள் சாதிமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் மனிதத் தன்மை அற்றவர்கள் என்பதோ விபரீத புத்தி கொண்டவர்கள் என்பதோ அல்ல. அவர்கள் ஆழ்ந்த மதப்பற்றுக் கொண்டவர்களாயிருப்பதனாலேயே சாதிமுறையப் பின்பற்றுகிறார்கள். சாதிமுறையைப் ...more
83%
Flag icon
சாஸ்திரங்களின் அதிகாரத்தை எதிர்க்காமல், சாஸ்திரங்களைப் பின்பற்றி மக்கள் செய்யும் செயல்களை மட்டும் குறை கூறுவது பொருத்தமற்றது.
83%
Flag icon
தீண்டாமையை ஒழிக்கப் பாடுபடும் சீர்திருத்தக்காரர்கள், மகாத்மா காந்தி உட்பட, இதை உணராமலிருக்கிறார்கள்.
83%
Flag icon
சமபந்தி போஜனங்களும் கலப்பு மணங்களும் நடத்தவேண்டும் என்று கிளர்ச்சிகள் செய்வதும், அவற்றை நடத்துவதும் செயற்கையான முறையில் கட்டாயமாக உணவைத் திணிப்பது போன்றது. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சாஸ்திரத்தின் அடிமைத்தளையை அறுத்து விடுதலை பெறச் செய்யுங்கள்; சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மனத்தில் படிந்து போயிருக்கும் நச்சுக் கருத்துக்களைத் துடைத்தெறியுங்கள். இதைச் செய்தால் நீங்கள் சொல்லாமலே அவர்கள் சமபந்தி போஜனம் செய்வார்கள்; கலப்பு மணம் புரிவார்கள்.
83%
Flag icon
வார்த்தைச் சாலங்கள் செய்வதில் பயனில்லை. சாஸ்திரங்களை இலக்கணப்படி வாசித்து தர்க்கரீதியான முறையில் பொருள் கொண்டால் அவற்றின் அர்த்தம் நாம் நினைப்பதுபோல இல்லை என்று விளக்கிக் கொண்டிருப்பது பயனற்றது. சாஸ்திரங்களை மக்கள் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். புத்தர் செய்ததுபோல, குருநானக் செய்தது போல நீங்கள் செயல்படவேண்டும். சாஸ்திரங்களைப் புறக்கணித்தால் மட்டும் போதாது. அவற்றின் அதிகாரத்தையே மறுக்க வேண்டும்.
84%
Flag icon
மக்களின் மத நம்பிக்கைகளுடன் சம்பந்தப்படாமல் உலகியல் விஷயங்கள் சம்பந்தமாக சீர்திருத்தம் ஒருவகை.மக்களின் மதநம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சீர்திருத்தம் மற்றொரு வகை. இந்த இரண்டாவது வகையான சீர்திருத்தத்திலும் இரண்டு விதங்கள் உள்ளன. ஒருவிதம், மதக் கொள்கைகளுக்கு இணக்கமானது; மதக்கொள்கைகளை விட்டு விலகிச் சென்றவர்களை மீண்டும் அவற்றைப் பின்பற்றத் தூண்டுவது, இரண்டாவது விதம், மதக்கொள்கைளுக்கு நேர் முரணானது. மதக்கொள்கைகளை கைவிட்டு, அவற்றின் அதிகாரத்தை மறுத்து, அவற்றுக்கு எதிராகச் செயல்படுமாறு மக்களைத் தூண்டும் சீர்திருத்தம் இது.
84%
Flag icon
இந்தச் சாஸ்திரங்கள் தெய்வீக சக்தியும், அசாதாரணமான ஞானமும் பெற்ற ரிஷிகளின் கட்டளைகள் என்றும், எனவே அவற்றை மீறி நடப்பது பாவம் என்றும் மக்கள் நம்புகிறார்கள். சாதியை
84%
Flag icon
பிராமணர்கள் அரசியல் சீர்திருத்த இயக்கங்களிலும் சில சமயம் பொருளாதாரச் சீர்திருத்தத்திலும் முன்னணியில் நிற்கிறார்கள். ஆனால் சாதித் தடைகளை உடைக்கப் புறப்பட்டிருக்கும் படையில் கடைசி இடத்தில் கூட அவர்கள் காணப்படவில்லை. வருங்காலத்திலாவது
85%
Flag icon
வருங்காலத்திலாவது பிராமணர்கள் இதை முன் நின்று நடத்த வருவார்கள் என்று நம்ப முடியுமா? முடியாது,
85%
Flag icon
சாதிமுறையை உடைப்பது பிராமண சாதிக்கே ஆபத்தாக முடியும் என்பதை மறந்து விடுகிறீர்கள்.
85%
Flag icon
பிராமண சாதியின் அதிகாரத்தையும் செல்வாக்கையும் அழிக்கக் கூடிய ஒரு இயக்கத்தை முன்நின்று நடத்த பிராமணர்கள் முன்வருவார்கள் என்று கூறமுடியுமா?
85%
Flag icon
லௌகீக பிராமணர், வைதீக பிராமணர் என்ற வித்தியாசப்படுத்துவதே பயனற்றது என நான் கருதுகிறேன். இரண்டு வகையினருமே உற்றார் உறவினராயிருப்பவர்கள். ஒரே உடம்பின் இரண்டு கைகளைப் போன்றவர்கள் அவர்கள், ஒரு கை இன்னொரு கையைப் பாதுகாக்கப் போராடும் என்பது நிச்சயம்.
86%
Flag icon
போப் ஏன் இந்தச் சீர்திருத்தத்தை அல்லது அந்தச் சீர்திருத்தத்தைச் செய்யாமலிருக்கிறார் என்று மக்கள் சில சமயங்களில் வீண் கேள்வி கேட்கிறார்கள். இதற்கு விடை புரட்சிக் கருத்துக் கொண்ட ஒரு மனிதர் போப் ஆக மாட்டார், அல்லது, போப் ஆகிறவர் புரட்சிக்காரராக விரும்ப மாட்டார் என்பதே.” இந்தக்கருத்து இந்தியாவின் பிராமணர்களுக்கும் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். போப் ஆகிற ஒரு மனிதர் புரட்சிக்காரர் ஆக விரும்பமாட்டார் என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல பிராமணராகப் பிறந்த ஒருவர் புரட்சிக்காரராக விரும்பமாட்டார் என்பதும் உண்மை.
86%
Flag icon
சாதியை ஒழிக்கும் இயக்கத்தில் பிராமணர்கள் முன்நின்று நடத்த முன் வருவார்களா, மாட்டார்களா என்பது முக்கியமில்லாத விஷயம் என்று உங்களில் சிலர் கூறுவார்கள். இவ்வாறு நினைப்பது, ஒரு சமுதாயத்தில் அறிவுயர்ந்த வகுப்பின பணியின் முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்துவதாகும்.
86%
Flag icon
ஒரு நாட்டின் தலைவிதியே அறிவுத்திறன் கொண்ட வகுப்பையே சார்ந்திருக்கிறது என்று கூறினால் அது மிகையல்ல.
86%
Flag icon
அறிவுத்திறன் கொண்ட வகுப்பு நேர்மையானதாக, சுயேச்சையானதாக, தன்னலமற்றதாக இருந்தால், நெருக்கடி ஏற்படும் சமயங்களில் அது முன்வந்து நாட்டுக்குச் சரியான வழியைக் காட்டும். அறிவுத்
86%
Flag icon
அறிவுத்திறன் கொண்ட ஒருமனிதன் என்ன குறிக்கோளை அடைய விரும்புகிறான் என்பதைப் பொறுத்தே அதை அவன் எப்படிப் பயன்படுத்துவான் என்பது அமையும். அவன் நல்லவனாக இருக்கலாம். அதேபோல கெட்டவனாகவும் இருக்கமுடியும். அவ்வாறே அறிவுத்திறன் வகுப்பும் உயர்ந்த நோக்கமும், உதவும் எண்ணமும், மனிதகுலத்தைத் தவறுகளிலிருந்து காத்து நல்லவழியில் சேர்க்கும் தன்மையும் கொண்ட சான்றோர்களின் குழுவாகவும் இருக்கலாம். அல்லது ஒரு அயோக்கியர் கும்பலாகவோ தனக்கு ஆதரவளிக்கும் ஒரு குறுகிய கோஷ்டியின் நலன்களுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டமாகவோ இருக்கக்கூடும்.
87%
Flag icon
பிராமணர்கள் “பூதேவர்கள்” அல்லது பூமியில் வாழும் கடவுள்கள் என்று இந்துக்களுக்குக் கற்பிக்கப்படுகிறது.
87%
Flag icon
பிராமணர்கள் மட்டுமே ஆசிரியர்களாக இருக்கமுடியும் என்று இந்துக்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. மனு கூறுகிறார்: தர்மம் சம்பந்தமாகக் குறிப்பிட்டுக் கூறப்படாத விஷயங்களில் எப்படித் தீர்மானம் செய்வது என்று கேட்டால், சிஷ்யர்களாக உள்ள பிராமணர்கள் என்ன சொல்லுகிறார்களோ அதுவே சட்டமாகும்.”
89%
Flag icon
“ஸ்ருதிக்கும் ஸ்மிருதிக்கும் இடையே முரண்பாடு இருந்தால் ஸ்மிருதியே ஏற்கத்தக்கது” இங்கேயும்
89%
Flag icon
இங்கேயும் கூட இந்த இரண்டில் எது பகுத்தறிவுக்குப் பொருத்தமானது என்று ஆராய முயலக் கூடாது.
89%
Flag icon
இரண்டு ஸ்மிருதிகளுக்கிடையே முரண்பாடு இருந்தால் மனு ஸ்மிருதியே ஏற்கப்பட வேண்டும். இந்த இரண்டில் எது பகுத்தறிவுக்குப் பொருந்துகிறது என்று பார்க்க முயலக்கூடாது.
89%
Flag icon
ஸ்ருதிகளும் ஸ்மிருதிகளும் தெளிவான கட்டளை கொடுத்திருக்கும் எந்த விஷயத்திலும் ஒரு இந்து தனது பகுத்தறிவைப் பயன்படுத்தச் சுதந்திரம் இல்லை.
90%
Flag icon
ரயில் பயணங்களும் வெளிநாட்டுப் பயணங்களும் ஒரு இந்துவின் வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளாகும். சாதி வழக்கங்களை வாழ்க்கையில் எல்லாச் சமயங்களிலும் பின்பற்ற முடியவில்லை என்றால் அதைப் பின்பற்றுவதற்கே என்ன அவசியம் என்று இந்துவின் மனத்தில் இயல்பாகக் கேள்வி எழவேண்டும். ஆனால் ஒரு இந்து அப்படிக் கேட்பதில்லை. ஒரு இடத்தில் சாதியை மீறி நடந்துவிட்டு அடுத்த இடத்தில் அதைப் பின்பற்றுவார்.
90%
Flag icon
சாதியையும் தீண்டாமையையும் ஒழிப்பதற்கு எத்தனையோ பேர் பாடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் ராமானுஜர், கபீர் முதலானவர்களை முக்கியமாகக் குறிப்பிடலாம். இந்தச்
90%
Flag icon
ஸதாசாரத்துக்கு சாஸ்திரங்களை விடவும் உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது,
91%
Flag icon
சாதிக்கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் வேதங்களையும் சாஸ்திரங்களையுமே வெடிவைத்துத் தகர்க்க வேண்டும். பகுத்தறிவு செயல்பட இடம் கொடுக்காத, ஒழுக்கம் செயல்பட இடம்கொடுக்காத வேதங்களையும் சாஸ்திரங்களையுமே நீங்கள் தகர்க்கவேண்டும். ஸ்ருதிகளையும் ஸ்மிருதிகளையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை நீங்கள் அழிக்கவேண்டும். வேறு எதுவும் பயன் தராது. இந்த விஷயத்தில் இதுதான் என்னுடைய தீர்க்கமான முடிவு.
92%
Flag icon
தத்துவங்களுக்கும் விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு காரணமாக அவற்றின் அடிப்படையில் செய்யப்படும் செயல்களின் தரமும் தன்மையும் வேறுபடுகின்றன. நல்லது என்று சொல்லப்படுவதை ஒரு விதியின் காரணமாகச் செய்வதற்கும், தத்துவத்தின் அடிப்படையில் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தத்துவம் தவறாக இருக்கலாம். ஆனால் அதன் அடிப்படையில் செய்யப்படும் செயல் உணர்வுடனும் பொறுப்புடனும் செய்யப்படுகிறது. விதி சரியானதாக இருக்கலாம். ஆனால் அதைப் பின்பற்றும் செயல் யந்திரத்தனமானது. ஒரு மதச் செயல் சரியானதாக இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம், பொறுப்புடன் செய்யப்படுவதாகவேனும் இருக்க வேண்டும். இவ்வாறு பொறுப்புடன் செய்யப்பட ...more
1 2 3 5 Next »