ரமேஷ், அஞ்சலி- கடிதம், விளக்கம்.
அன்புள்ள ஜெயமோகன்,
ரமேஷ் பிரேதன் அவர்களுக்கான அஞ்சலிக்கட்டுரையில் நீங்கள் உங்களையே முன் வைத்திருப்பதாக எனக்கு தோன்றுகிறது. இணையத்தில் அப்படி சிலர் எழுதியிருந்தார்கள். அந்த கட்டுரையைப் படித்த போதும் அது உண்மை என்று எண்ணம்தான் வந்தது. ரமேஷ் பிரவீன் பங்களிப்பு, இலக்கிய இடம் ஆகியவற்றை பற்றி எழுதுவதற்கு பதிலாக நீங்கள் செய்த உதவிகளைப் பற்றி மட்டுமே எழுதி இருக்கிறீர்கள் என்று தோன்றியது. உங்களுடைய தரப்பு என்ன என்று கேட்கவே நான் இதை எழுதினேன். ஏனெனில் நான் உங்களுடைய நீண்ட காலவாசகன்.
சலீம் பாபு
*
அன்புள்ள பாபு
நீண்டகால வாசகர் எவரும் இந்தக் கேள்வியை கேட்க மாட்டார். நீங்கள் சொல்வதை நான் ‘அவநம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டு’ என் தரப்பைச் சொல்கிறேன்.
அந்தக் கட்டுரையில் நான் என்னைப் பற்றி பேசவில்லை, எங்களை பற்றி பேசுகிறேன். எந்த தருணத்திலும் நான் என்னைப்பற்றிப் பேசுவதில்லை, எங்களைப் பற்றியே பேசுகிறேன். அப்படி தன்னை தன்னைச்சார்ந்த அனைவராகவும் காணும் ஒருவரால் மட்டுமே உலகளாவ ஓர் அமைப்பை உருவாக்கி முன்னெடுக்க முடியும். அது ஓர் அடிப்படைப்பாடம். நான் நான் என பேசிக்கொண்டிருப்பவர்கள் முகநூலில் சலம்ப மட்டுமே இயலும்.
உங்களுள் செயல்படுவது மதக்காழ்ப்பு அல்ல என நம்பவே விரும்புகிறேன். இளைஞர் ஆதலால் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். என்றேனும் நிர்வாகம் சார்ந்து எதையாவது நிகழ்த்த விரும்புகிறீர்கள் என்றால் இரண்டு விதிகளை மாறாநெறிகளாகக் கொள்ளுங்கள். எந்நிலையிலும் உங்களை பன்மையாக, உங்களைச் சார்ந்தவர்களுடன் இணைத்தே எண்ணிக்கொள்ளுங்கள். எப்போதும் பிறருக்கு அதிகாரமும், செயல்படும் உரிமையும் உருவாக்கி அளியுங்கள்.
உலகளாவிய இலக்கிய வாசகர்களின் பங்களிப்பு ரமேஷின் வாழ்க்கைக்கு இருந்தது. மணிரத்தினம் போன்றவர்கள் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். அதை இந்த தருணத்தில் பதிவு செய்வது என்பது ஒரு வரலாற்றுக் கடமை. நாங்கள் இதை செய்தோம் என்பது ஓர் உண்மை. அது மட்டும்தான் இந்த கீழ்மை நிறைந்த கும்பலை தொந்தரவு செய்கிறது. கீழ்மை அவ்வாறே வெளிப்படும்.
அந்தக் கட்டுரையில் ரமேஷ் அவர்களின் தனிவாழ்க்கையைப் பற்றி எதையும் நான் செல்லவில்லை. அவற்றைப் பற்றி எனக்கு பல பக்கங்கள் சொல்ல முடியும். ரமேஷின் உடல்நிலை பற்றி ஏன் சொல்லப்பட்டது என்றால் அது ஓர் உண்மை, அவர் அதை தன்னுடைய படைப்புத் திறனால் கடந்து வந்த விதம் எழுத்தாளனின் அகச்சக்திக்குச் சான்று. அக்கட்டுரையில் உள்ளது அதுதான். எழுத படிக்க ஓரளவு தெரிந்த எவராலும் அதை படித்து தெரிந்து கொள்ளமுடியும்.
ரமேஷின் பங்களிப்பு இலக்கிய இடம் ஆகியவை பற்றி இந்த அஞ்சலிக் கட்டுரையில் எழுத வேண்டியது இல்லை. அவர் வாழ்வை நண்பர்களின் உதவியால், படைப்புத்திறனால் வென்று சென்ற விதம் மட்டுமே அதில் இடம்பெற்றுள்ளது. அவருடைய இலக்கியப் பங்களிப்பைப் பற்றி நாங்கள் வெளியிட இருக்கும் நூலில் வெவ்வேறு படைப்பாளிகள் எழுதுவார்கள். நானும் எழுதுவேன்.
ஜெ
Dear J,
It was during my good old days of Post Graduate studies and MPhil (2001 – 2004) at the Department of English in Pondicherry University, i was introduced to the repertoire of Ramesh by the Phd Research Scholars of Tamil Department. It was also the time I was introduced to the writings of Konangi by my teacher.
Though I couldn’t be present during the final rites of Ramesh, I feel that you have taken the Herculean burden on your shoulders to pay an eternal Tribute (on behalf of Tamil readers and enthusiasts like us) to an inevitable Writer of the contemporary Tamil Fiction.
With Love and Respect
K.Ganeshram
ரமேஷ், கடிதங்கள் ரமேஷ் பிரேதன் விருது, ஒரு கேள்வி ரமேஷ், தனிவாழ்க்கை, இன்னொரு கடிதம் ரமேஷ் பிரேதன், கடிதங்கள் ரமேஷ், ஒழுக்கவியல் – கடிதம் ரமேஷ் பிரேதன், வாழ்த்துக்கள் விஷ்ணுபுரம் விருது, கடிதம். ரமேஷ் வாழ்த்துக்கள் ரமேஷ், கடிதங்கள்ரமேஷ் பிரேதன், தனிவாழ்க்கை- கடிதம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 843 followers

