இந்தியாவில் சாதிகள் : Indiyaavil Saathikal (Political Book 2) (Tamil Edition)
Rate it:
61%
Flag icon
இவ்வளவு நாகரிக வளர்ச்சிக்கு இடையில் 130 இலட்சம் மக்கள் நாகரிகமற்றவர்களாகவும், குற்றப் பரம்பரையினராகவும் வாழ்க்கை நடத்த வேண்டிய அவலம் உள்ளது என்பதற்காக இந்துக்கள் எவரும் எப்பொழுதும் வெட்கித் தலைக் குனிந்ததில்லை.
61%
Flag icon
பழங்குடியினர் பிறவியிலேயே மூடர்களாக அமைந்து விட்டதுதான் அவர்களின் நாகரிகமற்ற நிலைக்குக் காரணம் என்று கூற இந்துக்கள் முற்படலாம்.
61%
Flag icon
ஒருவேளை கிறிஸ்தவ மிஷனரிகள் பழங்குடியினருக்காகச் செய்யும் ஊழியங்களை இந்து ஒருவன் செய்ய விரும்புவதாக வைத்துக்கொள்வோம். அவனால் அதைச் செய்யமுடியாதா? முடியாது என்றே பணிவுடன் கூறுவேன். காரணம், இந்தப் பழங்குடி மக்களை நாகரிக மக்களாக ஆக்குவது என்றால் அவர்களோடு இணைந்து அவர்களை உறவினராக நடத்தவேண்டும். அவர்களுக்குள் ஒருவராகவே வாழவேண்டும்; தோழமை உணர்வை வளர்க்கவேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால் அவர்களை நேசிக்க வேண்டும். ஒரு இந்து இவற்றையெல்லாம் செய்வது சாத்தியப்படுமா? தன் சாதியைப் பேணிக் காப்பதே ஒரு இந்துவின் வாழ்க்கை இலட்சியம்; தன் சாதி என்பது ஒவ்வொரு இந்துவுக்கும் விலைமதிக்க வொண்ணாத பெரும் சொத்து; ...more
62%
Flag icon
இவர்கள் பெற்றுள்ள இவ்வளவு நாகரிக வளர்ச்சிக்கும் மத்தியில் நாகரிகமற்ற மக்கள் நாகரிகமற்றவர்களாகவே நீடிப்பதை எந்தவித வெட்கமோ வேதனையோ, மனச்சான்றின் உறுத்துதலோ இல்லாமல் இந்துக்கள் அனுமதித்திருப்பதற்குக்காரணம் சாதி என்பதுதான் சரியான விளக்கமாகும். பழங்குடியினரின் இந்த நிலைமை எப்படி உள்ளுக்குள்ளே செயற்படும் அபாயத்திற்கு இடமாக உள்ளது என்பதை இந்துக்கள் உணரவே இல்லை. இவர்கள் இப்படியே நாகரிகமற்றவர்களாக நீடித்தால் இந்துக்களுக்கு இவர்களால் எவ்வித இடைஞ்சலும் இருக்காது. ஆனால் இந்துவல்லாத மதத்தவர்கள் இவர்களை மீட்டுத் திருத்தித் தம் மதத்தில் சேர்த்துக் கொண்டால் இந்துக்களின் பகைவர்கள் தொகை பெருகிவிடும். ...more
62%
Flag icon
நாகரிகமற்ற மக்களை நாகரிகமுள்ளவர்களாக ஆக்குவதற்கு இந்துக்கள் மனிதநேய அடிப்படையில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, இந்து மதத்தின் பிடியிலுள்ள கீழ்ச்சாதியினர் மேல் சாதியினரின் கலாச்சார நிலைக்கு உயர்வடைவதையும் அவர்கள் திட்டமிட்டுத் தடுத்துள்ளனர்.
62%
Flag icon
சோனார்கள்
62%
Flag icon
பதேரி பிரபுக்கள்
62%
Flag icon
இந்த இரு சமூகத்தாரும் ஒருசமயம் தங்கள் சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள விரும்பி, பிராமணர்களின் பழக்கவழக்கங்களையும் வழிமுறைகளையும் பின்பற்றத் தொடங்கினர். சோனார்கள், ‘தைவந்த்ய பிராமணர்கள்’ என்று தங்களை அழைத்துக் கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டனர். வேட்டியை பஞ்ச கச்சமாகக் கட்டிக்கொண்டு, வணக்கம் என்று சொல்வதற்குப் பதிலாக ‘நமஸ்கார்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர். பஞ்ச கச்சமும் நமஸ்காரம் என்று சொல்லுதலும் பிராமணர்களுக்கு உரியது. எனவே, சோனார்கள் தங்கள் போக்கைப் பின்பற்றித் தங்களைப் போல் பவனி வருவதைப் பிராமணர்கள் விரும்பவில்லை. ஆகவே, பிராமணப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றி சோனார்கள் மேற்கொண்ட முயற்சியை ...more
63%
Flag icon
ஒருகாலகட்டத்தில் கைம்பெண் மறுமணத்தைப் பதேரி பிரபு சாதியினர் தம் சாதி வழக்கமாகக் கொண்டிருந்தனர். பிராமணசாதியில் கைம்பெண் மறுமண வழக்கம் இல்லை என்ற குறிப்பான காரணத்தால் பிற்காலத்தில் பதேரி பிரபு சாதியில் சிலர் கைம்பெண் மறுமணம் இழிவான ஒரு சமுதாய நிலையின் அடையாளம் எனக் கருதத் தொடங்கினர். தங்கள் சாதியின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் நோக்கத்துடன் அதுவரையில் அவர்களிடையே வழக்கில் இருந்த கைம்பெண் மறுமண வழக்கத்தைக் கைவிடச் சில பதேரி பிரபுக்கள் முனைந்தனர். இந்த முயற்சி அவர்கள் சாதிக்குள்ளேயே பிளவை உண்டாக்கியது. ஒரு பிரிவினர் கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தனர்; பிறர் அதனை எதிர்த்தனர். பேஷ்வாக்கள் கைம்பெண் ...more
63%
Flag icon
முகம்மதியர்கள் ஆயுதபலத்தைக் காட்டி அவர்களின் மதத்தைப் பரப்பியதாக இந்துக்கள் குறை கூறுகின்றனர். கர்த்தரை விசுவாசிக்காதவர்களைக் கிறிஸ்தவர்கள் சித்திரவதை செய்தார்கள் என்று இந்துக்கள் ஏளனம் செய்கிறார்கள். ஆனால் இவர்களில் நல்லவர்கள் எந்த மதத்தினர்; நம் மரியாதைக்குரியவர்கள் எந்த மதத்தினர்? மோட்சத்தை அடையும் வழி என்று எதைத் தங்கள் முழுமனதோடு நம்பினார்களோ அதைப் பின்பற்றுமாறு, விருப்பமில்லாத மக்களாக இருந்தபோதிலும் அவர்களைக் கட்டாயப்படுத்தியது கிறிஸ்தவர்களும் முகம்மதியர்களுமா? அல்லது அறிவு ஒளியை மற்றவர்கள் அடையமுடியாதவாறு மறைத்தவர்களும், அறியாமை என்னும் இருட்டறையில் மக்கள் தொடர்ந்து மூழ்கிக் ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
63%
Flag icon
இந்துமதம் ஒரு மிஷனரி மதமாக - சமயப் பரப்புப் பணி மேற்கொண்ட மதமாக - இருந்ததா இல்லையா என்பது வாதத்திற்குரியது. இந்துமதம் எப்போதும் ஒரு மிஷனரி மதமாக இருந்ததில்லை என்பாரும் இருந்தது என்பாரும் உள்ளனர். இந்துமதம் ஒரு காலத்தில் மிஷனரி மதமாக இருந்தது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அது மிஷனரி மதமாக இருந்திராவிட்டால் இந்தியாவெங்கும் இந்த அளவுக்கு பரவி இருக்க முடியாது. ஆனால் இன்று இந்துமதம் மிஷனரி மதமாக இல்லை என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மை. எனவே, இந்துமதம் மிஷனரி மதமாக இருந்ததா இல்லையா, என்பதல்ல பிரச்சினை. அது ஏன் சமயத்தைப் பரப்பும் பணியில் நீடிக்க முடியவில்லை என்பதுதான் பிரச்சினை. ...more
64%
Flag icon
மத மாற்றத்திற்குச் சாதி என்பது ஒத்து வராதது. நம்பிக்கைகளையும், மதக்கோட்பாடுகளையும் புகுத்துவது மட்டும் மதமாற்றத்திற்குப் போதுமானதாகாது. மதம் மாறியவர்களுக்குச் சமூக வாழ்வில் ஒரு இடத்தை உறுதிசெய்வதுதான் முக்கியமான பிரச்சினை. மதம் மாறி வந்தவர்களுக்குச் சமூக வாழ்வில் எங்கு இடமளிப்பது, எந்த சாதியில் சேர்ப்பது என்பதுதான் அந்த பிரச்சினை. பிற மதத்தவர்களைத் தம் மதத்திற்கு மாற்ற விரும்பும் எந்த ஒரு இந்துவையும் குழப்புகின்ற பிரச்சினை இதுதான். மன்றங்களில் எவர் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆவது போல சாதிகளில் எவர் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகிவிட முடியாது. சாதி சட்டதிட்டங்களின்படி எந்த ஒரு சாதியிலும் ...more
64%
Flag icon
பிற மதத்தினரை இந்து மதத்தில் சேர்க்கும் ‘சுத்தி’ முறையை இயலாததாக்கும் அதே காரணங்களே ‘சங்கடன்’ (சங்காத்தம்) என்பதையும் (அதாவது ஒருமித்தல் அல்லது ஒருங்கமைவு என்பதையும்) இயலாத காரியமாக்குகின்றன. முகமதியரையும் சீக்கியரையும் போலன்றி இந்துவிடம் பயந்த சுபாவமும்-கோழைத்தனமும் காணப்படுகின்றன. இதன் காரணமாக அவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வஞ்சம், தந்திரம் என்ற இழிவான வழிகளைப் பின்பற்றுகிறார். இந்தக் கோழைத்தனத்தைப் போக்கவேண்டும் என்பதே ‘சங்கடனின்’ நோக்கம். ஆனால் சீக்கியர் அல்லது முகமதியர் தைரியம் கொண்டவராக, அச்சமற்றவராக இருக்கிறார் என்றால் அவருக்கு அந்த வலிமை எங்கிருந்து கிடைக்கிறது? நிச்சயமாக உடலுறுதியோ, ...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
65%
Flag icon
சாதி இருக்கும் வரை ‘சங்கடன்’ (சங்காந்தம்) ஏற்பட முடியாது. ‘சங்கடன்’ ஏற்படாதவரை இந்துக்கள் பலவீனமும் பணிந்த சுபாவம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இந்துக்கள், தாங்கள் மிகவும் சகிப்புத் தன்மை கொண்டவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். உண்மையில் இது தவறான கருத்தாகும். பல சமயங்களில் அவர்கள் சகிப்புத் தன்மை இல்லாதவர்களாகவே நடந்து கொள்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் சகிப்புத் தன்மை காட்டினால் அதற்கு அவர்களின் பலவீனமே காரணம். அல்லது எதிர்ப்பதில் அக்கறை இல்லை என்பது காரணமாகும். இது இந்துக்களின் சுபாவத்திலேயே ஊறிப் போய் விட்டது. அதனால் அவர்கள் அவமதிப்பையும் தீங்கையும் எதிர்ப்பின்றிச் சகித்துக் ...more
66%
Flag icon
ஒரு தனி மனிதன் தனது சொந்தக் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் தனது சொந்த சுதந்திரத்தையும் நலனையும், தான் சார்ந்துள்ள குழுவின் நெறி வரையறைகளையும் குழுஅதிகாரத்தையும், குழுநலன்களையும் மீறி வலியுறுத்துவது தான் எல்லாச் சீர்திருத்தங்களுக்கும் தொடக்கமாகும். ஆனால் சீர்திருத்தம், தொடக்கத்தோடு நின்று விடாமல் மேலும் தொடருமா என்பது, தனி மனிதனின் கருத்தை வலியுறுத்துவதற்குக் குழு எவ்வளவு தூரம் வாய்ப்பளிக்கிறது என்பதைப் பொறுத்தது. அத்தகைய மனிதர்களிடம் குழு, சகிப்புத் தன்மையுடனும் நியாய புத்தியுடனும் நடந்துகொண்டால், அவர்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை வலியுறுத்தி, இறுதியில் மற்றவர்கள் அவற்றை ஏற்கச் ...more
66%
Flag icon
சீர்திருத்தக் கருத்துக் கொண்டவர் தமது கருத்தைக் கைவிடாமலே சமூகத்தில் மற்றவர்களின் தொடர்பைப் பெறவே விரும்புவார்.
66%
Flag icon
தனி மனிதனின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ள சாதி எப்போதும் தயாராயிருக்கிறது.
66%
Flag icon
சீர்திருத்தக்காரரின் வாழ்க்கையை நரகமாக மாற்றுவதற்கு சாதி ஒரு சதிக் கும்பலாகச் செயல்படமுடியும்.
66%
Flag icon
பழமைவாதிகளின் கையில் சாதி என்பது சீர்திருத்தக்காரர்களைத் துன்புறுத்துவதற்கும் சீர்திருத்தங்களை ஒழிப்பதற்கும் ஒரு கருவியாக உள்ளது.
67%
Flag icon
இந்துக்களின் அறநெறிப் பண்பில் சாதியால் ஏற்பட்டுள்ள விளைவு வருந்தத்தக்கதாக உள்ளது. பொதுநல உணர்வையே சாதி கொன்று விட்டது. பொது மக்களுக்கு உதவும் தரும சிந்தனையைச் சாதி அழித்து விட்டது. பொது மக்கள் கருத்து என்பதே உருவாக முடியாமல் சாதி தடையாக உள்ளது. ஒரு இந்துவுக்குப் பொது மக்கள் என்பதே அவரது சாதிதான். அவர் தமது சாதிக்குத் தான் பொறுப்புள்ளவராயிருக்கிறார். அவரது விசுவாசம் அவர் சாதிக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. ஒழுக்கத்திலும் அறநெறியிலும் சாதி உணர்வு புகுந்து விட்டது.
67%
Flag icon
அனுதாபம் இருக்கிறது; ஆனால் அது வேறு சாதிக்காரரிடம் காட்டப்படுவதில்லை.
67%
Flag icon
ஒரு மகாத்மாவின் விஷயம் விதிவிலக்காகும். அதைவிட்டால், ஒரு தலைவர் தமது சாதிக்காரராக இருந்தால்தான் ஒரு இந்து அவரைப் பின்பற்றுவார். ஒரு தலைவர் பிராமணராயிருந்தால்தான் பிராமணர் அவரைப் பின்பற்றுவார். காயஸ்தராயிருந்தால்தான் காயஸ்தர் பின்பற்றுவார். இவ்வாறேதான் ஒவ்வொரு சாதியினரும் செய்வார்கள். தன்னுடைய சாதியைச் சேராத ஒருவரின் திறமையைப் போற்றும் பண்பு ஒரு இந்துவிடமும் இல்லை. உயர்ந்த ஒழுக்கம் உடையவர் தமது சாதியினராயிருந்தால்தான் அவரைப் பாராட்டுவார். இது இனக்குழுக் குணமாகும். “அவர் செய்தது தப்போ, சரியோ, அவர் என் சாதிக்காரர்; அவர் நல்லவரோ, கெட்டவரோ, அவர் என் சாதிக்காரர்” என்ற மனப்பான்மைதான் காணப்படுகிறது. ...more
67%
Flag icon
இந்துக்கள் தமது சாதிகளின் நலன்களைப் பெரிதாகக் கருதித் தமது நாட்டுக்கே துரோகம் செய்யவில்லையா?
67%
Flag icon
சாதியின் தீய விளைவுகள் பற்றி நான் இங்கே விவரித்ததைக் கேட்டு உங்களில் சிலர் சலிப்படைந்திருந்தால் அதில் வியப்பேதுமில்லை. அதில் புதிதாகவும் ஒன்றும் இல்லை.
67%
Flag icon
சாதிகூடாது என்றால் உங்களுடைய லட்சிய சமூகம் எப்படிப்பட்டது என்ற கேள்வி நிச்சயமாக எழும். என்னுடைய லட்சிய சமூகம், சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
67%
Flag icon
லட்சிய சமூகம் எப்போதும் இயங்கிக் கொண்டு, தொடர்புகளும் பரிவர்த்தனைகளும் நடந்துகொண்டு இருக்கவேண்டும். சமூகத்தின் ஒரு பகுதியில் ஏற்படும் மாற்றங்களை மற்றப் பகுதிகளுக்குத் தெரிவிப்பதற்குப் பல்வேறு மார்க்கங்கள் இருக்கவேண்டும். மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு பல்வேறு வகையான நலன்களைப் பகிர்ந்துகொண்டு பரிவர்த்தனை செய்துகொண்டும் வாழவேண்டும். பல்வேறு விதமான கூட்டு வாழ்க்கை முறைகளுக்குமிடையே தாராளமான தொடர்புகளுக்கு நிறைய வாய்ப்பு இருக்க வேண்டும். வேறு விதமாகச் சொன்னால் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையிலும் மக்கள் தாராளமாகக் கலந்து உறவாடும் நிலை இருக்கவேண்டும். இதுதான் சகோதரத்துவம். ஜனநாயகத்தின் ...more
68%
Flag icon
சுயேட்சையாக நடமாடும் உரிமை, உயிரையும் உடம்பையும் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை என்ற அளவில் சுதந்திரம் என்பதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள். உடம்பை நல்ல ஆரோக்கிய நிலையில் வைத்துக் கொள்வதற்கு, அவசியமான வாழ்க்கை வருவாய் பெறுவதற்காக சொத்து, கருவிகள், பொருள் வைத்துக் கொள்ளும் உரிமை என்ற அளவிலும் சுதந்திரம் என்பதற்கு ஆட்சேபம் இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு இருக்கும் திறன்களைப் பலனுள்ள முறையில் உபயோகித்து, நன்மை அடைவதற்குச் சுதந்திரம் கொடுத்தால் என்ன? சாதியை ஆதரிப்பவர்கள் இந்த அர்த்தத்தில் சுதந்திரம் கொடுக்க இணங்க மாட்டார்கள். ஏனென்றால், இது, ஒருவர் எந்தத் தொழிலைச் செய்வது என்பதை அவரே ...more
68%
Flag icon
எல்லா மனிதர்களும் சமமானவர்கள் அல்லர் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கலாம்.
69%
Flag icon
சமத்துவம் என்பது கற்பனையாயிருக்கலாம்; இருந்தாலும் அதை ஒரு அடிப்படைக் கொள்கையாக ஏற்கத்தான் வேண்டும்.
69%
Flag icon
இந்த மூன்று விஷயங்களிலும் மனிதர்கள் எல்லோரும் சமம் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர்கள் இவ்வாறு சமமாக இல்லை என்பதால் நாம் அவர்களைச் சமம் இல்லாத முறையில் நடத்த வேண்டுமா?
69%
Flag icon
சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரிடமிருந்தும் மிக உயர்ந்த பலனைப் பெறுவது சமூகத்துக்கு நல்லது என்றால், ஆரம்பத்திலேயே எல்லோரும் முடிந்த அளவு சமமாக இருக்கச் செய்வதுதான்.
70%
Flag icon
இந்தியாவில் உள்ள நாலாயிரம் சாதிகளுக்குப் பதிலாக இந்த நான்கு வகுப்புகள் இருக்கவேண்டும் என்னும் இந்தக் கொள்கை மக்களுக்குக் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கவேண்டும் என்பதற்காகவும், இதற்கு எதிர்ப்புகளை மழுங்கச் செய்வதற்காகவும் தாங்கள் கூறும் சதுர்வர்ணம் பிறப்பால் அமைவது அல்ல என்றும், குணத்தை அல்லது தகைமையை அடிப்படையாகக் கொண்டது என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
70%
Flag icon
ஐரோப்பிய சமுதாயத்தில் இம்மாதிரி நிரந்தர முத்திரைகள் இல்லாமலே அறிவாளிகளும் வீரர்களும் கவுரவிக்கப்படுகிறார்கள் என்றால் இந்து சமூகத்திலும் அவ்வாறு ஏன் செய்ய முடியாது?
71%
Flag icon
ஆனால் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் மட்டும் நான் இதை எதிர்க்கவில்லை. எனது எதிர்ப்புக்கு வலுவான காரணங்கள் உள்ளன. இந்த அமைப்பு முறையை நான் நுட்பமாக ஆராய்ந்திருக்கிறேன். ஒரு சமூக அமைப்பு என்ற முறையில் சதுர்வர்ணம் நடைமுறை சாத்தியமற்றது. தீமை நிறைந்தது. இழிந்த தோல்வி கண்டது என்று நிச்சயமாக நம்புகிறேன். சதுர்வர்ண அமைப்பு முறை நடைமுறையில் பற்பல இடர்பாடுகளை எழுப்புவதை இதன் ஆதரவாளர்கள் கவனிக்கவில்லை. சாதியின் அடிப்படைத் தத்துவம் வேறு; வர்ணத்தின், அடிப்படைத் தத்துவம் வேறு. இவை வேறானவை என்பது மட்டுமின்றி ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. வர்ணம், தகைமையை அடிப்படையாகக் கொண்டது. அப்படியானால், தகைமையால் அன்றி ...more
71%
Flag icon
இந்த விதமாகப் பார்த்தால் சதுர்வர்ண இலட்சியத்துக்கும் பிளேட்டோ கூறும் லட்சிய சமூகத்துக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை இருக்கிறது. பிளேட்டோவின் கருத்துப்படி மனிதர்கள் இயற்கையில் மூன்று பிரிவுகளாக இருக்கிறார்கள். சிலமனிதர்களிடம் பசியே முதன்மையாக இருக்கிறது என்று அவர் கருதினார். இந்த மனிதர்களை அவர் உழைப்பாளிகள், வியாபாரிகள் என்ற பிரிவில் சேர்த்தார். மற்றும் சிலரிடம் பசியுடன் வீரமும் இருப்பதாக அவர் கருதினார். இந்த மனிதர்களை, போரில் நாட்டைக் காப்பவர்கள், உள்நாட்டில் அமைதியைக் காப்பவர்கள் என்று அவர் வகைப்படுத்தினார். வேறு சிலர் எல்லாவற்றிலும் அடிப்படையாக அமைந்துள்ள உண்மைகளை உணர்ந்தறியும் திறன் ...more
72%
Flag icon
மனிதர்கள் அனைவரையும் ஒரு சில வகுப்புகளில் அடக்கி வகைப்படுத்துவது, பரிசீலிக்கவே தகுதியில்லாத மேலெழுந்தவாரியான கருத்து என்பதை நவீன விஞ்ஞானம் எடுத்துக் காட்டியிருக்கிறது. எனவே பல்வேறு விதமான தன்மைகள் கொண்ட மனிதர்களை, ஒரு சில வகுப்புகளாக வகைப்படுத்தி வைப்பதன் மூலம் ஒவ்வொரு தனி மனிதனின் தனித்திறன்களைப் பயன்படுத்துவது இயலாமற் போகிறது. பிளேட்டோவின் குடியரசு தோல்வியடைவதைப் போலவே சதுர்வர்ண முறையும் தோல்வியே அடையும். மனிதர்களை ஒரு சில வகுப்புகளாகப் பிரித்து அஞ்சறைப் பெட்டியில் போடுவது போலப் போட்டு விட முடியாது என்பதுதான் இதற்குக் காரணம். ஆரம்பத்தில் நான்கு வகுப்புகளாக இருந்தவை இப்போது நாலாயிரம் ...more
72%
Flag icon
சதுர்வர்ண முறையில் ஒரு பிரிவில் இருப்பவர்கள் அத்துமீறி இன்னொரு பிரிவில் நுழைய முயலும் பிரச்சினை நிரந்தரமாக இருந்துவரும். இப்படி நுழைபவர்களுக்கு தண்டனை இருந்தாலன்றி, மனிதர்கள் தங்கள் தங்கள் பிரிவிலேயே கட்டுப்பட்டு இருந்துவிட மாட்டார்கள். ஏனென்றால் அது மனித இயல்புக்கு முரணானது. சதுர்வர்ண முறையைச் சட்டத்தின் மூலமே நடைமுறைப்படுத்த முடியும். தண்டனை ஏற்பாடு இல்லாமல் சதுர்வர்ண லட்சியத்தை அடைய முடியாது என்பதை ராமாயணத்தில் ராமன், சம்புகனைக் கொன்ற கதை நிரூபிக்கிறது.
73%
Flag icon
ராமராஜ்யம் சதுர்வர்ண முறையை அடிப்படையாகக் கொண்ட அரசு. அரசன் என்ற முறையில் ராமன் சதுர்வர்ணமுறையைக் காப்பாற்ற கடமைப் பட்டிருக்கிறான். எனவே தனது வகுப்பிலிருந்து அத்துமீறி பிராமண வகுப்பினுள் நுழைய முயன்ற சூத்திரனான சம்புகனைக் கொல்வது அவனது கடமையாயிற்று.
73%
Flag icon
சாதாரண தண்டனை மட்டும் போதாது, அது மரண தண்டனையாக இருக்க வேண்டும்.
73%
Flag icon
அதனால்தான் மனு ஸ்மிருதி, வேதத்தை ஓதுக்கின்ற அல்லது கேட்கின்ற சூத்திரனின் நாக்கை வெட்ட வேண்டும், காதில் ஈயத்தை உருக்கி ஊற்ற வேண்டும் என்பது போன்ற கடுமையான தண்டனைகளை விதிக்கிறது.
73%
Flag icon
பெண்களையும் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப் போகிறார்களா? அல்லது அவர்கள் தங்கள் கணவர்களின் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களா? கணவனின் வகுப்பிலேயே மனைவி சேர்க்கப்பட்டால், சதுர்வர்ண முறையின் அடிப்படைக் கோட்பாடு அதாவது ஒருவரின் தகைமையைப் பொறுத்து அவரது வகுப்பு அமையும் என்ற கோட்பாடு என்னவாகும்? தகைமையின்படி வகுப்புப் பிரிவினை அமையும் என்றால் அது பெயரளவில் மட்டும் இருக்குமா, உண்மையானதாக இருக்குமா? பெயரளவில் மட்டும் இருந்தால் அது பயனற்றது; எனவே சதுர்வர்ணமுறை ஆதரவாளர்கள் அது பெண்களுக்குப் பொருந்தாது என்று ஒப்புக் கொள்ள வேண்டும். உண்மையானது என்றால், ...more
74%
Flag icon
சூத்திரர் வேறு எதையும் செய்யத் தேவை இல்லை என்று கூறுவது இந்தத் தத்துவத்தின் நோக்கமா அல்லது வேறு எதுவும் செய்வது கூடாது என்று விதிப்பது அதன் நோக்கமா என்பது மிகவும் சுவாரசியமான கேள்வி.
74%
Flag icon
சூத்திரர்கள் செல்வம் சேர்க்கும் சிரமத்தை ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும். அவர்களுக்கு ஆதரவாக மூன்று வர்ணங்கள் இருக்கின்றனவே என்று அவர்கள் கூறுகிறார்கள். சூத்திரர் கல்வி கற்கும் சிரமத்தை ஏன் எடுத்துக் கொள்ளவேண்டும்? ஏதேனும் எழுதப் படிக்க அவசியம் ஏற்பட்டால் பிராமணரிடம் சென்று அதைச் செய்து கொள்ள முடியுமே? சூத்திரர் ஏன் ஆயுதம் தாங்குவது பற்றிக் கவலைப்படவேண்டும்? அவரைப் பாதுகாக்கத்தான் க்ஷத்திரியர் இருக்கிறாரே.
74%
Flag icon
சூத்திரர் மூன்று வர்ணங்களின் பாதுகாப்பில் உள்ளவராகவும், மூன்று வர்ணங்களும் அவரைப் பாதுகாப்பனவாகவும் ஆகிறது. இப்படிப் பொருள்கொண்டால் இது மிக எளிமையான, உயர்வான, கவர்ச்சியான தத்துவமாகத் தோன்றுகிறது.
75%
Flag icon
ஆனால் அத்தியாவசியமான தேவைகளில் ஒரு மனிதன் மற்றொருவரைச் சார்ந்து இருக்கும்படி ஏன் செய்ய வேண்டும்? கல்வி ஒவ்வொருவருக்கும் அவசியம். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் சாதனங்கள் ஒவ்வொருவருக்கும் அவசியம். ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பாதுகாத்து வைத்துக் கொள்வதற்கு இவை மிகவும் அவசியமானவை. கல்வி அற்றவனாக, ஆயுதம் இல்லாதவனாக இருக்கும் ஒருவனுக்கு அண்டை வீட்டான் கற்றவனாக, ஆயுதம் தரித்தவனாக இருப்பதால் என்ன லாபம்? இந்தத் தத்துவமே முழுவதும் அர்த்தமற்றது.
75%
Flag icon
பாதுகாப்பவர் - பாதுகாக்கப்படுபவர் என்ற உறவுநிலைதான் சதுர்வர்ணத்தின் அடிப்படைக் கருத்து என்று கொண்டாலும் நடைமுறையில் எஜமான் - ஊழியன் என்ற உறவு நிலைதான் இருந்தது என்பதில் சந்தேகமில்லை.
75%
Flag icon
மூன்று உயர்வர்ணத்தாரும் சூத்திரர்களை இப்படித்தான் நடத்தினார்கள் என்பதற்கு மனுவின் சட்டங்களே சான்றாக உள்ளன.
75%
Flag icon
உலகின் மற்றநாடுகளில் சமூகப்புரட்சிகள் நடந்துள்ளன. இந்தியாவில் ஏன் அப்படி நடக்கவில்லை என்பதுபற்றி நான் மிகவும் சிந்தித்திருக்கிறேன்.
76%
Flag icon
ஆயுதம் ஏந்த அவர்களுக்கு உரிமை இல்லை. ஆயுதம் இல்லாததால் அவர்கள் கிளர்ச்சி செய்ய முடியவில்லை. இவர்கள் எல்லோரும் ஏர் பிடிக்கும் உழவர்களாயிருந்தார். அல்லது அவ்வாறு இருக்குமாறு வைக்கப்பட்டார்கள். ஏரின் கொழுமுனையை வாள் முனையாக மாற்ற அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களிடம் துப்பாக்கி ஈட்டி முனை இல்லை. எனவே யார் வேண்டுமானாலும் அவர்கள் மீது சவாரி செய்யமுடிந்தது. சதுர்வர்ண முறையில் அவர்கள் கல்வி கற்க முடியவில்லை. எனவே அவர்கள் தாங்கள் மீட்சி பெறும் வழியை அறியவோ அதுபற்றிச் சிந்திக்கவோ முடியாமற்போயிற்று. தாழ்ந்த நிலையிலேயே உழல்வது அவர்களது விதியாக்கப்பட்டது. அதிலிருந்து தப்பிக்கும் வழி தெரியாமலும் அதற்கான ...more
76%
Flag icon
ஆனால் இந்தியாவில் இந்துக்கள் செய்தது போல, ஐரோப்பாவில் பலசாலிகள் சூழ்ச்சி வழிகள் செய்யவில்லை. பலம் படைத்தவர்களுக்கும் பலமற்றவர்களுக்கும் இடையே சமூகப்போர்கள் இந்தியாவைவிட ஐரோப்பாவில் கடுமையாக நடந்து வந்திருக்கின்றன. ஆனால் ஐரோப்பாவின் பலவீன மக்கள் ராணுவ சேவையில் சேர சுதந்திரம் இருந்தது. அது