தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate it:
85%
Flag icon
ஆனால் கதையின் நாயகன் புரத வண்ணார் சாதியைச் சேர்ந்தவர்.
85%
Flag icon
நெல்லைமாவட்டத்தில் ஏழூர் பள்ளர் என்னும் குடும்பம் இருந்தது.  முருகன்குறிச்சி, முனிக்குளம், வெள்ளக்கோயில், தெப்பக்குளம், பாளையன்கோட்டை, திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை ஆகிய ஏழு ஊர்களில் உள்ள திருச்செந்தூர் ஆலயத்துக்குச் சொந்தமான நிலங்களை  இவர்கள் குத்தகைக்கு எடுத்து வேளாண்மை செய்தனர். செம்பாரக் குடும்பன், சந்திரக்குடும்பன், ஆரியக்குடும்பன்  என மூன்று தலைவர்கள் இக்குடியிலிருந்தனர். செம்பாரக்குடும்பனே மூத்தவர்.
85%
Flag icon
மாடத்தியும்
86%
Flag icon
சாத்தப்பிள்ளை என்னும் பெண்ணை
86%
Flag icon
புதியவன்நாடார்
86%
Flag icon
“நீ புரதவண்ணான்தானே? நாடாராகிய எனக்குச் சமானமாக நீ எப்படி அமரலாம்?”
86%
Flag icon
திருச்செந்தூரிலிருந்த செம்பாரக்குடும்பனுக்கு ஏழு பிள்ளைகள். இறுதியாகப் பிறந்தவள் சோணமுத்து. அவள் பேரழகி. தந்தை நிலக்கிழார் ஆகையால் செல்லமாக வளர்ந்தவள். பணத்திமிரும் சாதித்திமிரும் இருந்தன.
87%
Flag icon
ஆனால் ஒருநாள் கொண்டையன்கோட்டை மறவர்கள் செம்பாரக்குடும்பனின் வீட்டை கொள்ளையிட வந்தனர். அவர்களிடம் நரபலி கொடுத்து கூடவே அழைத்துவந்த வீரமுனியாண்டி சாமியும் இருந்தார்.
87%
Flag icon
அறுகொலைத்தெய்வம்
87%
Flag icon
வாழ்வு முடியாது இறந்தவர்களும் ,அநீதியாகக் கொல்லப்பட்டவர்களும்  ஆத்மா அணையாது மண்ணில் பேயென உலவி பலிகொள்வதும் அவர்களை அனல் அணைத்து விண்ணுக்கு அனுப்பும்பொருட்டு பலியும் கொடையும் அளிப்பதும் காலப்போக்கில் அவர்கள் தெய்வங்களாவதும் நாட்டார் கதைகளில் காணப்படுவதே.
87%
Flag icon
சாதியடுக்கில் வடமலையப்பர் போன்ற வேளாளர்கள் தலைமையில் இருந்திருக்கிறார்கள். அடுத்த நிலையில் பள்ளரும் ,நாடாரும் உயர்சாதியினராக ஆதிக்கத்துடன் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே அடிமையாக இருந்தவர்கள் வண்ணார் போன்றவர்கள்.
87%
Flag icon
செம்பாரக்குடும்பன் மகள் சோணமுத்து. சம்ஸ்கிருதத்தில் சோண என்றால் செந்நிறம். வடமொழிப்பெயர்களையே போட்டிருக்கிறார்கள்.
88%
Flag icon
வண்ணாரக்குடியில் பிறந்தாலும் மந்திரமூர்த்தியின் பெற்றோர் சங்கரன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள். நோன்பு நோற்றிருக்கிறார்கள். தெய்வமே மக...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
88%
Flag icon
அவனுடைய மந்திரத்திறன்கள் எல்லாம் பின்னாளில் வில்லுப்பாட்டுக் கலைஞர்களால் சேர்க்கப்பட்டவை.  அவன் சங்கரநயினாரின் அவதாரம் என்பதே கூட சேர்க்கப்பட்டதாக இருக்கலாம்.  மழுப்பப்படாத உண்மை, அவன் ஒரு கலகக்காரன் என்பது. சாமானியர்களை கட்டுபடுத்தும் தனிமனித நெறிகளையும் சமூக கட்டுப்பாடுகளையும்  மீறிச்சென்றான் என்பது.
88%
Flag icon
மனிதன் தெய்வமாகலாமா? ஆகலாம். அவனில் எழும் அந்த மீறலுக்கான துடிப்பை தெய்வீகமானது என எண்ணுவோம் என்றால் அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
88%
Flag icon
பிரஜாபதிகள். [பிறப்பிப்பவர் என்று இச்சொல்லுக்குப் பொருள்]
88%
Flag icon
தீர்க்கதமஸ் என்று பெயரிட்டனர். முடிவிலா இருள் என்று அதற்குப்பொருள்
88%
Flag icon
வேதம் ஓதுவதற்கு மேலதிகமாக உண்பதும், புணர்வதும் மட்டுமே அவர் வேலை. அவர் ஒளிவழியாக உறவுகொள்ளும் வித்தையை கற்று பல தேவகன்னிகைகளை அவர்கள் அறியாமலேயே  புணர்ந்தார்.
88%
Flag icon
அரசர் தன் மனைவி சுதேஷ்ணையை அவரிடம் இரவு சென்று தங்கும்படி ஆணையிட்டார்.
88%
Flag icon
சேடியை
89%
Flag icon
அவர் இறந்தபோது ஆயிரக்கணக்கான மைந்தர்கள் பெருகியிருந்தனர்.
89%
Flag icon
காமத்தின் தெய்வமான இந்திரனின்
89%
Flag icon
இந்தக் கதையை மகாபாரதம் எவ்வகையிலும் பெருமைப்படுத்திச் சொல்லவில்லை. இழிவுபடுத்தியும் சொல்லவில்லை. இது இப்படித்தான் என்று சொல்லிச் செல்வதே அதன் வழக்கம். ஆனால் நம் ஒழுக்கவுணர்ச்சியை மட்டுமல்ல நீதியுணர்ச்சியையும் சீண்டுகிறது  இந்தக்கதை.
89%
Flag icon
தீர்க்கதமஸைப் போன்ற தந்தையர் நம் ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு. காமம், சுயநலம், ஆணவம் தவிர எந்த இயல்பும் இல்லாதவர்கள். எவரைப்பற்றியும், எதைப்பற்றியும் கவலைப்படாதவர்கள்.அவர்களை என்ன செய்வதென்றே நமக்குத் தெரிவதில்லை. அவர்களை வெறுக்க நினைப்போம். ஆனால் வெறுக்கமுடியாது. காரணம் அவர் நம் தந்தை, தாத்தா, முப்பாட்டா. அவர் வலிமையுடன் இருக்கும் காலம் வரை அவரை அனைவரும் ரகசியமாக வசைபாடுவார்கள். ஆனால் வயதாகி நோயுற்று வீழ்ந்தால் அந்த வெறுப்பு மறைந்துவிடும்.
89%
Flag icon
ஆண்சிங்கம் வேட்டையாடுவது மிக மிக அபூர்வம். அது காமத்தில் ஈடுபடுவதைத் தவிர மிச்ச நேரமெல்லாம் தூங்கிக்கொண்டே தான் இருக்கும்.
89%
Flag icon
வீரியமுள்ள குட்டிகளை ஆக்கும் விந்துவின் கிடங்கு மட்டும்தான் அந்த ஆண்விலங்குகள்.
89%
Flag icon
அந்த விலங்கியல்புக்கு எதிராகவே நம் பண்பாடு உருவாகி வந்திருக்கிறது.
90%
Flag icon
மாயாண்டிச்சாமி தன் வாழ்நாள் முழுக்க நல்லவை எவற்றையும் செய்யவில்லை.
90%
Flag icon
மாயாண்டிச்சாமி பிறந்த நாள் முதல் கொல்லப்படுவதுவரை செய்தவை அனைத்துமே காமத்தாலும் ஆணவத்தாலும் சுயநலத்தாலும் செய்யப்பட்ட வீரசாகசங்கள்தான்.
90%
Flag icon
சந்தன வீரப்பனை அவரது சாதியினர் தெய்வமாக வழிபடுவதன் பண்பாட்டுக்கூறு  இதுவே.
90%
Flag icon
மாயாண்டிச்சாமியின் கதையையும், தீர்க்கதமஸ் கதையையும்  இன்றைய ஒழுக்கவியலைக் கொண்டோ, எளிமையான அன்றாட வாழ்க்கையைக் கொண்டோ , சில்லறைத்தனமான பகுத்தறிவு வாதத்தைக்கொண்டோ நம்மால் புரிந்துகொள்ளமுடியாது.
90%
Flag icon
திருஷ்ணை
90%
Flag icon
வாழ்வதற்கும், வெல்வதற்கும், வாரிசை உருவாக்குவதற்கும் தேவையான ஆற்றல் அது. அதை தமிழில் காமம் என்று சொல்லலாம்.
90%
Flag icon
வடக்குச் சூரங்குடி என்று அழைக்கப்படும் மணிக்காஞ்சி நாட்டில் வாழ்ந்த மாடப்பன் என்ற மறவன் மாபெரும் வீரன்
90%
Flag icon
கருமறத்தி.
90%
Flag icon
எட்டுபேரை ஒற்றையாக நின்று அடித்து வீழ்த்தும் உடல்வலுவும் தைரியமும் கொண்டவள்.
90%
Flag icon
வடக்கே கோவில்பட்டி வரையிலும் கிழக்கே திருச்செந்தூர் வரையிலும் மேற்கே கொல்லம் வரையிலும் சென்று திருட்டு தொழில் செய்து பணம் ஈட்டிக் கொண்டு வந்தான்.
90%
Flag icon
“திருடப்போன இடத்தில் நீ கர்ப்பிணிப் பெண்ணையோ, பசுவையோ, பார்ப்பனனையோ கொன்றிருப்பாய்”
91%
Flag icon
“தெய்வம் கொடுத்த குழந்தையே மனிதனுக்கு இறுதிச் சடங்கு செய்யும் தகுதி கொண்டது”
91%
Flag icon
பல்லிக்குஞ்சு போலிருந்தது.
91%
Flag icon
வன்னியடிமறவன்
91%
Flag icon
“எட்டுநாட்டில் புகழ்பெற்ற மறவன் மாடப்பன் மகனா இவன்? மறக்குலத்தில் பிறந்தவன் போலவா இருக்கிறான்? இவனுக்கு யானைப்பால் கொடு. அப்போது தான் இவன் எழுந்து நடப்பான்”
91%
Flag icon
”என்னைக் கட்டிக் கொள்கிறாயா? எட்டு பிள்ளை பெற்றுக் கொடுப்பேன்”
92%
Flag icon
அவன் தோழர்களாகிய மறவர்கள் கைகளில் கத்திகளுடன் அவனைத் தொடர்ந்து சென்றார்கள்.
92%
Flag icon
போர்த்தொழில் செய்யும் மறவர்கள் விவசாயமோ பிற தொழில்களோ செய்வதில்லை.
92%
Flag icon
குலத்தொழில்
92%
Flag icon
திருட்டுக்கு வந்தால் அவனுக்கு வீரம் வரும்.
92%
Flag icon
பன்னிரு நாட்களில் அவனுக்கு வேல் பிடிக்கவும், கத்தி சுழற்றவும் ஓரளவு கற்றுக் கொடுத்தார்கள். மறவர்களின் குழூஉக்குறிச் சத்தங்களையும், ரகசிய சைகைகளையும், அவர்கள் வழிகளில் போட்டுச் செல்லும் மர்ம அடையாளங்களையும் அவனுக்குச் சொல்லிக் கொடுத்தனர்.
92%
Flag icon
“நீ சென்று கன்னிச் செட்டியிடம் பேசு.கூடவே நைச்சியமாக அந்த வீட்டின் அளவையும், சுவர்களின் தடிமனையும், ஓட்டுக் கூரையில் உத்திரத்தின் இடைவெளியையும், வாசல்களின் கணக்கையும், ஜன்னல்களில் போடப்பட்டிருக்கும் சட்டங்களின் கனத்தையும், அவ்வீட்டில் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கையையும் ,வீட்டுக்குச் செல்லும் பாதையையும், வீட்டிலிருந்து திரும்பி வரும் பாதையையும் கண்களால் அளந்து வா” என்று சொல்லி அனுப்பினான். அவன் அனைத்து செய்திகளையும் பார்த்துவந்து துப்பு சொன்னான்.
92%
Flag icon
வன்னியடி மறவன் பார்ப்பதற்கு திருடன் போன்ற தோற்றம் இல்லாதவனாக இருந்ததனால் அவனை கன்னி செட்டியிடம் களவுத்தூதாக அனுப்பினார்கள்.