More on this book
Community
Kindle Notes & Highlights
மூட்டை தூக்கியும் விறகு பிளந்தும் என்னை செதுக்கிய என் தந்தை கருப்புசாமிக்கு
மூட்டை தூக்கியும் விறகு பிளந்தும் என்னை செதுக்கிய என் தந்தை கருப்புசாமிக்கு
“அத்தனையும் தொடங்க ஒரு தாயம் தேவை. அது ஆடுபவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் விழும். முதலில் தாயம் விழுந்து ஆட்டத்தைத் தொடங்குபவர்கள்தான் வெல்வார்கள் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. தாயத்தின் மதிப்பு வெறும் ஒன்றுதான். ஆனால் தாயம் விழாதவர்கள் ஆட்டத்தையே தொடங்க முடியாது. தாயம் இல்லாமல் எத்தனை விழுந்தாலும் பயனில்லை.”
“அத்தனையும் தொடங்க ஒரு தாயம் தேவை. அது ஆடுபவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் விழும். முதலில் தாயம் விழுந்து ஆட்டத்தைத் தொடங்குபவர்கள்தான் வெல்வார்கள் என்று எந்தக் கட்டாயமும் கிடையாது. தாயத்தின் மதிப்பு வெறும் ஒன்றுதான். ஆனால் தாயம் விழாதவர்கள் ஆட்டத்தையே தொடங்க முடியாது. தாயம் இல்லாமல் எத்தனை விழுந்தாலும் பயனில்லை.”
ஒரு உப்புத்தாள் குரல்.
மனைவியின் மரணத்தால் அவர் சிறிதும் அசைந்திருக்கவில்லை. வினோதன்
அப்துலின் அப்பா அபு தாஹிர் வினோதனின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர். வினோதன் நடிகராக இருந்தபோது மேனேஜராக இருந்தவர்.
அந்த டிவியையும் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதே வருணுக்குப் பெரிய ஆச்சரியம்.
ஆனால் நடிகர் அல்லாத மந்திரிகளும் கூட புகை கிளம்ப பவுடர் அடித்துக் கொண்டு வருவதை வருண் கவனித்திருக்கிறான்.
விஎன்என் டிவி
பதினெட்டு வயது நிரம்பிய நாளில் இருந்தே கட்சியின் அடிப்படை உறுப்பினர். கட்சியின் இணைய பிரிவுக்கு ஐந்து வருடங்களாகத் தலைவர்.
வருணுக்கு தலை சுற்றியது. அரசியலில் பொய் சாதாரணம் என்பதை அவன் அறிவான். தன்னைப் பற்றியே ஒரு பொய் கட்டவிழ்த்து விடப்படும்போதுதான் அது உறைத்தது. கட்சியில் இணையப் பிரிவு என்று ஒன்று இருப்பதே அவனுக்கு இன்றுதான் தெரியும்.
அது தவிர வினோதன் தன்னை அவர் இவர் என்று கூப்பிடுவது பெரிய வேடிக்கையாக இருந்தது.
எப்படி சொல்லி வைத்த மாதிரி அத்தனை பேரும் இவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று புரியவில்லை.
“அரசியல்ல வேட்டியை மட்டும் டைட்டா இறுக்கிக் கட்டணும் தம்பீ.. எப்போ வேணா உருவிடுவாங்க”
இங்கே வெற்றிதான் இலக்கு. பலி அவசியமாகிவிடுகிறது.
ஒன்றை மட்டும் தனியே அவசரமாக நகர்த்திக் கொண்டு செல்வதால் அது பெரும்பாலும் வெட்டுப்பட்டுத் திரும்பும் நிலைதான் வரும்.”
இடுப்புக்குக் கீழ் ஆடையே இல்லாதது போல் உணர்ந்தான் வருண்.
கொஞ்சம் சுய புத்தியுள்ள அடிமை.
ஒரு முறை அணிந்ததை மறுபடி உடுத்த மாட்டார் என்று வருணுக்குத் தெரியும்.
இடுப்பில் துப்பாக்கியுடன் ஒரு ஆறடி மனிதன் பவ்யமாக குனிந்து திட்டுகளை வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தான் வருண். அந்த ஹால் முழுக்க அப்படியான கூன் முதுகு மனிதர்களால் நிரம்பியிருந்தது. கோபத்தில் துப்பாக்கியை உருவி சுட்டுவிட்டால் என்ன ஆகும் என்று தோன்றியது. அந்தக் காவலர் துப்பாக்கி வைத்திருக்க மட்டுமே அதிகாரம் படைத்தவர். அதை சுடும் அதிகாரம் அவரிடம் இல்லை. அங்கே அதிகாரம்தான் ஆயுதம்.
தனது அப்பா டென்ஷனில் இருக்கும்போது வரைமுறை இல்லாமல் பேசுவதை அவன் பல முறை பார்த்திருக்கிறான். காது கூசும் கெட்ட வார்த்தைகளும் வந்து விழும். அப்படியான மனிதர் பதவியை ராஜினாமா செய்ததற்காக தீக்குளிக்கும் தொண்டர்களை நினைத்து வருணுக்குப் பரிதாபமாக இருந்தது. நியாயமாக நாட்டு மக்கள் இதை பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டும்.
அதில் பெருங்கிழவர் ஒருவர் சடாரென்று காலில் வேறு விழப்போனார்.
முன் சீட்டில் ஒரு கறுப்பு உடைப் பாதுகாவலர் துப்பாக்கியுடன். அவர் ராணா ரந்தீர். பீகாரைச் சேர்ந்தவர். வருணின் பாதுகாப்புக்கு எப்போதும் அவர்தான் வருவார். தமிழ் அரைகுறையாகத்தான் தெரியும். எதுவும் பேசமாட்டார். ஏதாவது வாங்கித்தந்தாலும் சாப்பிட மாட்டார். தன்னை நோக்கி ஒரு தோட்டா வந்தால் குறுக்கே பாய்ந்து மார்பைக் கொடுக்க ஒரு வினாடி கூட தயங்க மாட்டார் என்று வருண் உறுதியாக நம்பினான். அவரை நம்பி ஒரு குடும்பம் வேறு இருக்கிறது. வருண் பல முறை அவர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு நண்பர்களுடன் ஓடிவிடுவான். நேற்று இரவைப் போல. அதற்கு அவருக்குத் திட்டு வேறு கிடைக்கும்.
கவர்னர் என்பவர் முதல்வரை விடப் பெரிய ஆடம்பர வீட்டில் வசித்தார்.
வரதராஜனின் தந்தை கோபாலனால் தொடங்கப்பட்டது.
அவன் அறையில் இருவரும் மொபைல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
இருபத்து நாலு மணி நேரமும் முட்டாள்கள் கூடவே இருக்கறது ரொம்ப டிப்ரசிங்கா இருக்கு”
மச்சான்.. நீ ஒரு மூணு மாசம் இருந்து பாரு.. முடியலைன்னா நம்ம ஷில்பாவை முதலமைச்சர் ஆக்கிடுவோம்.
ஒவ்வொரு முறையும் கண் முன்னால் ஒரு விபரீதத்தைத் தடுக்கும் வாய்ப்பு இருந்தும் முடியாமல் போவது வருத்தமாக இருந்தது.
ஒரு அரசியல்வாதியின் வீட்டில் வசிக்கும்போது காதில் விழும் பல விஷயங்கள் ரசிக்கும்படியாக இருக்காது. முதலில் அதிர்ச்சியாக இருக்கும். அப்புறம் மரத்துப் போய்விடும்.
ஃபிராக்டல்ஸ், கயாஸ் தியரி
வழக்கமான போக்குவரத்தில் ஒரு மணி நேரம் பிடிக்கும் பயணம் முதலமைச்சருக்கு மட்டும் பதினைந்து நிமிடத்தில் முடிந்தது. அதிகாரம் அந்த நகரை ஒரு கத்தியைப் போல் கிழித்துக் கொண்டு பயணித்தது.
முதலமைச்சர் அறையில் ஆஷ் டிரே இல்லை. அங்கே சிகரெட் பிடிக்கலாமா என்றும் தெரியவில்லை. அவனிடம் அப்போதைக்கு சிகரெட்டும் இல்லை. முதல்வர் தனது உதவியாளர்களிடம் சிகரெட் வாங்கிவரச் சொல்லலாமா என்று வேறு தெரியவில்லை.
அழகு, அறிவு, பணம் இதில் ஏதாவது ஒன்றை அதிகமாக வைத்திருப்பவர்கள் மீது அவளுக்கு அடிப்படையாகவே ஒவ்வாமை இருந்தது.
வழக்கமாக சமையல் முடித்திருப்பார் மகேந்திரன்.
“இந்த வீடியோ யூடியூபில் போட்டு இரண்டு மணி நேரந்தான் ஆகியிருக்கு. இது வரைக்கும் பத்து லட்சம் ஹிட்ஸ். இதுதான் இப்போ ட்ரெண்டிங்”
படைத்தலில் கடவுளை மனிதன் நெருங்கவே முடியாது, எனவே அழிக்கும்போதுதான் மனிதன் கடவுளுக்கு வெகு அருகில் செல்கிறான்
ஏனென்றால் யாராவது சொல்வதைக் கேட்பது தவிர அவர்களுக்கு எதுவும் தெரியாது.
மறுமுனையில் கயல்விழி ஒரு புன்னகையுடன் போனை வைத்தாள்.
ஆங்கிலத்தில் மாறி மாறி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் அந்த நீதிபதியும் டெல்லி வக்கீலும். கல்வி மந்திரி துரைசாமிக்கு எதுவும் விளங்கவில்லை.
ஒரு பெண்ணாக இதற்கு மேல் அதைப் பற்றிப் பேசவே எனக்குக் கூசுகிறது.”
அவன் ஒரு டபுள் கிராஸ்
எதிரிகளை வெட்டிக்கொண்டே இருப்பது ஒரு போதை. வெட்டாட்டம்
இத்தனைக்கும் இந்த ஊழல் விவகாரம் அவர் நினைவிலேயே இல்லை. வெறும் ஐந்து கோடி ரூபாய். ஆட்சியில் இருந்த பன்னிரண்டு வருடங்களில் எவ்வளவு சம்பாதித்திருப்பார் என்று அவருக்கே தெரியாது. அசையும் அசையாத சொத்துகள், ரொக்கம், பத்திரங்கள், முதலீடுகள், வெளி நாடுகளில் நிழல் நிறுவனங்கள் என்று இருபதாயிரம் கோடியைத் தாண்டும். இது
குடித்துவிட்டு வந்து அடிக்கும் அப்பா தூங்கியதும் வந்து ஃபேன் போட்டுவிட்டு போர்த்திவிட்டுப் போகும் அம்மாவைத்தான் அவர் பார்த்திருக்கிறார்.
கிரியேச்சர்
“நான் சொல்லித்தானே தெரியும்.. அது உனக்குப் பொறந்ததுன்னு... நீ ஷூட்டிங் போன போதெல்லாம் நான் வீட்லதானே இருந்தேன். உன்னை மாதிரியே நானும் ஊர் மேயலைன்னு உனக்கு எப்படித் தெரியும்? யுவர் சன் குட் ஹேவ் பார்ன் ஃபார் எனிபடி...”
சித்ரா ஒரு முறைதான் இறந்தாள். வருணை அவர் முன்னால் வளரவிட்டு அவரை தினம் தினம் கொன்றாள்.
அத்தனையும் சுவாமிஜி சத்யானந்தாவால் வந்தது.