தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate it:
75%
Flag icon
இன்று திருவனந்தபுரம் கோயிலில் ரகசிய அறைகளில் உள்ள பெரும் செல்வம் குலசேகரப்பெருமாள் கொண்டு வந்ததுதான் என்பது ஒரு நம்பிக்கை.
75%
Flag icon
மீனாட்சிப்பிள்ளை என்னும் பெண்ணின்
75%
Flag icon
அவள் மகள் காமாட்சிப்பிள்ளை
75%
Flag icon
அவள் அந்த படுக்கையில் விழுந்த குழியை வைத்து அது மார்பகங்கள் கொண்ட ஒரு பெண் என ஊகித்தாள்.
75%
Flag icon
தலக்குளம் அரசகுடியில் பிறந்து வயோதிகரான குலசேகரப்பெருமாளுக்கு மனைவியாகி கன்னியாகவே வாழ்ந்து மறைந்த அந்த இளவரசிதான் அது. அவளுடைய நிறைவேறாத குழந்தை ஆசைதான் அங்கே அவளை வரச்செய்தது.
76%
Flag icon
பேரரசியாக ஆனபின்னரும் பிள்ளைக்காக ஏங்கிய அரசி ஒரு பேரன்னை. பெரும் பொற்குவை கையிலிருந்தபோதும் கூட பிள்ளைக்காக தேடி உயிர்விட்ட அன்னை அவளை விட ஒரு படிமேலானவள்.
76%
Flag icon
தமிழகத்தின் பல கோயில்களில் வாசலுக்கு வெளியே ஒரு கல் தெய்வமாக நின்றிருக்கும். அதற்கு பூசைகள் வழிபாடுகள் ஏதும் செய்யப்படுவதில்லை. அதை எவரும் வணங்குவதுமில்லை. சாதாரணமான கல்லைப்போல அதை நடத்தமாட்டார்கள். அவ்வளவுதான். அதில் மாட்டைக் கட்டுவதில்லை. செருப்பை  வைப்பதில்லை. குந்தி அமர்ந்து வெயில் காய்வதிலை. ஆனால் நாய்களுக்கு அந்த வேறுபாடு தெரிவதில்லை. பலசமயம் அவை கால்தூக்கி மூத்திரம் சொட்டிவிட்டுச் செல்லும்.  அதை பிரம்மஹத்தி என்பார்கள்.
76%
Flag icon
கலியுகத்தின் ஆரம்பத்தில் நடந்த கதை இது. கனகன் என்னும் பிராமணன் மிகவும் ஏழைக்குடும்பத்தில் பிறந்தான். அவனுக்கு ஒரு கால் ஊனம். ஒரு கண்ணும் சரியாகத்தெரியாது. அறிவும் மிகவும் குறைவு. ஆனாலும் அவன் வேதம் படித்து புரோகிதம் செய்து வந்தான். அவன் அன்னையும் தந்தையும் முன்னரே இறந்துவிட்டார்கள்.
76%
Flag icon
திருமணம் ஆகி மகன் பிறக்காவிட்டால் நீர்க்கடன் கொடுக்க ஆளில்லாமல் சாக வேண்டியிருக்கும். பிராமணர்களைப்பொறுத்தவரை அது மிகப்பெரிய துயரம். அவர்கள் புத் என்னும் நரகத்தில் சென்று விழுவார்கள். அவர்களுடன் அவர்களுடைய ஏழுதலைமுறை முன்னோர்களும் வந்து அந்த நரகத்தில் விழுவார்கள். அவர்களின் சாபமும் வந்துசேரும்.
76%
Flag icon
ஒரு பெண்ணை மணப்பதென்பது தன் மூதாதையருக்குச் செய்யவேண்டிய கடமை என்றே நினைத்தான்.
78%
Flag icon
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவைகுண்டம் என்னும் ஊரில் அக்காலத்தில் ஆறுபத்து அக்ரஹாரம் என்று ஒரு தெரு இருந்தது. அவர்கள் அனைவருமே வடக்கே துவாரகையிலிருந்து அங்கே வந்து குடியேறியவர்கள் என்பது அவர்களின் குலநம்பிக்கை.
78%
Flag icon
ஆயிரம் பிள்ளை எடுத்த கைகள் கொண்டவள்.
79%
Flag icon
“நான் வரும்போது வெள்ளைக்குருவி வலமிருந்து இடமாகப்பறந்தது. நீ சாகமாட்டாய். பெண்குழந்தை பிறக்கும்” என்றாள் மருத்துவச்சி.
79%
Flag icon
பிறவிநூல் [ஜாதகம்]
79%
Flag icon
ஆனந்தாயியின் வீட்டில் அந்தக் கீரிப்பிள்ளை இன்னொரு பிள்ளைபோலவே வளர்ந்தது. ஆனந்தாயி அதற்கு இடது முலையிலும் கிருஷ்ணத்தம்மாளுக்கு வலது முலையிலும் பால்கொடுத்தாள்.
80%
Flag icon
பிழைநிகர்  [பிராயச்சித்தம்]
80%
Flag icon
பிராமணப்பெண் அயலூர் செல்லக்கூடாது என்பதனால்
80%
Flag icon
பாபநாசத் தீர்த்தக்கரைக்கு சென்றார்கள். ஏழு தீர்த்தங்களில் நீராடிவிட்டு அவர்கள் திரும்பி வரும்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே காட்டுவழியில் இருட்டிவிட்டது.
80%
Flag icon
எருக்கு முளைத்த வீட்டில் இரவு தூங்கக்கூடாது
80%
Flag icon
பாம்பு தொட்ட உடல் பொழுதைத் தாண்டக்கூடாது
81%
Flag icon
இந்தக்கதையில் கீரிப்பிள்ளையை பிராமணப்பெண் கொன்றதும் பாவத்தை தொலைக்க தீர்த்தமாட அலைந்ததும் மகாபாரதத்தில் உள்ள கதை. அதற்கு முன்னரே அது சில நூல்களில் சொல்லப்பட்டுள்ளது என சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
81%
Flag icon
சமண, பௌத்த நூல்களிலும் அக்கதை சற்று மாறுபட்ட வடிவில் உள்ளது. தமிழில் மணிமேகலையில் இந்தக்கதை உள்ளது. அதிலிருந்து பாடப்புத்தகத்தில் இக்கதை சேர்க்கப்பட்டுள்ளது.  நாம் அனைவரும் அறிந்த கதை இது.
81%
Flag icon
நாட்டார் மரபில் இருந்து புராணங்கள் உருவாவது போலவே சிலசமயம் புராணங்களில் இருந்தும் நாட்டார் மரபு உருவாகக்கூடும்.
81%
Flag icon
என் சொந்த ஊரான திருவரம்பில்
81%
Flag icon
அதிகம்போனால் பத்துகிலோமீட்டருக்குள்தான் வாழ்க்கையே. வாசிக்கத் தெரியாது. செய்தித்தாள்கள், வானொலி என எந்த உலகத்தொடர்பும் இல்லை. ஆகவே வாழ்க்கையை கற்பனையால் நிரப்பிக்கொண்டார்கள்.
81%
Flag icon
அப்பு அண்ணா ஒரு மகத்தான பேய்க்கதைசொல்லி. உண்மையிலேயே பயந்தவர் என்பதனால் கதைகள் உயிர்வாதையுடன் இருக்கும். ஆறுமணிக்கு மேல் கோயில் அல்லது வீடுதான். வேறெங்கும் தென்படமாட்டார். ஆனாலும் அவர் பேயைக் காண்பது தடைபடவில்லை.
81%
Flag icon
பழங்காலத்தில் வாளேந்தி செல்லவும் பல்லக்கில் ஏறவும் உரிமைகொண்டவர்கள். மாத்தாண்டவர்மா மகாராஜாவுக்கு வாரிசுரிமைப் போரில் உதவிசெய்ததனால் வந்த அதிகாரம் அது.
81%
Flag icon
கீழாளரைக் கொன்றால் கேள்விமுறை அன்றில்லை.
81%
Flag icon
அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார். வழக்கமாக அவர் படுக்கையில் தவிர பெண்களிடம் பேசுவதோ முகம் கொடுப்பதோ இல்லை. அன்றைய வழக்கம் அது. பெண்கள் இரண்டாம்தரமான பிறவிகள் என்னும் நம்பிக்கை ஓங்கியிருந்த காலம். குடியாளும் ஆண்கள் முன் வீட்டுப்பெண்கள் வந்து நிற்கவும் மாட்டார்கள். ஆனால் கருவுற்ற மனைவியை அவர் செல்லக்குழந்தை போல நடத்தத் தொடங்கினார். காலை எழுந்ததுமே அவள் முகத்தில்தான் விழிக்கவேண்டும் என்று விரும்பினார். நாள் முழுக்க நினைத்து நினைத்து அவளை அழைத்து அருகே அமரச்செய்து கொஞ்சினார். அவள் விரும்புவதை எல்லாம் கொண்டுவந்து கொடுத்தார்.
82%
Flag icon
பசும்பாலில் குளிக்கவேண்டுமென ஆசைப்பட்டாள். பன்னிரண்டு காராம்பசுக்களின் பால் கறந்து அவளை குளிப்பாட்டினர்.
82%
Flag icon
பிள்ளையுடன் செத்தவளுக்கு ஒரு பிள்ளைக்கல் நாட்டவேண்டும்.
82%
Flag icon
பிள்ளைக்கல் நாட்டப்பட்டது. ஒரு பெரிய கல்லும், அருகே சிறிய கல்லும் தொட்டுக் கொண்டிருக்கும்படி நாட்டப்பட்ட நடுகல் அது.
83%
Flag icon
மூளை அவர்கள் கையில் அரிசிக்கூழ் போல வழிந்தது. ஆனால் அவர் முகம் புன்னகையுடன் இருந்தது.
83%
Flag icon
“தலைக்குள்ள இருந்த பேய் போயிடுச்சுல்லா?” என்றார் நேசமணி.
83%
Flag icon
“லே கூமுட்ட, மூத்த மகன் கண்ணன் தம்பியில்லா?” என்றார் நேசமணி. எனக்குப்புரியவில்லை. “இப்ப புரியாது. கொஞ்சம் வயசானா புரியும்” என்றார் அப்பால் இருந்த கேசவன் மாமா.
83%
Flag icon
இப்போது இருபத்தாறு சிறிய குடும்பங்களாகச் சிதறிப்பரந்திருக்கும் முந்தைய கூட்டுக்குடும்பத்திற்குச் சொந்தமான பழைய வீடு ஒன்று என் சொந்த ஊரான திருவரம்புக்கு அருகே இருந்தது. ஏகப்பட்டபேருக்கு சொந்தமானது என்பதனால் வீட்டை எவரும் பராமரிக்காமல் விட்டுவிட்டார்கள்.
83%
Flag icon
அது இருபத்தாறு குடும்பங்களைச்சேர்ந்த  நூற்றுபதினேழுபேருக்கு சொந்தமானது. ஆகவே விற்கவும் முடியாது ஒத்திக்கோ, பாட்டத்திற்கோ கூட கொடுக்கமுடியாது. அப்படியே போட்டுவிட்டிருந்தார்கள்.
83%
Flag icon
குமரிமாவட்டத்தின் நிலம் ஒருவருடம் பராமரிப்பில்லாமல் விட்டுவிட்டால் காடாகிவிடும். அத்தனை மழைப்பொழிவு.
83%
Flag icon
சாஸ்தாவின் வாகனம் நாய். அவர் பார்த்தது நாயைத்தான்.
84%
Flag icon
“யார் அது? டேய் யார்ரா அது?” என்றார்.
84%
Flag icon
பொதுவாக சாஸ்தாவுக்கு யானைதான் வாகனம். அபூர்வமாகக் குதிரை. ஆனால் அக்னிசாஸ்தா அனல் வடிவமானவர். அனல்நிறம் கொண்டது நாய். ஆகவே நாயை வாகனமாக கொண்டிருக்கிறார். சாஸ்தா இரவுலா போகும் நேரம்.
84%
Flag icon
எதுதான் தெய்வம் இல்லை? யானை, பசு, காளை, எருமை, மான், பன்றி, காகம், பருந்து, கிளி, நாய்...
85%
Flag icon
உண்மையில் இவை ஐரோப்பாவில் ஈராயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்த தொன்மையான நாட்டார் வழிபாட்டில் வழிபடப்பட்ட தெய்வங்கள். அதிலும் குறிப்பாக ஓநாய் பழைய வேட்டைச் சமூகத்தின் முக்கியமான தெய்வம். ஓநாயை தெய்வமாக வழிபடுவதைப்பற்றிப் பேசும் சீன நாவலான ‘ஓநாய் குலச்சின்னம்’ தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஓநாய்க்கு பலிகள் கொடுத்து வழிபடுவது உலகமெங்கும் உள்ள வேட்டைப்பழங்குடியின் வழக்கம். மகாபாரதத்தில் பீமன் கூட ஓநாய் என்றே சொல்லப்படுகிறான்.[ விருகோதரன் என]. 
85%
Flag icon
ஐரோப்பாவில் இருந்த தொல்மதங்களை பொதுவாக pagan மதங்கள் என்பார்கள். கிபி இரண்டாம் நூற்றாண்டில் ரோமாபுரியின் பேரரசர்களால் கிறித்தவ மதம் ஐரோப்பாவில் பரப்பப்பட்டபோது அனைத்து பாகன் மதங்களும் முழுமையாக அழிக்கப்பட்டன. அவர்களின் வழிபாட்டிடங்கள் இடிக்கப்பட்டன. கூடவே அந்தத் தெய்வங்கள் எல்லாம் பேய்கள், பிசாசுகள் என்று விளக்கப்பட்டன. அவை அழிவையும், நோய்களையும் அளிப்பவை என்று கூறப்பட்டன. இன்றுகூட அந்நம்பிக்கை ஐரோப்பாவில் வலிமையாகவே உள்ளது.
85%
Flag icon
இவ்வாறு நோய்களை அளிக்கும் பேய்களை திருப்தி செய்வதற்காக ஒரு பலிச்சடங்கை குளிர்காலத் தொடக்கத்தில் செய்தனர். பேய்களை அடக்கும் புனிதர்களை வழிபடும் நாள் அது. அனைத்துப் புனிதர்களின் நாள் என்ற பொருளில் அது ஹாலோவீன் என்று அழைக்கப்படுகிறது. அன்ற...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
85%
Flag icon
தடைசெய்யப்பட்டாலும் மக்கள் மேலும் நெடுங்காலம் தங்கள் தெய்வங்களை ரகசியமாக வழிபட்டனர். அவர்களை தேடித்தேடி வேட்டையாடியது ரோமாபுரி அரசு. இந்த மதவேட்டை இன்குவிசிஷன்  [inquisition] என்று சொல்லப்பட்டது. அப்படி ரகசிய வழிபாடுகள் செய்தவர்கள் சூனியக்காரர்கள் என்று சொல்லப்பட்டு உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
85%
Flag icon
உலகவரலாறு முழுக்க ஒரு பண்பாடு இன்னொன்றை வெல்வது நடக்கிறது. வென்றவர்களுக்கு தோற்றவர்களின் தெய்வங்கள் பேய்களாகத் தெரிகின்றன. நாம் உலகமெங்கும் காணும் அத்தனை பேய்களும் தோற்றவர்களால் வழிபடப்பட்ட தெய்வங்கள்தான். இந்தியாவிலும் அது நிகழ்ந்தது. அசுரர்கள் என நம் புராணங்களில் சொல்லப்படுபவர்கள் தோற்கடிக்கப்பட்ட மன்னர்கள். ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
85%
Flag icon
ஆனால் இந்துமதம் ஒரு தலைமை அமைப்போ, ஒரு மையக்கட்டுப்பாடோ இல்லாதது. ஆகவே தோற்கடிக்கப்பட்ட தெய்வங்கள் கூட அழிவதில்லை. அவை வெறும் பேய்களாக மாறிவிடுவதில்லை. சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவை வேறுவடிவில் மையமதத்திற்குள் எழுந்து வந்துவிடுகின்றன. ராமாயணத்தில் ராவணன் ‘வில்லன்’. ஆனால் சிலநூறாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட ‘உத்தர ராமாயணத்தில்’ ராவணன் கதாநாயகன் ஆகிவிட்டான். நாகங்கள்...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
85%
Flag icon
பண்பாடுகள் நடுவே போட்டியும், போரும் ,வெற்றி தோல்வியும் இல்லாத இடமே இல்லை. ஆனால் ஒரு பண்பாடு இன்னொன்றுடன் உரையாடலைத் தொடங்கியதென்றால் படிப்படியாக அது பண்பாடுகளின் இணைவுக்கே இடமளிக்கும். இரு பண்பாடுகளும் ஒன்றாக மாறிவாழும். இந்தியாவில் நடந்தது அதுதான். நம் அத்தனை பேய்களும் அப்படி என்றோ எவரோ வழிபட்ட தெய்வங்கள். ஆகவேதான் அவை ஒர...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
85%
Flag icon
நிகழ்ச்சியை நடத்தியவர்கள் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள்.