வல்லினம் புத்தாண்டு இதழ் வெளியாகியுள்ளது. கல்வியாளர் மூர்த்தி அவர்களுக்கு வல்லினம் விருது வழங்கப்பட்ட விழாவின் பதிவுகள், பெருமாள் முருகன் படைப்புகள் பற்றிய இலக்கியவிவாதம் என பலவகைப்பட்ட படைப்புகள் உள்ளன.
என் குடும்பத்தில் இருந்து மூன்று பேரின் கதைகள் இந்த இதழில் உள்ளன என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு சிறப்பு. நான் எழுதிய பழம்பாறை என்னும் அறிவியல் சிறுகதை, அஜிதன் எழுதிய ஜார்ஜ் புஷ்ஷும் வட்டப்பெயரும் என்னும் சிறுகதை, அஜிதனின் மனைவி தன்யா எழுதிய சாதகம் என்னும் சிறுகதை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஜி.எஸ்.எஸ்.வி.நவின் எழுதிய கல்முகன், மலர்விழி மணியம் எழுதிய பாவமன்னிப்பு, தெய்வீகனின் அவனை எனக்குத் தெரியும், கௌதம் நாராயணின் கூத்தன் மலை மற்றும் மொழியாக்கச் சிறுகதைகளுடன் ஓர் சிறுகதை மலராகவே இந்த இதழ் வெளியாகியுள்ளது. அண்மையில் வெளிவந்த இணைய இதழ் இலக்கங்களில் இதுவே தலையாயது என்று சொல்வேன்.
வல்லினம் புத்தாண்டு இதழ்
Published on January 05, 2026 10:32