ரமேஷ், அவரவர் தெய்வம்
ரமேஷ் – அஞ்சலிகள், கடிதங்கள்
ரமேஷ், தமிழிலக்கியச்சூழல்.
ரமேஷ் நினைவுகள், கடிதங்கள்.
எழுத்தாளனின் சாவின் நிறைவு
கலைஞனின் உயிர்த்தெழல்
ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி
அன்பின் ஜெ
விஷ்ணுபுரம் விருது அறிவித்த பின்னரே ரமேஷ் பிரேதனின் எழுத்துக்களை தேடித்தேடி வாசித்தோம். அவருடைய நல்லபாம்பு, ஐந்தவித்தான், காமத்துப்பா, ஆபெண் எழுத்து புத்தகங்களை வாங்கி படித்து நண்பர்கள் விவாதிக்க தொடங்கினோம்.
ரமேஷின் மரண செய்தியறிந்து நீங்கள் அந்தியூரிலிருந்து மரண நிகழ்வுக்கு வந்தபோது உங்களுக்குள் இருந்த அகக்கொந்தளிப்பு முன்னெப்போதும் நாங்கள் பார்த்திராத ஒன்று.
ரமேஷ் பிரேதன் உடலை அடக்கம் செய்யும் வரை அரங்காவின் முன்னெடுப்புகளுக்கு இலக்கிய உலகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.
சக எழுத்தாளனின் இழப்பில் கொஞ்சமும் பாதிப்படையாமல், உடன் நிற்க மனமின்றி, நிற்பவரை குறைசொல்லி முகநூலில் சிலர் எழுதுவது வேதனை தருகிறது. உயரே பறக்கும் பறவையை கல்வீசி தாக்க எறிந்த கல் தன் தலைமீதே விழ வலியால் துடிக்கின்றார் என்று எடுத்துக் கொள்கிறோம்.
நன்றி.
மூர்த்தி விஸ்வநாதன்
சேலம் வெண்முரசு வாசகர் வட்டம்.
*
அன்புள்ள மூர்த்தி,
இதை நாம் சற்று கனிவுடன்தான் அணுக வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஒருவேளை எழுத்தாளர்கள் தங்களுக்குள் கடுமையாக எதையாவது கூறிக்கொள்ளலாம். அது ஒருவகையான உட்பூசல் என்றே கொள்ளப்படவேண்டும். வாசகர்களின் பார்வையில் இந்த வகையான ஒரு எதிர்ப்புணர்வு அல்லது கசப்பு உருவாகி விடக்கூடாது. அது எப்படியோ இலக்கியம் அல்லது அறிவியக்கம் சார்ந்த கசப்பாக ஆகக்கூடும்.
இங்கே எழுத விரும்புபவர்கள், எதையேனும் எழுத முனைபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எழுத்தாளர் என்றும் இலக்கியத்தில் இருக்கிறோம் என்றும் எண்ணி வாழ்வார்கள். அவர்களில் மிகச்சிலரே உருப்படியாக ஏதேனும் எழுதுகிறார்கள். அவர்களிலும் வாசகர்களை அடைபவர்கள் மேலும் சிலர். வாசகர்களே அடையாத எழுத்தாளர்கள் அடையும் அகக்கொந்தளிப்பு கொடியது. அது சக எழுத்தாளர்கள் மீது கசப்பாக ஆகிறது. வெற்றிபெற்ற ஒவ்வொரு கலைப்படைப்பின் மீதும் பரவுகிறது. அடிப்படையான கருணை, அறம் அற்றவர்களாக ஆக்கிவிடுகிறது. எந்த மானுட மேன்மையையும் வெறுக்கும்படியாக படிப்படியாக திரண்டு விடுகிறது.
அவர்கள் அந்தக் கசப்பை வெளிப்படுத்துவதற்கு அரசியல் போன்ற ஏதேனும் ஒரு பாவலாவை மேற்கொள்கிறார்கள். அதை வளர்க்கும் சமூக ஊடகம் உள்ளது. அத்தகைய ஒரு கசப்பு அல்லது காழ்ப்புப் பதிவை அமுதம் போல விரும்பி வந்து அள்ளிப்பருகும் வம்பாளர் பலர் உள்ளனர். இவர்கள் அந்த வம்பாளர்க்கூட்டத்தை வாசக வட்டம் என எண்ணிக்கொள்கின்றனர். வருத்தத்திற்கும் அனுதாபத்திற்கும் உரிய எளிய மனிதர்கள். அவ்வளவுதான். அதற்குமேல் அவர்களை பொருட்படுத்தவேண்டியதில்லை.
ஜெ
*
அன்புடையீர்,
திரு.வாசு முருகவேல் அவர்களுக்கு நீங்கள் அளித்துள்ள பதிலைப் படிக்கும் போதே உணர்ச்சி வசமானேன். இவ்வாறு அருள்புரியும் தெய்வம் எது என எல்லாரலும் காண இயல்கின்றதா? நான் தவறிவிட்டேன் என்றே உணர்கிறேன. (ரமேஷ் தமிழிலக்கியச் சூழல்)
அன்புடன்,
சிவநாத்.
*
பெங்களூர்.
அன்புள்ள சிவநாத்,
அவரவர் தெய்வம் எது என அனைவருக்கும் தெரியும். அதை எளிய உலகியலுக்காக, சோம்பலால், பிறருக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கும் கோழைத்தனத்தால் பெரும்பாலானவர்கள் தவறவிட்டுவிடுகிறார்கள்.
ஜெ
ரமேஷ், அஞ்சலி- கடிதம், விளக்கம். ரமேஷ், கடிதங்கள் ரமேஷ் பிரேதன் விருது, ஒரு கேள்வி ரமேஷ், தனிவாழ்க்கை, இன்னொரு கடிதம் ரமேஷ் பிரேதன், கடிதங்கள் ரமேஷ், ஒழுக்கவியல் – கடிதம் ரமேஷ் பிரேதன், வாழ்த்துக்கள் விஷ்ணுபுரம் விருது, கடிதம். ரமேஷ் வாழ்த்துக்கள் ரமேஷ், கடிதங்கள்ரமேஷ் பிரேதன், தனிவாழ்க்கை- கடிதம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

