என் மனையாளுக்குஎன் உயிர்த்தோழன் பெயர்கேட்டால் பிடிக்காதுஎன் உயிர்த்தோழனுக்குஎன் இறைவியின் பெயர்கேட்டால் பிடிக்காதுஇறைவிக்கு என் பழைய காதலியின்பெயர் கேட்டால் பிடிக்காதுபழைய காதலிக்குஎன்னவெல்லாம் பிடிக்காதுஎன்பது ஒரு நீண்ட பட்டியல்இப்போது அது வேண்டாம் இதெல்லாம் என் மண்டைக்குள்பூரானைப் போல் நெளிந்து ஓடிஅட்டகாசம் செய்கின்றன எனக்கோ எல்லாப் பெயரும்ஒன்றுதான்எல்லா மயிரும்ஒன்றுதான்ஏனென்றால்என் கவிதைகள்என் அன்னையின் கருவறையில் பிறந்துநதியின் நரம்புகளில் பயணித்துஆழ்கடலின் மௌனத்தில் கரைகின்றன ஒவ்வொரு பெயரும் ஒரு நட்சத்திரத்தின் துடிப்புநான்இவற்றின் இடையே,கண்ணாடியின் உடைந்த பிம்பத்தில்ஒளியின் முதல் துளியாகமீண்டும்மீண்டும்பிறக்கின்றேன்.
Published on August 20, 2025 05:38