More on this book
Community
Kindle Notes & Highlights
குமரிமாவட்டத்தில் வேளிமலையைச் சுற்றி குறுப்புகள் அல்லது கிருஷ்ணன் வகையினர் என்று அழைக்கப்படும் ஒரு சிறுசமூகம் உண்டு. இவர்கள் இப்பகுதியை சங்ககாலத்தில் ஆட்சிசெய்த ஆய் மன்னர்களின் மரபைச் சேர்ந்தவர்கள் என்றும் பின்னாளில் திருவிதாங்கூர் அரசின் அமைப்புக்குள் ஒரு நிலைப்படையாக மாறினர் என்றும் சொல்வார்கள்.
அது ஒரு கட்டிலின் கதை.
தச்சுகழித்தல்
விதவை கட்டிலில் படுக்க முடியாது.
நாடாத்தி
பார்வதிபுரம்.
கள்ளியங்காடு
'முற்றத்து வெயில் முகத்தில் படாமல்' அவளைத் தந்தை வளர்த்ததாக
அழகி, செல்வம் கொண்டவள், நற்குணம் கொண்டவள் என்பதே ஒரு வகையில் ஏதோ சில சக்திகளுக்கான ஒரு சீண்டல், ஒரு அழைப்பு என்று தோன்றுகிறது.
பேரழகன். அதைவிட இனிய சொற்களைச் சொல்வதில் வல்லவன்.
"இந்தத் வெற்றிலைக்கு சற்று சுண்ணாம்பு கிடைக்குமா?” என்று அவரிடம் கேட்டாள். அது பெண் ஆணிடம் பாலுறவுக்காக அழைக்கும் ஒரு குழூக்குறிச் சொல்.
தஞ்சாவூர் பகுதியில் பழையனூர் நீலி கதை என்று அதைச் சொல்வார்கள்.
புராண கதை மரபு ஒரு பெரிய அடுக்கு. அதற்கு அடியில் நாட்டுப்புறக் கதைகளின் ஒரு அடுக்கு. சமணம் அந்தப் புராணப் பின்னணியை எதிர்த்து அதற்கு மாற்றாக உருவாகி வந்தது. ஆகவே இந்து மதத்தில் இருக்கக்கூடிய நாட்டார் பின்னணி தெய்வங்களின் கதைகளை அது கையில் எடுத்துக் கொண்டது. அப்படி அது கையில் எடுத்துக் கொண்ட தெய்வம் தான் கண்ணகி. இன்னொரு நாட்டார் தெய்வம் தான் குண்டலகேசி. இவர்களெல்லாருமே மக்களால் முன்னரே தெய்வங்களாக வழிபடப்பட்ட சிறு தெய்வங்கள். அவற்றை எடுத்து அவற்றின் மேல் சமணத்தைக் கொடுத்து அந்த மக்களிடம் கொண்டு சென்றனர் சமணர்கள்.
ஒருவர் ஒன்றை முழுதாக நம்பிச் சொன்னால் நாமும் நம்பத்தொடங்கி விடுவோம்.
மானுடருக்கு அவர்கள் வாழக்கிடைத்த இந்த உலகம் போதவில்லை.
இரணியசிங்கநல்லூர் என்னும் ஊரை [இப்போது இரணியல்]
இன்றைய தோவாளை, அகஸ்தீஸ்வரம் பகுதிகள் நாஞ்சில்நாடு என அழைக்கப்பட்டன. இன்றைய கல்குளம், விளவங்கோடு பகுதிகள் வேணாடு என்று அழைக்கப்பட்டன. வேளிர் ஆண்ட வேள்நாடு. வேள்நாட்டின் தலைநகரமாக இருந்தது, இன்றைய தக்கலை அருகே இருக்கும் சிற்றூரான தலக்குளம்.
அன்றைய திருவிதாங்கூரில் மருமக்கள் வழி அரசுரிமை நிலவியது. மகாராஜா எத்தனை பெண்ணை வேண்டுமென்றாலும் மணக்கலாம். ஆனால் அரசியாக அரண்மனைக்குக் கொண்டு வரக்கூடாது. அரசியெனும் பதவி மகாராஜாவின் அன்னைக்கும், சகோதரிகளுக்கும் உரியது. சகோதரியின் மூத்த மகனே அடுத்த அரசராக ஆகும் முறைகொண்டவன். இவ்வழக்கம் மகாபாரதக் காலம் முதலே உள்ளதுதான். கம்சனின் வாரிசாக கிருஷ்ணன் ஆனது அப்படித்தான். மகாராஜாவின் மைந்தர்களுக்கு ‘தம்பி’ என்ற பட்டம் மட்டும் உண்டு. இளவரசர்களுக்குரிய உரிமைகளும் உண்டு.
அவளுக்காகவே ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டில் முனிஞ்சிப்பட்டி, மூலைக்கரைப்பட்டி ஊர்களிலிருந்து ரெட்டியார்கள் பட்டும் நகைகளும் கொண்டு வந்தனர்.
சந்தா சாகிப்பின் படையில் அன்று முக்கியமான தளபதியாக இருந்தவர் பின்னாளில் வீரமாமுனிவர் என அறியப்பட்ட ஜோசஃப் கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்னும் ஏசுசபை பாதிரியார்].
விவசாயம் செய்ய காட்டை அழிக்க வேண்டியிருக்கும்.
ஆகவே தன் குலதெய்வமான செங்கிடாக்காரனை கல்லிடைக்குறிச்சியில் இருந்த கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து கொண்டுவந்தார்.
தன் விரலை அறுத்து ஒரு சொட்டு ரத்தம் கொடுத்து பலிசாந்திசெய்தார்.
அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்குப் பண்டாரம் எனப் பெயரிட்டார்.
அன்று நாடார் சாதியினரில் ஒரு பிரிவினர் மகள் வழிச் சொத்துரிமை உடையவர்கள். பெண்குழந்தை தான் குடும்பத்தின் தொடர்ச்சி என்று கருதப்படும்.
பின்னர் பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டு நீர் வரத் தொடங்கியபோது பருத்தி விவசாயம் இல்லாமலாகியது. பருத்தி விவசாயம் அன்றெல்லாம் கோவில்பட்டி பகுதிகளில் மட்டுமே இருந்தது.
குறுமுனிக் கோயிலருகே வந்ததும் தங்கையின் காலடி தடத்தை அடையாளம் கண்டனர்.
‘மகற்கொடை மறுத்தல்’
பலரும் எண்ணிக்கொண்டிருப்பது போல மக்களை எவரும் சாதிகளாகப் பிரிக்கவில்லை. மக்கள் சாதிகளாக ஒருங்கிணைந்தார்கள்.
குலங்கள் இணைவதற்கு ஒரேவழி பெண் எடுத்து பெண் கொடுப்பதுதான். பெண்களை கொடுக்காவிட்டால் அவளைக் கவர்ந்துசெல்வதும் வழக்கம். ஆகவே பெண்களை மிகக்கவனமாக பாதுகாப்பார்கள். பெண்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பார்கள்.
இற்செறிப்பு என்று தமிழிலக்கியங்கள் சொல்கின்றன.
அந்தக்காலத்தில் அங்கே சாயங்காலங்களில் எவராவது ராமாயணம் மகாபாரதம் படிப்பதுண்டு என்று கி.ராஜநாராயணன் சொல்லியிருக்கிறார்.
மாப்பிள்ளைக்கல்.
எல்லா உயிர்களிலும் பாலுறவுக்கு ஒரு எதிர்விசை அளிக்கும் பழக்கம் உண்டு. பெட்டைநாய் ஓட்டத்தில் தன்னை வென்று அடக்கும் நாயைத்தான் ஏற்கும். பிற நாய்களுடன் அந்த ஆண்நாயை சண்டையில் தள்ளி அது ஜெயித்து வரவேண்டும் என எதிர்பார்க்கும். ஆண்யானை பெண்யானை பார்ப்பதற்காக பெரிய மரங்களை மத்தகங்களால் முட்டி கொம்புகளால் குத்திச்சாய்ப்பதைக் காணலாம். ஆடுகள் மண்டை உடைய முட்டிக் கொள்கின்றன. தரமான ஆணின் வாரிசுகள் உருவாகவேண்டும் என்பதற்காக இயற்கையே உருவாக்கிய முறை இது.
அதையே பல நுணுக்கமான வேறுபாடுகளுடன் மனிதர்களும் நடைமுறைப் படுத்தியிருந்தனர். ஏறுதழுவுதல் போன்ற பல்வேறு போட்டிகளில் வென்றவனுக்கே பெண்கொடுக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. உடல்வலிமை அன்றைய சமூகத்தில் மிகமிக முக்கியமான ஒரு விழுமியமாக எண்ணப்பட்டது. போர்த்திறனும் பயிற்சியும் அதற்கு அடுத்தபடியாக முக்கியமாகக் கருதப்பட்டது. போட்டிச்செய்யுள் அமைத்தல் போன்ற அறிவுசார்ந்த போட்டிகள் உயர் தளத்தில் நிகழ்ந்தன என்பதையும் பண்டைய இலக்கியங்கள் காட்டுகின்றன.
நாழி கறக்கும் மாடுகள் நானாழி கறந்தன.
சென்னைக்கும், திருவனந்தபுரத்திற்கும் முதல் தலைமுறையினர் சென்றனர். அடுத்த தலைமுறை அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் குடியேறியது.
“முருங்க சாகாது. அதுக்கு ஏழு உசிரு”
தண்டார் என்று ஒரு சாதி இருந்தது. அவர்கள் தேங்காய் பறிப்பவர்கள். படகோட்டும் வேலையும் செய்வார்கள். பேச்சிப்பாறை
ஊரின் சிற்றரசர் குடித்தலைவர் [இவர்களை மாடம்பிகள் என்பார்கள்]
அப்போதெல்லாம் அரசகுடிப் பெண்களை நம்பூதிரிகள் மணக்கும் வழக்கமிருந்தது.
நம்பூதிரிகளும், அரசர்களும் பிறசாதிப் பெண்களை முறைசாரா மணம்கொள்ளும் வழக்கம் அன்றிருந்தது.
யக்ஷி இருந்தால் அங்கே கோழி அஞ்சி கூச்சலிடும்.
நாட்டார்தெய்வங்களைப் பற்றிய கதைகளில் உள்ள முக்கியமான அம்சம் இது. அநீதிக்கு எதிரான அறச்சீற்றம். அன்றைய சமூக அமைப்பில் ஒன்றும் செய்ய முடியாதவர்களின் அடிவயிற்று ஆவேசமும் அநீதி இழைத்தவர்களின் குற்றவுணர்ச்சியும் இணைந்து இத்தெய்வங்களை உருவாக்குகின்றன. அத்தெய்வங்கள் நினைவில் நிறுத்தப்படுவதென்பது நீதியுணர்ச்சியை அழியாது காப்பதுதான்.
அப்படிப்பார்த்தால் இன்றைய சமூகத்தில் இப்படி எத்தனை தெய்வங்கள் உருவாகியிருக்கவேண்டும்? தர்மபுரி பஸ் எரிப்பில் இறந்த கோகிலவாணியும் ,தோழிகளும், நாமக்கலில் இறந்த காவல்துறை அதிகாரி விஷ்ணுப்பிரியா, தண்டவாளத்தில் கிடந்த இளவரசன்... நாம் அத்தனைபேரையும் உடனே மறந்துவிடுகிறோம். தர்க்கபுத்தி நம் மனசாட்சியை நீர்த்து போகச் செய்துள்ளதா என்ன?
அன்றெல்லாம் மதுரையிலிருந்து வரும் தமிழ்நாட்டுப் படைகள்
மறைந்த வீரர்களின் புகழைப்பாடும் தெற்குப்பாட்டுகள் என்னும் நாட்டார்பாடல்களைப் பாடி வழிபடுவார்கள். அதைப் பாடும் கணியார்கள் என்னும் புலவர் குடும்பங்கள் வழிவழியாக வருகின்றன.
கேரளபுரம்
ராமப்பய்யன் அவரது தலையை வெட்டிக் கொண்டு சென்று தன் மாளிகைமுன் காட்சிக்கு வைத்தார்.
அந்தச்சிதையில் அவரது மனைவி பாய்ந்து உயிர்துறந்தார்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)