More on this book
Community
Kindle Notes & Highlights
வட்டிக்குப் பணம் கொடுக்கும் கன்னி செட்டி
“இங்கு தங்குவதற்கு நாங்கள் இடம்கொடுப்பதில்லை. கோயில் சாவடிக்கு செல். அங்கே நீ தங்கிக் கொள்ளலாம். உன்னுடைய சாப்பாட்டையும், வழிச்செலவு பணத்தையும் நான் என் வேலைக்காரனிடம்கொடுத்து அனுப்புகிறேன்” என்று கன்னிச் செட்டி சொன்னான்.
அதன் பிறகு வன்னியடிமறவன் கன்னிச் செட்டியின் கண்களைப்பார்த்து, கள்ளர்களின் குறியீட்டு மொழியில் “செட்டியாரே, பஞ்சுக்கு பொருள் கொடுப்பீரா?” என்று கேட்டான். அது களவுத்தூது என செட்டி புரிந்துகொண்டான். ‘நான் திருட வந்தவன். இரவு உங்கள் வீட்டில் கன்னம் வைப்பதை நீ விரும்பவில்லை என்றால் ஈட்டுத் தொகையாக கேட்கும் பணத்தை கொடுத்து அனுப்பவேண்டும்’ என்பது அதன் பொருள். வடக்கு சூரங்குடி மறவருக்குரிய குறியீட்டு வார்த்தை அது.
ஏனென்றால் அக்குறியீட்டு மொழியை நிராகரித்தார்கள் என்றால் அவர்கள் எத்தனை காவலிட்டாலும், எங்கு சென்று புகார் கொடுத்தாலும் ஒரு அமாவாசை காலத்திற்குள் அந்த வீட்டில் சூரங்குடி கூட்டம் திருடும். எதிர்ப்பவர்களை கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள்.
கன்னம் வைத்து
நாட்டாரியல் ஆய்வாளரான அ.கா.பெருமாள் அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது “மண்ணில் வாழும் ஒருவன் எப்படி நாட்டார் தெய்வமாக மாறுகிறான்” என்று கேட்டேன். அப்போது அருகிலிருந்த இன்னொரு தமிழ்ப்பேராசிரியர், “வள்ளுவர் தான் தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே, வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” என்றார்
மண்ணில் வாழ்கையில் அரிய செயல்களைச் செய்தவர்கள், மாவீரர்கள், பெருந்தியாகங்களை ஆற்றியவர்கள், சான்றோர்கள் தெய்வமாகிறார்கள். அது ஒரு பொது விதிதான். ஆனால் எப்போதும் அப்படி அல்ல என்பது நாட்டார் கதைகளைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். பல நாட்டார் தெய்வங்கள் வாழும்போது கொடியவர்களாகவும் மக்களுக்குத் தீங்கிழைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மக்களாலேயே கொடூரமாகக் கொல்லப்பட்ட பின்னர் அந்தக் குற்ற உணர்வு காரணமாக தெய்வமாக ஆக்கப்பட்டிருப்பார்கள்.
அ.காபெருமாள் வன்னியடி மறவன் கதையைச் சொன்னார். சிரித்தபடி “ஒரு நாட்டார் தெய்வத்திற்குரிய எந்தச் சிறப்பும் வன்னியடி மறவனுக்கு இல்லை. மக்கள் அவனை தெய்வமாக்கியது அவன் மீது கொண்ட பயத்தாலோ, வியப்பாலோ, நன்றியுணர்ச்சியாலோ அல்ல. வெறும் இரக்கத்தால்” என்றார். இரக்கமும் ஒரு உ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
ஐந்துமுடி நாடார்கள்
அன்று வள்ளியூர் வரைக்கும் திருவிதாங்கூர் அரசர் ஆட்சியில் இருந்தது .
சிதம்பர நாடார் இறந்ததைக் கேள்விப்பட்ட அவள் அன்னை, பாப்பாத்தி இருவரும் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு உயிரை விட்டனர்
பேச்சிப்பாறை அணை குமரிமாவட்டத்தின் வளத்திற்கு முக்கியமான காரணமாக அமைந்த ஒன்று. தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை இது.
தாதுவருஷப்பஞ்சம்.
இந்தியாவின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒருபங்கினர் பட்டினி கிடந்து செத்து அழிந்தனர். ஐந்தில் ஒருபங்கினர் அகதிகளாக மலேசியா, பர்மா. இலங்கை, ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகள் போன்ற அயல்நாடுகளுக்கு தங்களையே அடிமைகளாக விற்றுக்கொண்டு குடியேறினர். தென்னகத்தில் மட்டும் இரண்டுகோடிப்பேர் இறந்திருப்பார்கள் என கணக்கிடப்படுகிறது. சென்னையில் ஒருநாளுக்குச் சராசரியாக முப்பதாயிரம் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன. ஒரு மனிதன் தொடர்ச்சியாக இருபதுநாட்கள் எந்த உணவையும் உண்ணாமலிருந்தால்தான் உயிர்துறப்பான். நடுவே கைப்பிடி உணவு உண்டால் கூட ஆயுள் நீளும். அப்படியும் இத்தனை பேர் செத்தார்கள் என்றால் அது எப்படிப்பட்ட பஞ்சம் என
...more
அத்தனை பெரிய பஞ்சத்தைப்பற்றி மிகக்குறைவாகவே நம் வரலாற்றாசிரியர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். சொல்லப்போனால் பெரிய அளவில் பதிவுகளே இல்லை. நாட்டுப்புறப்பாடல்களில் தான் செய்திகள் உள்ளன.
நான் அப்பஞ்சத்தைப் பின்னணியாகக் கொண்டு வெள்ளையானை என்னும் நாவலை எழுதியிருக்கிறேன்.
அந்தப்பஞ்சம் முழுக்க முழுக்க செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று. ஆகவே அது பஞ்சமே அல்ல, படுகொலை.
ஆகவேதான் சோழர்களும் சரி, நாயக்கர்களும் சரி, மழைநீரைத் தேக்கிவைக்கும் மாபெரும் ஏரிகளை உருவாக்கினார்கள்.
அத்துடன் அன்றெல்லாம் விளைச்சலில் நாலில் ஒருபங்கு வரியாக வசூலிக்கப்பட்டது. அவ்வாறு வசூலிக்கப்படும் நெல்லில் நாலில் ஒரு பங்கு அந்த ஊரிலேயே சேமிக்கப்படும். பன்னிரண்டு ஆண்டுக்காலம் அப்படி நெல் சேர்த்துவைக்கப்படும். அது பஞ்சம் தாங்குவதற்கான ஒரு ஏற்பாடு. தொடர்ந்து ஆறேழு ஆண்டுகள் மழையோ விளைச்சலோ இல்லை என்றாலும் எவரும் உணவில்லாது சாகமாட்டார்கள்.
சென்னை ராஜதானியில் மக்கள் லட்சக்கணக்கில் செத்துக்கொண்டிருந்தபோது விசாகப்பட்டினம், சென்னை துறைமுகங்களில் இருந்து கப்பல் கப்பலாக நெல் ஏற்றுமதி செய்யப்பட்டது.
பேச்சிப்பாறை அணை குமரிமாவட்டத்தின் முகத்தையே மாற்றியமைத்தது. பருத்தி விளைந்திருந்த வறண்ட நிலமான தோவாளை, அகஸ்தீஸ்வரம் வட்டங்கள் தென்னந்தோப்புகளும், வயல்களும் ஆக மாறின. மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டது. அந்தச்சாதனையை நிகழ்த்தியவர் ஐரோப்பிய பொறியியலாளரான மிஞ்சின். மிஞ்சித்துரை என அழைக்கப்படும் அவரது சமாதி இன்றும் பேச்சிப்பாறை அணைப்பகுதியில் உள்ளது. குமரிமாவட்ட மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதுமுண்டு.
இங்குள்ள ஆறுகள் அனைத்துமே என்றும் வற்றாத ஜீவநதிகள்.
அப்படி மூன்றுமுறை அணையை நதி கொண்டு சென்றதாகவும் இறுதியாக மிஞ்சின் கிட்டத்தட்ட நாநூறு அடி ஆழத்துக்கு அஸ்திவாரமிட்டு அணையைக் கட்டி நிலை நிறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் மிக ஆழமான அஸ்திவாரம் தோண்டப்பட்ட அணைகளில் ஒன்று பேச்சிப்பாறை அணை.
மிஞ்சினை ‘செம்பன் துரை’ என்பார்கள்.
அவர் உண்மையில் மனிதன் அல்ல, பூதம் என்பார்கள். அவர் மனிதர்களின் இறைச்சியை சுட்டு கத்தியால் வெட்டித் தின்பார்.
புரவியில்
இருபது வருடம்கழித்து டிடிடி பூச்சி மருந்து அறிமுகமாவது வரை மலை என்றாலே மலேரியாதான். எங்களூரில் துள்ளக்காய்ச்சல் என்பார்கள். மழைபெய்யும் போது காடு ஒரு நரகம்.
“அவை மின்மினிகள் அல்ல. பேச்சிப்பாறை அணை கட்டப்படும்போது இறந்துபோன மக்களின் ஆவிகள். அவர்களின் கண்களுக்குள் இருந்த கருமணிகள் அவை. இரவில் அவை ஒளிபெற்று உலவுகின்றன. கண்களை மூடிக்கொண்டால் அவர்களின் அழுகையைக் கேட்கமுடியும்”
தாதுவருஷத்தில் செத்து அழிந்த கோடிக் கணக்கானவர்களை இந்திய வரலாறு நினைவிலா வைத்திருக்கிறது? ஆனால் அந்தமக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
அத்தனைபேய்க்கதைகளும் வரலாறால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் வரலாறுகள்தான். பின்னர் 1987 ல் அக்கதையை நான் படுகை என்னும் சிறுகதையாக எழுதினேன்.
சீனர்களின் புராதனமான தாவோ வழிபாட்டின் தெய்வங்கள் மிக உக்கிரமானவை.
இந்த மக்களை எப்படியாவது கடைத்தேற்ற வேண்டியது தங்களது கடமை என்று எண்ணிக் கொண்டார்கள்.
“உங்கள் வீட்டில் வேலை செய்யும்போது ஒருநாள் இரவில் நீங்கள் ஒரு அறைக்குள் சென்று ஏதோ செய்வதை அந்தப்பெண் பார்த்திருக்கிறாள். நீங்கள் மண்டியிட்டு கைகளை மார்போடு சேர்த்து கண்களை மூடிக் கொண்டு ஏதோ மந்திரம் போல சொன்னீர்கள். உங்கள் முன்னால் ஒரு கொடூரமான சிற்பம். அதில் குறுக்காக அறையப்பட்ட மரக்கட்டையில் ஒரு பிணம் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கால்களிலிருந்தும் கைகளிலிருந்தும் ரத்தம் வழிந்தது. தலையில் ஒரு முள்ளாலான கிரீடம். அந்தப் பேயுருவத்தை பார்த்து அவள் பயந்து ஓடிவந்திருக்கிறாள்”.
“அது எங்கள் தெய்வம். மனிதர்களுக்காக இறந்தவர்” என்றாள் வெள்ளைக்காரி. “தெய்வம் என்றால் இறக்ககூடாது அல்லவா?” என்றார் சீனர். “பிணத்தை வழிபடாதீர்கள். அது தவறு”.
எப்போதுமே மதங்களுக்கிடையேயான பரிமாற்றம் இப்படித்தான் இருக்கும். ஒருவரின் நம்பிக்கை இன்னொருவருக்கு பேய் என்றும் பூதம் என்றும் தோன்றுகிறது. மற்ற நம்பிக்கைகளை புரிந்துகொள்வது மிகமிகக் கடினம். மதங்களைப் ப...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
ஒரு தெய்வம் ஏன் வழிபடப்படுகிறது, எப்படி அந்நம்பிக்கை உருவானது என்று பார்ப்பதென்பது கூரிய சமூக ஆராய்ச்சி நோக்கும், விரிவான வரலாற்றுப்பார்வையும் தேவைப்படும் ஒன்று. அதைவிட மனித உள்ளம் எப்படி குறியீடுகள வழியாகவும் ஆழ்படிமங்கள் வழியாகவும் தொன்மங்கள் வழியாகவும் இந்த பிரபஞ்ச ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
மேலைநாட்டார் நம் நாட்டுப்புறத் தெய்வங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக பேய்களை கும்பிடுபவர்கள் என்றெல்லாம் தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக்கேட்டு இங்குள்ள நாத்திகர்களும் அதையே சொன்னார்கள். ஆனால் ஜோஸஃப் கேம்பல் [joseph campbell] போன்ற அறிஞர்கள் விரிவான ஆய்வுகள் வழியாக இவற்றின் குறியீட்டு அர்த்தங்கள் எப்படியெல்லாம் விரிந்துள்ளன என்று சொல்லியிருக்கிறார்கள். நம் நாத்திகர்கள் அதையெல்லாம் இன்னும் வாசிக்கவில்லை. வேதங்களில் உள்ள ஒரு அரிய படிமம் திரிசிரஸ். அவர் ஒரு முனிவர் அவருக்கு மூன்று தலைகள். ஒரு தலை இறைச்சி உண்டு கள் அருந்தி மகிழ்ந்திருக்கும். ஒரு தலை வேதமோதியபடி இருக்கும். மூன்றாவது தலை இவை
...more
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
வெளியே நின்று பார்ப்பவர்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் மூன்று வகையான வழிபாடுகள் என்று நினைக்கிறார்கள். ஆராய்ந்தால் நம் தெய்வங்களுக்கு எல்லாம் இந்த மூன்று முகங்கள் உண்டு எனத் தெரியும். பொன்னார் மேனியன் என்றும், அழகே உருவான சுந்தரேசன் என்றும் சிவனை வழிபடுகிற ஒரு மரபிருக்கிறது. அதேசமயம் சுடலைப் காக்கும் சுடலைப்பொடி பூசி, எருக்குமாலை அணிந்து சுடுகாட்டைக் காக்கும் ருத்ரன் என்றும் வணங்குகிறோம். சைவசித்தாந்திகளுக்கு...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
அதேபோல சிங்க வடிவம் கொண்டு மிகக்கோரமான தோற்றத்தில் அமர்ந்திருக்கும் நரசிம்மர் விஷ்ணுதான். அகோபிலம் போன்ற கோயில்களில் நரசிம்மருக்கு ஆடுகளை வெட்டி ரத்தபலி கொடுக்கிறார்கள். அதேசமயம் தாமரை இதழ் போன்ற கண்கள் கொண்ட பேரழகனாகவும் விஷ்ணுவை வழிபடுகிறோம். மூன்று மடிப்புக்ளாக மடிந்த காலத்தின்மேல் இப்பிரபஞ்சமே தன் உடலாககொண்டு படுத்திருக்கும் ந...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
அதேபோலத்தான் நாட்டுப்புறத்தெய்வங்கள். அவை மனிதர்களாக வாழ்ந்தவை. தங்கள் அருஞ்செயல்களால் சிலர் தெய்வமானார்கள். தங்களை மீறிய ஊழ்வினைக்கு ஆட்பட்டதனால் சிலர் தெய்வங்களானார்கள். இங்கே வாழ்க்கை முடியாது இறந்ததனால் சிலர் தெய்வங்களானார்கள். ‘வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வான...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
ஆகவே நம் நாட்டுப்புறத் தெய்வங்கள் ஒருபக்கம் மதம் என்றால் இன்னொருபக்கம் வரலாறாகவும் உள்ளன. சில விஷயங்களை நினைவில் நிறுத்துவதற்காகவே அவை வழிபடப்படுகின்றன. சில நுட்பமான பிரபஞ்ச உண்மை...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
நாட்டுப்புற தெய்வங்கள் தொடர்ச்சியாக பெருந்தெய்வங்களாக உருமாறிக் கொண்டும் இருக்கின்றன. சிவாலயங்களில் அமர்ந்துள்ள சண்டிகேஸ்வரர் கூட ஒரு காலத்தில் நாட்டார் தெய்வமாக இருந்தவர்தான். இன்னும் காலத்தில் பின்னால் செல்வோம் என்றால் ரிக்வேத காலத்தில் இந்திரன் நாம் இன்று வழிபடும் மாடசாமி போல ஒரு நாட்டுப்புறத் தெய்வமாக இருந்தவர்தான். ஆடுமாடுகள...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இப்படி கொஞ்சம் விரிந்த பார்வையில் அணுகினால் இந்துமதம் செயல்படும் முறை தெரியும். அதன் ஒருமுனையில் பெயரோ குணங்களோ அடையாளங்களோ இல்லாததும் மனித நினைப்புக்கெல்லாம் அப்பாற்பட்டதுமான பிரம்மம் என்னும் தெய்வம் உள்ளது. நேர் மறுமுனையில் நம் தாத்தாவாக இருந்து இறந்தவர் தெய்வமாக உள்ளார். நம் தாத்தாவை பிரம்மத்தின் அம்சம் என்று வழிபடுகிறோம். ஏனென்றால் எல்லாமே பிரம்மம்தான். எங்கே இந்...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
எல்லா பொருளிலும் சூரியஒளி பட்டு பிரதிபலிக்கிறது. கண்ணாடியில் மேலும் கூடுதலாக ஒளிவிடுகிறது. அதைப் போன்றவர்களே நாட்டுப்புறத்தெய்வங்கள். அவர்களின் பயங்கரமும் கொடூரமும் அருளும் இந்தப்பிரபஞ்சத்தின் சாரமாக உள்ள பிரம்மத்தின் பலவகையான முகங்கள்தான். ஆகவே பேய்கள் தேவர்கள் தெய்வங்கள் முதற்பெருந்தெய்வம் எல்லாமே ஒன்றுதான். ’மெய்மை ஒன்றுதான், அறிஞர் அதை ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
கதைக்கட்டுரைகள்
ஜன்னல் இருமாத இதழில் வெளிவந்தவை. ஆகவே அனைத்துத் தரப்பு வாசகர்களுக்குமான எளிமையான மொழிநடையில் எழுதப்பட்டவை.
நாம் அனைவருக்கும் குலதெய்வங்கள் உண்டு. கிராமியதெய்வங்கள், காவல்தேவதைகள் என நாம் நாட்டார்தெய்வங்களால் சூழப்பட்டு வாழ்கிறோம். அந்தத் தெய்வங்களுக்கும் இந்தியாவின் பிரம்மாண்டமான தொன்ம மரபுக்கும் என்ன உறவு, அவை எப்படி உருவாயின, அவற்றின் உணர்வுநிலைகள் என்ன என்று ஆராய்கின்றன இக்கதைகள். தென்தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் குலதெய்வத்தின் கதையை இதில் கண்டுகொள்ளக்கூடும்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)