More on this book
Community
Kindle Notes & Highlights
அவர் கூட இருந்தா கட்சியில பெரிய ஆளாகிடலாம்னு கணக்குப் போட்டேன்..
நான் அங்கே வேலைக்கு சேர்ந்தது அவ அப்பாவுடைய பேச்சுகளை எழுதித் தரத்தான்.
“சுப்பிரமணி.. அவன் தான்.. அவன் தான் எல்லாம் தெரிஞ்சும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்... என்கிட்டே இருந்து எல்லாத்தையும் எடுத்துக்கிட்டான்...”
அதிலும் பிற அணிகளின் காய்கள் அதிக எண்ணிக்கையில் ஆட்டத்தில் இருந்தால் திரும்பத் திரும்ப வெட்டுப்படும். படை அவசியம்.
அவளுடைய காட்டன் புடவையின் டிசைனைப் பார்ப்பதற்காகவே ஒரு பெண்கள் கூட்டம் திரண்டிருந்தது.
“தனியா டிசைனர் வெச்சு நெய்யறதாமே.. கடைல எல்லாம் அந்த டிசைன் கிடைக்காதாம்” “அந்தப் பாசி நரிக்குறவர் கூட்டத்திடம் நேராவே சொல்லி வாங்கறதாம். இன்ஸ்டாக்ராம்ல போட்டிருந்தாங்க”
மூன்றே மாதங்களில் ரேஷன் கடைகள் அனைத்தும் இணையத்துக்கு மாறி இருந்தன. பொருட்கள் வீட்டுக்கு வீடு டோர் டெலிவரி செய்யப்பட்டன. இணையம் பயன்படுத்த முடியாதவர்களுக்கு நடமாடும் ரேஷன் கடைகளை வருண் அறிமுகப்படுத்தியிருந்தான். ஒரு ஊரில் இருந்த அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் பொதுவான சேவைத் துறை திறக்கப்பட்டது. எல்லா அரசுத்துறை வேலைகளும் மக்களுக்கு சரியாக சேர்கிறதா என்று அது கண்காணிக்கும். அரசு அலுவலகங்களில் வேலைகளை முடிக்க ஆகும் கால அளவு அங்கே ஒட்டப்பட்டது. அதை மீறினால் புகார்கள் அளிக்கவும் வசதி செய்யப்பட்டிருந்தது. அதற்கான மொபைல் ஆப் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. அது பிக் டேட்டா அனலிடிக்ஸ் மூலம் சிறந்த
...more
என்ன தியானம் என்று ராபர்ட்டுக்குத் தெரியும்.
மக்கள் தொகை 30,000. ஆனால் அங்கே பதிவு செய்யப்பட்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டும் என்கிறார்கள்.
எக்காரணத்தைக் கொண்டும் உன்னோட பதவியை விட்டு விடாதே.. இப்போதைக்கு அதுதான் உனக்கு சேஃப்டி. உனக்கு மட்டுமில்லை.. உன் குடும்பத்துக்கும்.
டைம் வார்ப்
நான் தொகுதிக்கு வராததால் உங்கள் மீது அக்கறை இல்லாதவன் என்று பொருள் இல்லை. எனது வேலையை நான் ஒழுங்காக செய்தால் உங்கள் அன்பு தானாகவே கிடைக்கும் என்று நான் அறிவேன்.
விர்ஜினியாவில் படித்தபோது சாலமன் என்றொரு ஆப்பிரிக்க அமெரிக்கன்.
ஒரு அயல் தேசத்தில் யாரிடமிருந்து யாரோ கொள்ளை அடித்த ஊழல் பணத்துக்காக அந்த நாட்டுக்கும் மக்களுக்கும் எந்த வகையிலும் சம்மந்தமில்லாத இருவர் ஒரு ஆளரவமற்ற தீவில் அடித்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருந்தது. அதுதான் பணத்தின் சக்தி.
“இப்படிப் பலரை முத்தமிட்ட ஒருவரைத்தான் இத்தனை வருஷமா நீங்க முதல்வரா வெச்சிருந்தீங்க. என்னை மட்டும் ஏன் திட்டறீங்க?
சிந்திக்க முடியாதவனே சிறந்த படை வீரன்.”
ஒரு கூட்டத்தில் வெங்கடேஷ் என்று ஆந்திராவில் கத்தினால் நூறு பேர் திரும்பிப் பார்ப்பார்களாம்.
மேலும் சில வெங்கடேஷ்கள் அவருக்கு அருகில் கூடத் தொடங்கிவிட்டார்கள். ஒரு சீனிவாசன் தன்னுடைய மொபைலை உசுப்பினார்.
இன்கிரிமினேட்டிங் எவிடென்ஸ்
எங்களுக்கு சென்ட்ரல் ஹோம் மினிஸ்ட்ரில இருந்து பிரஷர். அவரை அரெஸ்ட் பண்ண என்னவெல்லாம் செய்யணுமோ அதைச் செய்யச் சொல்லி.”
அரசாங்கத்தில் வருணை கொஞ்சம் கொஞ்சமாக தனிமைப்படுத்திவிட்டார்கள்”
மொசாக் பொன்சேகாவின்
நம்முடைய சுய தேவைகள் மிகவும் எளிதானவை. அவற்றை அடைய ஒரு போர் தேவைப்படுவதில்லை. நம்மோடு ஒரு கூட்டம் கூடும்போதுதான் தேவைகள் அதிகரிக்கின்றன. நமக்கும் மற்றவர்களுக்கும்.
இருவருக்கும் கட்சி அலுவலகத்திலிருந்து உடனடியாக டிவி பார்க்கும்படி தொலைபேசி அழைப்பு வந்திருந்தது.
போர்க்களத்தின் நியதிகள் வேறு. அங்கே கொல்லாதவன் கொல்லப்படுவான்.”
வினோதனின் படங்களில் அவர் எப்படி வருவாரோ அப்படி வேடமிட்ட பல ரசிகர்கள் இங்கே சுற்றி வருகிறார்கள்.
நிழல் என்றால் விலகாத துணை. நிழல் என்றால் பாதுகாப்பு. நிழல் என்றால் இருட்டான மறுபக்கம். அப்படி எல்லாமாகவும் இருந்தான் தாஸ்.
இன்று அந்த தெய்வம் மருத்துவமனையில் உள்ளே அழைத்து நீதான்டா அடுத்த முதலமைச்சர் என்று சொன்னதை முதலில் அவன் நம்பவில்லை. பிறகு சுதாரித்துக் கொண்டு மறுபடி கேட்டபோது தன்னைச் சுற்றி இருப்பவர்களிலேயே அவன்தான் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்று தலைவர் சொன்னபோது
பிற மந்திரிகள் அவனைப் பார்த்த பார்வையில் வெறுப்பும் கோபமும் தெரிந்தது. ஆனால் அங்கே தலைவரின் சொல்லுக்கு மறுபேச்சில்லை என்று அவனுக்குத் தெரியும். தலைவர் நலம் பெற வேண்டும் என்று அவன் வளர்த்திருந்த ஆறுமாத தாடி வேறு நமநமவென்று அரித்தது.
“வினோதனோட டிரைவர், அடியாள் எல்லாம் அவன்தான். அவனுக்கென்ன”
கோர்ட் கேஸ் முடியற வரைக்கும் சொந்தமா எதுவுமே சிந்திக்கத் தெரியாத ஒரு அடிமை அவருக்குத் தேவை. தாஸ் அப்படி ஒருத்தன்தான்”
“நீங்களும் இத்தனை வருஷமா கஜகர்ணம் போட்டு முக்கிட்டு இருக்கீங்க. பாருங்க யாரெல்லாம் சிஎம் ஆகறாங்கன்னு. அதுக்கெல்லாம் ஒரு ராசி வேணும் போல.”
பால்கனியின் இரண்டு பக்கங்களிலும் இருக்கும் தூண்களில் இறங்கும் வித்தை அவனுக்கு அத்துபடி.
ப்ளேக்
“அப்பா.. எனக்கு எல்லாம் தெரியும்பா”
“வருண் யாருன்னு தெரியும்பா... அவனோட அம்மா சித்ராதான் உங்க பழைய காதலி. வினோதன்தான் உங்க ஃபிரெண்ட் சுப்பிரமணி. வருணை கவனிச்சுக்க சொல்லி அவங்க சாகும் முன்னாலே உங்ககிட்டே பேசியிருக்காங்க. இல்லையா?”
அவன் பாவம்னு எல்லாம் சொல்ல மாட்டேன். அவன் செஞ்சதுக்கெல்லாம் படட்டும்னுதான் இன்னும் தோணுது...
ஆனா அவனை இதுக்குள்ள இவ்வளவு தூரம் இழுத்து விட்டதுல உங்க பங்கும் இருக்கு. நல்லா யோசிச்சுப் பாருங்க, நீங்க மட்டும் இல்லைன்னா எப்பவோ இதை விட்டு ஓடியிருப்பான். உங்க மேல இருக்கற கோபத்தையும் சேத்துதான் வினோதன் அவன் மேல காட்டறாரு.
ஒரு பெண்ணின் தலையில் கடைசியாக கை வைத்து ஆசீர்வதித்துவிட்டு தன் பின்னால் வரும்படி சைகை செய்து சென்றார் சத்யானந்தா.
தியான மையத்திலிருந்து ஒதுங்கி பலத்த பாதுகாப்புடன் இருந்த சத்யானந்தாவின் குடில் வெளிப்பார்வைக்கு மிகவும் எளிமையாக இருந்தாலும் உள்ளே ஒரு நட்சத்திர உணவு விடுதியின் அறை போல பிரமாண்டமாக அத்தனை வசதிகளுடனும் இருந்தது.
“சென்ட்ரல் ஹோம் மினிஸ்டர்கிட்டே நீங்க பேசுனது நல்லாவே வேலை செய்யுது.
“வினோதனுடைய விவரம் மட்டுமில்லை, அவருடைய மந்திரிகளோட மொத்த சொத்து விவரமும் கிடைச்சுது. ராபர்ட்தான் பெரும்பாலும் அத்தனை பேருக்கும் ஏஜன்டா இருந்திருக்கான். சத்யானந்தா ஆசிரமம்தான் இதுக்கெல்லாம் கேட்வே.”
“ஐ ஆம் சாரி பரதன் சார்.. நீங்க அந்த போன்காலை வெளியே போய் பேசியிருக்கணும்”
பரதனுக்கு கண்கள் மங்கியபோது அவர் மகளின் நினைவு வந்தது.
முதல்வரின் வீட்டை விடவும் விசாலமாக இருந்தது எதிர்க்கட்சித் தலைவரின் வீடு.
அவன் அப்பா வினோதனுக்கு எல்லாமே சினிமா செட் போல வேண்டும். அது ஒரு சகிக்க முடியாத டேஸ்ட்.
கல்யாண் கதவைத் திறந்து இவனை அனுமதித்தான். ஆனால் உள்ளே வரவில்லை. அவன் எல்லை அவ்வளவுதான் போல நின்று கொண்டான்.
கயல்விழியின் அறையும் அத்தனை ரசனையாக இருந்தது. கண்களை உறுத்தும்படி எதுவுமே இல்லை. ஒரு சிறிய துரும்பு கூட இடம் மாறி இருக்கவில்லை. யாராவது வசிக்கிறார்களா என்று கூட ஒரு சந்தேகம் வந்தது.
அவனுடைய ஈமெயிலை தனது வீட்டின் அறையில் இருந்த வேறு கம்யூட்டரை தொலைத்தொடர்பில் அணுகித் திறந்தான். சைபர் கிரைம் ஐபி முகவரியைத் தேடித் பிடித்தாலும் முதலில் அவன் வீட்டுக்குத்தான் போவார்கள்.
சின்னப்பதாஸ் பட்டாபட்டி உள்ளாடையுடன் கைகலப்பில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகிக் கொண்டிருந்தது.