கட்சியடிமைகள், கடிதம்
அன்புள்ள ஜெ,
கட்சியரசியலும் ஜனநாயக அரசியலும் கட்டுரை படித்தேன். வசந்திதேவி பற்றிய அவ்வளவு பெரிய குற்றச்சாட்டை, (மகனிடமே பாலியல் உறவுக்கு முயன்றார் என்றுகூட) அவர் மகனே சொன்னபோது இணையமே வெடிக்கும் என நினைத்தேன். ஒன்றுமே நிகழவில்லை. அப்படியே அமுக்கிவிட்டார்கள். இந்த யோக்கியர்கள் எவரையெல்லாம் எப்படியெல்லாம் வறுத்து எடுத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். உ.ரா.வரதராஜன் அவருடைய மகள் போல ஒரு பெண்ணுக்கு படிப்புக்கு உதவிசெய்ததை கட்சிக்குள் கொச்சையாக்கி, அவரை விசாரணைக்குக் கூப்பிட்டார்கள். அவர் தற்கொலை செய்துகொண்டார். இவர்களுக்கு அறம் என ஒன்றும் இல்லை. வெறும் அடிமைகள். இவர்களின் ஆயுதம் குரூரமான வம்புகள்தான். ஆனால் அந்த வெறியை தலைமை சுட்டிக்காட்டும் எதிரிகள்மேல்தான் ஏவுவார்கள்.
ஆ. முருகேசன்
அன்புள்ள ஜெமோ
கட்சியரசியலும் ஜனநாயக அரசியலும் கட்டுரை வாசித்தேன். திமுக ஜெயித்த சென்ற தேர்தலின்போது தமிழ் எழுத்தாளர்கள் பலர் திமுகக்காரர்களை விட திமுகவாகச் செயல்பட்டார்கள். அவர்களில் பலருக்கு திமுக சில சில்லறைகளை வீசியது. கனவு இல்லம் போன்று சில ஏக்கங்கள் எல்லாருக்கும் இருந்தன. ஆகவே ஒரே ஜால்ரா சத்தம். அண்மையிலே கார்ல் மார்க்ஸ் கணபதி என்ற திமுக ஆதரவாளர் ஸ்டாலினை கொஞ்சம் விமர்சனம் செய்துவிட்டார். இணைய உபி ராணுவம் கிளம்பி அவரை அவதூறால் குளிப்பாட்டிவிட்டார்கள். நீங்கள் அடைந்த வசைகளெல்லாம் அதற்கு முன் ஒன்றுமே இல்லை. அதை உங்கள் நண்பர் இளங்கோவன் முத்தையாவும் (இவரும் திமுகதான) புலம்பி எழுதியிருந்தார். ஏற்கனவே உங்கள் நண்பர் சரவணக் கார்த்திகேயனும் திமுகவை ஆதரித்து அதன் பின் வசை வாங்கினார். கட்சி ஆதரவு என்பது கட்சி அடிமையாக மட்டும்தான் இருக்கமுடியும். அதை இன்றைக்காவது சிலர் உணர்ந்தால் சரி.
ஜெ.ஆர்.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
