இந்தியாவில் சாதிகள் : Indiyaavil Saathikal (Political Book 2) (Tamil Edition)
Rate it:
16%
Flag icon
இந்தியாவில் சாதிகளின் தோற்றம் பற்றிய வினாவை விடச் சாதிகள் எவ்வாறு பரவின என்பது பெரும் தொல்லைக்குட்பட்டு நிற்பதாகும். நானறிந்த வரையில் சாதியின் தோற்றமும் பரவுதலும் பற்றிய கேள்விகள் தனித்தனியானவை அல்ல என்று எனக்குத் தோன்றுகின்றது.
16%
Flag icon
ஏதோ ஒருவகை தெய்வத்தன்மை பொருந்திய மதக் கோட்பாடாக, எதற்கும் எளிதில் வளைந்து கொடுக்கும் இந்திய மக்கள் மீது சட்டம் இயற்றும் ஒருவரால் சாதி திணிக்கப்பட்டிருக்க வேண்டும்
16%
Flag icon
நெருக்கடியான நிலைமைகளில் அவதாரம் எடுத்துப் பாவத்தில் மூழ்கி இருக்கின்ற மனித குலத்தைத் திருத்தி, நியாயத்தையும் நல்லொழுக்கத்தையும் நிலைநாட்டுவதற்காகச் சட்டம் இயற்றி அளித்தவர்களை உலக நாடுகள் ஒவ்வொன்றும் பெற்றிருக்கின்றன. இந்தியாவில் அத்தகைய சட்டம் இயற்றி அளித்தவரே மனு ஆவார். இந்த மனு உண்மையிலேயே இருந்திருப்பாரேயானால் நிச்சயமாக அவரை துணிச்சலான மனிதர் என்றே கொள்ள வேண்டும். அவர்
16%
Flag icon
அவர் சாதி பற்றிய சட்டத்தை அளித்தவர் என்ற கதையை ஒப்புக் கொள்வதானால் அவர் ஆணவமிக்கவராகவும் அவருடைய கோட்பாடுகளை ஒப்புக் கொண்ட மனிதர்கள், நாமறிந்திருக்கும் மனித சமுதாயத்திலிருந்து வேறுபட்டவர்-களாகவும்தான் இருக்கவேண்டும்.
16%
Flag icon
சாதிமுறைக்கென்று சட்டத்தை ஒருவர் வழங்கினார் என்பதே கற்பனைக்கும் எட்டாததாக உள்ளது. மனு தன்னுடைய சட்டத்தினால் சாகா வரம் பெற்...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
16%
Flag icon
ஒரு வர்க்கத்தைக் கோபுரத்தின் உச்சிக்கு ஏற்றுவதற்காக இன்னொரு சமூக மக்களை விலங்குகளை விடக் கேவலமான நிலைக்குத் தன் எழுத்தாணியாலேயே தாழ்த்திச் சாதித்த இந்த மனு, எல்லா மக்களையும் அடக்கி ஆளும் கொடுங்கோலனாக இருந்தாலொழிய இந்த அளவுக்குப் பாகுபாட...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
16%
Flag icon
இந்த மனுவின் ஆவியை எதிர்த்துக் கொல்லும் அளவுக்கு எனக்குப் போதுமான வலிமை இல்லை என்பதை அறிவேன்.
16%
Flag icon
நான் உங்களுக்கு வலியுறுத்திக் கூறுவதெல்லாம் சாதி பற்றிய சட்டத்தை மனு வழங்கவில்லை. மனுவுக்கு நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே நெடுங்காலமாகச் சாதி நிலவி வருகிறது. ஆனால் அவர், சாதிமுறை நல்லதெனக் கூறி அதற்குத் தத்துவமளித்து நிலைநிறுத்திய பணியைச் செய்திருக்கிறார். இன்றுள்ள நிலையில் காணப்படும் இந்து சமுதாயத்தை மனு உண்டாக்கவில்லை; உண்டாக்கவும் முடியாது.
17%
Flag icon
பிராமணர்களே சாதியைப் படைத்தனர் என்னும் கோட்பாடும் அர்த்தமற்றதே.
17%
Flag icon
பிராமணர்கள் பலவகைகளில் குற்றமிழைத்தவர்களாக இருக்கலாம்; குற்றமிழைத்தவர்கள்தான் என நான் துணிந்து கூறவும் செய்வேன். ஆனால், சாதிமுறையைப் பிராமணர்கள், பிராமணரல்லாதார் மீது திணித்தார்கள் என்பது உண்மையல்ல; அதற்குரிய துணிவோ, ஆற்றலோ அவர்களுக்குக் கிடையாது. சாதிமுறை பரவுவதற்குப் பிராமணர்கள் தங்கள் நயமான தத்துவங்களின் மூலம் துணை புரிந்திருக்கலாம். ஆனால் தங்கள் வரையறைகளுக்கு அப்பால் தங்களுடைய திட்டத்தை உந்தித் தள்ளி நிச்சயமாக அவர்கள் புகுத்தியிருக்க முடியாது. தங்களுக்குத் தகுந்தாற் போலவும், தாங்கள் நினைப்பது போலவும், சமூகத்தை மாற்றியமைப்பது என்பது இயலாத காரியம்.
17%
Flag icon
எப்படியோ இந்து சமுதாயம் சாதி அடிப்படையில் அமைந்தாகிவிட்டது; சாதி அமைப்பு சாஸ்திரங்களால் தெரிந்தே உருவாக்கப்பட்டுள்ளது என்ற வலுவான நம்பிக்கை வைதீக இந்துக்களிடையே நிலவுகிறது. அதோடு இந்த அமைப்பு நல்லதற்காகத்தான் இருக்க முடியுமே தவிர கெடுதலுக்காக அல்ல; ஏனென்றால் இந்த அமைப்பு சாஸ்திரங்களால் உருவாக்கப்பட்டது; அந்த சாஸ்திரங்களால் உருவானது ஒருபோதும் தவறாக இருக்க முடியாது என்றும் நம்பிக்கை உள்ளது.
17%
Flag icon
இந்த நம்பிக்கைக்கு எதிராகத்தான் நான் இவ்வளவு தூரம் பேசி வந்திருக்கின்றேன். மத சம்பிரதாயப் புனிதம் விஞ்ஞான அடிப்படையில் அமைந்தது என்றோ, மத சம்பிரதாயங்களுக்கு எதிராகப் பேசும் சீர்திருத்தவாதிகளுக்கு உதவுவதற்காகவோ அல்ல நான் பேசியது. பிரசாரம் செய்வதால் சாதிமுறை தோன்றி விடாது; தோன்றிய சாதிமுறை பிரச்சாரத்தால் அழியவும் முடியாது. மத சம்பிரதாயப் புனிதத்தை விஞ்ஞான விளக்கத்திற்கு நிகராக வைக்கும் போக்கு எவ்வளவு தூரம் தவறானது என்பதைத் தெரிவிப்பதே என் நோக்கமாகும்.
18%
Flag icon
தனிநபர் துதிபாடும் வழக்கத்திற்கு அவ்வளவாக ஆளாகாத மேனாட்டு அறிஞர்கள் பிற வகைகளில் இதற்கு விளக்கம் தர முயன்றிருக்கிறார்கள்.
18%
Flag icon
தொழில் 2.பழங்குடியினர் அமைப்புகளின் எச்சங்கள் 3.புதிய நம்பிக்கைகளின் தோற்றம் 4.கலப்பின விருத்தி 5.குடிபெயர்வு
19%
Flag icon
பிராமணர்கள் அல்லது புரோகித வர்க்கம் 2.சத்திரியர்கள் அல்லது இராணுவ வர்க்கம் 3.வைசியர்கள் அல்லது வணிக வர்க்கம் 4.சூத்திரர்கள் அல்லது கைவினைஞரும் ஏவலருமான வர்க்கம்.
19%
Flag icon
இந்த அமைப்பில் ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தம் தகுதிக்கேற்ப பிரிதொரு வர்க்கத்தினராக மாறமுடியும். எனவே வர்க்கங்கள் தங்கள் நபர்களை மாற்றிக் கொள்ளலாம்.
20%
Flag icon
அகமண வழக்கம் பிராமணர்களிடம் பிறந்தது. பின்னர் ஏனைய பிராமணர் அல்லாத உட்பிரிவினரும் அல்லது வர்க்கத்தினரும் முழு விருப்பத்தோடு பின்பற்றத் தொடங்கியதால் அவர்களும் அகமண வழக்கத்தினராயினர். இந்த வகை பிறரைப் பார்த்து அவர்களைப் போல வாழும் தொற்றுநோய் பழக்கம் அனைத்து உட்பிரிவினரையும் வர்க்கத்தாரையும் பிடித்துக் கொண்டதால் கலந்து பழகி வந்தவர்கள் பாகுபாடுகளை வளர்த்துக் கொண்டு வாழ்ந்து தனித்தனி சாதிகளாயினர். பிறரைப் பார்த்தொழுகும் ‘போலச் செய்தல்’ என்னும் மனப்போக்கு மனித மனத்தில் ஆழமாக இடம் பெற்ற ஒன்றாகும்.
20%
Flag icon
கேப்ரியல் டார்ட்
21%
Flag icon
கீழ்நிலையிலுள்ள யாவரும் மேல் நிலையிலுள்ளவர்களைப் பின்பற்றுவது இயற்கை என்பது முதலாவது விளக்கம்.
21%
Flag icon
பிராமணன் பாதிக் கடவுளாகவும், அனேகமாக கண் கண்ட கடவுளாகவும் உள்ளான். அவன் ஒரு மாதிரியை (mode) முன்வைத்து அதற்கேற்ப மற்றவர்களைப் பின்பற்றும்படிச் செய்கிறான். அவனுடைய அந்தஸ்து கேள்விக்கிடமற்றது. நன்மை தீமைகளுக்கும் மகிழ்ச்சிக்கும் அவனே மூலகாரணமாகக் கருதப்படுகின்றான். வேதங்களால் தெய்வமாகத் துதிக்கப்படும் புரோகிதர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மக்களால் போற்றப்பட்டு வரும் பிராமணன் தன் முன் மன்றாடி நிற்கும் மனிதகுலத்தின் மீது தன்னுடைய செல்வாக்கினைச் செலுத்தாமல் இருக்கமுடியுமா?
22%
Flag icon
இப்படிப்பட்டவன் எல்லா வகையிலும் பின்பற்றப்படத் தகுதியானவனே. அவன் அகமணவழக்கத்தை மேற்கொண்டு தனித்து இயங்குகின்றான் எனில் மற்றவர்கள் அவனை எடுத்துக்காட்டாகக் கொண்டு பின்பற்றத்தானே செய்வார்கள்.
22%
Flag icon
பார்த்து ஒழுகுதல் எளிது; புதிதாகக் கண்டுபிடிப்பது கடினமானது.
22%
Flag icon
பிராமணர்களுக்கு மிக அருகில் நெருங்கியுள்ள சாதியினர் மேற்கூறிய மூன்று பழக்கவழக்கங்களை பார்த்து ஒழுகுவதோடு கண்டிப்பாகப் பின்பற்றுவதை வலியுறுத்துகின்றனர். ஓரளவு நெருங்கியுள்ள சாதியினர் கட்டாய விதவைக் கோலத்தையும் பேதை மண வழக்கத்தை மட்டுமே மேற்கொண்டனர். பிராமணர்களிடமிருந்து வெகுதூரம் விலகி நின்றவர்கள் சாதி பற்றிய நம்பிக்கையை மட்டுமே கொண்டனர். பார்த்துப் ‘போலச் செய்தல்’ முறைகளில் இவ்வாறு மாறுபாடுகள் இருப்பதற்குக் காரணம் ஒன்று டார்ட் கூறுவது போல இடைவெளிதூரம், மற்றொன்று இந்தப் பழக்கவழக்கங்களின் காட்டுமிராண்டித் தனமான இயல்பு.
23%
Flag icon
பிராமண வர்க்கமே மேற்சொன்ன மூன்று பழக்கவழக்கங்களின் துணையோடு சாதிமுறையைத் தோற்றுவித்தது என்று நான் கூறினேன்.
23%
Flag icon
இதைத்தான் நான் சாதிய உருவாக்கத்தில் இயந்திர கதியில் (mechanistic) நடந்த முறை என்பேன். இந்த விதமாகஇயந்திர கதியில் சாதி வளர்ச்சி அமைந்தது தவிர்க்க முடியாததாகி விட்டது.
23%
Flag icon
சாதி என்பது ‘சாதி முறை’ என்ற ஒன்றின் ஒரு அங்கம் என்று அவர்கள் நினைக்கவில்லை.
24%
Flag icon
இவர்களுள் இந்துக்களைத் தனியே எடுத்துவிட்டால் மற்றவர்கள் சாதிகள் அற்ற சமூகத்தினராவர்.
24%
Flag icon
சாதியிலுள்ள நீதிநெறி, மத மற்றும் சமூகக்கோட்பாடு ஆகியவற்றை வலுவாய் எதிர்க்கின்ற எந்தப் புதுமையையும் சாதி சிறிதளவும் சகித்துக் கொள்ளாது. அவ்வாறே சாதியை எதிர்த்து நிற்கும் சாதியின் உறுப்பினர்கள் சாதியிலிருந்து வெளியேற்றப்படும் ஆபத்துக்குள்ளாவார்கள். அவ்வாறு வெளியேற்றப்படுபவர்களை மற்ற சாதிக்காரர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; தங்கள் சாதிக்குள் இணைத்துக் கொள்ளவும் மாட்டார்கள்; அவர்கள்
24%
Flag icon
சாதி திட்டங்கள் ஈவிரக்கமற்றவை; குற்றங்களின் தன்மைகள் பற்றிய நுண்ணிய வேறுபாட்டினை ஆய்ந்து அறிந்து கொள்ள அவை காத்திருப்பதில்லை.
24%
Flag icon
புதுவகையிலான சிந்தனையும் கூட ஒரு புதிய சாதியைப் பிறப்பிக்கும்.
24%
Flag icon
சாதிகள் அடைக்கப்பட்ட பிரிவுகள். அவை தெளிவாக அறிந்து மேற்கொள்ளும் கள்ளத்தனமான செயல்திட்டம் என்னவெனில் விலக்கி வைக்கப்பட்டவர்களைத் தாங்களே ஒரு சாதியாக உருவாக்கிக்கொள்ளுமாறு கட்டாயப் படுத்துவதே ஆகும்.
25%
Flag icon
ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சாதி அமைவதற்கு நிறம் பெரும் பங்கு வகிக்கிறது எனத் தேவைக்கு மேலாக வலியுறுத்தியுள்ளனர். அவர்களே நிற வேற்றுமைகளுக்கு ஆளானவர்கள்; இதன் விளைவாகச் சாதிச் சிக்கலுக்குத் தலையாய காரணம் நிறமே என எளிதாகக் கற்பனை செய்து கொண்டனர்.
25%
Flag icon
“எல்லா இளவரசர்களும் - ஆரிய இனத்தவர் எனப்படுபவராயினும் சரி, திராவிட இனத்தவர் எனப்படுபவராயினும் சரி அவர்கள் ஆரியர்களே. ஒரு குடும்பத்தினர் அல்லது ஒரு பிரிவினர் இன வழியில் ஆரியரா அல்லது திராவிடரா என்றொரு பிரச்சினையில் இந்திய மக்கள் கவலைப்பட்டதில்லை. தோலின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வெகுகாலத்திற்கு முன்னரே கைவிடப்பட்டது” என்று கூறும் டாக்டர் கேட்கர் அவர்களின் வாதமே சரியானது. மேலும்
25%
Flag icon
மேலும் மேனாட்டார் சாதிக்கு விளக்கம் சொல்வதற்குப் பதில் அதை வ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
25%
Flag icon
தொழில், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சாதிகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால் அதுவே சாதியின் தோற்றத்திற்குக் காரணம் என்று சாதிப்பது சரியான விளக்கமாகி விடாது.
25%
Flag icon
திடீரென்று ஒரே மூச்சில் சாதி தோன்றிவிட்டது போல இவர்கள் சாதிப் பிரச்சினையை வெகு எளிதானதாக நினைத்து விட்டார்கள்;
26%
Flag icon
இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள், வேறுபாடுகள் இருந்த போதிலும், அவர்களிடையே ஆழ்ந்த பண்பாட்டு ஒருமை உள்ளது.
26%
Flag icon
தொடக்கத்தில் ஒரு சாதியே இருந்தது
26%
Flag icon
சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன், மனமறிந்து கட்டளை இட்டு தோன்றியதா, அல்லது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு ஆட்பட்ட மனித சமுதாய வாழ்க்கையில் தானாகவே வேரூன்றிவிட்ட வளர்ச்சியா என்பதைப் பற்றியதே.
26%
Flag icon
சாதி என்பது நடைமுறையில் மட்டுமல்லாது, எல்லா வகையிலும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும் ஒரு பிரச்சினை, சாதி பற்றிய கோட்பாட்டு அடிப்படைகள் குறித்து எனக்குள் எழுந்த ஆர்வமே சாதி குறித்த சில முடிவுகளையும் இந்த முடிவுகளுக்குத் துணை நிற்கின்ற ஆதாரங்களையும் உங்கள் முன் வைக்கத் தூண்டியது. ஆனால் அவை முற்றிலும் சரியானவை, முடிவானவை என்றோ அல்லது பிரச்சினைக்கு விளக்கமளிப்பதற்கு அதிகம் சொல்லிவிட்டதாகவோ கருதவில்லை.
26%
Flag icon
அறிவியல் வழியைப் பின்பற்றிச் செல்லவேண்டிய இவ்விடத்தில் உணர்ச்சிவயப்படுதலைத் தவிர்த்து, நடுநிலையில் நின்று சீர்தூக்கிப் பார்த்தல் வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய தத்துவங்கள் தவறு என்று தெரிந்தால் நான் அவற்றை அழித்து விடவும் ஆர்வம் காட்டத் தயங்க மாட்டேன்.
27%
Flag icon
லாகூரில் நடக்க இருந்த ஜாத்-பட்-தோடக் மண்டலுக்காக நான் தயாரித்த இந்த உரை இந்துக்களிடையே வியக்கத்தக்க வகையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர்களை மனத்திலிருத்தியே தயாரித்த இந்த உரை 1500 பிரதிகள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இரண்டே மாதங்களில் தீர்ந்து விட்டது. தமிழிலும், குஜராத்தியிலும் இந்த உரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மராத்தி, இந்தி, பஞ்சாபி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது.
27%
Flag icon
திரு.காந்திக்கு மட்டும் நான் பதில் அளித்துள்ளேன். இவ்வாறு நான் அவருக்குப் பதில் அளித்துள்ளதால் அவர் கூறியுள்ளவை மிக முக்கியமானவை என்று பொருளாகாது. இந்துக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாக மதிப்பதோடு அவர் வாய் திறந்தால் பிறர், தம் வாயை மூடிக் கொள்ள வேண்டும், தெருவில் போகும் நாயும் குரைக்கக் கூடாது என்ற அளவுக்கு அவருடைய சொற்கள் போற்றப்படுவதனாலேயே இதைச் செய்துள்ளேன்.
28%
Flag icon
இந்துக்கள் இந்தியாவின் நோயாளிகள்; அவர்களின் நோய் பிற இந்தியர்களின் நலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது என்பதை அவர்கள் உணரும்படிச் செய்து விட்டால் அதுவே எனக்குப் போதும்.
28%
Flag icon
‘எந்த மதக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு சாதிமுறை அமைந்துள்ளதோ அதை அழித்தொழிக்காமல் சாதியை ஒழிப்பது இயலாது’ என்னும் தங்களுடைய புதுக்கோட்பாட்டினை விவரமாக அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
31%
Flag icon
மாநாடு குழப்பமின்றி நடந்தேற வேண்டும் என விரும்புவதால் தற்போதைக்கு ‘வேதம்’ என்ற சொல்லையாவது தங்கள் உரையிலிருந்து நீக்கவேண்டுமென நினைக்கிறோம்.
32%
Flag icon
இந்து மதத்திலிருந்து வெளியேறத் தாங்கள் முடிவு செய்து விட்டதாகவும், ஒரு இந்துவாக இருந்து ஆற்றும் கடைசி உரையாக இது இருக்கும் என்றும் அதில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளீர்கள். வேதங்கள் முதலிய இந்து நூல்களின் அறத்தன்மையையும் அறிவார்ந்த தன்மைகளையும் தேவையின்றிக் கண்டித்துள்ளீர்கள்;
34%
Flag icon
இந்தப் பிரச்சினை கொள்கைப் பற்றியது: எனவே இதில் எவ்வித சமரசத்திற்கு இடமில்லை.
35%
Flag icon
வார்த்தைகளுக்குப் பயப்படுவோர் மூடர்கள் என்பது என் எண்ணம்.
35%
Flag icon
நான் பேச வேண்டிய உரையைத் தயாரிப்பதில் எவருடைய, எத்தகைய கட்டுப்பாடுகளையும் நான் ஒப்புக்கொள்ளாதவன் என்பதையும் அந்த உரையில் இன்னின்னவை அடங்கி இருக்கவேண்டும் இன்னின்னவை அட ங் கியிருக்கக் கூடாதென்பது பற்றி எனக்கும் மண்டலத்தாருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்ததில்லை என்பதையும் ஒத்துக்கொள்வீர்கள்.