சுஷில்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பான “மூங்கில்” பெரும்பாலாக கன்னியாகுமரி, நாகர்கோவில் என தான் புழங்கிய நாஞ்சில் நாடு சார்ந்தும், அதன் மக்கள், பண்பாடு, பாரம்பரியம், தொன்மம் சார்ந்து அமைந்தது. தொன்மங்களை ஒட்டிய நவீன இலக்கிய ஆக்கங்களை எழுதுகிறார். வரலாற்றுச் சம்பவங்கள், கல்வித்துறை சார்ந்த நுண்மைகள் ஆகியவற்றையும் படைப்புகளில் புனைவுக்குரிய மூலங்களாக எடுத்தாள்கிறார். நவீனச் சிறுகதையில் நாஞ்சில் நாட்டு மரபை தொடர்பவர், நாட்டார் தொன்மங்களை மறுஆக்கம் செய்பவர் என்ற அளவில் கவனிக்கப்படுகிறார்.
சுஷில்குமார்
சுஷில்குமார் – தமிழ் விக்கி
நாவல்சுந்தரவனம் (2023)
சிறுகதைத் தொகுப்புமூங்கில் (2021)சப்தாவர்ணம் (2021)அடியந்திரம் (2022)கன்னிகை (2024)
மொழிபெயர்ப்புதெருக்களே பள்ளிக் கூடம் (2021)
Published on September 05, 2025 11:33