தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]
Rate it:
1%
Flag icon
அய்யாவழியில் நாட்டு தெய்வங்களை நம்புதல் கூடாது.
3%
Flag icon
உலக வரலாறு முழுக்க ஒரு பண்பாடு இன்னொன்றை வெல்வது நடக்கிறது. வென்றவர்களுக்குத் தோற்றவர்களின் தெய்வங்கள் பேய்களாகத் தெரிகின்றன. நாம் உலகெங்கும் காணும் அத்தனை பேய்களும் தோற்றவர்களால் வழிபடப்பட்ட தெய்வங்கள்தாம்
4%
Flag icon
இந்நூலை நான் நண்பர் கோணங்கிக்குச் சமர்ப்பணம் செய்கிறேன்.
5%
Flag icon
பாட்டி ஒரு சம்ஸ்கிருத பண்டிதை
5%
Flag icon
நான் கதைகளில் வாழ்ந்துகொண்டிருந்தேன். இவ்வுலகில் உள்ளவை எல்லாம் மிக எளிமையான விதிகளின் அடிப்படையில் அர்த்தமே இல்லாமல் இயங்கிக்கொண்டிருந்தன.
5%
Flag icon
மனிதர்கள் பறக்கமுடியாது என்பது, நினைத்த இடத்தில் தோன்றமுடியாது என்பது, விரும்பிய தோற்றம் பூண முடியாது என்பது எத்தனை பெரிய கட்டுப்பாடு என மனம் புழுங்கினேன். இயற்பியலின் இரும்பு விதிகளுக்குள் மனிதனைக் கட்டிப்போட்டுவிட்டு தெய்வங்களும் பேய்களும் மட்டும் சுதந்திரமாக வாழ்ந்துகொண்டிருந்தன என்று எண்ணும்போதே கசப்பாக இருந்தது.
5%
Flag icon
வேரின்றி காய்ப்பது கல்ப விருட்சம். கன்றில்லாமல் கறப்பது காமதேனு.
5%
Flag icon
அதில் குருதிவாசனை வீசுவதாகச் சொன்னாள் தேவி. ஏனென்றால் எந்தப்பசுவும் மானுடருக்காகச் சுரப்பதில்லை. தன் குட்டிக்காகவே சுரக்கிறது. அந்தப்பாலை மானுடர் கவரும்போது அது கண்ணீர் வடிக்கிறது என்று சிவன் அறிந்தார்  .
6%
Flag icon
கல்பவிருட்சம் என்றால் தென்னை அல்லவா? என்றேன். 'இல்ல, பனையாக்கும் கல்பவிருட்சம் ”என்றாள் தங்கம்மா.
6%
Flag icon
கராளன் ஒரு பனைமரமாக ஆனான். கரியன் எருமையாக ஆனான். எருமை குப்பையை உண்டு அமுதாகிய பாலை அளித்தது. பனை புளியமரம் கருகும் கோடையிலும் வற்றாது சுரந்துகொண்டிருந்தது. அதன் காயும் கனியும் வேரும் உணவாயின. அதன் ஓலையும் தடியும் பணமாகின. எருமையும் பனையும் இருக்கும் வரை மண்ணில் பஞ்சமே வராது என்று அனைவரும் அறிந்தனர் .
6%
Flag icon
வெண்ணிறமான தெய்வங்களுக்கு சமானமாகவே கறுப்புநிற தெய்வங்களும் உண்டு என்றும். அந்த வயதில் அவ்வறிதல் அளித்த கொந்தளிப்புகளின் வழியாக நெடுந்தூரம் சென்றேன். புனைகதைகள் எழுத தொடங்கினேன். இலக்கியவாதி ஆனேன்.
6%
Flag icon
எந்தக்கதைக்கும் ஒரு கறுப்பு வடிவமும் உண்டு
6%
Flag icon
அதிகமும் கேட்கப்படாதது அது. ஆனால் ஓயாமல் ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
6%
Flag icon
அக்கால கேரளப் போர்வீரர் வழக்கப்படி திருமணம் என ஏதும் செய்துகொள்ளவில்லை. அச்சிகள் என்னும் பெண் தொடர்புகள்தான்.
7%
Flag icon
அடிமுறை
7%
Flag icon
யட்சி”
8%
Flag icon
யட்சி என்னும் தெய்வம் சமண மரபிலிருந்து வந்தது.
10%
Flag icon
ஜ்யேஷ்டாதேவியின் ஆலயத்தின் கருவறை இருட்டானதாக ஒட்டடையும் தூசியும் குப்பையும் நிறைந்ததாக இருக்கவேண்டும்.
10%
Flag icon
சாக்தத்தின் தாய்நிலங்களில் ஒன்றான கேரள மண்ணில்
11%
Flag icon
நன்மை, அழகு, மேன்மை ஆகியவற்றுக்கு இணையாகவே தீமை, கோரம், கீழ்மை ஆகியவற்றையும் வழிபடும் ஒரு வழக்கம் உலகமெங்கும் பழங்குடியினரிடம் உண்டு.
11%
Flag icon
சைவமும் வைணவமும் பக்தியை மேலெடுத்த காலகட்டத்தில் தாந்திரீக வழிபாட்டு முறைகள் நிராகரிக்கபட்டு மெல்லமெல்ல வழக்கொழிந்தன.
11%
Flag icon
மூத்தாள் வழிபாடும் இவ்வாறாக மறைந்து மொழியில் மட்டும் வசைகளாக எஞ்சியது.
12%
Flag icon
பலநாய்களை அவரால் அடையாளம் காணவும் முடிந்தது.
14%
Flag icon
அங்குள்ள பழங்குடிகள் தங்களை சில விலங்குகளின் வழித்தோன்றல்கள் என எண்ணிக்கொள்ளும் வழக்கம் இருந்தது.
14%
Flag icon
டோட்டம்
14%
Flag icon
தொன்மையான மனிதர்கள் புயலையோ சூரியனையோ அஞ்சியோ புரிந்துகொள்ளாமலோ வழிபடவில்லை. அவற்றை கவித்துவமான குறியீடுகளாகவே வழிபட்டனர். இந்தப்பிரபஞ்சம்
14%
Flag icon
இந்தப்பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் அளவிடமுடியாத ஆற்றலையே சூரியனாகவும் புயலாகவும் அவர்கள் கண்டனர். சூரியனையும் வாயுவையும் பற்றிய நம் பக்திப்பாடல்களில் உள்ள வர்ணனைகளை பார்த்தாலே அதைக் காணலாம்.
14%
Flag icon
இன்றைக்கும் நம் கல்லூரிகளில் நாட்டாரியல் என்றபேரில் வெள்ளையர்கள் அரை வேக்காட்டுத்தனமாக எழுதி வைத்தவற்றையே பேராசிரியர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்.
14%
Flag icon
நாய் மரணத்தின், இருட்டின் குறியீடு என்றால் காளை வெளிச்சத்தின் குறியீடு.
14%
Flag icon
முருகனின் கையில் உள்ள செந்நிறமான சேவல் தீயின் அடையாளம்.   நீலமயில் நீரின் அடையாளம். 
15%
Flag icon
"காளிச்சரண்"
17%
Flag icon
கேசனையும் கேசியையும் விடவும் கரியவர் பெருமாள்.
19%
Flag icon
முத்துப்பட்டன் ஓரு பிராமணன். கேரளத்தில் நம்பூதிரி அல்லாத பிராமணர்களை பட்டர் என்பார்கள்.
19%
Flag icon
மதுரைநாயக்கர் அரசில் நியோகி பிராமணர்கள் அமைச்சர்களாகவும், படைத்தளபதிகளாகவும் செல்வாக்குடன் இருந்தனர். மற்ற பிராமணர்களைப்போல அவர்கள் வைதிக பூசைகளில் ஈடுபடுவதில்லை, அவர்கள் பெரும்பாலும் போர்வீரர்கள்.
21%
Flag icon
“நாம் அறுத்த நெல்லை மணிகூட மிஞ்சாமல் கொண்டுசெல்பவர்கள். அவர்கள் பூச்சி தின்ன நாமே காரணம்”
21%
Flag icon
அன்றிரவு பொம்மக்கா மடியில் தலையும் திம்மக்கா மடியில் காலும் வைத்துப் படுத்திருந்த முத்துப்பட்டனை
21%
Flag icon
அவர்களின் ஆடுமாடுகளை ஓட்டிச்சென்றவர்கள் ஊத்துமலை வன்னியரும், உக்கிரக்கோட்டை வன்னியரும் என வில்லுப்பாட்டு சொல்கிறது. வன்னியர் என்னும் சொல் இங்கே மறவர்களைக் குறிக்கிறது.
22%
Flag icon
தென்நெல்லையில் பல இடங்களில் முத்துப்பட்டன் பொம்மக்கா, திம்மக்காவுடன் அமர்ந்திருக்கும் சிலைகள் நிறுவப்பட்டு வழிபடப்படுகின்றன. இவை பட்டவராயர் சாமி என்றும் பட்டன்சாமி என்றும்  குறிப்பிடப்படுகின்றன.
22%
Flag icon
இந்தியச்சமூகத்தில் பிராமணரும் சக்கிலியரும் இரு எல்லைகள். வேதவேள்வி ஓர் எல்லை என்றால் ஆவுரித்து தோல்தொழில் செய்தல் மறுஎல்லை. காதலுக்காக ஒருவன் அங்கிருந்து இங்கு வந்தான் என்பது ஓரு மகத்தான செய்தி. அவன் தெய்வமாகாதிருக்க வாய்ப்பே இல்லை.
22%
Flag icon
பண்டித அயோத்திதாசர் இந்தியாவின் சாதியமைப்பு ஒரு தலைகீழ் திருப்பம் நிகழ்ந்ததன் விளைவு என்று வாதிடுவார். ஏதோ ஒருகாலத்தில் சாதியின் உச்சநிலையில் இருந்தவர்கள் கடைநிலைக்கு வந்தனர் என்றும் அந்தக் கடைநிலையருக்கும் உச்சியில் இருப்பவர்களுக்கும் நடுவே உள்ள கடும்பகையும் அதேசமயம் விசித்திரமான ஒற்றுமையும் கொண்ட உறவு அதையே  காட்டுகிறது என்றும்  சொல்வார்.
22%
Flag icon
பிரேம் சொன்னார் “எத்தனை வளமான நிலம்!  எவ்வளவு ரத்தம் இதற்காகச் சிந்தப்பட்டிருக்கும்!”
23%
Flag icon
வளமான நிலம், அழகான பெண், பொன் மூன்றும் அன்று பெருஞ்செல்வமாகக் கருதப்பட்டன. ஆயுதமெடுத்தவர்கள் அதைக் கைப்பற்ற முயல்வார்கள். கொன்றும் அழித்தும் கவர்ந்து செல்வார்கள். அதை உரிமை கொண்டவர்கள் ஆயுத பலத்தால் காத்து நிற்கவேண்டும்.
23%
Flag icon
ஆனால் தண்டனைகளில் கொடியதென்பது கழுதான். குமரிமாவட்டத்தில் கழுமேடு, கழுவன்திட்டை, கழுவடி போன்ற இடங்கள் முக்கியமான ஊர்களிலெல்லாம் உண்டு. கழுவேறி என்ற பெயர் மிக அதிகமாகப் புழங்கும் வசை.
24%
Flag icon
கழுவேற்றப்பட்ட ஒருவர் அவர் அடைந்த கடும் வலி காரணமாக ஏழு பிறப்பின் பாவங்கள் அழிந்து தெய்வமாகிவிடுகிறார்.
24%
Flag icon
இது ஒரு பிற்கால விளக்கம்தான். உண்மையில் கழுவேற்றப்பட்டவரை அவரது குடும்பத்தினர் கழிவிரக்கத்தால் தெய்வமாக்குகின்றனர்.
24%
Flag icon
அந்தச் சேவல் கழுவேற்றப்பட்டவனின் மறுபிறப்பாக இருக்குமோ? மீண்டும் மீண்டும் பிறந்து அவன் கழுவேற்றப்படுகிறானா என்ன?
25%
Flag icon
இசக்கி’
25%
Flag icon
’யக்ஷி’
25%
Flag icon
மோகினிப்பேய்
25%
Flag icon
முற்றும் துறந்து கை மலர்ந்து நின்றிருக்கும் தீர்த்தங்கரர்களிடம் சென்று உலகியல் விஷயங்களை வேண்டிக்கொள்ள முடியாது. ஆகவே இந்த யக்ஷிகளிடம் பிரார்த்தனை செய்வதென்பது சமணர்களின் வழக்கமாயிற்று.
« Prev 1 3 7