லோகா,நீலி – கடிதம்
அன்புள்ள ஜெ,
லோகா படம் பார்த்தேன். உங்களுடைய கதைகளிலுள்ள அபாரமான நீலி உலகம்தான் மையம். அதை இன்றைய சூழலுக்கேற்ப கதையாக்கி முப்பது கோடி ரூபாய் செலவில் முந்நூறு கோடியை அடித்து தூக்கியிருக்கிறார்கள். அதிலுள்ள மையக்கருவை ஒட்டிய பல கதைகளை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.இன்னும்கூட தீவிரமாகவும், ஆழமாகவும் அவை உள்ளன. ஏன் அவற்றை தமிழில் சினிமாவாக ஆக்க முடியவில்லை. அந்தக்கதைகளெல்லாமே தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தவைதானே? (நானும் கன்யாகுமரிக்காரன்தான்)
சிவன் மகாராஜன்
அன்புள்ள சிவன்,
அந்தப்படத்திலுள்ளது கள்ளியங்காட்டு நீலியின் கதை. கள்ளியங்காட்டில்தான் நான் வீடுகட்டி குடியிருக்கும் சாரதா நகர் உள்ளது. கள்ளியங்காட்டு நீலி கோயில் வழியாக அன்றாடம் காலைநடை, மாலைநடை செல்கிறேன். அக்கதையை சுதந்திர மறுஆக்கம் செய்துள்ளனர்.
நான் அக்கதைகளை கவித்துவமான, தத்துவார்த்தமான உட்கூறுகளுடன் மறு ஆக்கம் செய்துதான் என் கதைகளை எழுதியுள்ளேன். அவை பேய்க்கதைகளும் தேவதைக் கதைகளும், பத்துலட்சம் காலடிகள், ஜெயமோகன் சிறுகதைகள் போன்ற பல தொகுதிகளில் உள்ளன. முப்பது கதைகளுக்கும் மேல் எழுதியுள்ளேன்.
முதன்மை நடிகர்களே இல்லாமல், ஒரு கதைக்காக மட்டும் முப்பதுகோடி முதலீடு செய்வதும், பத்துகோடி செலவழித்து ’பிரமோ’ செய்வதும் மலையாள சினிமாவில்தான் சாத்தியம். அதற்கான தயாரிப்பாளர்கள் அங்குண்டு. இங்குள்ள சினிமா செயல்படும் விதமே வேறு. இதன் முதலீட்டுக் கணக்குகள் முதன்மையாக நடிகர்களை மட்டுமே மையம் கொண்டவை.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
