ரமேஷ் பிரேதன் விருது- எதிர்வினைகள்
அன்புள்ள ஜெ,
ரமேஷ்– விருதுகள் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை கண்டேன். இந்த விருதுகள் பற்றிய கருத்தை ஒரு நண்பர் ஆவேசமாகச் சொன்னார். “எவ்ளவோ நல்ல எழுத்தாளங்க இருக்காங்க” என்றார்.
நான் சொன்னேன். “நீங்க உங்களை தவிர அஞ்சு எழுத்தாளர் பேரைச் சொல்லுங்க…” கூடவே சேர்த்துக்கொண்டேன். “ஆனா அவங்களைப் பத்தி நீங்க முன்னாடியே ஒரு பத்தியாவது எழுதியிருக்கணும். இப்ப அவங்க ஏன் முக்கியமானவங்கன்னு அவங்களோட புத்தகங்களை முன்வைச்சு ஒரு பத்து நிமிஷமாவது பேசணும்”
அவர் திகைத்துவிட்டார். இங்கே எவரும் எந்த நூலைப்பற்றியும் பேசுவதில்லை. எந்தப் படைப்பாளிகளையும் குறிப்பிடுவதில்லை. ஒரு புத்தகம் வெளிவந்தால் மயான அமைதிதான். ஆனால் ஒரு வம்பு என்றால் பாய்ந்து வருவார்கள். எவ்வளவு சிறிய மனிதர்கள். நினைக்க நினைக்க குமட்டலை அளிக்கும் அற்பர்கள்.
ராஜ மருதுபாண்டியன்
அன்புள்ள ஜெ
உங்கள் கட்டுரை வரும்வரை விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் விருதுகள் பற்றிய விவாதங்களை மட்டும் கவனித்துக்கொண்டிருந்தேன். சரியான விளக்கம் வரும் என்று எதிர்பார்த்தேன். கண்டிப்பாக உங்களிடம் விரிவான விளக்கம் இருக்கும். போகிறபோக்கில் விஷ்ணுபுரம் அமைப்பு முடிவெடுக்காது என்ற நம்பிக்கை இருந்தது. இத்தனை விரிவான கணக்கீடும் விவாதங்களும் நிகழ்ந்த பின்புதான் இந்த விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதே இந்த விருதுகளின் மதிப்பை காட்டுகிறது.
விஷ்ணுபுரம் அமைப்புகளின் விருதுகளைத் தீர்மானிப்பதில் இளையதலைமுறை வாசகர்களின் பங்களிப்பு இத்தனை தூரம் இருப்பதும் மிக மகிழ்ச்சியான ஒன்று.
எம்.பாஸ்கர்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் ரமேஷ் விருது பெற்றுள்ள படைப்பாளிகள் பற்றிய சுருக்கமான அறிமுகம் வாசித்தேன். நான் தேவிலிங்கம் எழுதிய நெருப்பு ஓடு நாவல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். மிக வித்தியாசமான ஒரு படைப்பு.
ஆர். குமரேஷ்
விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 1 – தேவி லிங்கம் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 2 – சஜு விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 3 – செல்வகுமார் பேச்சிமுத்து விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 4 – அசோக் ராம்ராஜ் விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருது – 5 – அழகிய மணவாளன்Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

