தமிழ்விக்கி- தூரன் விருது: வெ.வேதாசலம்
2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி- தூரன் விருது ஆய்வாளர் வெ.வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. தமிழ் வரலாறு- பண்பாட்டுக் களத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக பங்களிப்பாற்றி வரும் வேதாசலம் தமிழின் முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவர். தமிழ்விக்கி தூரன் விருது வேதாசலம் அவர்களுக்கு வழங்கப்படுவதனூடாக எங்கள் அமைப்பு பெருமை கொள்கிறது
வெ.வேதாசலம் தமிழ்விக்கிvedachalamthiru@gmail.com
விருது விழா ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் ஈரோட்டில் நிகழும்.
தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியம் 7 மே 2022 அன்று தொடங்கப்பட்டது. வாஷிங்டனில் வெளியீட்டு விழா நிகழ்ந்தது. தொடர்ச்சியாக நண்பர்களின் பங்களிப்புடன் இந்த இணையக்கலைக்களஞ்சியம் வளர்ந்து வருகிறது.
தமிழ்விக்கி தூரன் விருது மறைந்த கலைக்களஞ்சியத் தொகுப்பாளர் பெரியசாமித் தூரன் நினைவாக தமிழ்விக்கி சார்பாக வழங்கப்படும் விருது. 2022 முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்விக்கி இணையக்கலைக்களஞ்சியம் தமிழ்விக்கி தூரன் விருது பெரியசாமித்தூரன்இதுவரை விருது பெற்றவர்கள்
2022 கரசூர் பத்மபாரதி (மானுடவியல் ஆய்வாளர்)2023 மு. இளங்கோவன் (பண்பாட்டு ஆய்வாளர்)2023 எஸ்.ஜே. சிவசங்கர் (வட்டாரப் பண்பாட்டு ஆய்வாளர்)(சிறப்பு விருது)2024 மோ.கோ. கோவைமணி (சுவடியியல் ஆய்வாளர்)2025 வெ. வேதாசலம் (தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்)
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 836 followers
