தமிழக அரசால் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் அழைப்பில் நேற்று அங்கே சென்று செய்தியும் கதையும் என்ற தலைப்பில் உரையாற்றினேன்.

கதையும் செய்தியும் எப்படி வேறுபடுகிறது, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களான ஹெமிங்வே, மார்க்வெஸ் போன்றவர்கள் எப்படிப் பத்திரிக்கையுலகிலிருந்து எழுத்தாளர்களாக உருவானார்கள். பாரதியார், காந்தியடிகள் நடத்திய பத்திரிக்கைகள். தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான விஷயங்கள். டிஜிட்டில் உலகில் செய்தியின் இடம் மற்றும் தரம். இளம் பத்திரிக்கையாளர் பயில வேண்டிய அடிப்படைகள் விஷயங்கள் எவை என்பது குறித்து எனது உரை அமைந்தது.
இந்நிகழ்வில் இதழியலில் முதுகலை டிப்ளமோ பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
எனது உரையைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் உற்சாகமாக இருந்தது.
சென்னை இதழியல் நிறுவனத்தின்’ தலைமை இயக்குநர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் அவர்களைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது.
இந்த நிகழ்விற்குக் காரணமான நண்பரும் இதழியல் நிறுவன இயக்குநருமான எம். குணசேகரன் அவர்களுக்கு அன்பும் நன்றியும்
••
Published on September 17, 2025 04:32