More on this book
Community
Kindle Notes & Highlights
குமரேசனை ஒரு சுற்று காய்ச்சி எடுத்தார் வினோதன். அத்தனை கெட்ட வார்த்தைகளையும் அமைதியாக வாங்கிக் கொண்டிருந்தார் குமரேசன். குறுக்கே பேசினால் இன்னும் அதிகமாக வசவு கிடைக்கும். சில நேரங்களில் அறை கூடக் கிடைக்கும். கோடிகளில் சம்பாதிக்க இதையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும்.
யாராலும் அடையாளம் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது சவுகரியமாக இருந்தது. சுதந்திரமாகவும் இருந்தது.
மருத்துவமனைக்கு வெளியே ஒரு பெரிய மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. பலர் அழுதார்கள் அரற்றினார்கள். மாநிலமெங்கும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. மந்திரிகள் பால் குடம் எடுத்தார்கள். மகளிர் அணியினர் மண் சோறு சாப்பிட்டார்கள். எதிர்க்கட்சியினர்
சாலைகளில் கூடியிருந்த மக்கள்தான் அவனுக்கு ஒரு புதிராக இருந்தார்கள். அவனால் கடுமையாக வெறுக்கப்படும் அவனுடைய தந்தை கோடிக்கணக்கானவர்களால் நேசிக்கப்படுகிறார் என்பது அவனுக்கு வினோதமாக இருந்தது. இதனால் அவர்கள் அடைந்த பயன் என்னவென்று யோசித்தால் எதுவுமில்லை. கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி அவன் கைகளைப் பற்றிக் கொண்டு கதறினாள். இந்த நாடே அந்தக் கைகளில் இருப்பதாகக் கூறி கண்களில் ஒற்றிக் கொண்டு அழுதாள். அவள் கண்ணீரால் ஈரமான விரல்களை நீண்ட நேரம் துடைக்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்தான் வருண். எப்படி இவர்களால் தங்கள் நம்பிக்கையை ஒரு முன்பின் அறிமுகமில்லாத மனிதனின் மீது அவ்வளவு எளிதாக இறக்கி வைக்க முடிகிறது?
...more
தனது தந்தையை எதிர்த்து ஒருவர் நீண்ட காலமாக அரசியல் செய்கிறார் என்பதே அவர் மீது மரியாதை கொள்ளப் போதுமானதாக இருந்தது.
விரோதிகளாக பொதுவெளியில் காட்டிக் கொள்ளும் அரசியல்வாதிகள் தனியாக சந்தித்துக் கொள்ளும்போது என்ன மாதிரி பழகுவார்கள் என்பது குறித்து அவனுக்கு யாரும் சொல்லித் தந்திருக்கவில்லை.
அரசியல் அப்படி ஒன்றும் சாக்கடை இல்லை என்று அவள் விட்டுப் போன மென்மையான பெண்மையான பர்ஃப்யூம் மணம் சொன்னது.
இன்று சமைப்பது அவள் முறை. அவருக்குப் பிடிக்காத எலுமிச்சை சாதம் செய்து வைத்திருந்தாள். தட்டை வைத்த போது இவர் அவளை நிமிர்ந்து பார்க்க என்ன என்றாள் புருவம் உயர்த்திய பார்வையில். இவர் ஒன்றுமில்லை என்று அவசரமான வெள்ளைக் கொடியோடு முடித்துக் கொண்டார்.
வருண் ஒரு ஓரமாக அமர்ந்து ஐபோனில் ஏதோ ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான்.
ஆனால் இன்னும் கல்லூரிக்குக் கட் அடித்துவிட்டு சினிமாவுக்குப் போகும் ரவுடி மாணவன் மாதிரிதான் இருந்தான். மீசையும் தாடியும் இந்த ஐந்து நாட்களில் வளர்ந்திருந்தன. தலை வாரப்படாமல் காமா சோமாவென்று கிடந்தது. காலில் ஒரு ரப்பர் செருப்பு. ஒரு முதலமைச்சர் இப்படியா இருப்பார்.
முக்கியமாக தனது டிரெஸ்ஸிங் சென்ஸ் பிடிக்கும் என்று நர்மதா சொன்ன வினாடியில்.
“சோமசுந்தரம்னு என் பிரெண்டு இருந்தான். ஷிப்பிங்ல வேலை பாத்தான். வருஷத்துல ஆறு மாசம் கடலில் இருப்பான். கடைசி வரைக்கும் நீச்சல் கத்துக்கலை. ஏன்னு கேட்டேன். நடுக் கடலில் கப்பல் மூழ்கும் போது நீச்சல் தெரிந்து எந்தப் பிரயோசனமும் இல்லை என்பான். நீச்சல் தெரியாதவன் சீக்கிரம் செத்துருவான், நீச்சல் தெரிஞ்சவன் கொஞ்ச நேரம் போராடி சாவான், அதிலும் லைப் ஜாக்கெட் போட்டு மிதக்கறவன் பசியில துடிதுடிச்சு மெல்ல மெல்ல சாவான்னு சொல்லுவான்.
“உன்னோட பாஷைல சொல்றேன். ஒரு கம்ப்யூட்டர் கேம்ல என்னிக்காவது நேரா கடைசி லெவலுக்குப் போய் விளையாடிப் பாத்திருக்கியா?”
நேரா உன்னை கடைசி லெவல்ல இறக்கி விட்டிருக்காங்க. இந்த ஆட்டத்தை விளையாண்டுதான் பாரேன்”
பிளேக் மணி,
வெளியே மழை வலுத்துப் பெய்து கொண்டிருந்தது.
முக்கியமான ஆளுங்க ஆஸ்பத்திரில இருக்காங்க. மத்தவங்க எனக்கெதுக்கு வம்புன்னு கேக்கறாங்க… மந்திரிங்க எல்லாம் காவடி தூக்கவும் பால் குடம் எடுக்கவும்னு அலையறாங்க... ”
ராமசாமி பெரிய அரசியல் புள்ளி அல்ல. அவர் அரசாங்கத்தின் எந்தப் பதவியிலும் இல்லை. அவருக்கு இருந்த ஒரே தகுதி அவர் முன்னாள் முதலமைச்சரின் ஒன்று விட்ட மச்சான் என்பதுதான். இப்போதைய முதலமைச்சர் வருணின் மாமா. கவுசல்யாவின் சித்தப்பா மகன். இதற்கு முன்பாக ஊரில் புண்ணாக்கு மண்டி வைத்திருந்தவருக்கு இப்போது நாற்பத்தெட்டு வயதில் சொந்தமாக மூன்று மது தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தன. ஒரு சிமெண்ட் கம்பெனியில் பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தார். ஒரு கபாடி லீக் அணியையும் ஹாக்கி லீக் அணியையும் வைத்திருந்தார். ஆண்டுக்கு ஒருமுறை பாங்காக், மக்காவ், லாஸ் வேகாஸ் என்று பறந்து பல முக்கியமான ‘தொழில்’ முறை சந்திப்புகளை
...more
இன்றைய சூழலில் ஒருசில தனியார் வங்கிகளில் நுழைந்து ‘என்னிடம் இருநூறு கோடி ரூபாய் இருக்கிறது அதை எப்படி அதிக வரி செலுத்தாமல் முதலீடு செய்வது’ என்று கேட்டால் உள்ளே அழைத்துச் சென்று அவர்களே படம் வரைந்து காட்டுவார்கள்.
சுவாமி சத்யானந்தாவால் வினோதனுக்கு அறிமுகம் செய்யப்பட்டவன்.
வெளியே மழை பூனைகளாகவும் நாய்களாகவும் பெய்து கொண்டிருக்கிறது என்று ஆங்கிலத்தில் கூறியபடி அமர்ந்தான் ராபர்ட்.
பாலாஜி.
கடந்த சில வருடங்களில் சிறைக்குத் திரும்ப வராமல் எப்படித் திருடுவது என்பதையும் கற்றுக் கொண்டிருந்தான்.
வருண் போகிற போக்கில் எழுதிய சில 3டி ரெண்டரிங் அல்காரிதங்கள் ஓபன் சோர்ஸாக பல முன்னணி நிறுவனங்களால் உபயோகிக்கப்படுவதை அவன் அறிவான்.
வருண் ஒரு சுதந்திரமான ஆத்மா. அவனுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. எவ்வளவு திறமையான ப்ரோகிராமர். அவன் தந்தை அவனை ஒரு சாதாரண முதல் மந்திரியாக்கிவிட்டார் என்ற தகவல் வந்தபோது மிகவும் வருந்தினான் வாங். ஒரு மாஸ்டர் ப்ரோக்ராமருக்கு அதைவிட வாழ்க்கையில் பெரிய தண்டனை என்ன இருந்துவிடப் போகிறது?
‘ட்யூட்
வினோதனைத் தவிர யாருக்கும் முடிவெடுத்தே பழக்கம் இல்லாத சூழலில்
“எப்பவும் தலைவர் உத்தரவில்லாம அணையைத் திறக்க மாட்டாங்க...
வெட்டிப் பசங்கன்னு திட்டுவோமே தெருவில இறங்கி வேலை பாத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்..
இணையத்தில் வழக்கம் போல கட்சி பிரித்து அடித்துக் கொண்டார்கள்.
எப்போதும் ஒரு திமிரான கம்பீரத்துடன் இருக்கும் அவளை அப்படி சோகமாகப் பார்ப்பது அதுவே முதல் முறை.
நைட்டியைக்
போடி..
இருவரும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் கூட.
சத்யானந்தா தனது நீண்ட தாடியை வருடியபடி வசீகரக் குரலில் பேசிக் கொண்டிருந்தார். கூட்டம் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல் கேட்டுக் கொண்டிருந்தது.
தாங்கள் அனைவரும் நினைத்தால் வருணைப் பதவியிலிருந்து இறக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது. பல ஆண்டு காலமாக தலைவர் சொன்னதை அப்படியே கேட்டு தலையாட்டி வந்த கூட்டம் அது. திடீரென்று தலைமைக்கு எதிராக திரளமாட்டார்கள். தெரியாது. அதிலும் தெய்வத் தலைவரின் மகனுக்கு எதிராக செயல்பட அவர்களது அடிமை டிஎன்ஏ அனுமதிக்காது.
பதவியில் இருப்பவர்கள் முரண்டினால் அந்தப் பதவி தங்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறதென்று மந்திரி அல்லாதவர்கள் மெல்ல வருண் ஆதரவு நிலையை எடுக்கத் தொடங்கியிருந்தார்கள்.
கல்வித்துறை செயலாளரிடம் இருந்து போன் வந்தது என்றார்.
நிறைய அதிர்ஷ்டம் கூட துரதிருஷ்டம்தான்.”
அவளுக்குப் படிக்கும் அளவு பொறுமை இருக்காது என்பதை அவள் சைக்கோ ப்ரொபைலில் இருந்து தெரிந்து கொண்டிருந்தான் வாங்.
ஜூலியன் தனது இரண்டாவது மனைவியின் ஒன்று விட்ட சகோதரியுடன் சுற்றுவது வரை வாங் அவனைப் பற்றித் தெரிந்து கொண்டிருந்தான். ஜூலியனின்
இத்தனை சென்சிடிவான நிழல் உலக டேட்டாக்கள் வைத்திருக்கும் நிறுவனம் இவ்வளவு அலட்சியமாக தங்கள் பாதுகாப்பை வைத்திருக்கும் என்று அவனால் நம்ப முடியவில்லை.
ட்ருபால் வெர்ஷன் 7.23.
தான் அறியாமலே உலகத்தின் மிகப்பெரிய டேட்டா திருட்டைத் தொடங்கி வைத்துவிட்டு இன்னொரு பியர் பாட்டிலை எடுத்துக் கொண்டான் வாங்.
வருடத்தின் குறிப்பிட்ட சில தினங்களில் மகேந்திரன் குடிக்க ஆரம்பித்துவிடுவார். அவள் அம்மா இறந்த தினம் அதில் ஒன்று. வேறு சில தினங்களிலும் குடிப்பார். ஆனால் எதற்காக என்று அவரும் சொன்னதில்லை, இவளும் கேட்டதில்லை. அது தவிர எப்போதும் அவர் குடித்து இவள் பார்த்ததில்லை. யாருடனும் சேர்ந்து குடித்ததில்லை. தனியாகத்தான்.
ஒரு விதத்தில் அவளுக்கே தெரியாத சில மர்மமான பகுதிகள் மகேந்திரனின் வாழ்வில் இருக்கின்றன.
இத்தனை வருஷமா நீங்க செய்யணும்னு துடிச்சிட்டு இருந்த பல விஷயங்களை செய்ய உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு...
“ரொமான்ஸ் இல்லாத அரசியலை நீ பாத்திருக்கியா? ஏதோ ஒரு காலகட்டத்துல ஒவ்வொரு நாட்டோட அரசியலையும் ஒரு ரொமான்ஸ் புரட்டிப் போட்டிருக்கும். காதலால வாழ்க்கை மட்டுமில்ல வரலாறு கூட தடம் மாறும்”
அவருக்குப் பின்னால் ஒரு காதல் இருப்பது அவளுக்குத் தெரியும். அது தன் அம்மா மட்டுமல்ல என்பதுவும் அவளுக்குத் தெரியும். காதலைப் பற்றி பிரியமானவர்களிடம் பேச யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் நிறைவேறாத காதல்கள் பேசுவதற்காகவே மனதின் ஒரு மூலையில் வருடக்கணக்கில் காத்திருக்கும்.
பிள்ளைகள் காதலிக்கும் பருவத்துக்கு வருவது பெற்றவர்களுக்கும் பெற்றவர்களும் ஒரு காலத்தில் காதலித்தவர்கள் என்பது பிள்ளைகளுக்கும் அத்தனை எளிதில் உறைப்பதில்லை.