ஏர் இந்தியா என்னும் அற்புதம் – சிவா
வணக்கம் திரு ஜெயமோகன்,
நான் சிவா. நலமா?
என் தனிப்பட்ட வாழ்வில் எந்த ஒரு இந்திய நிறுவனங்களின் சேவையை பெறுவதையும் கூடுமானவரை தவிர்க்கிறேன். அடிப்டையாகவே இந்தியர்கள் மனதளவில் corrupt ஆனவர்கள் என்பது என் வாழ்வின் பாடம். இந்தியர்களால் நடத்தப்படும் எந்த ஒரு நிறுவனத்திலும் அந்த அடிப்படை corruption வெளிப்படும். (இந்திய தேசபக்தர்கள் மேற்கொண்டு வாசிப்பதை நிறுத்தி விடவும்.)
இந்த விபத்து நடப்பதற்கு முதல் நாள் இரவு என் வாழ்வின் ஒரு துரதிஷ்டமாக வேறு வழி இல்லாமல் ஏர் இந்திய விமானத்தில் டிக்கெட் போட்டேன். விமானம் பாரிஸ் நகரத்தின் CDG விமான நிலையத்தில் இருந்து 8:40 PM மணிக்கு புறப்பட்டு இருக்க வேண்டும். வழமையான “என்னால்” எதிர்பார்க்கப்பட்ட தாமதத்திற்கு பின் ஒரு வழியாக 10:15 PM மணிக்கு விமானத்தின் உள் உட்காரவைக்கப்பட்டோம்.. (விமானத்தின் உள்ளே நுழைந்த உடனேயே அழுக்கடைந்த காவி (காலி அல்ல) இருக்கைகளும், இந்தியாவிற்கே உரித்தான முடை நாற்றமும், புன்சிரிப்பற்ற பணிப்பெண்களும் வரவேற்றனர்)
அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பும் இன்றி 1 மணி நேரம் விமானத்தின் உள்ளேயே பயணிகள் அமர்ந்திருந்தோம். (விமான குளிரூட்டியோ பொழுதுபோக்கு திரைகளோ வேலை செய்யவில்லை) அதன் பின் சில பயணிகள் கேள்வி எழுப்பிய பிறகு, விமானி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதாகவும் அதனை சரி செய்ய தொழில்நுட்பர்கள் வருவதற்கு காத்திருப்பதாகவும் சொன்னார். அவர்கள் வந்து 1 மணி நேரத்திற்கு பிறகு விமானி சொன்னதுதான் highlight.. அவர் சொன்னது இது “The technicians sort of fixed the issue and hopefully we will be landing in Delhi in another 10 hours” மற்ற நாடுகளில் ஒரு பேருந்தின் ஓட்டுநர் கூட இதை விட மேம்பட்ட choice of words and professionalism கொண்டிருப்பர். ஒரு வழியாக நள்ளிரவு தாண்டி 12:30 மணிக்கு விமானம் மேலேறி 10 மணித்தியாலத்தில் டில்லியை அடைந்தது.
டில்லியிலிருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய விமானமும் தாமதம்.. இந்த இடத்தில் விமான பணிப்பெண்/ பையர்களை பற்றியும் சொல்ல வேண்டும். ஒரே வார்த்தையில் சொல்வதாக இருந்தால் இந்தியர்கள் சேவைப்பணிக்கு லாயக்கற்றவர்கள். (வட கிழக்கு மாநிலத்தவர்களை தவிர்த்து.. இயற்கையாகவே அவர்களின் மரபணுக்கள் காரணமாக இருக்கலாம்)
டெல்லி விமான நிலையத்தில் காத்திருக்கும் போது அஹமதாபாத் விமான விபத்து திரையில் ஓடியது.. என்னுடைய ஆச்சரியம் என்னவென்றால் Air India விமானங்கள் பராமரிக்கப்படும் லட்சணத்தில் இவ்வாறான விபத்துகள் நாள் தோறும் நடக்காமல் இருப்பது தான்! ஏதோ ஒரு சத்தியத்திற்கு கட்டுப்பட்டுத்தான் Air India விமானங்கள் இயங்குகின்றன.
மேலும் இந்த விசாரணை எப்படி முடிக்கப்படும் என்பதையும் நான் சொல்கின்றேன்.. மொத்த தவறும் விமானியின் மேல் சாட்டப்பட்டு விசாரணை மூடப்படும். எந்த ஒரு மேல்நாட்டு விசாரணையும் அனுமதிக்க படாது.
உங்களின் நேரத்திற்கு நன்றி
சிவா
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
