நீலி- சிவகாமி சிறப்பிதழ்
அன்பு ஆசிரியருக்கு,
நீலியின் நவம்பர் 2025 இதழ் எழுத்தாளர் ப.சிவகாமி சிறப்பிதழாக வந்துள்ளது. இதில் ப.சிவகாமியின் நேர்காணல் இடம்பெற்றுள்ளது. அவரின் படைப்புகள் சார்ந்த கட்டுரைகளை எழுத்தாளர்கள் எம். கோபாலகிருஷ்ணன், சுரேஷ் பிரதீப், ஸ்டாலின் ராஜாங்கம், விக்னேஷ் ஹரிஹரன், சக்திவேல், ரம்யா ஆகியோர் எழுதியுள்ளனர்.
அறிவியல் துறையில் பெண் ஆராய்ச்சியாளர்கள் வரிசையில் பேராசிரியர் வெங்கட்ரமணன் இந்தமுறை ரீட்டா லெவி மோந்தால்சினி பற்றி எழுதியுள்ளார். அனுராதா கிருஷ்ணசாமியின் கடவுளுக்கென ஒரு மூலை மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுப்பு குறித்து இல.சுபத்ரா எழுதியுள்ளார், கமலாதேவி சடோபாத்யாயா என்ற ஆளுமை குறித்து சித்ரா பாலசுப்ரமணியன் எழுதியுள்ளார். தேவரடியார்கள் குறித்த வெவ்வேறு பரிமாணங்களைத் தரும் இரு கட்டுரைகளை வீர. ராஜமாணிக்கம், ஜி.எஸ்.எஸ்.வி. நவின் ஆகிய இருவரும் எழுதியுள்ளனர்.
மொழிபெயர்ப்பு பொறுத்து எலிஃப் ஷஃபாக்–இன் பெண்ணியக் கட்டுரை ஒன்றை மதுமிதா மொழிபெயர்த்துள்ளார். சமகால தெலுங்கு பெண் எழுத்து வரிசையில் இம்முறை அவினேனி பாஸ்கர் ஸ்ரீசுதா மோதுருவின் கதையையும், சமகால உலகப்பெண் சிறுகதைகள் வரிசையில் நரேன் ரஷ்ய எழுத்தாளர் யெவ்ஜெனியா நெக்ரஸோவாவின் கதையையும் மொழிபெயர்த்துள்ளனர்.
நீலி இதழ்
நீலி குழு
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

