More on this book
Community
Kindle Notes & Highlights
இரவிக்குட்டிப்பிள்ளையின் இன்னொரு அணுக்கச் சேவகர் பட்டாணி பரீத் அவுலியா என்பவர். இவர் படுகாயம் அடைந்து மீட்கப்பட்டாலும் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். அவருடைய சடலமும் குதிரையின் சடலமும் அருகே அடக்கம் செய்யப்பட்டன. அவர்களின் நினைவிடங்கள் இன்று தர்காவாக வழிபடப்படுகின்றன. இந்தக் கதை இரவிக்குட்டிப்பிள்ளைப் போர் என்னும் தெற்குப்பாட்டாக பாடப்படுகிறது.
அந்த நினைவுக் கோயிலின் அருகே பரீத் அவுலியாவுக்கு ஒரு தர்கா உள்ளது. இன்னும் சற்றுத்தள்ளி அந்தக் குதிரைக்கும் ஒருநடுகல் உள்ளது.
கண்ணம்மாள் பத்தாண்டுக் காலம் இரவிக்குட்டிப் பிள்ளையின் மனைவியும் மெய்க்காவலருமாக இருந்தாள். அக்காலத்தில் பறையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் மிகச்சிறந்த பாயும் போர்கலைவீரர்கள் [ஜிம்னாஸ்டிக்] போர்வீரர்கள். குறிப்பாகப் பெண்கள். அவர்களை எப்போதும் உடன் வைத்துக்கொள்வது அரசர்கள் மற்றும் தளபதிகளின் வழக்கம். கண்ணம்மாள் எட்டு முறை இரவிக்குட்டிப்பிள்ளையின் உயிரை அரசியின் உறவினரிடமிருந்து காப்பாற்றியதாக கதைகள் சொல்கின்றன. கண்ணம்மாவின் குடும்பத்திற்கு விளைச்சலில் உரிமை அளிக்கப்பட்டிருந்தது.
துரோகத்தால் அவர் மறைந்ததை அறிந்ததும் வாளைமேலே தூக்கி வீசி உடலைக் காட்டி உயிர்துறந்தாள். அவளை பறையன்கால் அருகே எரியூட்டி வீரக்கல் நாட்டினர்.
ஆனால் அப்போது பறையர்கள் போர்வீரர்களாக இல்லை. அவ்வழக்கம் நின்றுவிட்டிருந்தது.
எங்களூரில் ஆரல்வாய்மொழிக்கு அப்பாலுள்ள நிலம் பாண்டிநாடு.
மற்ற மனைவிகளை அவளுக்குக் காவல் நிறுத்தினார்.
எல்லா இறுதிச்சடங்குகளையும் செய்து விண்ணேற்றினார்.
சாபம் என்பது என்ன? அறம் என்னும் தெய்வம் வாள் ஏந்தி வருவதுதானே? “அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை” என்று வள்ளுவர் அதைத்தானே சொன்னார்.
ஆந்திரமுடையார் கோயில்.
களைக்காட்டூர் [களக்காடு]
ஊர்த்தலைவராக ஆன ஆந்திரமுடையாருக்கு குதிரையிலும் பல்லக்கிலும் செல்லும் உரிமையும் வாளேந்தி தலைப்பாகை கட்டிக் கொள்ளும் அதிகாரமும் கிடைத்தது.
அக்காலத்தில் ராணிமங்கம்மாள் அமைத்த மடங்கள் சாலைகளில் இளைப்பாறும் இடங்களாக இருந்தன.
அங்கே பண்டாரம் என்னும் சாதியைச் சேர்ந்தவர்கள் பொறுப்பில் இருப்பார்கள். அவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டிருக்கும். மடங்களைப் பேணி வழிப்போக்கர்களுக்கு உணவும் நீரும் அளிப்பது அவர்களின் கடமை. மிகச் சிறுபான்மையினர் அவர்கள்.
பெண்கொலை என்பது தமிழ்ப் பண்பாட்டுப் பார்வையில் மிக மிக வெறுக்கத்தக்க ஒன்று.
காரணம் பதினாறாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் உருவான அரசற்ற நிலை, நாயக்கர் ஆட்சியின் இறுதிக்காலம், எங்கும் கொள்ளைகள், கொலைகள். மக்கள்தொகை பெருகியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக புதியநிலங்களில் குடியேறி விவசாயம் செய்தனர்.
நம்முடைய பெரும்பாலான காவல்தெய்வங்கள் பிறந்த காலகட்டம் தமிழகத்தில் அரசியல் நிலையின்மை உருவாகியிருந்த பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகளே.
திக்கற்றவர்களுக்கு ஆயுதமேந்தி நிற்கும் தெய்வம்தானே துணை.
பெரும்பாலும் அடித்தள மக்களால் வழிபடப்படும் இந்தத் தெய்வம் உண்மையில் ஒரு நம்பூதிரி பிராமணன். வழக்கமாக நாட்டார் தெய்வங்கள் உயர்சாதியினரால் கொல்லப்பட்ட அடித்தள மக்களாக இருப்பார்கள். இவரைக் கொன்றவர்கள் அடித்தள மக்களாக இன்று கருதப்படும் புலையர் சாதியினர்.
திருவாழும்கோடு . செல்வம் வாழும் மலை என்று பொருள்.
இப்பகுதியில் பதினேழாம் நூற்றாண்டில்தான் அதிகமாக மக்கள் குடியேற்றம் நிகழ்ந்து ஏராளமான ஊர்கள் உருவாயின. அதற்குமுன் கடலோரப்பகுதியிலேயே மக்கள் அதிகமாக வாழ்ந்தனர்.
கடல்வழியாக நிகழ்ந்த வணிகம் காரணமாக அங்கு மட்டும் உயர்நாகரீகம் உருவானது. பழைய ...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
கடலோரமாக ரோமாபுரியில் இருந்தும் அரேபியாவிலிருந்தும் வணிகர்கள் வரத்தொடங்கிய போது செல்வம் பெருகியது.
அப்பொருட்கள் அன்றைக்கு வேளாண்மை செய்யப்படவில்லை. இயற்கையாக விளைந்த அவை காடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டன.
கொஞ்சம் கொஞ்சமாக மலைப்பகுதிகள் நகர மக்களால் ஆக்ரமிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்டன. அங்கு வாழ்ந்த மக்கள் இவர்களுக்குக் கீழே அடிமைச்சாதிகளாக ஆக்கப்பட்டனர். இப்பகுதியில் உள்ள அத்தனை நாட்டார்க்கதைகளையும் இந்த வரலாற்று பரிமாணத்தை வைத்து புரிந்துகொள்ளமுடியும்.
திருவிதாங்கூரின் மிக அடித்தள மக்...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இன்று கேரளமாநிலத்தின் தலைநகரமாக இருக்கும் திருவனந்தபுரம் 1730களில் அன்றைய திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் தலை நகரமாக அறிவிக்கப்பட்டது. நகர்நடுவே அவர் அனந்த பத்மநாப சாமிக்கு மிகப்பெரிய ஆலயம் ஒன்றைக் கட்டினார். 20 அடி நீளத்தில் பள்ளி கொண்டிருக்கும் மிகப்பெரிய பெருமாள் சிலை கருவறையில் உள்ளது. இக்கோயிலை கட்டுவதற்காக அவர் மதுரையிலிருந்து அழைத்துக் குடியேற்றிய சிற்பிகளின் தலைமுறைகள் இன்றும் சுசீந்திரம் அருகே மயிலாடியில் வாழ்கிறார்கள். அங்கு இன்றும் சிற்பத்தொழில் சிறப்புற்றிருக்கிறது.
புலையர்களின் கதைகளின்படி பறையர்களும் புலையர்களும் ஆதிக்கசாதிகளாக இன்றைய திருவனந்தபுரம் பகுதியை ஆட்சி செய்தனர். அது அன்று அனந்தன்காடு என அழைக்கப்பட்டது அங்கே இருந்தது விஷ்ணு அல்ல, அவர்களின் குலதெய்வம்தான். . அதை அவர்கள் அனந்தன்சாமி என அழைத்தனர்.
அன்று புலையர் உயர்சாதி, பிராமணர்கள் கீழ்ச்சாதி.
நெடுங்காலம் கழித்து மலைப்பொருட்களை வாங்கி விற்கும் வணிகத்துக்காக வந்த தமிழ்நாட்டுச் செட்டியார்கள் எட்டுபேர் அந்தவழியாக சுமைகளுடன் வந்தனர்.
அவர்கள் அந்த நம்பூதிரியை அங்கேயே நிறுவி கோயில்கட்டி வருடத்துக்கு ஒருமுறை தயிர்சாதம் படைத்து வழிபட ஆரம்பித்தனர். நம்பூதிரியின் சிலையும் தலைகீழாகவே அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் புதுக்கோட்டை, செங்கல்பட்டு ,நெல்லை போன்ற ஒப்புநோக்க வறண்ட பகுதிகளில் தான் தொல்பழங்காலத்து கற்கருவிகளும் இரும்புக்கு முந்தைய பண்பாட்டு எச்சங்களும் கிடைத்துள்ளன.
இப்படி மையப்பண்பாடு தான் பெற்றுக்கொண்டதை வளர்த்தெடுத்து காலப்போக்கில் தன்னுடையதாக்கிக் கொள்கிறது. இன்னும் கொஞ்சம் காலம் கழித்து தாங்களே பிறருக்கு அளித்தோம் என்று எண்ணத்தொடங்குகிறது.
ஆகவே நாம் அறிந்த நம் குல வரலாற்றை, மத வரலாற்றை எப்போதும் தலைகீழாக ஆக்கிப்பார்க்கவும் சித்தமாக இருக்கவேண்டும்.
’முற்றத்து வெயில் முகத்திலே படாமல்’ வளர்த்தனர்.
இயக்கி முதுபிராமணனையோ, கருமூத்த சூலியையோ கேட்கிறாள்”
‘அவளுடைய அனல் அடங்கவேண்டும். நான் சொல்லப்போனால் என்னையே தலையைக் கிள்ளி விடுவாள்’ என்றார் சிவன்.
பொன்னிறத்தாள் மதுரையிலும், தென்காசியிலும் பதினெட்டு இடங்களில் கோயில் கொண்டு வருடம்தோறும் குருதிபலி கொண்டு அடைக்கலம் என்று வருபவர்களுக்கு அருள்புரியத் தொடங்கினாள்.
‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரற்றே செல்வத்தை தேய்க்கும்படை’ என்று வள்ளுவர் சொன்னதற்கு இதைப்போல ஒரு சான்று வேறில்லை.
நம் பேய்த் தெய்வங்கள் பெரும்பாலானவை இந்த அறச்சீற்றம் பற்றி எரிந்த தழல்கள் தான். சிவனே அஞ்சும் மானுடர்கள். ஆனால் இன்னொரு மானுடனின் கண்ணீரை அடையாளம் காணமுடிந்தவர்கள்.
அவர்களுடைய குலதெய்வம் பத்ரகாளி. நாடார்கள் பனையையே பத்ரகாளியாகக் கும்பிட்டு வந்தகாலம் அது.
அன்று ஒரு பெண் ஆணை எதிர்த்துப்பேசுவதை பெரும் அவமதிப்பாகக் காணும் மனநிலை இருந்தது.
நான்குநேரி வரை ஒருகாலத்தில் சேரநாடு [பின்னாளில் திருவிதாங்கூர்] இருந்துள்ளது. நான்குநேரி ஆலயத்திலேயே நம்பூதிரிகள்தான் பூசைசெய்திருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஊர்களைக் கைவிட்டு ஆரல்வாய்மொழிவரை பின்வாங்கிவந்து தங்கள் எல்லைகளை அமைத்திருக்கிறார்கள்.
பெண்களின் சபரிமலை என்னும் அளவுக்கு மண்டைக்காட்டம்மன் புகழ்பெற்று வருமானம் பெருகியது.
திருவிதாங்கூரின் நில உரிமை முறையை அறிந்துகொள்ளவேண்டும். இங்குள்ள நிலம் முழுக்க அரசர், கோயில், பிராமணர் ஆகிய மூன்று தரப்பினரில் ஒருவருக்கு மட்டுமே சொந்தம். [ராஜஸ்வம், தேவஸ்வம், பிரம்மஸ்வம்] இது ஜன்ம உரிமை [பிறப்புரிமை] எனப்படும். நில உரிமையாளர் ஜன்மி எனப்படுவார்.
ஆனால் அவர்களின் நில உரிமை என்பது குத்தகைப்பணம் பெறும் உரிமை மட்டுமே. மற்றபடி நிலங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. நடைமுறை உரிமை அந்நிலத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு உரியது. தமிழகம் முழுக்க ஏறத்தாழ இதே வகை நில உரிமைதான் இருந்தது. சோழர்களால் உருவாக்கப்பட்ட நில உரிமைமுறை இது
அரசு கோயிலைக் கையகப்படுத்திய பின்னர் கோயிலின் தொன்மம் மாற ஆரம்பித்தது. மண்டைக் காட்டம்மன் பகவதியாக ஆனாள். அவள் நாடார் சாதிப்பெண் என்பது மறைக்கப்பட்டது. புற்று மட்டுமே கதையில் இடம்பெற்றது.
மந்தைக்காடு என்ற பேர் தான் மண்டைக்காடு என்று ஆகியது என்பது ஒரு கதை.
மறுபக்கம் நாட்டார் வாய்மொழி மரபில் அனந்தன் நாடார் முருக்குத்தடியால் மனைவியின் மண்டையை உடைத்தபின் ‘மண்டையக் காட்டு அம்மா” என்று அழுதமையால் அந்தப்பெயர் வந்தது எனப்படுகிறது.
இயற்கையின் பயங்கரம், மனிதன் புரிந்துகொள்ள முடியாத மகத்துவம் வெளிப்படும் இடங்களை தெய்வமாக வழிபடுவது ஒருவகை ஆன்மிக நிலையே. அதை மூடநம்பிக்கை என மூடர்கள் சொல்லலாம்.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)