துளிக்கனவு- வாசிப்பு
துளிக்கனவு சிறுகதைகள் நூலாசிரியரின் வாழ்வின் ஒரு சில துளிகள் எனலாம். இத் தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாம் பெரும்பாலும் ஆசிரியரின் அன்றாட அனுபவங்களே என்கிறார்.
துளிக்கனவுவில் உள்ள 29 சிறுகதைகளும் அகர வரிசை தொடரில் அமைந்திருப்பது சிறப்பு.
அங்கே அப்பா காத்திருக்கிறார்அப்பாவுக்கு மூன்று கவிதைகள்அளவுகள்ஆண்மகன்ஆதல்இருவர்– இவ்வாறு தொடர்வண்டி பெட்டிகளாக இருக்கும் கதைகளில் நாமும் பயணப்படலாம்.
அப்பாவால் ஒருநாள் கூட தலைக்குக் குளிக்காமல் இருக்க முடியாது. எந்த காய்ச்சலிலும் அதை தவிக்க மாட்டர். தினம் இரண்ட்டு வேலை குளிப்பார். குளிக்கும் போது வழுக்கை தலையை கையால் உரசி உரசி தேய்த்துக்கொள்வர். இதற்கு அம்மா கறிக்கரைத்த அம்மியைக்கூட இப்படி கழுவ மாட்டர்கள் என்பர்.- அங்கே அப்பா காத்திருக்கிறார்
மாமா நாங்க என்க சாப்பிடறது?காயிதத்திலே எழுதி வாயிலே போட்டுமெல்ல வேண்டியதுதான் பார்த்துக்கோ, முத்தின ஸுகர் ரெண்டுபேருக்கும். – இருவர்
நான் பெரும்பாலும் வீட்டில் இருக்கிறேன், எழுத்துவேளை கூடவே வீட்டுவேலை ஹவுஸ் ஹஸ்பெண்ட் பாத்திரம் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்தல்.- இல்ல கணவர்
பாலைவன மக்களுக்கு கடவுள் மற்றவர்களுக்கு அளித்த தாவரங்களை அளிக்கவில்லை, எல்லாவற்றையும் சேர்த்து ஒரே தாவரத்தை அளித்தார் அது பேரீச்சை, கடவுளுக்கு உண்மையிலேயே பிரியமான பழம் அது என அத்தர் வியாபாரியான ஒரு ராவுத்தர் அம்மாவுக்கு சொல்லியிருந்தார். – இனிப்பு
என்னைக்கேட்டால் வேலைப்பார்க்கும் பெண்களாவது எழட்டுபேர் கூடி எதாவது பாதுகாப்பான சிறு பயணங்கள் ஏற்பாடு செய்துகொள்ளலாம். அங்கே கணவன், குழைந்தைகள், வீடு எல்லாவற்றையும் மறந்து ஒருவாரம் கல்லூரிப் பெண்களாக இருந்துவிட்டு வரலாம். அவர்களின் மனதுக்கு ஒரு புத்துக்குளியல் போல அது புத்துணர்வளிக்கும் – குடும்பத்தில் இருந்து விடுதலை.
இவ்வாறு துளிக்கனவு முழுவதும் சோர்வில்லா வாசிப்புடன் நம்மை பயணப்பட வைக்கிறார் நூலாசிரியர்.
மாதேஸ்வரன்
வாசிப்பை நேசிப்போம் குழுமம்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
