மு.குலசேகரன் ஏன் விருந்தினர்?
அன்புள்ள ஜெ
மு.குலசேகரன் இப்போது விஷ்ணுபுரம் விருந்தினராக கலந்துகொள்கிறார். இதுநாள் வரை நீங்கள் அவரைப்பற்றி ஒன்றுமே சொன்னதில்லை. திடீரென்று அவர் விருந்தினர் ஆகிறார். அவர் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டியதுதான் காரணம் என்ற பேச்சு இருக்கிறது. உங்கள் விளக்கம் என்ன?
ஆ. நாராயணன்
அன்புள்ள ஆ,
பேச்சுக்கள் நல்லது. எந்த வகையிலானாலும். இன்றைய அரசியல் வெறி, சினிமாவெறிக் காலகட்டத்தில் வம்புகளேகூட நல்லவைதான். (என்ன செலவானாலும் சரி, வதந்திகளைப் பரப்புங்க தோழர்!)
மு.குலசேகரன் 1991 முதல் என் நண்பர். நான் திருப்பத்தூரில் இருந்தபோது அன்றாடம் சந்தித்துக் கொண்டிருந்தோம். பல உதவிகள் செய்தவர். தொடர்ந்து தொடர்பில் இருந்தவர்.
அவர்தான் மனக்குறைப்படவேண்டும், அத்தனை அணுக்கமானவர் என்றாலும் நான் அவரை எழுத்தாளராகப் பொருட்படுத்தி எழுதியதில்லை. அவர் முக்கியமான ஓர் இலக்கிய ஆக்கத்தை உருவாக்கிய பின்பு மட்டுமே அவரை பொருட்படுத்தினேன். உண்மையில் வேண்டிய நண்பர்களிடம் மட்டுமே இத்தனை கறாராக இருக்கிறேன்.
இது அவருடைய நூலை பிரச்சாரம் செய்வதற்கான விளம்பர உத்தி என இன்னொரு கடிதம். அந்நூலை வெளியிட்டது காலச்சுவடு. நான் ஏன் அவர்கள் நூலை விளம்பரம் செய்யவேண்டும்?
நல்லது, இந்த வம்புகள் வழியாக சிலர் அவரை வாசிக்க முனைவார்கள் என்றால் இது இலக்கியப்பணியே.
ஜெ
விஷ்ணுபுரம் 2025 விருந்தினர்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 1 – மு. குலசேகரன்
விஷ்ணுபுரம் விருந்தினர் 7, அனுராதா ஆனந்த்
விஷ்ணுபுரம் விருந்தினர் – 8 – குறிஞ்சிவேலன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

