கல்வி,கடிதம்
அன்பின் ஆசிரியருக்கு ,
பள்ளிக்கல்வியை பற்றிய தங்களது அக்கறையை நீங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதால் தங்களிடம் கேட்கலாம் என்று தோன்றியதால் இந்த கேள்வி.
சமீபத்தைய நண்பர் – அரசு ஆசிரயருடனான உரையாடலாலில், அரசுப்பள்ளியின் சேர்க்கை விகிதம் ஐம்பது சதவீதற்கிற்கும் கீழே சென்று இருப்பதாக கேட்டேன். இந்தியன் எக்ஸ்பிரஸ்-ன் இந்த கட்டுரையும் இதை உறுதி செய்கிறது. Private School Enrollment: Education Ministry flags steady increase in private school enrolment in states, asks them to reverse trend
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 90 % மேலான மாணவர்கள் அரசு அல்லது அரசு உதவி பெரும் பள்ளிகளிலேயே தங்கள் மாணவர்களை படிக்க வைக்கும் போது, இந்தியா போன்ற நாடு தனது பட்ஜெட்டில் 15 சதவிகிதத்தை பள்ளிக்கல்விக்கு ஒதுக்குகிறது, (தமிழ்நாட்டிலும் ஏறக்குறைய 12 இல் இருந்து 15 சதமானம் இருக்கலாம்). இப்படியிருக்க சேர்க்கை விகிதம் குறையும் போது, வரும் கால அரசுகள் இந்த செலவை சுமையாக கருதலாம் அல்லவா? ஆனால் எங்கேயேனும் ஒரு பின்தங்கிய கிராமத்து மாணவன் கல்வியறிவு கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காக மாற்று முடிவையும் அரசாங்கத்தால் யோசிக்க இயலாது. சேர்க்கை விகிதம் குறைந்த பல்வேறு பள்ளிகள் நிரந்தமாக மூடும் நிலையில் உள்ள செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.
கதாநாயகி நாவலை வாசித்து கொண்டிருக்கும் போது, மதிய உணவு திட்டத்தை பற்றிய சித்திரம் அளித்த உள எழுச்சியில் அதை பற்றிய செய்திகளை வாசித்து கொண்டு இருந்தேன். இந்தியாவிலேயே முதல் முறையாக காமராஜர் 1956 இல் மதிய உணவு திட்டத்தை ஆரம்ப பள்ளிகளில் செயல்பட வைத்துள்ளார். இந்தியா அப்போதுதான் உருவாகி வந்துகொண்டு இருக்கிறது. நாற்பத்தி ஏழில் விடுதலை என்றாலும், 52 இல் தான் முதல் தேர்தலை முடித்து அரசமைத்திருக்கிறது. அப்போது மத்திய அரசு உணவு தன்னிறைவுக்கான திட்டங்களை யோசித்து கொண்டிருக்கையில் இங்கே காமராஜர் கல்விச் சாலையில் உணவளிப்பதை பற்றி யோசித்திருக்கிறார்.தமிழகத்தை தொடர்ந்து கேரளா 60களிலும், குஜராத் போன்ற மாநிலங்கள் 80களிலும், இன்னும் சில மாநிலங்கள் மிகவும் பிந்தி நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரிலும் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளனர் என்று அறியும் போது காமராஜரின் தொலைநோக்கு வியப்பில் (உலக அளவிலும் வளரும் நாடுகளில் காமராஜர் கொண்டு வந்த திட்டமே முன்னோடி திட்டமாக தெரிகிறது) ஆழ்த்துகிறது.
இவ்வாறெல்லாம் வளர்க்கப்பட்ட பள்ளி கல்வியின் இன்றைய நிலையை பார்க்கும் போது இது என்னவாக போகிறது என்பது கவலை அளிக்கிறது.
பிரகாஷ்
கோவை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

