More on this book
Community
Kindle Notes & Highlights
Read between
January 11 - January 19, 2021
என் உரையில் ஒரு கால்புள்ளியைக் கூட நான் மாற்றமாட்டேனென்றும், என் உரையை எவரும் தணிக்கை செய்வதை அனுமதிக்க மாட்டேனென்றும் நான் முடித்துத் தரும் வடிவத்திலேயே என் உரையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் நீங்கள் பம்பாய் வந்திருந்தபோது நேரில் நான் சொல்லி இருக்கின்றேன்.
இனி என் உரையை முழுமையாக ஏற்றுக் கொள்வதாகக் குழுவினர் உடன்பட்டாலும்கூட மாநாட்டிற்குத் தலைமை வகிக்க நான் உடன்படமாட்டேன்.
தம் வைதீக சகாக்களிடமிருந்து தம்மைத் துண்டித்துக் கொள்ளவிரும்பாத சாதி இந்துக்களின் சீர்திருத்தப் பிரிவினருக்கும், சீர்திருத்தம் நடைபெற்றே ஆகவேண்டும் என்பதை வலியுறுத்தும் தீண்டாதோரின் தன்மானமுள்ள பிரிவினருக்கும் இடையிலான இத்தகைய அவலமான உறவு வேறு எப்படி முடியும்?
அவர்கள் என்னை வெறுக்கின்றனர். அவர்களுடைய தோட்டத்தில் என்னையொரு நச்சுப் பாம்பாகவே அவர்கள் பார்க்கின்றனர்.
அனைத்தையும் அறிந்துள்ள அறிவாளன் என்பதற்காகவே எவரை வேண்டுமானாலும் ஓர் இந்து தன் குருவாக ஏற்றுக் கொள்வதைச் சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை.
இதனை இந்து இராஜ்யத்தை நிறுவுவதற்குச் சிவாஜிக்குத் தூண்டுகோலாக இருந்த மகாராஷ்டிரப் பிராமணரான துறவி இராமதாசர் நன்கு தெளிவுபடுத்தி யிருக்கின்றார்.
இந்திய நாட்டில் சமூகச சீர்திருத்தத்திற்கான வழி சொர்க்கத்திற்குச் செல்லும் வழியைப் போலவே கரடுமுரடானது; பல வகைகளில் கடினமானது.
தீய பழக்கவழக்கங்களால் விளைந்துள்ள தீமைகளைக் களைந்து சமூகத் திறனை வளர்த்தாலன்றி பிற துறைகளின் செயல்பாடுகளில் நிரந்தர முன்னேற்றம் காண்பதரிது என்பது ஒரு காலத்தில் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்து
சமூக மாநாட்டு அமைப்பும்
சிறிது காலம் காங்கிரசும் சமூக மாநாடும் (Social Conference) ஒரே பொதுமுயற்சியில் இரு பிரிவுகளாகப் பணியாற்றியதோடு அவற்றின் ஆண்டு மாநாடுகள் ஒரே பந்தலில் இடம்பெற்று நடந்தன. எனினும் இவ்விரு பிரிவுகளும் விரைவில் அரசியல் சீர்திருத்தக் கட்சி எனவும், சமூகச் சீர்திருத்தக் கட்சி எனவும் இரு கட்சிளாகப் பிரிந்ததோடு அவற்றிற்கிடையே கடுமையான கருத்து முரண்பாடுகளும் தோன்றின.
அவற்றிற்கிடையே எழுந்த பிரச்சினை சமுதாயச் சீர்திருத்தம் அரசியல் சீர்திருத்தம் இவற்றில் எதற்கு முதன்மை அளிப்பது என்பதுதான்.
“நம்முடைய சமுதாய அமைப்பைச் சீர்திருத்தம் செய்யாமல் அரசியல் சீர்திருத்தத்திற்கு நாம் தகுதியுடையவர்களல்ல என்போர் கூற்றினை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். சமுதாயச் சீர்திருத்தத்திற்கும் அரசியல் சீர்திருத்தத்திற்கும் என்ன தொடர்புள்ளது என்பது எனக்குத் தோன்றவில்லை. நம்முடைய விதவைகள் மறுமணம் செய்து கொள்ளாமல் இருப்பதனாலும், நம்முடைய பெண்களுக்கு மற்ற நாட்டுப்பெண்களை விட இளமையிலேயே திருமணத்தை நடத்தி விடுவதாலும், நாம் நம் நண்பர்களைக் காணச் செல்லும்போது நம் மனைவியரையும் மகளிரையும் நம்முடன் அழைத்துச் செல்லாததாலும் அல்லது ஆக்ஸ்போர்டுக்கோ கேம்பிரிட்ஜ்க்கோ நம் பெண்களைப் படிப்பதற்கு அனுப்பாததாலும் நாம்
...more
மராத்தியத்தை ஆண்ட பேஷ்வாக்களின் ஆட்சியில் தெருவில் எதிரே வரும் இந்துக்களின் மீது தீண்டாதாரின் நிழல் பட்டால் கூட தீட்டாகி விடும் எனக் காரணம் காட்டித் தீண்டாதாரை வீதிகளில் நடக்க அனுமதித்ததில்லை. இந்துக்கள் தவறித் தீண்டாதாரைத் தொட்டு அவர்கள் தீட்டாகி விடுவதைத் தவிர்ப்பதற்குத் தீண்டாதார் தம் கழுத்திலோ, மணிக்கட்டிலோ கறுப்புக் கயிறு ஒன்றினை அடையாளமாகக் கட்டிக் கொள்ள வேண்டுமெனக் கட்டளை இடப்பட்டிருந்தது. பேஷ்வாக்களின் தலைநகரான புனேயில் தீண்டாதான் தெருவில் நடந்தால் எழும்பும் புழுதி பட்டு எதிரே வரும் இந்து தீட்டாகி விடாமல் தடுப்பதற்காக, தீண்டாதான் தன் இடுப்பில் விளக்குமாறு ஒன்றினைக் கட்டிக் கொண்டு தான்
...more
தங்க சரிகை கரை போட்ட உடைகளை அணியக் கூடாது. 2.சாயம் தோய்த்த அழகான உடைகளை அணியக் கூடாது. 3.இந்து ஒருவன் இறந்து போனால் இறந்தவனுடைய உறவினர்களுக்கு - அவர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் இழவுச் செய்தியைப் போய் சொல்ல வேண்டும். 4.இந்து திருமணங்களில் ஊர்வலத்தின் போதும் திருமணம் நடக்கும் போதும் பலாய்கள் மேள தாளங்களை இசைக்க வேண்டும். 5.பலாய் சாதிப் பெண்கள் தங்க, வெள்ளி நகைகளை அணியக் கூடாது. அழகான ஆடைகளையோ, ரவிக்கைகளையோ உடுத்தக் கூடாது. 6.இந்துப் பெண்களின் பிரசவங்களின் போது பலாய் பெண்கள் தேவையான ஊழியங்களைச் செய்ய வேண்டும். 7.பலாய் சாதியினர் எவ்வித கூலியும் கேட்காமல் தொண்டு செய்ய வேண்டும்; இந்துக்கள்
...more
பலாய்கள் இந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்தார்கள். எனவே, இந்துக்கள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கிராமத்துக் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்கக்கூடாது எனப் பலாய்களைத் தடுத்தனர். அவர்களுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்வதைத் தடுத்தனர். பலாய்களின் விளைநிலம் இந்துக்களுக்குச் சொந்தமான நிலங்களுக்கு நடுவில் இருந்தால் அவற்றின் வழியே பலாய் தன் நிலத்திற்குச் செல்ல விடாமல் பலாய்கள் தடுக்கப்பட்டனர். அவர்களின் நிலங்களில் விளைந்த பயிர்களை இந்துக்கள் தங்கள் கால்நடைகளை விட்டு மேயச் செய்தனர்.
விருந்தளித்த தீண்டாதான் விருந்திலே நெய் பரிமாறும் அளவுக்குத் ‘திமிர்’ பிடித்தவனாக இருந்ததுதான்.
நெய் என்பது இந்துக்களின் கௌரவத்தோடு தொடர்புடையது: தீண்டாதார் நெய் வாங்கும் அளவுக்கு வசதி படைத்தவர்களாக இருந்த போதிலும் அதை அவர்கள் பயன்படுத்தக் கூடாது; நெய் அவர்களுக்கு உரியது அல்ல,
உங்கள் சொந்த நாட்டைச் சார்ந்த தீண்டாதாரைப் போன்றுள்ள பெரும்பான்மை வகுப்பினரை பொது பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்க அனுமதிக்காத நீங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற அருகதை உடையவர்கள் தானா? அவர்கள் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கக் கூட அனுமதிக்காத நீங்கள் அரசியல் அதிகாரத்திற்கு அருகதை உடையவர்கள் தானா? அவர்கள் விரும்புகின்ற ஆடை, அணிகளை அணியக் கூட அனுமதிக்காத நீங்கள் அரசியல் அதிகாரத்திற்கு அருகதை உடையவர்களா? அவர்கள் விரும்பும் எவ்வகை உணவையும் உண்ணக் கூட அனுமதிக்காத நீங்கள் அரசியல் அதிகாரத்திற்கு அருகதை படைத்தவர்களா?
எந்த ஒரு நாட்டுக்கும் பிற நாடுகளை அடக்கி ஆளத் தகுதயில்லை என்னும் மில் (Mill) அவர்களின் கோட்பாட்டினைத் திரும்பத் திரும்ப எடுத்துக்காட்டாகக் கூறுகின்ற காங்கிரசார் அனைவரும் எந்த ஒரு சாதிக்கும் பிற சாதிகளை அடக்கியாளத் தகுதியில்லை என்பதை ஒப்புக்கொண்டு தானாக வேண்டும்.
சமூகச் சீர்திருத்தம் என்றால் இந்துக் குடும்பத்தைச் சீர்திருத்துவதா அலலது இந்து சமுதாயத்தைச் சீர்திருத்திப் புத்தாக்கம் செய்வதா என்னும் வகைப்படுத்தி இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டினை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். முதலாவதாகக் கூறப்பட்ட சீர்திருத்தம் விதவை மறுமணம், குழந்தை மணம் ஆகியவற்றோடு தொடர்புடைய குடும்பச் சீர்திருத்தம் சார்ந்தது. இரண்டாவதாகக் கூறப்பட்ட சீர்திருத்தம் சாதி அமைப்பை ஒழிப்பது தொடர்புடைய சமூகச் சீர்திருத்தம் சார்ந்தது.
அந்த அணியைச் சார்ந்தோர் பெரும்பான்மையினர் கல்வி அறிவு பெற்ற உயர்சாதி இந்துக்களாகவே இருந்தனர். ஒவ்வொரு மேல் சாதி இந்துக் குடும்பத்திலும் கட்டாய விதவைக் கோலமும் கட்டாய குழந்தை திருமணக் கொடுமையும் இருந்ததால் அந்தத் தீமைகளை ஒழிப்பது சாதி ஒழிப்பை விட முக்கியமானது என அவர்கள் கருதி இந்து குடும்பச் சீர்திருத்தத்திலேயே கவனம் செலுத்தினர்.
ஐரோப்பிய மக்களின் அரசியல் விடுதலைக்கு லூதர் (Martin Luther) துவக்கிய மதச் சீர்திருத்தங்களே முன்னோடியாக இருந்தன. இங்கிலாந்தில் கிறித்துவ மதச் சீர்திருத்தம் (Puritanism) அரசியல் விடுதலைக்கு வழிகோலியது. அமெரிக்க விடுதலைப் போரில் வெற்றி கிட்டுவதற்குக் கிறித்துவமதச் சீர்திருத்தமே முக்கிய காரணமாயிற்று. பியூரிட்டானிசம் என்பது ஒரு மத இயக்கம்தான். இதே உண்மை முஸ்லீம் பேரரசிற்கும் பொருந்தும். முகம்மது நபி என்னும் தீர்க்கதரிசி துவக்கி வைத்த மதப் புரட்சிக்குப் பின்பே, அரேபியர்கள் ஓர் அரசியல் சக்தியாக மாற முடிந்தது. இந்திய வரலாறு கூட இதே முடிவைக் காட்டுகின்றது. சந்திரகுப்த மௌரியரின் அரசியல் புரட்சிக்குப்
...more
பொருள்மட்டுமே மக்களின் இலட்சியம் அல்லவென்றும், அவனது முயற்சிகளுக்குப் பொருள் மட்டுமே காரணமல்லவென்றும் கூறமுடியும். பொருளாதார அதிகாரம் மட்டுமே ஒரே அதிகாரம் என்பதை மானுடச் சமூகவியல் ஆய்வாளர் எவரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
இந்திய நாட்டில் பெரும் பணக்காரர்கள் கையில் ஒரு காசு கூட இல்லாத சாதுக்களுக்கும் பக்கரிகளுக்கும் அடிபணிந்து நிற்பதற்குக் காரணம் என்ன? ஏழை, எளிய இந்திய மக்கள் தங்களிடமுள்ள அற்பச் சொத்தான மூக்குத்தி, தோடு முதலியவற்றை விற்றுக் காசிக்கும், மெக்காவுக்கும் புனிதயாத்திரை போவதேன்? இந்தியாவில் ஒரு நீதிபதியைவிடப் புரோகிதன், சாதாரண மக்களிடம் செல்வாக்கு பெற்றவன் அல்லவா?
இந்திய நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தினர் அதாவது ஏழை எளிய மக்கள், தம்மிடையே ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டைத் தவிர வேறெந்த வேறுபாட்டையும் பார்ப்பதில்லையா?
நீங்கள் எந்த திக்கில் திரும்பினாலும் சாதி அரக்கன் வீதாற்றி உங்களை வழிமறிப்பான். அந்த அரக்கனைக் கொன்றொழித்தாலன்றி அரசியல் சீர்திருத்தமோ, பொருளாதாரச் சீர்திருத்தமோ பெற முடியாது.
சாதி அமைப்பு தொழில்களை மட்டுமே பிரிக்கவில்லை; தொழிலாளர்களையும் அது பிரிக்கின்றது.
ஒருவர் தன் திறமைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்றவாறு ஒரு தொழிலைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டு தன் வழியில் செயல்படவும் தக்க வாய்ப்புகள் அமைவது சமூக மற்றும் தனிமனிதர் திறமைக்குத் தேவையானதாகும்.
தொழில்களை மாற்றிக் கொள்ள சாதி அனுமதிப்பதில்லை. இதுவே நம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் காரணம்.
இந்தச் சாதிமுறையில் விதிக்கப்பட்டுள்ள தொழில் பிரிவினை, சொந்த விருப்பத் தேர்வின் அடிப்படையில் அமைந்தது அல்ல. தனி மனித விருப்புகளுக்கோ, முன்னுரிமைகளுக்கோ சற்றேனும் இவ்வகைப் பிரிவில் இடமில்லை. இது தலைவிதித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
தனி மனிதனின் இயற்கையான ஆற்றல்களுக்கும், இயல்பான விருப்பங்களுக்கும் எதிராகச் சமூகவிதிகள் என்ற பெயரால் கட்டாயத்துக் குள்ளாக்குவதே சாதியின் தன்மையாக இருப்பதால், ஒரு பொருளாதார அமைப்பு என்ற வகையில் சாதி என்பது தீமை பயக்கின்ற ஒரு நிறுவனமே.
உலக மக்களுக்குள்ளே கலப்பில்லாத தூய்மையான மனித இனம் எங்குமே இல்லை என்பதும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா இனங்களுக்கிடையிலும் கலப்பு இருந்தே வந்துள்ளது என்பதுமே மானுடவியலார் கருத்தாகும்.
திரு.டி.ஆர். பந்தார்க்கர்
“அந்நியக் கலப்பு இல்லாத சாதியோ, வகுப்போ இந்தியாவில் எதுவுமில்லை. படைவீரர் வகுப்பினரான ராஜபுத்திரர், மகாராஷ்டிரர் ஆகியோரிடையே மட்டுமல்ல, தாங்கள் எவ்வித அந்நியக் கலப்புக்கும் ஆளாகவில்லை என்கின்ற களிப்பு மாயையில் ஆழ்ந்திருக்கும் பிராமணரிடையேயும் அந்நிய இரத்தக் கலப்பு இருக்கவே செய்கிறது.”
உண்மையில் பார்க்கப் போனால், இந்திய இனங்கள் தமக்குள் இரத்தத்தாலும், கலாச்சாரத்தாலும் இரண்டறக் கலந்ததற்கு நெடுங்காலத்திற்குப் பின்னர் தான் சாதிமுறை நடைமுறைக்கு வந்தது. சாதி பாகுபாடு என்பது உண்மையில் இனப் பாகுபாடே என்பதும், பல்வேறு சாதிகளும் வெவ்வேறான இனங்களே என்பதும் உண்மைகளைத் திரித்துக் கூறுவதாகும். பஞ்சாபிலுள்ள பிராமணனுக்கும், சென்னையிலுள்ள பிராமணனுக்கும் இடையில் இன வழியில் என்ன ஒற்றுமை உள்ளது? வங்கத்திலுள்ள தீண்டாதானுக்கும், சென்னையிலுள்ள தீண்டாதானுக்கும் இடையில் இனவழியில் என்ன ஒற்றுமை உள்ளது? பஞ்சாப் பிராமணனுக்கும் சென்னை தீண்டாதானுக்கும் இடையே என்ன இனவழியிலான வேறுபாடு உள்ளது. சென்னை
...more
சாதி, இன மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டது என்றால் சாதிமுறை எத்தகைய மனிதர்களை உருவாக்கி இருக்க வேண்டும்? உடல் வளர்ச்சியை வைத்துப்பார்த்தால் இந்துக்கள் மிகவும் தரம் குறைந்தநிலையில் அல்லவா இருக்கிறார்கள். வளர்ச்சியிலும் ஆற்றலிலும் குறைந்த குள்ளர்களின் சந்ததியராகத்தானே இருக்கிறார்கள். 100க்கு 90பேர் இராணுவத்திற்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடு இது.
முதலாவதாகவும் முக்கியமானதாகவும் நாம் புரிந்துகொள்ள வேண்டியது இந்து சமூகம் என்பதே வெறும் கற்பனை என்பது தான். ‘இந்து’ என்ற பெயரே ஓர் அன்னியப் பெயர்தான். இந்த நாட்டு மக்களிடமிருந்து தங்களைத் தனித்துக் காட்டுவதற்கு முகம்மதியர் வைத்த பெயர்தான் ‘இந்து’ என்பது. முகம்மதியரின் படையெடுப்புக்கு முந்தைய எந்த சமஸ்கிருத நூலிலும் ‘இந்து’ என்ற சொல் காணப்படவில்லை. இந்துக்களுக்குப் பொதுவானதொரு சமூகம் என்ற சிந்தனை இல்லாதிருந்த காரணத்தால் தங்களுக்குப் பொதுவானதொரு பெயர் தேவை என்பதை அவர்கள் உணரவில்லை. சொல்லப்போனால் இந்து சமூகம் என்ற ஒன்று இல்லை; இருப்பதெல்லாம் பல சாதிகளின் தொகுப்பே ஆகும்.
இந்து - முஸ்லீம் கலவரம் ஏற்படும் சமயங்கள் தவிர்த்த பிற சமயங்களில் பிற சாதிகளோடு தம் சாதிக்கு உறவு உண்டு என்று எந்த சாதியினரும் உணர்வதில்லை. மற்ற சமயங்களில் ஒவ்வொரு சாதியும் பிற சாதிகளிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவுமே முயல்கின்றன.
சமூகவியலார் கூறும் ‘குழு உணர்வு’ இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்றாகும். நாம் அனைவரும் இந்துக்கள் என்ற உணர்வு அவர்களிடம் இல்லை. ஒவ்வொரு இந்துவிடத்திலும் இருக்கும் உணர்வு தன் சாதி உணர்வு மட்டும்தான். இதனால் இந்துக்களை ஒரு சமூகமாகவோ அல்லது நாடாகவோ கொள்ள முடியவில்லை. அவர்கள் தமக்கென ஒரே சீரான வடிவமற்ற மக்கள் கூட்டமாகவே உள்ளனர்.
வெளிப்படையாகத் தெரிகின்ற வேற்றுமைகளுக்கிடையில் இந்திய நாடு முழுமைக்கும் பரவி காணப்படும் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் ஆகியவற்றில் ஒத்த தன்மை இருப்பதென்னவோ உண்மைதான்.
பல்வேறு பழங்குடி மக்கள் நெருங்கி வாழாத போதிலும், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சிந்தனைகள் முதலியவற்றில் அவர்களுக்கிடையே ஒற்றுமை காணப்படுகிறது.
மக்கள் ஒத்த தன்மையைப் பெற்றிருப்பது என்பதும் தமக்குள் பொதுவானவற்றைப் பெற்றிருப்பது என்பதும் ஒன்றுக்கொன்று வேறுபாடு உடையது ஆகும்.
மக்கள் ஒருவரோடு ஒருவர் கலந்து உறவாடுவதால் மட்டுமே தமக்குள் பொதுவானவற்றைப் பெறுகிறார்கள். அதாவது
பலவகைச் சாதிகளைச் சேர்ந்த இந்துக்கள் கொண்டாடும் திருவிழாக்கள் ஒரே மாதிரியாக இருந்தபோதிலும், ஒருவரைப் போலவே இன்னொரு சாதியினர் ஒன்று கலவாமால் கொண்டாடுவதால் சாதிகள் ஒரே சமூகமாக இணைந்து விடுவதில்லை. அவ்வாறு இணைய வேண்டுமானால் மக்கள் பொதுவான நடவடிக்கைகளில் பங்குபெறுவதும் பகிர்ந்து கொள்வதும் அவசியம். காரணம் ஒன்றிணைந்து செயல்படுவதால் அவர்களிடையே எழும் உணர்வுகள் ஒன்றாகின்றன. கூட்டு நடவடிக்கைகளில் தனிமனிதன் பங்குபெறவும் பகிர்ந்துகொள்ளவும் நேரும் போதுதான் அந்தக்கூட்டுநடவடிக்கையின் வெற்றியைத் தன் வெற்றியாகவும், தோல்வியைத் தன் தோல்வியாகவும் அவன் உணருவான். இந்த உணர்வே மக்களை ஒருங்கிணைத்து, ஒரே சமூகமாக
...more
ஒரு கூட்டத்தார் மற்றவர்களோடு கலவாமல் தனித்தும் ஒதுங்கியும் வாழ்கிறார்கள் என்றும், அந்தக் கூட்டத்தாரிடம் சமூக நேச உணர்வு இல்லை என்றும் இந்துக்கள் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்கின்றனர். ஆனால் இந்த சமூக நேச உணர்வின்மை அவர்களுடைய சாதிமுறையின் இழிவான தன்மை என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். கடந்த உலகப்போரின் போது ஜெர்மானியர்கள் ஆங்கிலேயரை எந்த அளவுக்கு வெறுத்து வசைபாடினார்களோ அதே அளவில் ஒவ்வொரு சாதியினரும் பிற சாதியாரை வெறுத்து வசைபாடி மகிழ்கின்றனர். இந்துக்களின் இலக்கியங்களில் மலிந்து கிடக்கும் சாதி வழிமுறைப் பட்டியல் கதைகளில் ஒரு சாதிக்கு உயர்வான பிறப்பிடமும் பிற சாதிகளுக்கு இழிவான பிறப்பிடமும்
...more
என் மாகாணத்தில் கோலக் பிராமணர்களும், தியோருக பிராமணர்களும், கரட பிராமணர்களும், பால்சி பிராமணர்களும், சித்பவன் பிராமணர்களும் தங்களைப் பிராமணசாதியின் உட்பிரிவுகள் எனக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் இவர்களுக்கு இடையிலேயும் சாதி வெறுப்பும், வேறுபாடும் உள்ளது. பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதோருக்குமிடையே எந்த அளவுக்குக் குறிப்பிடத்தக்கதாகவும், கொடூரமானதாகவும் இருக்கிறதோ அந்த அளவுக்கு இந்தப் பிராமணர் உட்பிரிவுகளுக்குள்ளும் காழ்ப்புணர்ச்சி இருந்து வருகின்றது.
எங்கெல்லாம் ஒரு கூட்டம் தம் சொந்த நலன்களைக் காத்துக் கொண்டுள்ளதோ அங்கெல்லாம் இந்தச் சமூக விரோத, வெறுப்பு மனப்பான்மை காணப்படும். இந்தச் சமூக விரோத மனநிலையே அந்தக் கூட்டத்தார், மற்ற கூட்டத்தாரோடு முழுமையாகக் கலந்து உறவாடுவதைத் தடுக்கிறது. இதன்மூலம் அந்தக் கூட்டத்தார் தான் பெற்றுள்ள ‘சொந்த நலன்களைக்’ காத்துக் கொள்ள முடிகிறது. இதுவே அதன் முதன்மையான நோக்கமுமாகும். நாடுகள் எவ்வாறு தம் தன்னலம் கருதித் தனித்திருக்க முற்படுகின்றனவோ அவ்வாறே பல்வேறு சாதிகளும் தன்னலங்கருதிப் பிறரோடு உறவின்றி தனித்து வாழ முற்படுகின்றன.
அன்றைய பிராமணர்களின் மூதாதையர் சிவாஜியை அவமதித்ததை இன்றைய பிராமணரல்லாதார் மன்னித்து மறக்க முடியவில்லை. முற்காலத்தில் பிராமணர்கள், காயஸ்தர்களை அவமதித்ததால் இன்றைய காயஸ்தர்கள் பிராமணர்களை மறக்கவில்லை.
சாதிகளும், சாதி உணர்வும் மக்கள் தம் பழம்பகையை மறக்காமல் காத்துவரக் காரணமாகி விட்டன; மக்களிடையே ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்து விட்டன.
இந்த நாட்டின் நாகரிகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையுடையது என்ற பெருமையடித்துக் கொள்ளும் அதே நேரத்தில் இங்குள்ள பழங்குடி மக்கள் தம் தொடக்கக் காலத்திலிருந்தது போன்ற நாகரிகமற்ற நிலையில் மூழ்கிக்கிடக்கிறார்கள் என்பதுதான் உண்மைநிலை.

